இலங்கையின் வடபகுதியில் நடந்த போரில் சிறார்கள் உட்பட மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த அண்மைய மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, பிரஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கோருகிறது.
இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவி அமைப்புக்களை அனுமதிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டிருக்கிறது.







