வித்தியா தொடர்பான கட்டுரையத் தொடர்ந்து இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

death_threatசிறுமி வித்தியா தொடர்பான கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து இனியொருவிற்கு பிரித்தானிய மாபியாக் குழுக்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. அனாமோதய மினஞ்சல் மற்றும் தொலை பேசி ஊடாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டலின் பின்புலத்தில் இலங்கை அரச உளவுத்துறையின் பங்கும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் வெளியிடுகிறோம்.

இனியொரு… கருத்துக்களின் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதிலும், மக்கள் சார்ந்த வியாபார நோக்கமற்ற எழுத்துச் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் உறுதி கொண்டுள்ளது. மிரட்டல் மின்னஞ்சல்களில் சில:

1. அடே உன்னை அன்றைக்கு மே 18 அன்று பார்த்தேன். ஒரு பரதேசி போல காட்சி அளித்தாய். உனக்கு சொறி தேய்க்கவேண்டும் என்றால் சொல்லு , நான் ரெடி , இனி உனக்கு இருக்கு ஆப்பு. உன் குணத்தை மாற்றவே முடியாது. இப்ப மெளலியை அடக்கி இருக்கேன். இனி நீ தான் என் பார்வையில் இருப்பாய் மகனே… உன்னை போன்ற துரோகிகள் பலரை நான் பார்த்துவிட்டேன். நீ ஒரு ஜு ஜு பி

2. அடே நாயே கறுவலுக்கு ஆயிரம் பவுண்ஸ் குடுத்தால் உன் காலையும் கையையும் எடுத்து பார்சல் பண்ணி அனுப்பி வைப்பான். வாயை மூடிவை. ஒரு தரத்திற்கு தான் மன்னிப்பு.

கொலை மிரட்டலும் அச்சுறுத்தலும் இனியொருவிற்கு இது முதல்தடவை அல்ல… இன்றைய சூழலில் சமூக விரோதச் செயல்கள் நமது சமூகத்தைத் தின்று தொலைக்கின்றன. மக்களின் அவலத்தை வியாபாரமாக்கிக்கொள்ளும் குழுக்களை இளையவர்கள் பார்த்த்து தாமும் அதனைப் பழகிக்கொள்கிறார்கள். எந்தக் குற்ற உணர்வுமின்றி அவற்றை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் மக்கள் சார்ந்த நேர்மையான அரசியலை முன்வைக்க வேண்டிய அவசியத்தை இனியொரு… உணர்ந்துள்ளது. எமது செயற்பாடுகள் தொடரும்.
முன்னர் வெளியான கட்டுரை:

சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல்