அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக வீடு சென்றுள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர்.
எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க அவரை விடுதலை செய்யுமாறு சிவசங்கர் விவாதித்துள்ளார்.
இந்த இடத்தில் வைத்தியர்; சிவசங்கர் படையினருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் கோபம் அடைந்த படையினர் அவரைத் தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை குறித்த குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை வைத்தியர் சிவசங்கர் படையினரை கடுமையாகத் திட்டினார் அவர்களை கட்டிப்பிடித்து முரண்டு பிடித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார் எனக் கூறி பொலிஸாரிடம் கையளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சிவசங்கருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநோய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிவசங்கரை அறிந்தவர்களுடன் தொடர்புகொண்டபோது அவருக்கு இதுவரை அப்படி எந்த நோய்களும் இருந்ததில்லை எனவும், இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என சான்றிதழ் வழங்கியவர் வைத்தியர் சிவதாசனே எனவும் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிவதாசனையே நேரில் தொடர்புகொண்டு கேட்டோம். அவரின் வாக்குமூலம் வருமாறு,
‘ஒரு வருடத்தின் முன்னர் டாக்டர் சிவசங்கரின் மனைவி தன்னைத் தொடர்புகொண்டு கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக முறையிட்டதாகவும், அதன் பின்னர் சிவசங்கரை தான் பார்வையிட்டு மருத்துவம் செய்ததாகவும் சிவதாசன் குறிப்பிட்டார். இராணுவம் கூறியது போன்று காண்பவர்களைக் கட்டியணைக்கும் ஒருவகையிலான மன நோயினால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் கடந்தவாரம் மருத்துவர் சிவசங்கர் குறித்துக் கேட்ட போது அவரை அறிந்திருந்த காரணத்தால் சிவசங்கர் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று இராணுவத்தினருக்குச் சான்றிதழ் வழங்கினேன் என்றார்’
முன்னதாக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மன நோயினால் பாதிக்கபட்டிருந்தனர் என்று சான்றிதழ் வழ்கியவரும் சிவதாசனே.
அரச சார்பு ஊடகங்கள் சிவதாசனின் வாக்குமூலத்தை முன்வைத்து இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும், இராணுவம் கூறுவது போல குறித்த மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தன. வழமைபோல இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது (பாலியல் வன்முறை கூட அல்ல) என்பதைக் கூட சிவதாசனதும் இராணுவத்தினரதும் தகவல்களை முன்வைத்து நிராகரித்த அரச ஆதரவுக் கும்பல்கள், பெண்கள் மீதான அரச பயங்கரவாதம் குறித்துப் பேசுவது கூடத் தவறானது என கூக்குரலிட்டன.
இலங்கை அரசுக்கு எதிராகக் குரலெழுப்புகின்ற அனைவரையும் புலிகள் என்றும், சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசுவது இனவாதம் என்றும், இராணுவம் நம்பத்தகுந்த வகையில் நடந்துகொள்கிறது என்றும், வட-கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறத் தேவையில்லை என்றும் தொடர்ச்சியாகச் சூறையாடப்படும் தேசிய இனம் ஒன்றின் மீது தமது நலனுக்காக உளவியல் யுத்தம் நடத்தும் சமூகவிரோதிகள் எதிர்கொள்ளப்படவேண்டும்.
டாக்டர் சிவசங்கர் அண்மையில் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக விசாரணைக்கு உட்படுத்தபட்டிருந்தார். எச்சரிக்கை உடனான விசாரணையாக அது இருந்தது எனச் சிவசங்கர் கூறியிருந்தார். அந்த விசாரணையின் பின்பும் சங்கரின் அடுத்த கட்டுரை பிரசுரமாகி இருந்தது.
மிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார்.
மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற சிவதாசன் போன்றவர்கள் எந்தக் குற்ற உணர்வுமற்ற அப்பட்டமான வியாபாரிகள். மருத்துவர்கள் அல்ல.
தொடர்புடைய பதிவுகள்:
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் குறித்து சிவதாசனுடன் உரையாடல்
இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது
இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை : மருத்துவர்
இராணுவத்தில் இணைகட்டாயப்படுத்தல் மூலம் இளம் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப் பட்டுள்ளார்கள் : பெண்கள் செயற்பாட்டு வலையமைப்புத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் : ஊதுகுழல்கள் ஆரம்பித்துள்ள உளவியல் யுத்தம்!
16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் : மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?
இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?
சங்கர் மிக நேர்மையானவர். உயர்ந்த மனிதர்! வைத்தியர் என்ற உயர்ந்த பதவியை க்வகிப்பவருக்கே இந்த நிலை என்றால்….
BBC Tamil is the media promoted this Sivathasan. We have to question the reliability of the above international media. inform this issue to the human rights organization and mention about BBC Tamil too. Thanks inioru to expose the truth promptly.
there is an on-line form on the BBC all should make this complaint . there is no point in just shouting among ourself . i made a complaint 10 days ago following is the acknowledgement from BBC .
if you use the same ref number as below . it will make our case stronger
YOUR COMPLAINT:Case number CAS-1832914-962001
Complaint Summary: Beating make the psychiatric patients better –BBC
Full Complaint: Derar Sir /Madam , COMPLAINT Beating of psychiatric patients Beating may make the psychiatric patients better suggest a Srilankan doctor in BBC Tamil . This suggestion was broadcast on BBC Tamil on 15th Dec 2012. this suggestion not only breaches the basic rules of human rights but also total breach of patient care guidelines of WHO. I believe , the doctor in question should not be treated as a doctor . I am shocked to see BBC Tamil has broadcast opinion of this doctor who has no respect towards the patient . I kindly request you to investigate this matter. Here is the full news link of news item ,http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121215_vanniarmy.shtml Here is the relevant section separated uploaded by me http://www.youtube.com/watch?v=Lgar9tkp6jo This news item is about forced recruitment of women to Srilankan Army , even today member of parliament has confirmed this “Sri Lanka Tamil party claims Tamil women recruited to the military forcibly” http://www.colombopage.com/archive_12B/Dec16_1355677790CH.php? There are doubts raised by many MP’s that these women are used as “comfort women.”Hence the psychiatric problem , parents and public officials are barred from meeting the girls . I request immediate removal and reply failing which this matter will be taken up further. Thank you S.S
this is the complaints link http://www.bbc.co.uk/complaints/
Dr.Shivashankar was ex president of medical union as well most tamil doctors accuse sivathasan as a bad guy but ponguthamizh web and yathinthiraa think in different way ??? are they also suffer from this பணநோய் or fame நோய்
What Dr. Sivathasan said is novel and interesting. It need to be heard. My family counsellor Dr. Surjit Singh told me at Terre Haute, Indiana, USA, if you watch television just regularise your habits. He also said that politics is there in all Universities. He is a Sikh that do not wear the turban. In Scarborough General Hospital , Ontario, Canada, one Dr. T. Sooriyapalan said that he do not know what is wrong with me. He told me not to write letters to anyone. He is of course a Tamil from Sri Lanka – Shri Lanka.
You may want to read “The Myth of Mental Illness: Foundations of a Theory of Personal Conduct By Thomas S. Szasz”. His views are extreme but true at times. When we do not want to take responsibility for our actions we want to rely on an excuse like depression. On the other hand there are people with serious problems that require medical help and with that they seem to lead a normal life.
Another book you may like to read is “An Unquiet Mind By Kay Redfield Jamison” That is more recent, practical and not very academic like the one from Szasz.
சுபத்திரன் கொலை செய்யபட்ட போது சிவசங்கர் புலிகளுக்கு எதிராகவும் இதே மாதிரி செயல்பட்டார். எங்கு பிரச்சனை உள்ளதோ அங்கு நியாயம் கேட்பார் சங்கர். பாட் கை போல் அல்ல.
WHY OUR TAMILS IN ABROAD KEEPING SILENCE.
I think the winter has frozen their mouths.
சிவதாஸ் யாழ் மருதுவ பீட 4th batch சேர்ந்தவ்ராம். இந்த நாலாம் பட்ச் காரர் நீர்கொழும்பிலும் , யாழபாணத்திலும் நத்தார் புதுவருடம் கொன்டாடினார்களாம். விரிவுரையாளர்கள் உட்பட 200 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்களாம்.
இவர்களிடம் ஒரு கேள்வி. நல்லாக இருக்கும் நண்பர்களுடன் கொன்டாட்டம் மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற உங்கள் போக்கு எவருக்கும் நல்லதல்ல . மருத்துவ ததுவமான “caring” சிந்தனைக்கும் பொருந்தியதல்ல . இந்த கொண்டாட்டதில் கலந்து கொண்ட ஒருவருக்கு துன்பம் வந்தால் அவரும் கைவிடப்படுவார் என்பதை இந்த போலி சங்கமும் அதன் ஏற்பாட்டாளர்களும் சொல்லாமல் சொல்லுகின்றார்களா?
“ஆட்டம் பாட்டம் பண்ணத்தான் உறவு அதுக்கு மேலே நீயாரோ நான் யாரோ” என்பது எவருக்கும் நல்லதல்ல அத்தகைய உறவுகள் நண்பர்கள் இருந்தென்ன பயன்???
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த டக்டர் Heman இடம் இருந்து அனுப்பப்பட்ட மின் அஞ்சல் பின்வருமாறு தெரிவிக்கின்றது .
Hi all,
As most of you all know that we had successfully completed our celebration in Jaffna as well as in Negombo.
Jaffna program was very successful more than 200 medical students participated;and more than 20 consultants and university lecturers also participated. The program was started by the lighting of the oil lamp by the vice chancellor and dean. In spite of heavy schedules and meetings they came for our invitation. Thanks to all.All the speakers have done well. We gave cash prizes to first three student presentations and first three junior doctors presentations.
Almost all our past teachers who are in Jaffna were there. They were very happy about this function and we gave them plaque to all the teachers as a token of honoring them.
Almost all of our batch mates who came for the function have contributed to collect fund to donate to the medical faculty and to the Jaffna teaching hospital. Some who have not come also contributed, thanks to all. We will decide what to do with that money in the near future.
Negombo get together almost 30 batch mates and their family members participated. We had great fun there; everyone enjoyed the stay in the hotel with their batch mates. We invited our past teachers in Colombo to join us for the lunch.
Altogether we had a great time with our batch mates. Thanks to all who participated. We decided to have another get together after 5 years.
There are lots of photos uploaded in 4th batch yahoo group site please visit
Jmf4thbatch to see. Please write your views.
Thank you
“ஆட்டம் பாட்டம் பண்ணத்தான் உறவு அதுக்கு மேலே நீயாரோ நான் யாரோ” என்பது எவருக்கும் நல்லதல்ல அத்தகைய உறவுகள் நண்பர்கள் இருந்தென்ன பயன்??? நல்லாக இருக்கும் நண்பர்களுடன் கொன்டாட்டம் மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற உங்கள் போக்கு எவருக்கும் நல்லதல்ல .
இந்த போக்கு உங்களையும் ஒருனாள் உங்கள் முகத்தில் நிச்சயம் அறையும் தன் கோரமுகத்தை காட்டும் . அப்பொழுது தான் என்ரை துன்பத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை என்று அழுதுதான் இதனை உணரப் போகின்றீர்கள் என்றால் அதை விடக் கேவலம் என்ன இருக்கு ? படித்தவர்களே இப்படி என்றால் எமது சமூகம் அழிந்தே தீரும். இன்னும் 10 ஆண்டுகளில் நீங்கள் யாழ் போக அனுமதி யும் இருக்காது . உங்கள் யாழ்ப்பாணமும் இருக்காது . இதையும் படியுங்கள் http://en.wikipedia.org/wiki/First_they_came…
open question to to Dr Raj Hemantha and others do you really care about your 4th batch friends ?
what is the moto
behind this gathering ? please enlighten me .