ஸ்ரீ லங்கா இராணுவத்தில் பலாத்காரமாகவும் கட்டாயமாகவும் சேர்க்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் யுவதிகளை உடனடியாக விடுக்கும் படி இலங்கை அரசாங்கைத்தை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வற்புறுத்துகிறது. இது பற்றி பல விடயங்களை எமது கேந்திரம் வெளிக்கொண்டு வந்திருந்த போதும் இலங்கை அரசாங்கமோ போலி தமிழ் தலைமைகளோ சர்வதேசம் எனப்படும் ஏகாதிபத்திய சதிகாரர்களோ கவனத்தில் கொள்ளவில்லை.. இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகள் பேய் பிடித்தவர்களாகவும் மன நோயாளிகளாகவும் இராணுவத்தால் சித்தரிக்கப்படுகின்றனர். இதற்கும் அப்பால் பலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பது எமது கனத்தை ஈர்த்திருக்கிறது.
இவற்றையெல்லாம் பொறுத்து கொண்டு தேசிய சர்வதேச மனித உரிமைகள் சேயற்பாட்டாளர்கள், காப்பாளர்கள் மௌனம் காப்பதையும் எம்து கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் அண்மையில் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகளின் பரிதாப நிலை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளாவது,
கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் யுவதிகள் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்டது தொடக்கம் இது வரை அந்த யுவதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலங்கள் தொடர்பாக இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் அதனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகளில் சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி இராணுவ முகாம்களில் ஸ்ரீ லங்கா பெளத்த நடமுறைகளில் ஒன்றான பேய் விரட்டும் ’தொயில்’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நாம் அறிகிறோம்.
அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 தமிழ் யுவதிகளில் 16 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவர்கள் யாவரும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரையும் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அவ்ர்களது பெற்றோர்கள் உட்பட எவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இது பற்றி இலங்கை அரசும் இராணுவமும் பதில் கூற கடமைப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீ லங்கா இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டதாக கூறும் தமிழ் யுவதிகள் விருப்பமில்லாமல் சேர்க்கப்பட்டதற்கான சான்றாக இவையெல்லாவற்றையும் காண முடிகிறது.
இவற்றை எங்களது இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் கண்டிப்பது மட்டுமல்லாது, விருப்பமில்லாமல் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அணைத்து யுவதிகளையும் உடனடியாக விடுதலை செய்யும் படி கோருகிறோம்.
தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வைத்து அரசியல் நடத்தும் ’பிற்போக்கு தமிழ் தேசிய தலைமைகள்’ , அவ்ர்களுக்கு துணை போகும் வக்கில்லாத ’இடதுசாரிகள் எனப்படுவோரும்’ போலி எதிர்ப்புகளை காட்டி தமிழ் மக்களை திசை திருப்பி ஏமாற்றுவதை கைவிட்டு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் படி நாம் வலியுறுத்துகிறோம்.
இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே எமது கேந்திரம் ஐக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்த போதும் எந்த விதமான நடவ்டிக்கையும் எடுக்காத அரசியல் மற்றும் சமூக நடவடிக்கையாளர்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பத்திரிகை அறிக்கைகளுக்கும் இயல்பாக சரணடையும் சுபாவம் கொண்ட தமிழ் தலைமைகளும் அவர்களுக்கு துணை போகும் போக்கற்ற இடதுசாரிகள் எனப்படுவோரும் மக்களை ஏமாற்றாமல் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுத்து, பேரிணவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாமல் விட்டால் தமிழ் மக்கள் தொடர்பான அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு வலிறுத்துகிறது.
இந்த நிலைமைகளை உணர்ந்து தமிழ் மக்கள் தங்களது நாளந்த நடவ்டிக்ககைளுக்கான தீர்வு நீண்ட கால விடுதலைக்கான அடிப்படையாக செயற்படும் அமைப்புகளுடன் குறிப்பாக இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்துடன் அணி திரளுமாக கேட்டுக் கொள்கிறோம்.
இணை இணைபாளர்கள்,
இ. தம்பையா
டபிள்யூ. சோமரத்ன.
http://democracyandclasstruggle.blogspot.co.uk/2012/12/sri-lanka-recent-female-army-recruits.html
ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே
Khmer Rouge that is the left movement in Sri Lanka now. Why do you want to deny them the opportunity of the military experience. i
டாக்டர் சொல்வது சரிதான்!
இராணுவப் பயிற்சிக்கு போவது எங்க வீட்டுப் பிள்ளையோ உங்கள் வீட்டுப் பிள்ளையாகவோ இருக்க முடியாது.
டாக்டரின் எழுத்தைப் பார்த்தால் வெளிநாட்டில இருக்கிறவர் போல தெரியுது.
டாக்டரின்ர பெண் சகோதரங்கலையோ பெண் பிள்ளைகளையோ இப்படி இராணுவ பயிற்சி எடுப்பது நல்லது என்று புத்தி சொல்லி அனுப்புவாரோ.
எல்லாம் மாற்றான் பிள்ளைகள் தானே, அதுவும் வன்னிப் பிள்ளைகள்.
எங்களுக்கும் புலிக்கும் என்ன புளி வித்தியாசம்?
எல்லாம் ஒரே புழு உள்ள புளிப் புலிதானே!
வைத்தியா் என்று தாமாகவே தம்மை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல பேரதெனியாவில் இவா் மட்டும்தான் படித்தவா் போல அடிக்கடி தம்பட்டம் அடிக்கும் இந்த பெரியவா் நிச்சயமாக அறளை பெயா்ந்த நிலையில உள்ளார் என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம் ஆனால் இவா் மறைமுகமாக பேரினவாதிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்திவருவதுதான் ஆச்சரியம்.
இப்படி பலா் இணைய தளங்களில் வலம் வருகிறார்கள்- அதாவது எயமானா்களது ஏற்பாட்டில்- இவா்களது Gimmick குகளை நம்புவதற்குத்தான் யாரும் இல்லை.
Lawyer Sri 1954 – Kumar – Dr. Shri – December 27, 1950. Sarath Fonseka – December 18, 1950. 1970. Peradeniya Campus and Sri Lanka Army. Sinha Regiment.
Murugan, I was USA from 1981 to 1995. Canada 1995 to 1997. American Originale. It is ten months that they put in Virakesari that the Batticaloa Arasady Police Pots is no more. I am enough to map the whole country for the Sri Lanka Police. What comes out of my mouth is like radio waves. It will travel for ever.