27.11.2012 அன்று மரிக்கானாவில் போராடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் படையினரால் கொல்லப்பட்ட தொழிலாலர்கள் நினைவாகவும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பல்வேறு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த புத்திசீவிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உத்வேகம் பெற்றுள்ளது என்றும் இவர்களிடையேயான இணைவும் முரண்பாடுகள் அடிப்படையில் புரட்சிகர சக்திகளிடையேயான இணைவுமே போராட்டங்களை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று ஆபிரிக்க புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த தோழர் உரையாறுகையில் தெரிவித்தார். இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களும், இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் மக்களும், மத்திய கிழக்கில் அழிந்து போகும் அப்பாவிகளும், ஆபிரிக்க நாடுகளில் கொல்லப்படும் மக்களும் இணைந்தால் உலகில் அசைக்கமுடியாத சக்தியாக உருவாகுவார்கள் என்று குறிப்பிட்டார்.