இலங்கை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட 109 பெண்களில் 16 பேர் வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மனநோய் மருத்துவர் ஒருவர் கூறினார். தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான காரணத்தினால் இவர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 16 இளம் பெண்களையும் பார்வையிட இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோரமான மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இனப்படுகொலையில் இராணுவத்தினர் வவுனியா இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரம் வரையான இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வன்முறை கலந்த மனநோயின் காரணமாக அவர்கள் வைத்திய சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட பெண்கள் இராணுவ மனநோய் வைத்தியசாலையில் இராணுவ மனநோயாளர்களோடு பணியாற்ற கட்டளையிடப்பட்டதாகவும். அவர்களின் வன்முறை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இனியொருவிற்கு தெரிவிக்கப்பட்ட தகவல் குறிப்பிடுகிறது.
“ஒரு பெண்ணின் தந்தை தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கிவிழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.” பி.பி.சி தமிழோசை
என்னத்தை சொல்வேன் என்ரை ஐயோ என்று அந்த பெண்கள் அழுததை சிறீலங்கா அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழ் புண்ணாக்குகள் , மற்றும் மௌனமாய் இருக்கும் புண்ணாக்குகள் புரியும் காலம் வரும் . அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் கடத்த படும் பொழுது இந்த வலி அவர்களுக்கு புரியும்
Occupational hazards are there. Killinodhchi the provincial capltal must he bustling with actiivity. Minister Athaulllah tine to make it a Municipal Council along with Vavuniya.