பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் முறையின் தோல்வியும் அவமானம் தரும் தமிழ்த் தலைமைகளும்

electionபிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி, தொழில் கட்சி, போன்ற பிரதான கட்சிகளில் ஒன்று அதிகமான வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதித் தகவல்களின் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் முறையே 34 வீதமான வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் எனினும் ஆட்சி அமைப்பதற்காக தகமையைப் பெற்றுக்கொள்ள மாட்டா எனக் கூறப்படுகின்றது. தவிர, சிறிய கட்சிகளுள் பிரித்தானிய சுதந்திரக் கட்சி (UKIP) எனப்படும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான கட்சி 12 வீதமான வாக்குக்களைப் பெறும் என கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

வாக்களிப்பவர்களின் தொகை வளமையிலும் குறைவானதாகவே காணப்படும் என மேலும் சில கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.
பல்தேசிய நிறுவனங்களின் பிரதிநிகளாகச் செயற்படும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். பொதுவாக எந்தக் கட்சியும் பெருமான்மை பெறமுடியாமலிருப்பதற்கு நம்பிக்கையீனமே காரணம் என்று கூறப்படுகின்றது. பொதுவாக ஜனநாயக சக்திகளும் போராடும் மக்கள் பிரிவினரும் தேர்தலை நிராகரிக்கும் நிலையிலுள்ளனர்.

ஏனைய சமூகத்தினருக்கு தங்களை எப்போதும் சுய நலவாதிகளாகவே காட்டிக்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றை ஆதரிக்கும் படி கோரிக்கைவிடுக்கின்றனர்.

தமிழர்களின் வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆளும் பழமைவாதக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க்குற்றங்களைத் தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்க்கொண்டிருக்கிறது. டேவிட் கமரனைப் பிரதம வேட்பாளராகக் கொண்ட அக்கட்சிக்கு தம்மைப் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறும் குழுவினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சென்ற டேவிட் கமரன் ‘கொடூரமான புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தமைக்காக இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்’ எனக் கூறினார். டேவிட் கமரன் தனது ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவே இப்படிக் கூறினார். அதே வேளை புலிகளின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் புதிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்கிறவர்கள் துரோகிகள் ஆக்கப்படுகின்றனர்.

டேவிட் கமரனுக்கு வாக்களியுங்கள் என அதே குழுக்கள் கூறுகின்றன.

இலங்கையில் பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரான நிர்ஜ் தேவா சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். இது குறித்து கேள்வியெழுப்புமாறும் பேசுமாறும் ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது, இதுவரை இது குறித்து ஒருவரும் மூச்சுக்கூட விட்டதில்லை. ஆக, தமிழ் வேட்பாளர்கள் வாக்குப் பொறுக்குவதற்காக மட்டும் தமிழர்களை நோக்கிச் செல்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் ஆட்சியிலும், தொழிற்கட்சியின் ஆட்சியிலும் இலங்கைப் பேரினவாத அரசிற்கு ஆயுதங்களும், ஆலோசனைகளும், ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இவை குறித்தெல்லாம் பேசக் கூட இவர்கள் விரும்பவில்லை.

30 வருட ஆயுதப் போராட்டம் புரட்சிகரமான தமிழ்ச் சமூகத்தைக் கட்டியெழுப்பவில்லை. வாக்குப் பொறுக்கிகளிடமும், அன்னிய உளவாளிகளிடமும் தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதியை ஒப்படைக்கும் ஒட்டுண்ணிகளையே உருவாக்கியுள்ளது என்பது தேர்தல் அருவருப்புக்களே தெளிவுபடுத்துகின்றன.

மகிந்த மைத்திரி சந்திப்பு தோல்வி : சுதந்திரக் கட்சி

my3இலங்கையின் ஜனாதிபதி மத்திரிபால சிரிசேனவிற்கும் முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சிறீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிரிசேனவும் காத்திருந்த ஊடகங்களுக்குத் தகவல்கள் வழங்காமல் விடைபெற்றனர்.

இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்க்த்தில் இனக்கொலையாளியும் இதுவரை இலங்கையைச் சூறையாடி தண்டனைகளிலிருந்து தப்பியவருமான மகிந்த ராஜபக்சவும், மறு புறத்தில் அமெரிக்க – இந்திய அதிகாரங்களின் சோளக்காட்டுப் பொம்மை மைத்திரிபால சிரிசேனவும் நடத்திய இக் கேலிக்கூத்து இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இன்றைய தசாப்தத்தின் மிகப்பெரும் குற்றவாளியான மகிந்த ராஜபக்ச போர் வெற்றியையும் சிங்கள பௌத்த தேசிய வெறியையும் முகமூடியாகக் கொண்டு நாட்டைச் சூறையாடினார். ‘நல்லாட்சி’ என்ற முகமூடியோடு அன்னிய நாடுகளின் கரங்களில் முழு இலங்கையையும் ஒப்படைக்கிறார் மைத்திரிபால சிரிசேன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாள் ஜோன் கெரியின் இலங்கைப் பயணத்தின் பின் சில நாட்களுக்கு உள்ளாகவே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை முழுவதையும் அன்னிய நாடுகளுக்கு விலை பேசி விற்ற இருவரதும் சந்திப்பின் வெற்றியும் தோல்வியும் மக்களுக்கு நம்பிக்கையைம் பெற்றுத்தராது.

மாவோயிஸ்டுகளைத் தேடிச் சென்று சரணடைந்த போலீஸ்காரர் : இராமியா

maoistpolice“மாவோயிஸ்டுகள் இவ்வளவு பேர்கள் காவல் துறையினரிடம் சரண் அடைந்தனர்” “நக்சலைட்டுகள் அவ்வளவு பேர்கள் அரசு அதிகாரிகளிடம் சரண் அடைந்தனர்” என்று ஊடகங்களில் செய்திகள் வெளி வருவதைப் பார்த்து இருக்கலாம். ஆனால் சட்டிஸ்கர் மாநிலம், நாராயண்பூர் பகுதியில் உள்ள ஃபரஸ்கவ் (Farasgav) காவல் நிலையத்தைச் சேர்ந்த மிச்சே வட்டா (Michche Vadda) என்ற 37 வயது காவலர் தன் மனைவி மஞ்சுவுடன் சென்று குடுல் (Kutul) பகுதியைச் சேர்ந்த மக்கள் அரசாங்கத்திடம், அதாவது மாவோயிஸ்டுகளிடம் 29.3.2015 அன்று சரண் அடைந்தார். காவல் துறையினர் அவரைக் காணவில்லையே என்று தேடிய போது 5.4.2015 அன்று இவ்விவரம் தெரிய வந்துள்ளது.

மிச்சே வட்டா 2005 ஆம் ஆண்டில் காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்குப் பத்து ஆண்டுகளில் இரண்டு பதவி உயர்வுகள் கிடைத்து உள்ளன. மக்களிடம் மாவோயிஸ்டுகளின் பெயர் கெட வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மாவேயிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்காவிட்டால் அவர்களுடைய கதி இது தான் என்று அச்சுறுத்துவதற்காகவும் அவருடைய பணிக் காலத்தில் போலியான எதிர்ச் சண்டையில் (Fake encounter) பல அப்பாவி மக்களைக் கொலை செய்யப் பணிக்கப்பட்டு இருக்கிறார். 2007 ஆம் ஆண்டில் அவரது அக்கா மகன் ரைனுவும் (Rainu) அவரது நண்பர் சமலுவும் (Samalu) இது போன்ற போலி எதிர் சண்டையில் கொல்லப்பட்டனர். மேலும் அவரது தம்பி கரியா வட்டா (Karia Vadda) ககடஜோர் (Kakadozor) காவல் துறை முகாமில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த மிச்சே வட்டா, தனக்கு இடப்படும் ஆணைகளுக்குக் காரணம் கேட்க ஆரம்பித்தார். இதனால் கோபம் அடைந்த உயர் அதிகாரிகள் மிச்சே வட்டாவின் மனைவியைத் தொந்தரவு செய்வதில் ஈடுபட்டனர். இதைக் கண்டு மனம் உடைந்து போன மிச்சே வட்டாவும், அவரது மனவைியும் நேராக மாவேயிஸ்டுகளிடம் சென்று, தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விவரித்து, இது வரை ஆதிக்கவாதிகளுக்குச் சேவை செய்து கொண்டு இருந்ததை மாற்றி, இனி ஒடுக்கப்படும் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதகக் கூறி அவர்களிடம் சரண் அடைந்தனர்.

மிச்சே வட்டா என்ற அந்தக் காவலரின் மன உளைச்சல் உண்மை என்பதை வேத் பால் (Ved Pal) என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அடைந்த விவரங்களை 18.4.2015 அன்று வெளியிட்டதில் இருந்து தெரிகிறது. இந்திய அரசின், உள் துறை அமைச்சகத்தில் இருந்துஅவர் பெற்ற தகவலின்படி, இந்திய அரசுக்கும் நக்சலைட்டுகளுக்கும் நடக்கும் போரில் கடந்த இருபது ஆண்டுகளில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 61% பேர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிப் பொது மக்கள்; 23% பேர்கள் மாவோயிஸ்டுகள்; 16% பேர்கள் காவல் துறையினர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசு காவல் துறையினரைக் காவு கொடுப்பது மட்டும் அல்லாமல், அப்பாவிப் பொதுமக்களையும் அனாவசியமாகக் கொன்று, தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறது என்று புரட்சிகர எழுத்தாளர் வரவர ராவ் 18.4.2015 அன்று ஹைதராபாத்தில் தெரிவித்தார். இந்திய அரசின் இயலாமையே நக்சலைட்டுகளின் வெற்றிக்கு ஒரு ஆரம்பம் என்றும் அவர் கூறினார். மேலும் சட்டிஸ்கர், ஒரிசா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் நக்சலைட்டுகளின் கீழ் இயங்கும் மக்கள் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுரண்டலுக்கு ஆட்படாமல் வாழ்கின்றனர் என்றும், காலப் போக்கில் தங்கள் இயக்கம் நாடு முழுமைக்கும் பரவி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

நடந்த செய்திகளைக் கூறுவதில் நக்சலைட்டுகள் உண்மையையே கூறுகின்றனர். ஆனால் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றி பற்றிக் கூறுகையில், இந்திய நாட்டின் நிலைமையை, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்க வலிமையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவறு புரிகின்றனர்.

இந்திய நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நக்சலைட்டுகளின் இயக்கத்தால் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1%க்கும் குறைவாகவே இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக இவர்களுடைய வளர்ச்சி ஊக்கப்படும்படியாக இல்லை என்பதும் மறைக்க முடியாத உண்மை.

1940களில் தெலங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம், அன்றைய வலுவில்லாத இந்திய அரசினாலேயே அடக்க முடிந்தது. இன்று தனது வலிமையை இந்திய அரசு பல மடங்கு பெருக்கி உள்ள நிலைமையில், அதே போல் சின்னஞ்சிறு பகுதிகளில் மட்டும் இயக்கத்தை வளர்த்து எப்படி வெற்றி அடைய முடியும்?

மேலும் இன்னொரு படிப்பினையையும் மனதில் கொள்ளுவது மிகவும் அவசியம். விடுதலை இயக்கத்தை ஈழத் தமிழர்கள் மிக வலிமையாகவே வளர்த்து எடுத்தார்கள். இந்தியாவில் உள்ள எந்த விடுதலை இயக்கமும் ஒப்பிடவே முடியாத அளவிற்கு மிக வலிமையாகவே வளர்த்து எடுத்து இருந்தார்கள். சிங்கள அரசை வென்று, ஈழப் பகுதியில் வெற்றிகரமாக அரசை நடத்திக் கொண்டும் இருந்தார்கள். சிங்கள் அரசு ஒன்றும் செய்ய முடியாமல் ஒதுங்கி நின்றே இருந்தது. ஆனால் பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு தலையிட்ட பிறகு நிலைமை மாறியது.

அந்நிய மண்ணிலேயே தங்கள் வலிமையை நிலைநாட்டிய பார்ப்பன அதிகார வர்க்கம், இந்தியாவில் மிக மிக எளிதாகத் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளும் என்று புரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

அதனால் தான் தந்தை பெரியார் ஈழத் தந்தை செல்வாவிடம் “நாமே இங்கு பார்ப்பன அரசுக்கு அடிமையாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி அய்யா உதவ முடியும்?” என்று கேட்டார்.

அந்த தர்க்க நியாயம் இந்திய மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு அதிகமாகவே பொருந்தும். இந்திய மக்களில் 80%க்கும் அதிமானவர்கள், ஈழப் பிரச்சினையில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாகவே இருந்தார்கள். (இப்பொழுதும் இருக்கிறார்கள்) ஆனால் வெற்றி பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கே கிடைத்தது.

இதே நிலைமை தான் இந்திய மக்களின் விடுதலை .இயக்கங்களுக்கும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நம் மக்கள் விடுதலை இயக்கங்கள் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான முன் நிபந்தனை, இந்திய அதிகார மையத்தில் பார்ப்பனர்களின் வலிமையை முற்றாக ஒழிப்பது ஒன்றே ஆகும்.

பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தை எப்படி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்? அதிகார மையங்களில் நிரம்பி வழியும் பார்ப்பனர்கள், (பெரியார், அம்பேத்கார் போன்றோருடைய போராட்டங்களின் பயனாக) அதிகார மையங்களில் நுழையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைச் செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் செய்யும் நிலையில், ஒடுக்கப்பட்ட வகுப்பு அரசியல்வாதிகளை மட்டும் பழி வாங்கி ஒடுக்கி வைத்து, அவர்கள் தங்கள் வகுப்பு நலன்களை முன்னெடுப்பதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு செய்து, தங்களை மீறி யாரும் போய் விடாதபடி பார்த்துக் கொண்டு, தங்கள் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதிகார மையங்களில் அவர்கள் பெரும் அளவில் எப்படி ஆக்கிரமிக்கிறார்கள்?

மக்களில் அனைத்துப் பிரிவினரிலும் உயர்ந்த அறிவுத் திறன் முதல் குறைந்த அறிவுத் திறன் வரை உடையவர்கள் உள்ளனர். இது மாற்ற முடியாத இயற்கை நியதி. ஆனால் பொதுப் போட்டி முறையில் இது பிரதிபலிப்பதே இல்லை. அதிகாரம் படைத்த வேலைகளுக்குப் பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மற்ற கீழ் நிலை வேலைகளுக்கு ஒடுக்கபட்ட வகுப்பு மக்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். அப்படி என்றால் பொதுப் போட்டி முறையில் கொடூரமான சூது உள்ளடங்கி இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா?

இக்கொடூரமான சூதை ஒழித்துக் கட்டி, உண்மையில் திறமை உடையவர்கள் உயர்நிலைகளிலும், திறமைக் குறைவானோர் அடுத்த நிலைகளிலும் தேர்ந்து எடுக்கப்படுவதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும்.

அது தான் விகிதாச்சாரப் பங்கீட்டு முறை. இம்முறையில் அரசுத் துறை, தனியார் துறை, பெட்ரோல், எரிவாயு, சமையல் எண்ணெய், உரம் போன்ற முகவர் (Agency) பணி ஆகிய சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும், அனைத்து நிலைகளிலும், முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர். மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில்அவரவர் விகிதத்திற்கு ஏற்ப, பங்கிட்டுக் கொடுத்து விட்டால், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைசாலிகள் உயர் நிலைப் பணிகளிலும், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலைப் பணிகளிலும் இருப்பர்.

அந்நிலையில் இப்போது நடப்பது போல, பார்ப்பனர்கள் மட்டும் ஒன்று கூடிக் கமுக்கமாகப் பேசி அவர்களுடைய நலன்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், அதிகாரம் படைத்த பதவிகளில் பார்ப்பனர்களின் சூதை முறியடிக்கக் கூடிய வலிமை உள்ள அளவிற்குப் போதுமான எண்ணிக்கையில் இருந்தால், அப்பொழுது இந்திய அரசின் முடிவுகளே கூட இப்போது இருப்பது போல் இருக்க முடியாது. அந்நிலையில் அதிகார வர்க்கத்திலேயே கூட மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகப் பிளவுகள் உண்டாகலாம். அதாவது ஆதிக்க வர்க்கத்தின் வலிமை குறையும்.

அது மக்கள் விடுதலை இயக்கங்களை வெற்றிப் பாதையில் கால் பதிக்க வைக்கும். ஆகவே நாம் விகிதாச்சாரப் பங்கீட்டுக்காகப் போராடுவது முதன்மையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

அவ்வாறு போராடாமல் இப்போது செல்லும் பாதையில் மட்டுமே தொடர்ந்து சென்றால், அது நமது செயல் வீரர்களைக் காவு கொடுப்பதில் கொண்டு போய் முடியும்.

தமிழ் நாட்டிற்குள் நுளைந்த ஆந்திர போலிஸ் படை மாவோயிஸ்டுக்களைக் கைது செய்தது

கைதான ரூபேஷ் மற்றும் ஷீனா
கைதான ரூபேஷ் மற்றும் ஷீனா

ஆந்திரப் பிரதேசப் போலிஸ் படை தமிழ் நாட்டுப் போலிசாரின் உதவியுடன் கோயம்புத்தூரில் மாவோயிஸ்டுக்களின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்தாகக் கூறுகிறது. கணவன் மனைவியான ரூபேஷ் மற்றும் ஷீனா ஆகியோரே கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த வேளையில் கைதானதாக தமிழ் நாடு போலிஸ் பிரிவு கூறுகின்றது.

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இன் மத்திய குழு உறுப்பினர்களன இவ்விருவரும் தமிழ் நாட்டில் அரசியல் செயற்பாட்டிற்காகத் தலைமறைவாக இருந்ததாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இக் கைதுகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

தகவல் தொழில் நுட்பப் பட்டதாரியான ரூபேஷ் மற்றும் உச்ச நீதிமன்ற ஊழியரான ஷீனா ஆகியோர் மாவோயிஸ்ட்டுகளின் நீண்ட நாள் உறுப்பினர்கள். தமிழ் நாடு, கேரளா கன்னடா ஆகிய பிரதேசங்களை ஆயுதப் போராட்டத்திற்குத் தயார்படுத்துவதற்காக இவ்விருவரும் செயற்பட்டனர் என்ற தகவல்களை ஆந்திர போலிஸ் வெளியிட்டது.

ஆந்திரப் போலிஸ் படையும் தமிழ் நாடு போலிஸ் படையும் இணைந்து இவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து கைது செய்தது. மேலும் மூவர் இவர்களுடன் கைதானதாகத் தெரியவருகிறது.

ஆந்திராவில் அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் கைதானதை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்திய ‘ஈழ ஆதரவு’ பிழைப்புவாதிகள் ஆந்திரப் போலிஸ்

பிரித்தானியத் தேர்தலில் பாசிஸ்ட்டுக்களைப் போன்றே உலகின் ஏனைய பகுதிகளிலும்

antisocialsபிரித்தானிய தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களில் ஆட்சியிலிருக்கும் பழமைவாதக் கட்சி முன்னணியிலுள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள தொழிற்கட்சியை விட இரண்டு வீதம் பழமைவாதக் கட்சி முன்னணியிலுள்ளது. கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சியோ, அன்றி இடதுசாரிக் கடசி எனக் கூறிக்கொள்ளும் வலதுசாரிக் கட்சியான தொழிற்கட்சியோ பாரளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பன்மையைப் பெற்றுக்கொள்ள இயலாது என முன் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஆக, பழமைவாதக் கட்சி நிறவாதக் கட்சியான பிரித்தானிய சுதந்திரக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயலலாம் என மேலும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பிரதான கட்சிகளும் பல்தேசிய நிறுவனங்களின் பிரதிநிதிகளாக அரச நிர்வாகத்தை நடத்தினாலும், பழமைவாதக் கட்சியின் பாசிசத்தை நோக்கிய ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என ஜனநாயகவாதிகள் கருதுகின்றனர்.

பின் தங்கிய கருத்துக்களை முன்வைக்கும் பிரதமர் டேவிட் கமரன் தலைமையிலான பழமைவாதக் கட்சிக்கு பொதுவாக ஜனநாயக சக்திகளிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை.

இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் புதிய வரவான நிறவாதக் கட்சி (UKIP) 12 வீதமான வாக்குக்களைப் பெறும் என்பது மனிதாபிமானிகளையும் ஜனநாயகவாதிகளையும் அச்சம் கொள்ளச் செய்கிறது.

இவ்வாறான அடிப்படை வாத, தேசிய வெறியுடன் கூடிய நிறவாதக் கட்சிகளின் பங்கு அதிகார வர்க்கத்திற்கு அவசிமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்தேசிய வியாபார நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரித்தானிய அதிகாரவர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் கீழ் அணிகளையும், தொழிலாளர்களையும் வறுமையின் எல்லைக் கோடுவரை நகர்த்தி வந்திருக்கின்றது. இதனால் கடந்த பத்து வருடங்களாக உழைக்கும் மக்களின் பல்வேறு போராடங்களும் நடைபெற்றன.

உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக அணிதிரள ஆரம்பித்த வேளையில் UKIP போன்ற தேசியவாதக் கட்சிகளை அதிகாரவர்க்கம் உருவாக்கிக் களத்தில் இறக்கியுள்ளது.

ஏனைய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகின்றவர்களால் பொருளாதாரம் கலாச்சாரம் வேலைவாய்ப்பு போன்றன பாதிக்கப்படுவதாக பிரித்தானிய சுதந்திரக் கட்சி மக்கள் மத்தியில் நச்சுவிதைகளைத் தூவ ஆரம்பித்தது.

இதனால் அதிகாரவர்க்கத்திற்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் எதிரான மக்களின் உணர்வு வெளி நாட்டவர்களுக்கு எதிராக திசைதிருப்படுகிறது. இதனால் பிரித்தானிய சுதந்திரக் கட்சிக்கு பல்தேசிய நிறுவனங்கள் சிலவும் நிதி வழங்கி வருகின்றன.

ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகள் போராட்டமாக மாற்றமடையாமல் தடுப்பதற்காக அடிப்படைவாதிகளையும், நிறவாதிகளையும், இனவாதிகளையும் உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்துவதன் பின்னணியில் உளவு நிறுவனங்களும் செயற்படுகின்றன.

இவ்வாறான கட்சிகள் உலகம் முழுவதும் முளைவிடுகின்றன. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, குறுக்குவழிகளைக் கையாண்டு உழைக்கும் மக்களின் போராடங்களைத் திசைதிருப்பும் இக்கட்சிகள் மனிதகுலத்தின் அருவருப்பான சாபக்கேடுகள்.

பிரித்தானியாவில் பிரித்தானிய சுதந்திரக் கட்சி(UKIP), பிரான்சில் தேசிய முன்னணி(FN), ஜேர்மனியில் பெடிகா, இலங்கையில் பொதுபல சேனா, இந்தியாவில் ஆ.எஸ்.எஸ், தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி போன்று உலகின் ஏனைய பாகங்களிலும் இக்கட்சிகள் மனித குலத்தின் நாகரீகத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றன.

மனிதர்களைக் குறுகிய எண்ணம் கொண்டவர்களாக மாற்றும் இப்பாசிசக் கட்சிகள் சமுதாயத்தின் ஒவ்வொடு மூலையிலுமிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்..

இந்திய மறுகாலனியாக்கம் : அர்ச்சுதன்

இந்திய இலங்கை அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு பொருளாதார நடவடிக்கையில் இந்த சம்பூர் அனல் மின்நிலையம்தான் மிகப் பெரியது என்று கொழும்புக்கான இந்தியத் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் இருநாட்டு ஒத்துழைப்புகள் இதுவரை இல்லாத ஒரு உச்சத்தை எட்டியுள்ளது என்று இந்தியா கூறுகிறது.
sampur1இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காவது ஈழப்போர் மூதூர் பகுதியிலேயே 2006 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. அதன்போது சம்பூர் பகுதிதான் இலங்கை அரச படைகளால் முதலாவதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்தப் பகுதியை இலங்கை அரசு கைப்பற்றிய பின்னர் அது உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

ஓர் அனல்மின் நிலைய ஏற்பாட்டில் வெளியேற்றப்பட்டது தான் திருகோணமலை மாவட்ட சம்பூர் கிராமமாகும்.இது திருகோணலை விரிகுடாவின் முகட்டுப் புள்ளியாக கேந்திர முக்கியத்துவத்தை உடையது.இக்கிராமம் பிரித்தானியா ஆட்சிக்காலத்தில் இருந்தே 300 வருடங்களுக்கும் மேலாக வரலாற்றைக் கொண்ட கிராமமாகும்.2009ல் யுத்தம் முடிவுக்கு வந்தும் சம்பூர் கிராம தமிழ், முஸ்லீம் மக்கள் தம் கிராமத்துக்குள் செல்லமுடியாது முட்கம்பி வேலிகளால் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை தலைமைச் செயலகம் சம்பூரிலேயே அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இறுதியாக சண்டை உருவாகியபோது 2006 ஏப்ரல் மாதம் சம்பூர் முக்கிய போர்க்களமாகமாறியது. விடுதலைப்புலிகள் பின்வாங்க இக்கிராமம் உயர்பாதுகாப்பு வலயம் எனப் பிரகடணப்படுத்தப்பட்டு இலங்கை கடற்படை நிலைகொண்டுள்ளது.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த போதும் சம்பூர்க்கிராமம் உயர்பாதுகாப்பு மற்றும் அரசு வலயமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.நெடுங்காலமாக “இந்திய தேசிய அனல்மின் நிலையத்தடன்” அனல்மின் நிலையம் அமைப்பதற்கு இக்கிராமம் தெரிவாகியுள்ளதென இலங்கை அரசாங்கம் அறிவிக்கின்ற பொழுதும் இது வரைகாலமும் அதற்கான எவ்விதமான செயற்பாடுகளும் ஆரம்பித்ததாக தெரியவரவில்லை.

சம்பூர்க்கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 850க்கும் மேலான குடும்பங்கள் கொண்ட மக்கள் 10 வருடங்களுக்கு மேலாகியும் மீள குடியமர்த்தப்படாமல் 4 அகதி முகாம்களில் முடக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மீள தம் பூர்வீக மண்ணில் குடியமர அரசாங்கமே தடையாக உள்ளது.

சம்பூர்க்கிராமத்தை அரசாங்கத்தின் வளர்ச்சி கொள்கையின் அடையாளமாக மாற்ற முடிவு செய்துள்ள அரசாங்கம் மக்களைப்பற்றி எந்த விதமான அக்கறையினையும் கொண்டதாக தெரியவில்லை.அரசாங்கத்தால் உருவாக்கப்படும் இலங்கைக்கிழக்குக் கடற்கரை வணிகத்திறன் மையமாகவும் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது எனத்தெரிய வருகின்றது.

இதனால் தென்பகுதிப் பெரும்பாண்மை சிங்கள இனத்தவர்கள் ஹொட்டல், மற்றும் உல்லாச விடுதிகள் அமைப்பதற்கும் வேலை செய்வதற்கும் இவ்விடத்தில் குடியேற்றப்படுவார்கள்.இதன் காரணமாக பெருமளவு சிங்களக்குடியேற்றத்தை உருவாக்கி இனசமநிலையை மாற்றும் திட்டமாக மாறி முற்றாக இது சிங்களக் கிராமமாகவும் மாறிவிடுமென இவ்வூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.ஆனால் தற்போது இது கடற்படையினரின் தளமாகவும் பயிற்சித்தளமாகவும் இருந்து வருகின்றது என்பது மக்களின் கருத்தாகும்.இவ்வாறு இப்பிரதேச மக்கள் எனக்குத் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள தமிழ் ஆலயம் ஒன்றும் பள்ளி வாசலும் சிங்கள மக்களைக் கொண்டு அழிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

sampur22006ஆம் ஆண்டு ஏப்ரல் 25 திகதியோடு இவரைப் போலவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த பூர்வீக இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தனர்.

அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சம்பூர் மீது குண்டு மழை பொழிந்து அனைவரையும் அப்படியே அகற்றியது இலங்கை இராணுவம். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தோடு அந்த அழிவு இடம்பெற்று 10 வருடங்கள் sarathfonsekaஆகிவிட்டது..

மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் தங்களுக்கும் அந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும் என எதிர்பாத்திருந்த மக்களுக்கு எதுவும் வந்துசேரவில்லை.

வடக்கில் வலிகாமத்திலும் கிழக்கில் பாணம பகுதியிலும்தான் மீள்குடியேற்றம் செய்யப்போவதாக ‘மாற்றம்’ அரசு அறிவித்திருப்பது சம்பூர் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

சமீபத்தில் 800 ஏக்கர் காணியை முதலீட்டு சபைக்கு வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த்த வாரம் அதற்கான வர்த்தகமானி அறிவித்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் தங்களுடைய பிரதேசத்தில் அனல்மின்நிலையம் அமைப்பதை கட்டியம் கூறி சென்றுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறும் இந்திய பிராந்திய வல்லரசு, மக்கள் சம்பூரிலும், காங்கேசந்துறையிலும் மக்களின் இடம்பெயர்ச்சிக்கு காரணமாக இருப்பது தமிழ் தேசிய ஆர்வலர்களுக்கு புரியாத புதிர் அல்ல.

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் சம்பூர் மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறு இருபதாயிரம் பேருக்கு தொழில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை, இங்கு அமைக்கப்படவுள்ள அனல் மின்னிலைய வேலையாட்களுக்கு தங்குமிடம், சுற்றுலாத்துறை போன்ற துறைகளினூடாக சம்பூர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இலாபம் பெற முடியும் என்ற ஓர் அறிக்கை கூறுகிறது.

அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் அளவுக்கு உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட மக்கள் சம்பூரில் இல்லை. விவசாயம், மீன்பிடி என்று வாழ்ந்த மக்களுக்கு அனல் மின் நிலையத்தில் என்ன வேலை செய்ய முடியும்? இன்னும் பல தலைமுறைக்ள அங்கு வாழ்ந்தாலும் உயர்தர வேலை ஒன்று கிடைக்குமா என்பது சந்தேகமே.

கிழக்கின் திருகோணமலை மக்களின் பட்டறிவு என்னவென்றால், பிரீமா, மிட்சுயி, ஆடைத்தொழிற்சாலைகள் என அங்கு தொழிற்சாலைகள் வந்திருந்தும் சம்பூர் தமிழ் மக்களுக்கு வேலை 5 வீதத்துக்கும் குறைந்த வேலையே கிடைத்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் கொண்டுவரப்பட்டு இன்று அவர்கள் திருகோணமலை வாசிகளாகிவிட்டனர். இப்படி தமிழர் சதவீதம் திட்டமிடப்பட்டு குறைக்கப்படுகின்றது என்கின்றனர் மக்கள்.

அதை போலவே இதற்கும் கொண்டுவரப்பட போகின்ற 95% சிங்கள குடியேற்றம் இனப்பரம்பலில் மாற்றத்தை கொண்டுவர போவது பட்டறிவு உண்மை. அதேபோல அனல்மின் நிலையத்துக்காக வரும் வேலையாட்கள்  பாரிய சவாலாகவே இருக்கப் போவதும் உண்மை.

திருகோணமலையில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை 1993ஆம் ஆண்டு கனடா இலங்கைக்கு பரிந்துரை செய்திருந்தது. மகாவலி சர்வதேச கனேடிய நிறுவனமே இதனை 52 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திருகோணமலையில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

“திருகோணமலை மின் திட்டம்’ என்ற பெயரில் 300 மெகாவாட் மின்சாரத்தை (1502) உற்பத்தி செய்ய கனேடிய நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதில் மகாவலி அனல்மின் உலைகளை தயாரிக்க சுவிஸ்சர்லாந்து, சுவீடன், அமெரிக்க, அவுஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் முதலிட முன்வந்தன. ஏழு நாடுகளைச் சேர்ந்த 11 கம்பனிகள் முதலிட்டு 1993ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு சான்றிதழும் பெறபட்டதாக குறித்த கனேடிய நிறுவனம் தெரிவிக்கிறது. கனேடிய நிறுவனம் தெரிவிக்கிறது.

1993ஆம் ஆண்டு தொடங்கி 1995ஆம் ஆண்டு முடித்து மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 93ஆம் ஆண்டு கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சு இதற்கான வேலைகளை செய்திருந்தது.

பின்னர் சில அரசியல் காரணங்களால் அது தடுக்கப்பட்டது.அதாவது, திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு இன்று அது உறுதியாகியுள்ளது.

மின் உற்பத்திக்கான நிலக்கரி

COAL அனல்மின் நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்பலில் கொண்டுவரப்படும் அதேவேளை அதனை சம்பூருக்குள் எவ்வாறு கொண்டு வருவது தொடர்பாகவும், நிலக்கரி கழிவுகளை, அதாவது மின் உற்பத்திக்குப் பின்னர் அதனை எவ்வாறு வெளியேற்றுவது எந்த வழியில் கொண்டு செல்வது என்பது தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் இல்லை என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள். இம்மின்சாரம் கந்தளாய்க்கு நிலக்கீழ் முறையில் கொண்டு செல்லப்படவுள்ளது.

18 கிலோமீற்றருக்குத் தாக்கம்

காட்டு வளத்தினால் பல விளை பொருட்களை உற்பத்தி செய்யும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் காபன், காபனீர்ரொட்சைட், மொனோக் சைட், கந்தகவீர் ஒட்சைட் போன்ற இரசாயன கலவைகள் அனல்மின் நிலையத்திலிருந்து 18 கிலோ மீற்றர் சுற்றுவட்டம் வரை தாக்கம் இருக்கும். அதாவது,மூதூர், திருகோணமலை நகர் என்பவற்றைத் தாண்டி இரசாயன அமிலங்கள் காற்றில் கொண்டு செல்லப்படும்
sampur3தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் இத்தாக்கம் உடனடியாக கொண்டு செல்லப்படும். இது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை சுட்டிக்காட்டிய சூழலியலாளர்கள் இந்தியா மக்களுக்கு திட்டமிட்டே இதனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.

இந்திய பல்தேசிய நிறுவனங்களுக்காகவும் சேர்த்து வடிவமைக்கப்பட்ட இறுதி யுத்ததின் பலனை அந்நிறுவனங்கள் மன்னாரிலும், திருகோணமலையிலும், காங்கேசந்துறையிலும் தமது அறுவடையினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளன.

இவ் பல்தேசிய நிறுவனங்களுக்குள் புதையுண்ட மக்கள் அதிலிருந்து விடுபட்டது வரலாற்றில் கிடையாது. இப்போது தமிழருக்கான பொறுப்பு கூறலை பணையம் வைத்து தனது நலன்களை அடைய பேரம் பேசும் இந்திய அரசு, எதிர்காலத்தில் இந்த பல்தேசிய நிறுவனங்களை வைத்து ஏனய முதலாளித்துவ நாடுகளை போல அரசியலுக்கு பாவிக்க தொடங்கும் என்பது தெளிவு.
sampur4
பல வருடங்களாக சீபா உடன்படிக்கையை ஏற்படுத்த இந்தியா துடியாய் துடிக்கிறது. இதுவும் சம்பூர்,மன்னார்,காங்கேசந்துறை போன்று தமிழரின் சொத்து என்றால் ராஜபக்ச எப்பவோ இந்தியாவுக்கு எழுதிக்கொடுத்திருப்பார். ஆனால் இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதரத்தை இந்தியா இலகுவாக கட்டுப்படுத்த கூடியதாக அமைந்துவிடும் என்பதால் இலங்கை அஞ்சுகிறது. இதை இந்தியா எப்பிடியாவது இந்த ஸ்திரமற்ற அரசிடம் நிறைவேற்றிவிடும் போல தான் இருக்கிறது.

இந்த பொருளாதார யுத்தத்தில் இந்தியா இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல வழிகளில் முயல்கிறது.அதற்கு ஏற்றவாறு இலங்கையில் அரசியல் மாற்றத்தை தூண்டியது. அத்துடன் இப்போது இலங்கையின் பொது நிறுவனங்கள் பலவற்றினை இந்திய நிறுவனங்கள் கையகப்படுத்தி வருகின்றன. இதெல்லாம் இலங்கையின் பொருளாதாரத்தை தனது கட்டினுள் வைத்திருந்து இலங்கை அரசியலை எப்பொதுமே தனது கைக்குள் வத்திருப்பதற்கானதாகும்.

இதையே மேற்குலகும் தற்போது விரும்புகின்றன. மேற்குலகை பொறுத்தவரை இந்தியாவில் தனியான நேசம் ஏதும் கிடையாது. உலகிற்கே சவால் விடும் பொருளாதார வலிமையை கொண்ட சீனாவுடன் நேரடியாக மோத விரும்பாத மேற்குலகு ஒரு அடியாளை வளர்த்து சீனாவுடன் மோத விடுவதே அவர்களின் நோக்கம். அதற்கு சீனாவுக்கு நிகராக இந்தியாவை வளர்ப்பதே அவர்களின் தற்போதைய நோக்கம்.அதற்கு இவ்வளவு காலமும் சீன உற்பத்திகளை வாங்கிய மேற்குலகு இனிமேல் மோடியின் ’’மேக் இன் இந்தியா’’ பொருட்களை வாங்கி இந்தியாவை பொருளாதர ரீதியில் உயர்த்தப்போகிறது.

இதற்கான அத்திவாரமே 2005 ஆம் ஆண்டள்விலே அமெரிக்கவால் முன்மொழியப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம். அதாவது சீனாவின் வீழ்ச்சி வரைக்கும் இந்தியாவை வளர்க்கவே மேற்குலகு விரும்பும். அதுவரை இந்திய நலன்களை பாதுகாப்பதே மேற்குலகின் ஒற்றை நிகழ்ச்சி நிரலாக இருக்க போகிறது.

இன்று அந்த கிழக்கு கரையோரத்தை இந்தியா கைப்பற்றி இருப்பதானால் என்ன நடந்துள்ளது? புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்குக் கரையோரமானது இயற்கைத் துறைமுகம், குடாக்கள், ஆழம் குறைந்த கடற்படுக்கை, சங்கமம் (மகாகவலி கங்கை கடலோடு இணைகிறது), கடல் நீரேரிகள் எனப் பல இயற்கையாகவே அமைந்துள்ளன. அதேநேரம் இந்து சமுத்திர ரீதியான கப்பல் போக்குவரத்தையும், சர்வதேசக் கடல் எல்லைகளையும் மேற்பார்வை செய்ய முடியும். அவுஸ்திரேலியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளையும் அவதானிக்க முடியும்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளிலுள்ள இந்திய கடற்படைத் தளம் உள்ள பிளே எயார் துறைமுகம் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான கார் நிக்கோபார் தீவிலுள்ள கடற்படைத்தளம் ஆகியவற்றின் மேற்பார்வைக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் கிழக்குக் கரையோரம் இந்தியாவுக்கு அவசியப்பட்டது எனலாம்.

ஆனால், தமிழர் என்ற வகையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் காலம்காலமாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள இலங்கை மக்களது சொந்த நிலத்தை பறித்து, அங்கு மக்களுக்கு பொருந்தாத ஓர் அனல் மின் நிலையத்தைக் கட்டும் என எதிர்பார்க்கவே இல்லை.

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்திய அனல்மின் நிலையம் தற்போது சம்பூரில் அமைவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது என்றே கூறவேண்டும். காரணம், அனல் மின் நிலையத்துக்கென சுமார் 1548 ஏக்கர் நிலப்பகுதியை கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 208 குடும்பங்கள் வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேலை, 1548 ஏக்கரில் சுமார் 500 ஏக்கர் வரை சுத்தப்படுத்தப்பட்டு அனல் மின் நிலையம் அமைக்கும் ஆரம்ப கட்டத்தில் தயார் நிலையில் இருப்பதை காண முடிந்தது.

இந்தியாவின் அனுசரணையுடன் அமையவுள்ள மின் நிலையத்தில் இலங்கையில் பல பிரதேசங்களுக்கு இருந்து வந்த மின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என கூறப்பட்டது. அதற்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் (500*2) இரண்டு உலைகளை அமைக்கவுள்ளதாகவே ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது (250 * 2) 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரு உலைகளை அமைப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இம்மின் உற்பத்தியை இலங்கை மின்சார சபையும் இணைந்து இந்திய தேசிய அனல்மின் நிலைய கூட்டுத்தாபனத்துடன் சம்பூரில் அனல் மின் நிலையம் உருவாகவுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் 2006ஆம் ஆண்டு முதல் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் மோடியுடன் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமையவுள்ள இரண்டாவது நிலக்கரி அனல்மின் நிலையம் இதுவாகும்.சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதாக கூறிய இடம் முதற்கட்டமே என அறிய முடிகிறது. இதில் மொத்தமாக ஆறுகட்டங்கள் இருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதாவது, 700 மில்லியன் ரூபா செலவில் முதலாம் கட்டத்தில் இரண்டு 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஓர் உலையும், 2ஆம் கட்டத்தில் 1300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரும்பு தொழிற்சாகைள், வாகன உற்பத்தி தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, நீர் விநியோக தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, எண்ணெய் ஆலைகள், சுற்றுலா மையங்கள் என பல தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக இலங்கை உட்பட பிரேசில், இத்தாலி, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என ஏழு நாடுகள் முதலிட்டுள்ளன. அணுஉலை ஒன்றும் உருவாகவுள்ளது. மூன்றாம் கட்டமாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தொழிற்சாலைகள் நிறுவப்படும். இப்படியாக சம்பூரின் 10 ஆயிரத்துக்கு 600 ஏக்கருக்கு மேற்பட்ட மொத்த நிலப்பகுதிகளும் சூறையாடப்படவுள்ளது என தெரிகிறது.

இப்படியாக தாயகத்தின் மூன்று நுழைவாயில்களான மன்னார்,திருகோணமலை,காங்கேசந்துறை என்பன பல்தேசிய நிறுவனங்கள் வாயிலாக இந்தியாவின் கோரப்பற்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டன. இரண்டு பக்க பொறிக்குள் தமிழர் தரப்பு மாட்டுப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறது. இதனை எப்படி தமிழர் தரப்பு கையாள போகிறது. இன்னுமொரு பிரேமதாசா பாணியிலான treatment சாத்தியமா.. சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் என்ற நிலைமையை எப்படி கையாள போகிறார்கள்.. இதற்கான மூலோபாய அரசியலை வரையப்போவது யார்..எப்போதும் போல தமிழரின் எதிர்காலம் கேள்விக்குறிகளுடனேயே பயணிக்கிறது.

sampur5

சம்பூரில் நடக்கும் இனச்சுத்திகரிப்பு சுன்னாகம் நீரால் மறைக்கப்படுகிறதா?

இனியொரு::இன்றைய செய்திகள்::அரசியல்:Tamil News Articles inioru.com