2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்க தங்கச்சுரங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் மீது அந்த நாட்டின் ஆயுதப்படைகள் நடத்திய மிலேச்சத்தனமாக நடத்திய துப்பாக்கிப் பிரையோகத்தில் 34 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மனித சமூகம் வெட்கித் தலைகுனியும் வகையில் நடத்தப்பட்ட இத் தாக்குதல் உலகத் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!
முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறியர்களின் தாக்குதல்கள் உலகின் அதிகாரவர்க்கத்திற்கு உற்சாகத்தை வழங்கியது.அமைதிப் போராட்டங்களை நடத்தும் மக்கள் மீது உலகெங்குமுள்ள ஆயுதம் தாங்கிய அரச படைகள் தாக்குதல்களை நடத்தின. இந்தியாவின் வங்க தேசத்தில் சிங்கூர் என்ற கிராமத்தில் டாட்டா நிறுவனத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய அப்பாவி மக்கள் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்றது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் கொழும்பிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெலிவேரியவில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தில் பலரைக் கொலைசெய்தது.
பங்களாதேஷ், எகிப்து, அமெரிக்கா என்று விரிவடையும் ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்தும் அரச பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்கள் விழிப்படைய ஆரம்பித்துள்ளனர். மக்கள் பற்றும் சமூக உணர்வும் மிக்க தமிழர்கள் இப் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றனர். எதிர்வரும் சனி 16ம் திகதி மாலை 2 மணியிலிருந்து லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் மரிக்கானா எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. -பறை – சுதந்திரத்திற்கான குரல்- உட்பட பல தமிழர்கள் இப் போராட்டத்த்ல் கலந்துகொள்ளவுள்ளனர். மனிதாபிமானமும் மக்கள் பற்றுமுள்ள தமிழர்களுக்கு போராட்டக் குழு அழைப்பு விடுக்கிறது.
மரிக்கானா படுகொலைகள் தொடர்பாக இனியொருவில் வெளியான ஆக்கங்கள்:
ஈழத் தமிழர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் : ஆபிரிக்க புரட்சிகர முன்னணி
தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!
படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு
மனிதப்பிணங்களின் மேல் நடந்துசென்று தென்னாபிரிக்கா நோக்கி தேசியக் கூட்டமைப்பு
2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மரிக்கானா மனிதப்படுகொலையின் போது வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த லொன்மின் நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் தான் சிரில் ராமபோஷா. கறுப்பு முதலாலித்துவம் எனும் புதுக்கொள்கையின் அறிமுகத்தின் கீழ் தென்னாபிரிக்காவின் புதிய அதிபணக்காரனாக வ்வலுப்பெற்றுக்கொண்டிருந்த சிரில் ராமபோஷா முன்னாள் தொழிற்ச்ங்கத்தலைவன் – தற்போதைய தென்னாபிரிக்க உப-ஜனாதிபதி.
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணல் என்ற ஏமாற்றலின் கீழ் தென்னாபிரிக்க முறைநல்லிணக்கம் என்று சொல்லிச் சொல்லி சிரில் ராமபோஷா நேரத்தைத் தான் வீணாக்கினான் என பலர் பிழையான அபிப்பிராயங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் இம்முக்கிய காலகட்டத்தில் அவனது முயற்சியே சிரிலங்கா இராணுவம் தென்சுடானில் ஐ.நா அமைதிகாக்கும் படை எனும் பொய் போர்வையில் இவ்வருடம் நிலைகொள்ள முடியுமாயிற்று என்ற யூகிப்பு சரியாகத் தான் இருக்க வேண்டும் – ஏனென்றால் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் தென்சுடானுக்குமான விசேட பிரதிநிதியும் சிரில் ராமபோஷா எனும் அடிவருடியே!
இவை அனைத்தையும் இவற்றுக்கு அப்பாலும் ஆபிரிக்காவும் தமிழரும் சார்பான அதிமுக்கிய விடயங்களைக் கையாள ஒருநல்ல சந்தர்ப்பம் தான் வரும் சனிக்கிழமை லண்டனில் மரிக்கானா சுரங்கத் தொழிலாளர் தோழமை அமைப்பினால் அழைப்பு விடப்பட்டிருக்கும் ஆர்ப்பட்டம்.
தென்சுடானில் நடப்பது இயற்கைவளச் சுரண்டல்.
தென்னாபிரிக்காவில் நடப்பதுவும் இயற்கைவளச் சுரண்டல்.
இயற்கைவளச் சுரண்டலுக்கு ஒத்துப் போகும் பூகோள கேந்திர முக்கியத்துவத்தால் பெரிதும் பாதிப்புற்று தத்தளித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அவலநிலையை உலகுக்கு உணர்த்த முன்வர முயற்சி செய்ய வேண்டும்.