ஜே.வி.பி கூறும் பேரினவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலிருப்பது ஏன்

lalkanthaசிங்களப் பேரினவாதம், சிறுபான்மை மக்களின் இனவாதத்தை மேலும் வலுக்கச் செய்யுமே தவிர தோற்கடிக்காது என ஜே.வி.பி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தெற்கில் இனவாதத்தை பிரச்சாரம் செய்வதாகவும் சிறுபான்மை மக்கள் மத்தியில் இது இனவாத்ததை வளர்க்கும் என லால் காந்த் மேலும் குறிப்பிடுகிறார். சிங்களப் பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குவது போல தமிழ் இனவாதம் தமிழர்க்ளையே ஒடுக்குவதற்குப் பயன்படுகிறது.

இதனால் தான் தமிழ்ப் பேசும்மக்கள் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடுவதும் சிங்கள மக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அதற்கு ஆதரவு வழங்குவதும் அவசியமானது. மகிந்த ராஜபக்ச இனவாதி என லால் காந்த் குறிப்பிடுவது நியாயமானதே அதே வேளை சிறுபான்மைத் தேசிய இனங்களில் பிரிந்து செல்ல்லும் உரிமைய அங்கீகரிக்க மறுக்கும் ஜே.வி.பி ஐ எப்படி அழைப்பது?

மகிந்த ராஜபக்சக்களை இல்லாதொழிப்பதற்கும், இனவாதத்தால்ச் சமூகமாக மாறும் தமிழ்த் தேசிய இனத்தைப் பாதுகாப்பதற்கும் லால்காந் போன்றவர்கள் முன்வரவேண்டும். அதற்கு ஒரே வழிமட்டுமே உண்டு. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காக சிங்கள மக்கள் போராடுவதும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் போராடங்களோடு தமிழ் மக்கள் இணைந்து கொள்வதும் அவசியமானது.