பதினெட்டுக்கும் இருபத்திரண்டுக்கும் இடைப்பட்ட 109 தமிழ் இளம் பெண்கள் கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
சிவில் வேலைக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இராணுவத்தில் இணைந்துள்ள பெண்கள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருப்போரின் வறுமையைப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை பாசிச் அரசு, இந்த வைபவத்தை நேற்று – 17.11.2012 கிளிநொச்சியில் கோலாகல வைபவமாகக் கொண்டாடியது.
முன்னை நாள் போராளிகள் வறுமையின் காரணமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கே.பி இல் ஆரம்பித்து ஆனந்தவிகடன் வரை கூறிய கட்டுக்கதைகளின் பின்னர் இந்த இராணுவப் பெண்கள் சம்பவம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. புறக்கணிக்கத் தக்களவில் 80 களி காணப்பட்டதைவிட குறைவான நிலையிலேயே பாலியல் தொழில் காணப்பட்ட நிலையில் புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் வெளியான ‘முன்னைநாள் போராளிகளின் பாலியல் தொழில்’ குறித்த புனைவுகளின் அடுத்த தொகுதியாக இது நடைபெறுகின்றது.இவ்வாறான ‘பிரச்சாரங்கள் ‘ சில வேளைகளில் தன் முனைப்பாக நடைபெற்றாலும் உள்நோக்கம் உள்ளவையாகவும் காணப்படுகின்றன.
சமூகத்தின் பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்ப்ட்ட பெண் போராளிகளின் பிரச்சனைகள் பிரதேச அளவிலும் வர்க்க அளவிலும் வேறுபடுகின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் அமரிக்க ரைம்ஸ் சஞ்சிகையில் உலகின் சிறந்த உல்லாசப்பயண மையமாக இலங்கை தெரிவாகியிருந்ததும், அதற்கு முன்னர் ராஜபக்ச இலங்கையின் பிரதான தொழிலாக உல்லாசப் பயணம் மாற்றம்டைந்துள்ளது என அறிவித்ததும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தெற்காசியாவின் தாய்லாந்தாக இலங்கையை உருவாக்க ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் செயற்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன.
குடும்ப வறுமை, தொழிலின்மை என்பன காரணமாகவும், 30 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளம், மற்றும் வசதிகள் தரப்படும் என கூறியிருப்பதனால் தாங்கள் இதில் சேர்வதற்கு முன்வந்துள்ள போதிலும், இராணுவப் பயிற்சியென்றால் தங்களுக்கு விருதுப்பமில்லை என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்தனர்.
தமிழ் இளம் பெண்கள் வேலை வாய்ப்புக்காக இராணுவத்தில், அதுவும் தேசிய இராணுவத்தில் இணைவதை ஒரு சாதகமான நிலையாகவே தான் நோக்குவதாக, தெரிவித்த பாரதிபுரம் கத்தோலிக்க பாதிரி டிக்ஷன், கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு நிலைமைகளில் தமது பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் இந்தச் சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளைப் பிரிந்த போது கண்ணீர் விட்டு அழுததை கண்டதாகக் கூறினார்.
பெண்களைப் பாலிய வதைகளுக்கு உட்படுத்திய இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வது கபடத்தனமான நடவடிக்கை என வைபவத்தைக் காணவந்த பலர் தெரிவித்தனர்.
செ.பா
வெளிநாட்டு உணர்புகள் உள்நாடு உறவுகளுக்கு ஒருபோதும் சோறுபோடாது
இப்ப கிடைகிற பாதி சோறே தமிழ் பகுதியில அப்பிடித்தானே கிடைக்குது!
முன்னாள் போராளிகளுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் உழைப்புக்கு வழியையும் காட்டிவிட்டு ‘சிங்கள அரசின் கபட நாடகம்’ பற்றி பேசினால் பொருத்தமாக இருக்கும்
அருமையான ஆய்வு/ சின்னதாக அங்கங்கே நடக்கும் பாலியல் தொழிலை எல்லாம் பெரிதாக்கும் கட்டுப்பெட்டி வெள்ளாளா சமுகத்துக்கு பாலியல் தொழில் என்றாலே தாங்கிக் கொள்ள முடிகிறதில்லை. அதென்னவோ புனிதமாக்கி சமூகம் முழுவதுமே நடப்பதாக பெருது படுத்துகிறார்கள். இது எல்லா போராளிகளையும் பாதிக்கிறது.
சேர்த்தாலும் குற்றம் சேர்க்காவிட்டலும் குறறம், இந்த பாணிகளுக்கு மற்றவர்களை மட்டும் குறை கன்டு பிடிக்கும் வியாதி உள்ளது போல?
ithu srilankan fraud da
Single Sri Lanka citizenship.