கருத்துச் சுதந்திரம்: பெண்கள் ஊடகத்துறையில் பங்காற்ற வேண்டும்

* பாகிஸ்தான் ஊடகவியலாளர் ரஹிமுல்லாயூ ஸாலாகி ஊடகத்துறையில் பெண்கள் துணிச்சலுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதன் மூலமே கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க முடியுமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பெஷாவர் நகரிலிருந்து வெளிவரும் “த நியூஸ் இன்ரநஷனல்’ பத்திரிகையின் ஆசிரியர் ரஹிமுல்லாயூ ஹிப்ஸலாகி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு மாத்தறை ஊடக இல்லத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் ஸலாஹி கருத்துப் பரிமாறுகையில் மேலும் கூறியதாவது;
பத்திரிகையில் செய்திகளை வெளியிடும் போது கருத்துச் சுதச்துந்திரம், பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடும் தன்மை, துணிச்சல் என்பன வேண்டும்.
எழுத்துத் திறமை இலகுவில் எவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், அதை வைத்து தங்கள் பேனாக்களை உரியவாறு பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் பொறுமைசாலிகள். அதேபோல் எந்த விடயங்களையும் எளிதில் பெற்று தாங்கள் கடமையாற்றும் பத்திரிகைகளில் எழுத அவர்களால் முடியும்.
இது ஒரு அழகிய நாடு. எமது நாட்டுக்கும் இலங்கைக்கும் பண்டைக் காலம் தொடக்கம் கலாசார, அரசியல் துறைகளில் உறவுகள் பேணப்பட்டுவருகின்றன.
ராவல்பிண்டிக்கு அருகே “தக்ஸலா’ என்ற பௌத்த சின்னங்கள் நிறைந்த ஒரு இடம் இருப்பதை அங்கு செல்லும் எவரும் காணலாம்.
எமது நாட்டிலும் முழுநேர செய்தியாளர்கள், அலுவலக செய்தியாளர்கள், பகுதிநேர செய்தியாளர்கள் என்று பல்வேறு தரங்களில் கடமை புரிகின்றனர்.
முழுநேரச் செய்தியாளர்களுக்கும் பகுதிநேரச் செய்தியாளர்களுக்கும் அவர்களின் செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமானால்தான் அதற்கேற்ற கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்திருப்பதைப் போன்று நீங்களும் எமது நாட்டுக்கு அவசியம் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அமெ.வுடன் அடிமை உடன்பாடு நிறைவேறும் பணியை தொடர்வோம் : பிரதமர் பிடிவாதம்

புதுடில்லி, ஜூன் 30-

இந்திய நலனுக்கு தீங்கு பயக்கும் வகையில் அமைந் துள்ள அமெரிக்காவுட னான அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்ற முயற் சித்தால், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட இடதுசாரிக் கட்சி கள் எச்சரித்துள்ள நிலை யில், உடன்பாட்டை நிறை வேற்றுவதற்கான பணி களை தொடரப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் பிடிவாதமாக கூறியுள்ளார்.

உடன்பாட்டை நிறை வேற்றும் வகையில், அணு சக்தி முகமை மற்றும் அணு வர்த்தக நாடுகளுடனான, உடன்பாட்டிற்கான பணி களை தொடர விரும்புவ தாக பிரதமர் கூறியுள்ளார். எனினும், அணுசக்தி முக மை மற்றும் அணு வர்த்தக நாடுகளுடனான உடன் பாடுகளை முடித்த பிறகு இதுகுறித்து நாடாளுமன் றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என் றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் அணுசக்தி தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்காவுடனான உடன்பாடு உதவாது. மேலும், சுயேட்சையான அயல்துறை கொள்கையும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த கொள்கைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும். இந்த உடன்பாடு அமெரிக் காவின் இராணுவ கூட்டணி யில் இந்தியாவை சிக்கவைக் கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு கூறி யுள்ளது. இந்நிலையில் உடன்பாட்டை நிறை வேற்ற மன்மோகன் சிங் அரசு முயலுமானால் ஆதர வை வாபஸ் பெறுவோம் என்று கட்சி திட்டவட்ட மாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சுற்றுச் சூழலுக்கான தேசிய செயல் திட்ட ஆவணத்தை தனது இல்லத்தில் வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், அணுசக்தி முகமை மற்றும் அணு வர்த்தக நாடுகளுட னான விவாதத்தை நிறைவு செய்து உடன்பாட்டை நிறைவேற்ற அரசை அனு மதிக்க வேண்டும் என்று கூறினார். இந்த உடன்பாட் டின் முடிவு அனைத்துக் கட்சிகளையும் திருப்திப் படுத்துவதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

இடதுசாரிக் கட்சி களின் எதிர்ப்பில் புதிதாக ஒன்றும் இல்லை என்று ஆணவத்துடன் கூறிய அவர், “நான் மீண்டும் வலி யுறுத்தி கூற விரும்புவது ஒன்றுதான். உடன்பாட்டிற் கான பணிகள் நிறைவேற அனுமதியுங்கள். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். நாடாளு மன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

உடன்பாட்டை நிறை வேற்ற முயன்றால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “அத் தகைய நிலை வரும் போது அதை நாங்கள் சந்திப் போம்” என்று பிரதமர் பதி லளித்தார்.

விலைவாசி மற்றும் பணவீக்கம் நாட்டு மக்க ளை பெரும் துன்ப துயரத் திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் அமெரிக்காவுட னான அடிமைச் சாசனத் தில் கையெழுத்திடுவதே மன்மோகன்சிங்கின் முன் னுரிமையாக உள்ளது என்ப தையே அவரது பேட்டி தெளிவாக்குகிறது.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இந்தியா – சீனா முயற்சி

பெய்ஜிங், ஜூன் 30-

இந்தியா – சீனா மேற்கொண்ட ஒப்பந்தங்களால் பெரும் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முயற்சிமேற் கொண்டுள்ளன என்று சீனாவுக்கான இந்திய தூதர் நிரு பமா ராவ் கூறினார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 100 உறுப்பினர் கொண்ட இந்திய இளைஞர் குழு சென்றது. இந்த குழு விற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீனாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுவான விவகாரங்களில் எங்க ளது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். எதிர்காலத் தில் ஏற்பட வேண்டிய பொதுவான விஷயங்களில் இரு நாடுகளும் சமீபத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளன. புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மாறு பாடுகள் மற்ற விஷயங்களிலும் பிரதிபலிப்பை ஏற்படுத் தும் என்றார்.

சீனா வந்துள்ள 100 உறுப்பினர் குழு இந்தியா – சீனா இளைஞர் திட்ட பரிமாற்ற நிகழ்ச்சியில் வந்துள்ள குழு வாகும். இந்த குழு இளைஞர் விவகாரத்துறை செயலாளர் எஸ்.கே.அரோரா தலைமையில் சீனா வந்துள்ளது. இரு நாட்டு இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நட்புணர்வை மேம்படுத்தும் என அரோரா கூறினார்.

வெற்றிப்பாதையில் நேபாளப் பெண்கள்: மல்லிகா அர்யாள்

நேபாளத்தில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் முதல் முதலாக கூடியபோது பழங்குடிக் குழுக்களான மதேசி, ஜனஜடி, தலித் போன்றவற்றின் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். பேரவை உறுப்பினர்கள் 601 பேரில் 191 பேர் பெண்களாவர்.
33 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென்ற இடைக்கால அரசியல் யாப்பு உத்தரவாதம் நிறைவேறுமா என்ற தேர்தலுக்கு முந்திய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 30 பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 161 ஆசனங்கள் பெண்களுக்குக் கிடைத்ததால் மொத்தம் 191 ஆசனங்களைப் பெண்கள் பெற்றார்கள். தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 575 உறுப்பினர்களில் இது 33.21 சதவீதமாகும்.
அனைத்து நேபாள பெண்களுக்கும் இது ஒரு சாதனையாகும் என்று இந்தக் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண்கள் கட்சியான ச.சக்தி நேபோல் என்ற கட்சியியைச் சேர்ந்த சரளா லமா கூறுகிறார். 1999 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் 6 சதவீதத்திற்கும் குறைவாக மொத்தம் 205 உறுப்பினர்களில் 12 பேரே பெண் உறுப்பினர்களாக இருந்தார்கள். தற்போதைய அரசியலமைப்புப் பேரவையில் 74 பெண் வேட்பாளர்கள் நேபாள சமுதாயக் கட்சியையும் (மாவோவாத) 39 பெண் வேட்பாளர்கள் நேபாள காங்கிரஸ் கட்சியையும் 36 பெண் வேட்பாளர்கள் நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மாக்சிஸ லெனினிஸ்ட் கட்சியையும் 13 பெண் வேட்பாளர்கள் மதேசி ஜனாதிகார் கட்சியையும் சேர்ந்தவர்களாவர்.
நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிஸ லெனினிஸ்ட் கட்சிகளின் கோட்டையென வர்ணிக்கப்படும் கோர்கா1, பர்தியா1 போன்ற தொகுதிகளில் மாவோவாத பெண் வேட்பாளர்கள் சிரான்ஜிபி வாக்ளே, பாம் தேவ் கோதாம் போன்ற பழம்பெரும் அரசியல்வாதிகளையே மண்கவ்வ வைத்துள்ளார்கள்.
இந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே வாக்களித்தார்கள். எனவே மாவோவாத பெண்கள் இந்தப் பழம்பெரும் ஆண் தலைவர்களை தோற்கடித்தமை ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நேபாள சத்பபானா கட்சியைச் சேர்ந்த சரிதா கிரி தெரிவித்தார்.
நேபாள மக்கள் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்த நேபாள வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சபிதா பண்டாரி பரல் வயது முதிர்ந்த ஆண் அரசியல்வாதிகளால் இந்த நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதிருப்பதே அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாகும் என்றும் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிலர் யுத்தத்தினால் கணவன்மாரை இழந்த விதவைப் பெண்களாவர். பெண்கள் விவகாரங்களில் நிபுணர்கள் இந்த நிலைமையை வரவேற்கும் அதேவேளை ஒரு நாட்டின் அரசியல் யாப்பை எழுதும் நடைமுறை சிக்கலாக இருப்பதாலும் பல சட்ட விடயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும் பெண்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் சட்ட நிபுணர்களை பேரவையில் வைத்திருப்பது அவசியமாகும்.
கிரி பெரிதாக கவலைப்படவில்லை. பெண்கள் நல்ல தலைவர்கள் என்று மக்கள் நம்புவதால் அவர்களை அவர்கள் தெரிவு செய்தார்கள் என்றும் தெரிவு செய்யப்பட்ட பெண் பாடசாலைக்கே செல்லவில்லை என்று யாராவது கூறினால் அவரை அதைரியப்படுத்துவதற்காகவே அப்படிக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
றொல்பா தொகுதியில் போட்டியிட்ட மாவோவாத வேட்பாளர் ஜய்பூரி கார்தி மகர் அவரது நேபாள காங்கிரஸ் போட்டியாளரை 22,000 க்கும் அதிகமான வாக்குகளால் தோற்கடித்தார். கடந்த வாரம் காத்மண்டுவில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மாவோவாத மக்கள் விடுதலை இராணுவத்தில் தாம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களை நினைவுகூர்ந்தார். மாவோவாத மக்கள் போராட்டத்தின் போது மகர் அவரது கணவரை இழந்தார். பல வருடங்களாக நிரந்தர வீடு ஒன்று இல்லாமலே அவர் வாழ்ந்து வந்தார். நேபாளத்தின் பல பகுதிகளிலும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தமது பெண் குழந்தையையும் கையில் எடுத்துக் கொண்டே சென்றார்.
இதுவரை காலமும் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் இந்தப் பேரவையில் பெண்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால் இந்தப் பேரவை விசேடத்துவம் பெறுகிறது என்று மகர் தெரிவித்தார். உயர் சாதியைச் சேர்ந்த பெண்கள் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களாகலாம் என்ற காலம் ஒன்று இருந்தது. இந்தத் தேர்தல் அந்த நடைமுறையை மாற்றி வைத்துள்ளது. தற்போது 12.5 மில்லியன் பல்வேறுபட்ட நேபாளப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு சாதிகள், குழுக்கள், இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 191 பெண்கள் அரசியலமைப்புப் பேரவையில் இருக்கிறார்கள் என்றும் மகர் கூறினார்.
ஐக்கிய மாக்சிஸ் லெனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாம் தேவ் கோதாமை 17,955 13,773 என்ற வாக்கு அடிப்படையில் தோற்கடித்த சரளா றெக்மி தமது வாக்காளர்களுக்கு நன்றி கூறுவதற்காக அவரது பர்தியா தொகுதிக்குத் திரும்பினார். அவர் கிராமங்கள் தோறும் சென்ற போது உள்ளூர் பெண்கள் திரண்டு சென்று நீண்ட காலம் ஐக்கிய மாக்சிஸ லெனினிஸ கட்சியின் கூட்டுப்பாட்டிலிருந்து வந்த தொகுதியில் துணிச்சலுடன் போட்டியிட்டமைக்காக அவரைப் பாராட்டினர். 1990 ஆம் வருட மக்கள் இயக்கத்திலிருந்து மாவோவாதிகளுடன் இணைந்து போராடி வந்த றெக்மி 1998 ஆம் ஆண்டில் நேபாள இராணுவம் கணவரைத் கொன்றதை அடுத்து மறைந்து வாழ்ந்து வந்தார்.
யுத்தத்தின் போது கிராமங்கள் தோறும் சென்ற றெக்மி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் யுத்தத்தினால் பெரிதும் சோர்ந்து விட்டார்கள் என்றும் ஒரே அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்றும் அறிந்து கொண்டார். பெண்கள் அவர்களது வாழ்க்கையையே தியாகம் செய்து முன்னணியில் விளங்குகிறார்கள் என்பதை சில ஆண் ஆதிக்க சமுதாயத்தினர் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள் என்று றெக்மி கூறுகிறார். தற்போது தங்களில் சந்தேகம் கொண்ட இத்தகைய மக்கள் தங்களால் சிறந்த அரசியல் யாப்பைத் தயாரிக்க முடியுமென நம்புகிறார்களில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமது கட்சியில் பால் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சில பெண் பிரதிநிதிகள் பல குழுக்களுக்கு தலைமை தாக்குவார்கள் என்றும் றெக்மி நம்பிக்கை தெரிவித்தார்.
பேரவையில் 33 சதவீதமான பெண்கள் இருப்பது தங்களுக்குப் பெரு வெற்றியாக இருக்கிறபோதிலும் இந்தக் தொகை போதாது என்று மகர் தெரிவித்தார். 50 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்குத் தர வேண்டுமென அவர் கோரினார்.
அரசியலில் மாற்றத்தை விரும்பிய நேபாள வாக்காளர்கள் பெண்களை வெற்றிபெறச் செய்தார்கள். புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக பேரவை கூடும் போது தங்கள் வாக்குகள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனவா என்பதை அவர்கள் அவதானித்து வருகிறார்கள்.
ஐ.பி.எஸ்.

25 பே‌ர் பாதுகா‌ப்பாக ‌நீ‌‌ந்‌தி கரை சே‌ர்‌ந்தன‌ர்: மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் நட‌த்‌திய தாக்குதல்

மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ன்போது ஆ‌ந்‌திரா- ஒ‌ரிசா எ‌ல்லை‌யி‌ல் உ‌ள்ள ‌நீ‌ர்‌த் தே‌க்க‌த்‌தி‌ல் க‌வி‌‌ழ்‌ந்த பட‌கி‌ல் இரு‌ந்த ந‌க்சலை‌ட் எ‌தி‌ர்‌‌ப்பு‌ப் படை‌யின‌ர் 36 பேரைத் தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் கட‌ற்படை‌யின‌ர் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஒ‌ரிசா மா‌நில‌ம் ம‌ல்கா‌ங்‌கி‌ரி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் உ‌ள்ள மலை‌ப் பகு‌‌தி‌யி‌ல் நே‌ற்று மாவோ‌யி‌ஸ்டுகளு‌க்கு‌ம் பாதுகா‌ப்பு‌ப் ப‌டை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌ந்தது. இ‌ம்மோத‌லி‌ல் ‌நீ‌ர்‌த்தே‌க்க‌ம் ஒ‌ன்‌றி‌ல் 64 ஆ‌ந்‌‌திர அ‌திரடி‌ப் படை‌யின‌ருட‌ன் இரு‌ந்த படகு க‌வி‌ழ்‌ந்தது.

இ‌தி‌ல் 25 பே‌ர் பாதுகா‌ப்பாக ‌நீ‌‌ந்‌தி நே‌ற்று கரை சே‌ர்‌ந்தன‌ர். இ‌ன்று மே‌லு‌ம் 3 பே‌‌ர் படுகாய‌த்துட‌ன் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு ‌விமான‌ம் மூல‌ம் புவனே‌ஷ்வ‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று காவ‌ல் அ‌திகா‌ரிக‌‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

‌மீதமு‌ள்ள 36 பேரை‌த் தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் கட‌ற்படை‌யின‌ர் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இலங்கையில் பிரித்தானிய தூதரக ஊழியர் மற்றும் செய்தியாளர் தாக்குதல்

இலங்கையில், தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் ஊழியர் ஒருவரும், உள்ளூர் செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
தூதரக அதிகாரியான மஹேந்திர ரட்ணவீரவும், செய்தியாளர் நாமல் பெரேராவும் ஒன்றாக கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை மறித்த குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்னும் அமைப்பு கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று இதுவரை சமிக்ஞை எதுவும் தெரியவில்லை. ஆனால், இலங்கையில் அண்மைய வன்செயல்களுக்கு இலக்கான செய்தியாளர்களில் தற்போது நாமல் பெரேராவும் உள்ளடங்குகிறார்.
தமது அதிகாரி மீதான தாக்குதலை இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அருவருக்கத்தக்க செயல் என்று கூறிக் கண்டித்துள்ளார்.
இந்தக் குற்றத்தைச் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‌பிரதம‌ரி‌ன் வா‌க்குறு‌‌தி‌யி‌ல் பு‌திதாக ஒ‌ன்று‌மி‌ல்லை: இடதுசா‌ரிகள்

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒப்பந்தத்தநடைமுறை‌ப்படு‌த்து‌வதகு‌றி‌த்தஇ‌‌ன்று ‌பிரதம‌ரஅ‌ளி‌த்து‌ள்வா‌க்குறு‌தி‌யி‌லபு‌திதாஒ‌ன்று‌மி‌ல்லஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌‌சி உ‌ள்‌ளி‌ட்இடதுசா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

அணு ச‌க்‌தி ஒப்பந்தத்தநடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்கமு‌‌ன்பநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஒ‌ப்புதலை‌பபெறுவோ‌மஎ‌ன்ற ‌பிரதம‌‌ரம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னவா‌க்குறு‌தி கு‌றி‌த்து, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த்‌திட‌மசெ‌ய்‌தியாள‌ர்க‌ளகே‌ட்டத‌ற்கு, “‌பிரதம‌ரி‌னவா‌க்குறு‌தி‌யி‌லபு‌‌திதாஒ‌ன்று‌மி‌ல்லை.‌ ஆனா‌ல், எ‌ங்‌க‌ளஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌ன் ‌நிலை‌ப்பாடு ‌மிக‌ததெ‌ளிவானது” எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, புதடெ‌ல்‌லி‌யி‌லநட‌ந்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழு‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌ல், அணு ச‌க்‌தி ஒப்பந்தத்தநடைமுறை‌ப்படு‌த்அரசநடவடி‌க்கஎடு‌க்குமானா‌லஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்துவரு‌மஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ள்வதஎ‌‌ன்றமுடிவெடு‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், “இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு சக்தி வணிகக் குழுவுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்” எ‌ன்றா‌ர்.

இதுகு‌றி‌த்தமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி கூறுகை‌யி‌ல், “இடதுசா‌ரிக‌ளி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌லபு‌திதாஒ‌ன்று‌மி‌ல்லஎன்று ‌பிரதம‌ரசொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர். ‌பிரதம‌ரி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌லபு‌திதாஎ‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லஎ‌ன்‌கிறோ‌மநா‌ங்க‌ள்.” எ‌ன்றா‌ர்.

பிரதம‌ரசொ‌ல்‌லியடி அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்தேவையாநடவடி‌க்கைகளமுடி‌‌க்நேர‌மிரு‌க்கு‌ம், ஆனா‌ல், ‌பி‌ன்ன‌ரநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கவரு‌ம்போதஅ‌‌வ்வொ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறு‌த்துவது ‌மிக‌ககடினமா‌கி‌விடு‌ம். அ‌ப்போதஉலகமஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ற்கு‌சசாதகமாஉ‌ள்ளதஎ‌ன்றஅவ‌ர்க‌ள் (அரசு) சொ‌ல்வா‌ர்க‌ளஎ‌ன்றா‌ரய‌ச்சூ‌ரி.

அணு சக்தி ஒத்துழைப்பு: நாடாளுமன்றத்தின் முடிவிற்கு கட்டுப்படுவோம் – பிரதமர்

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு தொழில்நுட்ப வணிகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியிலுள்ள தனது இல்லத்தில், வெப்ப நிலை மாற்றத்திற்கான பிரதமரின் பேரவை தயாரித்துள்ள, “வெப்ப நிலை மாற்றம் மீதான தேச நடவடிக்கைத் திட்டம” என்ற திட்ட நடைமுறை அறிக்கையை வெளியிட்டப் பிறகு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், “அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு, அதனை நடைமுறைக்கு கொண்டுவருதற்கு முன்னர் அதனை நாடாளுமன்றத்தில் வைப்போம” என்று கூறினார்.

“இதற்கு முன்னரும் சொல்லியிருக்கின்றேன், இப்போது மீண்டும் சொல்கின்றேன், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனுமதியுங்கள். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்” என்று கூறினார்.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாம் சமரத்தை எட்ட முடியும், அது அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்வதாக அமையும் என்று கூறிய பிரதமர், ஒப்பந்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டால் தங்களுடைய ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று இடதுசாரிகள் கூறியுள்ளனரே என்று கேட்டதற்கு, “அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது அதனைப் பார்க்கலாம” என்று பதிலளித்தார்.