முள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த மையவாதம், இந்திய உளவுப்படை, சீன ஆயுதங்கள், அமரிக்க ஆதிக்கம் எல்லாம் ஒருங்கிணைந்து நந்திக் கடலை இரத்தக் கடலாக மாற்றிவிட்டிருக்கிறது. தமிழ் குழந்தகளின் பிணங்களையும், முதியோரின் மரண ஓலங்களையும் பிரபாகரனின் பிணத்திற்குள் மறைத்திருக்கிறன இந்த நாசகார சக்திகள். மனிதப் பிணங்களின் மேல் ஏறிநின்று பிரபாகரனின் பிணத்தைத் தேடுவதாக...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது இவ்வாறு கூறியுள்ளார் . பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.
இலங்கையின் வடபகுதியில் நடந்த போரில் சிறார்கள் உட்பட மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த அண்மைய மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, பிரஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கோருகிறது. இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும் வாகனம் மூலம் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.எவ்.பி. குறிப்பிட்டுள்ளது. “அவரும் மேலும் இருவரும் வானத்திற்குள் கொல்லப்பட்டனர். உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் மேற்கொள்ளப்படும்” எனப் பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பா.நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமேஷ் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரின் மகன் சார்ள்ஸ் அன்டனியின் சடலம் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சடலமும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், 200 புலிகளுடன் இருக்கும் அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை அவரது மகனான சார்ல்ஸ் அன்டனி, புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்க ளன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கை யுத்தப் பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது எழும் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாது, இலங்கை அரசு மீது எழும் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. சிறார்கள்
இவர் அவசர அவசரமாக இலங்கை திரும்பியது தொடர்பாகப் பல ஊகங்கள் வெளிவந்தன. குறிப்பாக நாட்டுமக்களுக்கு வெற்றிச் செய்தியை அறிவிக்கவே மகிந்த இலங்கை வந்து இறங்கியதாக காட்டுத் தீ போல செய்தி பரவ ஆரம்பித்தது. தலை நகரம் குதூகலித்தது. தேசியக் கொடியும் பௌத்த கொடியும் காணுமிடமெல்லம் பறக்கவாரம்பித்தன. தெருக்களில் சிங்கள மக்கள் நடனமாடினர். பட்டாசுக்களின் சத்தம் வன்னிக் கொலைத் துப்பாகிகளை நினைவு படுத்தியது.