இன்றைய செய்திகள்

Tamil News articles

பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுளை வாசல்

சாரி சாரியாக கோத்தாபாயவின் காட்டுமிராண்டி அரசின் அனுசரணையுடன் நடைபெறும் நில அபகரிப்பு, மலையக மக்களின் நாளாந்த வாழ்வுரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல், முஸ்லிம் மக்களின் அடிப்படை இருப்பிம் கேள்விக்கு உள்ளாக்குதல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய இப் பேரணி சிறுபான்மைத்...

Read more
மிடில் கிளாஸ் மாஸ்டர்கள் –கே.வி 

தில்லி டிராக்டர் பேரணிக்குப் பின் போலீசார் உருவாக்கியிருக்கும் தடுப்பு அரண்களை பார்த்தேன் . பேரிகேட்களை குறுக்குவாட்டில் ரோட்டில் அடுக்கி கான்கிரீட் கலவை ஊற்றியிருக்கிறார்கள் .பல வரிசை கான்க்ரீட் தடுப்புகள் .கூரான ஆணிகள் பதித்த இரும்புப் பட்டைகளை ரோட்டில் பதித்திருக்கிறார்கள் . சுருள் முள் கம்பிகள் , போலீசாருக்கு லோக்கல் பட்டறை மேட் இரும்புத்தடி ஆயுதங்கள் . இது ஏதோ குற்றங்கள் மலிந்த ,கேங்வார் நடக்கும் டிஸ்டோப்பியன் நகரம் ஒன்றை நினைவுறுத்தியது . போலீசார் தரப்பில் மேலோட்டமாக பார்த்தால் இதற்கான நியாயங்கள் இருப்பது போல தோன்றலாம் . ஆனால் இதன் பின் இருக்கும் மனநிலையை யோசித்து பார்த்தால் பகீரென்கிறது. இது பிராக்டிகலாக பயன் உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி , இது விடுக்கும் செய்தி என்ன என்பது தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது விவசாயிகள் ஆபத்தானவர்கள் , காட்டுமிராண்டிகள் , எதிரிகள் , தூரத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் .அவர்கள் வேறு அரசு வேறு என்று அடையாளப்படுத்தும் மனநிலை . இவ்வித நடவடிக்கைகளில் இருக்கும் ஒரு கீழ்மையான அவமதிப்பு அரசுக்கு புரியவில்லை . போராடும் விவசாயிகள் மீதான அடிப்படை மரியாதை இல்லாத கண்ணியமற்ற அணுகுமுறை இது . இது ஏன் நிகழ்கிறது ? நம் பண்பாட்டில் ஊறிப்போயிருக்கும் பாகுபாடு காட்டும் வழக்கம் என்பதன் வேறொரு மாதிரிதான் இது . நாம் பாகுபாடு என்ற உடனே சாதிய பாகுபாடு என்பதையே மனதுள் உருவகிப்போம் . ஆம் அது தான் மையமானது ஆனால் அது உருவாக்கும் இந்த பாகுபாட்டு சார்ந்த மனநிலை சாதியையும் கடந்தது . Caste is a structure , discrimination is a practice. மனிதர்களை சமமான மரியாதை கொண்டவர்களாக நடத்தும் வழக்கம் நம் பண்பாட்டில் உருவாகவே இல்லை, அந்த எண்ணமே நம் சிந்தனை முறைக்கு அன்னியமானது. அங்கிருந்து கொண்டு நவீன ஐனநாயக வழுமியங்கள் நோக்கி வர நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . முதலில் வேறுபாடாக அடையாளப்படுத்தியது மெல்ல திரிந்து பாகுபாடாகிறது , பாகுபாடு என்பது பின் கீழ் மேலாக graded ஆக அடுக்கப்படுகிறது. "Differentiate ,Distance , Discriminate , Demonize " இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குழுவை அல்லது ஒரு அடையாளத்தை மையத்தை விட்டு வெளி தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.இப்படி எவ்வளவு தூரம் ஒரு குழுவை நாம் வேறுபடுத்தி , பாகுபாடு காட்டி நம்மிலிருந்து தூர வைக்கிறோமே அவ்வளவுக்கு அவர்களின் மேல் நாம் மெல்ல மெல்ல empathy ஐ இழக்கத் துவங்குகிறோம் . வெறுப்பும் ,அருவருப்பும், indifference உம் அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் அவர்களை தீமையின் உருவமாகவே உருவகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம் . மரபான சாதிய அடையாளத்தை முன்வைத்து தான் இந்த பாகுபாடு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில்லை.ஜெய் ஸ்ரீராம் , தேசப்பற்று , ஒரே தேசம் , வல்லரசு , மரபின் மூர்க்கம் போன்றவை எல்லாமே நவீன உயர் சாதியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.மாறாக ஆண்டி இந்தியன் , அர்பன் நக்ஸல் , காலிஸ்தான் விவசாயி, பிர்ஸ்டிடியூட், பிராந்தியவாதம் என்பதெல்லாம் நவீன தாழ்த்தப்பட்ட சாதிகள். அவ்வாறு தான் இன்று அவை நம் popular narration ஆல் கட்டமைக்கபடுகிறது...

Read more
டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளைக் காணவில்லை!

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்காத வட இந்திய பிரபலங்கள் மத்திய அரசின் போக்கை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர். இது அவர்களுக்கு பரவலாக ஆதரவையும் அவர்கள் மீது வெறுப்பையும் உருவாக்கிய நிலையில் தமிழகத்தில் திரையுலகில்...

Read more
நாளை இந்தியாவை முடக்க விவசாயிகள் போராட்ட அழைப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 72 நாட்களாக இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். இப்போது இந்த போராட்டம் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா,பருவநிலை மாற்றப் போராளியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான...

Read more
இலங்கையில் ஒரு சுதந்திர தினம் :::மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

சுதந்திரம் கேட்டவருக்கு அகல் விளக்கு கொளுத்த முடியாமல் ஒரு சுதந்திர தினம்! இறந்தவருக்காக கோவிலில் பிரார்த்தனை செய்ய முடியாமல் ஒரு சுதந்திர தினம்! இரவில் கதவைத் தட்டி பெண் கேட்பவனை தடுக்க முடியாமல் ஒரு சுதந்திர தினம்!

Read more
வட  இந்திய பிரபலங்கள் மீது மக்கள் கோபம்!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உலக அளவில் குவியும் ஆதரவும் அது தொடர்பாக இந்திய பிரபலங்கள் வெளிப்படுத்தும் ட்விட்டர் பதிவுகளும் இந்தியாவில் அந்த  பிரபலங்களுக்கு எதிரான  எண்ணங்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா உட்பட சர்வதேச பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இவரை  உலகம் முழுக்க பத்து கோடி பேர் பின் தொடர்வதால்...

Read more
எழுவர் விடுதலை நிராகரிப்பு நாடகம் அம்பலம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம்...

Read more
பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census  இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன்

இம் முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது பெருமளவுக்கு இணையத்தினைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளது {தேவையானோருக்கு பழைய காகித எழுத்து வடிவிலான முறை பின்பற்றப்படும்}. எனவே இருக்கின்ற ஒரு மாதத்தில் சரியான முறையில் இச் செய்தியினை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம்.

Read more
Page 73 of 1266 1 72 73 74 1,266