Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல்

இனியொரு... by இனியொரு...
05/21/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

vidyaசிறுமி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த போராட்டம் வட மாகாணம் ஈறாக இன்று கிழக்கிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சமூகவிரோதிகள் சிலர் சிறுமி வித்தியாவைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திப் படுகொலை செய்த நிகழ்வு ஒரு தீப்பொறி மட்டுமே. மக்கள் மத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் புகைந்துகொண்டிருந்த நெருப்பு இன்று தீயாக எரிய ஆரம்பித்துள்ளது என்பதே இதன் பின்புலத்திலுள்ள யதார்த்தம்.

போர் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்குப் பின்னான காலப் பகுதி முழுவதும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு முழுமையும் சமூக விரோதிகளின் புகலிடமாகிவிட்டது. குறைந்த பட்ச சட்ட ஒழுங்கு முறைகளை இராணுவமே நடத்தி வந்தது. இராணுவத்தைப் பொறுத்தவரை மீண்டும் விடுதலைப் புலிகள் முளைவிடாது பாதுகாப்பதே சட்டமும் ஒழுங்கும் என்று கருதியது. இலங்கை அரசும் அதையே தனது நோக்கம் என்று கூறியது. இந்த இடைவெளி சமூகவிரோதக் கும்பல்கள் நிலைகொள்ள வழிவகுத்திருந்தது. இரவு மதுபான விடுதிகள், போதைப் பொருட்களின் விற்பனை, பாலியல் தொழில் என்ற அனைத்து சமூகவிரோதச் செயற்பாடுகளும் தாராளமாக நடைபெற ஆரம்பித்தது.

இலங்கை அரசின் நோக்கமும் மக்களின் வாழ்க்கையும் எதிரெதித் திசைகளில் பயணிக்க ஆரம்பித்தன. மக்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர் நோக்க ஆரம்பித்தனர். இளைய சமூகத்தின் ஒரு பகுதி சமூகவிரோதிகளின் செயற்பாடுகளை பொதுப் புத்தியாக அங்கீகரிக்கும் நிலை தோன்றியது.

இராணுவம் ஏற்படுத்திய இந்த இடைவெளியை ஊக்கப்படுத்த பல்வேறு வெளிக் காரணிகள் செயற்பட்டன.

1. புலம்பெயர் பணம்

உழைப்பின்றி புலம்பெயர் நாடுகளிலிருந்து இலவசமாகக் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்துகின்ற ஊதாரிகளாகச் சமூகத்தின் ஒரு பகுதி மாற்றமடைந்தது.
உழைப்பின் மதிப்பை புரிந்துகொள்ளாத சமூகத்தின் ஊதாரித்தனம் சமூகவிரோதிகளை ஊக்கப்படுத்தியது. குறுக்கு வழிகளில் பணம் சேர்க்கும் ஒரு கூட்டம் ஊதாரிகளுக்குப் போட்டியாக வளர ஆரம்பித்தது. சமூகவிரோதிகள் வளர்ச்சியடைய எந்தத் தடையும் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை.

2. மக்கள் அமைப்புக்களின் வெற்றிடம்

மக்களை ஒழுங்கமைக்கும் அமைப்புக்கள் எதுவும் வடக்கிலும் கிழக்கிலும் இருந்திருக்கவில்லை விடுதலைப் புலிகள் அதிகாரத்திலிருந்த காலங்களில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தியிருந்ததால், கிராமிய மட்டத்திலான அமைப்புக்களும் அதனை வழி நடத்தியவர்களும் கூட சட்டவிரோதமாக்கப்பட்டிருந்தனர்.இதனால் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் ஒருங்கு சேரும் நிலையும் தனி மனிதர்கள் சமூகத்தால் கண்காணிக்கப்படும் நிலையும் அற்றுப்போனது. அறம் என்பது தனிமனிதனின் தீர்மனம் என்ற எல்லைக்குள் குறுகிப் போனது.

3. உயர் மட்டச் சூறையாடல்கள்

வட மாகாண அரசு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், அந்த அரசோடு தொடர்புடையவர்கள் கூட சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர். அதன் உச்சகட்டமாக வடமாகாண அமைச்சர் சுன்னாகத்தில் நீரை நஞ்சாக்கிய நிறுவனத்தின் ஊதுகுழலாகிய ஊழலில் ஈடுபட்ட சம்ப்வத்தை இளைஞர்கள் கண்டனர். இவை அனைத்தும் சமூகவிரோதச் செயல்களை பொதுப் புத்தி ஆக்கிற்று.

தன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் பண வெறியாகவும், வியாபாரமாகவும் காட்சியளிப்பதைக் காணும் இளஞர் கூட்டம் சூறையாடல் என்பது வழமையான ஒன்று என எண்ண ஆரம்பித்தது. அனீதி என்பது சமூகத்தின் ஓர் அங்கம் என்ற எண்ணம் வளர்ந்தது.

4. பயங்கரக் கொலையாளிகளின் அதிகாரம்

இனக்கொலை நடத்திவிட்டு மக்கள் மத்தியில் கதாநாயகர்களாக வலம்வரும் கொலையாளிகள்; இனப்படுகொலைக்கு உட்பட சமூகத்தின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் நயவஞ்சகர் கூடங்கள், இந்திய அரசியல் வாதிகளின் அருவருக்கும் ஈழ வியாபாரம், பல்தேசிய நிறுவனங்களின் பகல்கொள்ளை, மில்லியன்களைச் சுருட்டிக்கொண்டு தேசியம் பேசும் புலம்பெயர் தேசியக் கோமாளிகள் என்ற தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் அநீதியின் விம்பத்தையே காணும் சிறுவர் கூட்டம் தம்மையும் சமூகவிரோதியாக்குவதில் தயக்கம் காட்டவில்லை.

5. கூலிக் குழுக்களின் இரட்டைவேடம்

வித்தியாவின் கொலையைத் தொடர்ந்து புலம்பெயர் பெண்கள் அமைப்பு ஒன்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது. பெண்களின் உரிமையில் அக்கறை கொண்ட பலரின் கையொப்பங்களோடு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவரும் கையொப்பமிட்டிருந்தார். இதன் மறுபக்கத்தில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டமைக்காக பிள்ளையான்ற்கு எதிரான வழக்கு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மக்களைப்பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு தனிமனதனும் ஏமாற்றுப் பேர்வளிகளாக மட்டுமே உலாவருகின்ற இழிவான அரசியல் மட்டுமே உயிர்வாழ்கின்ற சமூகமாக ஈழத் தமிழர்கள் மாறிவிட்டனர் எனபதற்கு இதைவிட வேறு முன்னுதாரணங்கள் தேவையில்லை. இவற்றை எல்லாம் கேள்வியுறும் இளைய சமூகம் சமூகவிரோதச் செயல்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுவதாகக் கருதுகிறது. ஆக, அது தவறில்லை என்று எண்ணுகிறது,

6. புலம்பெயர் குழுக்களின் திருட்டு

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் துணையோடு தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களைச் சூறையாட ஆரம்பித்துள்ள இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பு வேறு வழிகளில் தொடர்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மைத்திரி அரசிற்கு ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் ஆதரவு வழங்க ஆரம்பித்தபின்னர் வேலைத்திட்டமின்றி நடுத் தெருவில் விடப்பட்ட புலம்பெயர் அமைபுக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தமது வியாபாரத்தைத் தொடர வேறு வழிகள் தென்படவில்லை. இதனால் வித்தியாவின் கொலை தொடர்பாகவும் அதன் சமுக அரசியல் பின்புலம் தொடர்பாகவும் ஆராய மறுக்கும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வித்தியாவின் கொலை இனப்படுகொல என ஆரம்பித்துப் பிரபாகரன் ஆட்சியை மறுபடி நிறுவுவோம் என கூச்சல் போடுகின்றனர். பொதுவாக இவர்களின் கூச்சல்கள் வெறுமனே வியாபாரத்திற்கானது என வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

மக்களின் கண்ணீரைப் பயன்படுத்தி மில்லியன்களைப் பதுக்கிவைத்துக்கொண்டு அதனைப் பாதுகாக்க தேசியம் பேசும் விசமிகள் கூட்டத்தைக் கேள்வியுறும் இளைய சமூகத்திற்கு தமது சமூகவிரோதச் செயல்கள் தொடர்பான குற்ற உணர்வுகள் ஏற்படுவதில்லை.

தன்னைச் சுற்றிக் கொழுந்துவிட்டெரியும் அனீதியின் ஊழித் தீயிற்கு எதிராகப் போராடவும் அதனை எதிர்கொள்ளவும் எந்த நம்பிக்கையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படவில்லை. சமூகத்தை வழி நடத்தும் புதிய அரசியலை நேர்மையக முன்வைக்க எவரும் யாரும் தயாரில்லை. இந்த நிலையில் இளைய சமூகத்தின் ஒரு பகுதி ஊழித் தீயின் ஒரு பகுதியாகத் தம்மை இணைத்துக்கொண்டு சமூ விரோதச் செயல்களில் ஈடுபடுகிறது.

7. வித்தியாவின் கொலையாளிகளைத் தூண்டிய ஊடகங்கள்

இதனோடு கூடவே பாலியல் வக்கிரங்களைச் செய்திகளாக்கி வெளியிடுவதில் புலம் பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் ஊடகங்கள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. லண்டனில் பல செக்ஸ் இணையங்களின் உரிமையாளர் ஒருவர் ‘தமிழ்த்  தேசிய’ ஊடக ஜாம்பவான். இவர் நடத்தும் இணையத்தின் ஒரு மூலையில் ‘தேசியத் தலைவர் பிரபாகரனின் வழியில்’ என்று முழக்கங்களும் மறு மூலையி இளைய சமூகத்தைச் சிதைக்கும் வக்கிரங்கள் நிறைந்த செய்திகளும் வெளியாகும்.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைப் பாலியல் வன்முறைகளை நோக்கிக் கவர்ந்திழுக்கும் இக் கொடியவர்களும் சிறுமி வித்தியாவின் கொலைக்கான சமூகப் பொறுப்பளிகளே.

இவை அனைத்தின் காரணமாகவும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வெவ்வேறு அளவுகளில் நடைபெற்றன. சிறுவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும், விடுதிகளில் மதுபானம் அருந்துவதும் வழமையானதாகிவிட்டது. வன்முறைக் குழுக்களும் அவற்றிற்கு இடையேன மோதல்களும் ஆரம்பித்தன.

பெண்களின் பெற்றோர் பலர் அச்சமடைய ஆரம்பித்தனர். இளைஞர்கள் சமூகவிரோதிகளாக மாறிவிடுவார்களோ என தாய் தந்தையரை பயம் பற்றிக்கொண்டது.

சட்டமும் ஒழுங்கும் சிதைக்கப்பட்ட சமூகத்தில் சமூகவிரோதச் செயல் இலகுபடுத்தப்பட்டது.

மக்ககள் ஏன் போராடுகிறாகள்?

இவற்றைக் கண்டு கொதித்தெழுந்த சமூகத்தின் போர் முழக்கமே வித்தியாவின் கொலையின் பின்னான போராட்டங்கள். வித்தியாவின் படுகொலையைத் தமது அவல நிலையின் குறியீடாகவே போராடிய மக்கள் காண்கின்றனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் போராட்டத்தின் பின்னால் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற குரல் இழையோடுகிறது. தமக்கும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று போராடிய முதியவர்கள் ஓலமிடுவது கேட்கிறது.

ஆக, இராணுவத்தைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கம் குறைந்தபட்ச நிர்வாக அலகுகளை மறுசீரமைத்து மக்களுகு நம்பிக்கையைக் கொடுக்கும் வரையிலும் இவ்வாறான போராட்டங்களை நடத்துவதத் தவிர மக்களிடம் வேறு வழிகள் இல்லை.

மக்களின் போராட்டங்களை வழி நடத்த அவர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைமைகள் கிடையாது. தன்னிச்சையாக நடைபெறும் மக்கள் போராட்டங்கள் நேற்றைய தினம் தேவையற்ற வன்முறைகளாகத் திசை திருப்பப்பட்டன.

வன்முறைகளோடு தொடர்புடைய இளைஞர்களும் சமூகவிரோதக் கும்பல்களின் ஒரு பகுதியே. ஒவ்வொரு சம்பவத்தையும் வயிற்றுப் பிழைப்பிற்கான மூதனமாக மாற்றும் புலம்பெயர் ஊடகங்கள் சில ‘சிங்களப் போலீசின் தலையை உடைத்த தமிழர்கள்’ என செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த வன்முறையைத் தவிர, நிலமையைக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த இலங்கை அரசு மக்களுக்கு எந்த நம்பிக்கையைம் வழங்கவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதைப் போல, ‘யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் மிரட்டப்படுகின்றனர்’ என அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி கூச்சலிடுகிறது.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகக் கருதப்பட்டவரும் சட்ட வல்லுனருமான தமிழ்மாறன் கொலையாளிகளைக் காப்பாற்ற முனைந்ததை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். தமிழ்மாறன் போராடும் மக்களால் குறிவைக்கப்படும் தனி நபர்களில் ஒருவர். சமூகத்தின் ஆதிக்கத்திலுள்ளவர்களின் சமூகவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களின் வெறுப்பிற்கு தமிழ்மாறன் உதாரணம்.

தமிழ்மாறன் தொடர்பாக இதுவரைக்கும் தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ சிறிய துண்டறிகை கூட விடவில்லை. கட்சியிலிருந்து தமிழ்மாறன் விலக்கப்பட்டுள்ளாரா அன்றி கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இன்னும் தொடர்கின்றாரா என்பதுகூட இன்னும் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

வடக்குக் கிழக்கில் சமூகத்தின் பெரும்பான்மையன உழைக்கும் மக்களை ஆதாரமாக முன்வைத்து மக்கள் சார்ந்த அரசியல் தலைமை தோன்றும் வரை இளைஞர்களின் சிதைவு தவிர்க்க முடியாத அவலமாகிவிடும்.

உடனடித் தேவையாக சட்டம் ஒழுங்கு மறுசீரமைக்கப்படுவதும், சமூகவிரோதக் குழுக்கள் அழிக்கப்படுவதும் அவசியமானது. சிறுமி வித்தியாவின் கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதன் ஊடாகவே எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச நம்பிகையை மக்களுக்கு வழங்கமுடியும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி

Comments 12

  1. sumerian says:
    11 years ago

    புங்குடுதீவு மாணவியின் கொலையில் தமிழ் சமூகத்தின் பங்கு

    வித்தியாவின் கொலையில் சிக்கியுள்ள குற்றவாளிகள் கடுமையாகத்தண்டிக்கப்படவேண்டும். அத்தண்டனை எல்லோரிற்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்று வடமாகாணத்தில் பெண்கள் மீதான பாலியல்கொடுமைகள் பல நாளாந்தம் பல்வேறு அளவுகளில் நடைபெறுகின்றன. பெரும்பாலனவை வெளியில் தெரிவதில்லை.இதற்கு குற்றவாளிகளின் பெண்கள் மீதான பார்வையும் ஒரு காரணம். இவ்வாறான மனநிலையினை எமது சமுதாயமே அவர்களிற்கு சிறுவயிலிருந்து உருவாக்குகின்றன. அவ்வாறான மனநிலைகளாவன.

    1. ஆண் பிள்ளைகளிலும் தாழ்வாக கருதும் முதல் மனநிலை பிறப்பின் போதே ஆரம்பிக்கின்றது.
    ஆண்பிள்ளையின் பிறப்பினை கற்கண்டு கொடுத்து சந்தோசபப்படுமளவிற்கு பெண் பிள்ளைகளின் பிறப்பினை சந்தோசமாக ஏற்காத பெரும்பாலான குடும்பங்களின் மனநிலை.
    2. சிறுவயதிலேயே ஆண்குழந்தைகளிற்கே உணவு விடயத்தில் முக்கியத்துவம் கொடுத்தல்.
    3.பூப்புனித நீராட்டுவிழா. இது பெண்பிள்ளைகளின் உடலியல்ரீதியான ஒரு தனிப்பட்டவிடயம். ஒரு காலத்தில் பெண் பருவமடைந்தவுடன் கரிகட்டையால் கோடு போட்டு ஒரு மூலையில் முடக்கியது எவளவு மடமையோ. அதுபோன்றதே இதனை ஒரு விழாவாகக் கொண்டாடுவதும் அதனை வீடியோ எடுத்து நாடு நாடாக சிடி அனுப்பவதும். இதனால் பெண் போகத்திற்காக ஆண்களிற்கென படைக்கப்பட்டவள் என்ற மனநிலை ஏற்படுகிறது.
    4. கல்வி விடயத்தில் பாரபட்சம். ஆண்களின் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண்களின் கல்விக்கு கொடுக்கப்படாமை.
    5. பெண் பிள்ளைகளை மட்டும் சிறுவயதிலிருந்தே சத்தம் போட்டு பேசாதே, நிலம் அதிர நடக்காதே, எதிர்த்துப்பேசாதே போன்ற கட்டுப்பாடுகளிற்கு உள்ளாக்குவது.
    6. வரதட்சனை. இதுவும் பெண் பணத்திற்கான ஒரு போகப்பொருள் என்ற மனநிலையினை ஏற்படுத்துகிறது.
    7. மதம் சார்ந்த நம்பிக்கைகள். எந்த ஒரு மதமும் ஆண்-பெண் சமத்துவத்தினை ஏற்கவில்லை. இன்று பல பூசி மெழுகல்கள் இருந்தாலும் பெண்கள் மீதான இரண்டாம்பட்ச மனநிலையினை எல்லா மதங்களும் நியாயப்படுத்துவதனை ஆழமாகப் பார்த்தால்புரிந்துகொள்ளலாம். மேலும் இன்றுபெண்கள் பல நாடுகளின் தலமைப்பொறுப்பிலிருக்கும்போது எந்த ஒரு மதத்தின் தலமைப்பொறுப்பிலும் பெண்களிற்கு இடம் அள்க்கப்படாமை.
    8. ஊடகங்கள், திரைப்படங்கள் என்பவற்றில் பெண்கள் போகப்பொருளாக சித்தரிக்கப்படுவது.
    9. மதுப்பாவனை போதைப்பொருட்கள். ஒரு காலத்தில் மதுப்பாவனை ஒரு இழிவான பழக்கம் என்ற மனநிலை மாறி இன்று அதனை ஒரு நாகரிகமாகவும், ஆண்மைத்தனமானது எனவும் கருதும் மனநிலை.

    இவ்வாறான காரணங்களால் பெண்களை ஒரு போகப்பொருளாக கருதும் மனநிலையினையும், பெண்கள் ஆண்களிற்கெனவே படைக்கப்பட்டவர்கள் என்ற மனநிலையும் ஏற்படுகிறது. இவ்வாறான மனநிலை விகாரமடையும்போது பாலியல் அத்துமீறல்களாக நடக்கின்றன.
    குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் குற்றத்திற்கான காரணங்களும் களையப்படும்போதே குற்றங்கள் நிறுத்தப்படும்.எனவே எமது சமுதாயத்தில் மேற்கூறிய விடயங்கள் களையப்படும்போதே நாமும் குற்றஉணர்விலிரந்து விடுபடமுடியும்.

    • Lala says:
      11 years ago

      Bro , Are you living in 1950’s ???

  2. param says:
    11 years ago

    இவர் நடத்தும் இணையத்தின் ஒரு மூலையில் ‘தேசியத் தலைவர் பிரபாகரனின் வழியில்’ என்று முழக்கங்களும் மறு மூலையி இளைய சமூகத்தைச் சிதைக்கும் வக்கிரங்கள் நிறைந்த செய்திகளும் வெளியாகும்.

    please give the website name.

  3. a voter says:
    11 years ago

    காத்திரமான கட்டுரை. இன்னுமொரு காரணியையும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
    விடுதலைப் போராட்டத்தின் தோல்வியானது மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது. இதிலிருந்து மக்கள் மீள்வதற்கான ஆற்றுப்படுத்தல்கள் நிகழவில்லை. வன்னியில் இத்தகைய ஆற்றுப்படுத்தல்களிற்கு கோத்தா இராணுவம் தடை விதித்திருந்தது. (இதன் போர்வையில் போர்க்குற்ற விசாரணைகள் நடந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக) இந்நிலையில் மக்களின் மன அழுத்தம் கிடைக்கும் இடைவெளியூடாகப் பாய்கின்றது. இது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போராட்டங்களிலும் வன்முறைகளிலும் மட்டுமல்ல வித்யா மீதான பாலியல் வன்முறையிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
    இதன் பொருள் நான் அந்தக் காடையர்களை ஆதரிக்கின்றேன் என்பதல்ல. உரிய ஆற்றுப்படுத்தல்கள் தமிழ் சமுதாயத்தின் மீது செய்யப்பட வேண்டும்; கட்டுரையாளர் குறிப்பிட்ட விடயங்களுடன் இதுவும் நடக்கையில் சமுதாயத்தின் மீள் கட்டமைப்பு உருவாகும்.

    • lala says:
      11 years ago

      reply to a voter.
      சம்பந்தப்பட்ட குற்ற சந்தேக நபர்கள் வன்னியில் வாழ்ந்ததாகவோ அல்லது வன்னிப்போரில் பாதிக்கப்பட்டதாகவோ தகவலில்லை .
      திமிரெடுத்து , கொழுப்பெடுத்து வல்லுறவு, கொலை என்று செய்பவர்களுகெல்லாம் போரையும் , வன்னியில் நடந்த படுகொலைகளையும் காரணமாக்கி மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் .

      வன்னியில் நடந்த போரையும் , படுகொலைகளையும் எதற்கெல்லாம் உதாரணங்காட்டுவது , காரணமாக்குவது எனும் விவஸ்தை கூட இல்லாமல் போய் விட்டது..

  4. Sakivara says:
    11 years ago

    தென் இலங்கையிலும் மக்கள் போராட வீதிக்கு வந்துள்ளனர். அவர்கள் மன்னம்பெரியில் இருந்து நினைவு கூர தொடங்கியுள்ளனர். அவர்களுக்கும் தமது மனவலிகளை சொல்லும் நேரம் வந்துள்ளது. இந்த ஆரோகியனாமான முன்னேற்றத்தை வளர்த்து செல்ல வேண்டும். தொடரான கருத்து பரிமாற்றமும் போராட்டங்களும் வேண்டும்

  5. a voter says:
    11 years ago

    லாலாவிற்கு தலைக்குள் எதுவும் இருப்பதாகவும் தகவல் இல்லை.
    1. வன்னிப் போர் நேரடியாகப் பாதித்த மக்கள் சில லட்சம். இதை விட ஏராளமான மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக மேலும் அழுத்தமே பிரயோகிக்கப்பட்டது. இந்த அழுத்தம் வன்னியில் வாழ்ந்த மக்கள் மீத மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மீது இருந்தது.
    2. இந்த அழுத்தம் வேறு வகைகளில் வெளிப்படும். இது உளவியல். இதுவே வன்முறையாக (குடும்பத்தில் சமூகத்தில்) அல்லது மன நோயாக வெளிப்படுகின்றது.
    3. இதற்கு ஆற்றுப்படுத்தல் என்கிற வழி உளவியலாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அது விஞ்ஞான ரீதியாக நிருபணமான வழி
    4. கட்டுரையை ஆராய முடியுமானவர்களிற்கு விள்ங்கக்கூடிய ஒரு விடயம் இந்தக் கட்டுரை வெறும் சம்பவத்திற்கு வெளியே போய் இதனை ஒரு சமுகக் குறைபாடாகப் பார்க்கின்றது. இது வெறுமனே சில தனிநபர்களின் கொழுப்பு (அல்லது புரதம்) சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று குறுக்கிக் கொள்வது இந்தப் பிரச்சினை பற்றிய மேலோட்டமான புரிதல் கூட அற்ற தன்மை.

  6. Lala says:
    11 years ago

    கொலை சந்தேகநபர்கள் வன்னியில் வாழ்ந்ததாக தகவலில்லை.
    மேலும் வறுமையினாலோ , போர் ஏற்படுத்திய வறுமையினாலோ பதிக்கப்பட்டவர்களாகவும் தெரியவில்லை.

    நன்றாக தின்று குடித்து மதுவருந்தி வந்திருக்கிறார்கள் .
    போர் ஏற்படுத்திய மறைமுக பாதிப்புக்களுக்கு உள்ளானார்களா என அறியுமளவிற்கு அவர்களது பின்னணி தகவல்கள் வெளிவரவில்லை .
    அதற்குள் அவசரகுடுக்கைத்தனமாக போரில்நேரடியாக பதுக்கப்படாவிட்டாலும் மறைமுக தாக்கம் இப்படித்தான் வெளிக்கிளம்புமென நீங்களாகவே கற்பனை செய்து அள்ளி விடுவது ஏனோ ?

  7. Kumar says:
    11 years ago

    இங்கு a voter கூறியிருப்பதை விளங்கிக்கொள்ள லாலா என்பவரால் முடியாமல் இருக்கின்ற நிலையிலேயே நமது இனத்தில் பலா் உள்ளனா்.

    மிகவும் கொடுமையான குற்றம் ஒன்று நடந்திருக்கின்றது அதை நடத்தியவா்கள் யாா் உடந்தையாக இருந்தவா்கள் யாா் இது நடப்பதற்கு காரணமாக இருந்தவா்கள் யாா் தனியே அம்புகள்தான் காரணமா எய்தவா்கள் வேறுயாருமா என்று ஆயிரம் கேள்விகள் கேட்கவேண்டியது சட்டத்தின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு தமிழா்களதும் கடமை அதாவது இச்சமூகத்தின் மேல் உண்மையாகவே அக்கறை கொண்டவா்களது கடமை அதை விட்டு தமிழா்கள் எப்போதும் போல் உணா்ச்சிவசப்பட்டு மடயா்களாக செயற்படமுற்படுவது நாம் சிறிதளவேனும் வளா்ச்சியடையவில்லை என்பதையே உணா்த்துவதாகும்.

    புலிகள் ரெலோ இயக்க அப்பாவி இளைஞா்களை உயிரோடு எாித்தபோது தமிழினம் அய்யோ வேண்டாம் அவா்களை விட்டுவிடுங்கள் என்று கதறி இருக்கவேண்டும் அல்லது மெளனமாக கண்ணீா் வடித்திருக்கவேண்டும் ஆனால் என்ன செய்தோம் சோடா உடைத்து கொடுத்து உற்சாகப்படுத்தினோம் அதாவது இந்த இனத்திற்கு மனிதம் என்றால் என்னவென்று ஒரு மண்ணாங்கட்டியுமே தொியாது என்று எடுத்துக்காட்டினோம்.
    ஒரு மக்கள் கூட்டத்தை பயப்படுத்தி குற்றம் செய்ய விடாது வைத்திருப்பதல்ல இங்கே முக்கியம் , படிப்பித்து தம்மைத்தாமே உணா்ந்து வாழும் தெளிவான சமூகமாக மாற்றியமைப்பதுதான் முக்கியம். குற்றம் புாிந்தவா்களுக்கு கொடுக்கின்ற தண்டனையில் மேலும் எவரும் இப்படிப்பட்ட குற்றத்தை புரியாது தடுக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது ஏனெனில் நாம் ஒரு காட்டுமிராண்டி சமூகத்தை பேணவே முற்படுவதுகிறோம் என்றாகிவிடும் அப்படிப்பட்ட சமூகம் எந்த நேரத்திலும் குற்றம் புாிய தயங்காது. வெறும் கிழைகளை மட்டும் அறுத்துவிடாமல் வேரோடு அழிக்கவேண்டும்.

    யுத்தம் நம் ஒவ்வொருவா் வாழ்க்கையிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது இதன் விளைவுகள் இன்னும் நீடிக்கும் அதை மிகவும் அவதானமாக ஆராய்ந்து அதை குணப்படுத்தக்கூடிய வழிகளை கண்டு பிடிக்கமுயலாமல் Lynch மனோபாவத்தில் வாழ முற்படுவது ஆரோக்கியமானதல்ல.

    • lala says:
      11 years ago

      நீங்கள் சொல்லும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் அது பற்றிய விசாரணைகளின் முடிவுகள் எதுவும் வெளிவராநிலையில் அவசரகுடுக்கை தனமாக கருத்து தெரிவிக்கும் நிலையிலேயே எம்மினத்தில் பலர் இருக்கிறார்கள் என்பதையே நானும் தெரிவித்தேன்.

      குற்றவாளி சந்தேகநபர்கள் போரினால்நேரடியாக பாதிக்கப்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்பட்டவில்லை மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களா என்பதும் இது வரை விசாரணைகளில் தெரியவரா நிலையில் . பாவம் அவர்கள் உண்மையில் போரில்நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கக்ப்ட்பதனால் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என வக்காலத்து வாங்கப்படுவது ஏற்றுக்கொள்ளகூடடியதல்ல.

  8. a voter says:
    11 years ago

    கழுதைக்குத் தெரியுமா… கற்பூர வாசனை…
    யாரும் இங்கே குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களிற்கு வக்காலத்து வாங்கவில்லை.
    குற்றம் வெறுமனே 10 பேர் சம்பந்தப்பட்டதல்ல. அதைவிடப் பெரியது.
    இப்போது வன்னியில் சிறுமி ஒருத்தி பாலியல் வல்லுறவுக் காளாக்கப்பட்டாளே. கடந்த இரண்டு வாரங்களில் 10 இதுவிதமான (பெரிதும் சிறிதுமான அளவில் வெளிவந்த) சம்பவங்கள் நடந்துள்ளனவே. இதெல்லாம் லாலாவுக்குத் தெரியாதா? வடக்கில் இப்படி எத்தனை சம்பவங்கள்..
    அவசரக் குடுக்கைகளே மற்றவர்களை அவசரக் குடுக்கை என்று அழைக்கும் காலமிது.
    கட்டுரையையும் எனது பின்னூட்டத்தையும் ஆற அமர வாசித்தபின்பு கருத்துச் சொல்லுவது நல்லது.

  9. a voter says:
    11 years ago

    http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...