லைக்காவின் தயவில் ‘செழித்து வளரும்’ தமிழ்த் தேசியம் – ILC இன் இன்னிசை மாலை 2015

ilc-radioஆறு வருடங்களின் முன்னர் இலங்கை அரசுடன் தொடர்புகொண்டவர்கள் என்ற ‘அனுமானத்தின் பேரிலும் சந்தேகத்தின் அடிப்படையிலும்’ படுகொலை செய்யப்பட்டவர்களின் சுடுகாடுகளில் சாம்பல் உரமாகி செடிகளும் கொடிகளும் துளிர்விட்டிருக்க்கும். அதற்குப் பின்புலத்தில் புலம்பெயர் நாடுகளில் துரோகித் தகமையை வழங்கிய ஊடகங்களில் அனைத்துலக உயிரோடைத் தமிழ்(ILC Tamil) என்ற வானொலியும் பிரதானமானது.

தாசீசியஸ் மாஸ்டரின் சொந்த ஊடக தர்மத்திற்கான வரையறைகளோடு பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பான இந்த வானொலியை தெரியாதவர்கள் புலம்பெயர் நாடுகளில் கிடையாது.

வன்னி இனப்படுகொலையின் பின்னர் ‘ஜனநாயக வழியில் வன்செயல் நீர்த்த’ அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற சுலோகத்தை அடிக்கடி முழங்கிய ILC வானோலி இடையில் நிறுத்தப்பட்டு இணையங்களில் மட்டுமே வெளியானது.

ஆயுதங்களோடு இனப்படுகொலை இராணுவம் மக்களின் கொல்லைப்புறங்களில் குடியிருந்து மிரட்டியபோது எப்படி வன்செயலை நீர்த்த ஜனநாயகம் என்பது சாத்தியமாகும் என்ற கேள்விகள் தொக்கு நிக்க ILC இன் ஊடக அறம் செய்திகளை அறிவித்து ஆய்வுகளும் நடத்தியது.

போரின் பின்னர் புலிகள் தொடர்ச்சி எனக் கூறிக்கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) பிரச்சர ஊடகமாகவும் ILC செயற்பட்டது. TCC இன் முன்னை நாள் பொறுப்பாளர் ILC இன் உரித்தை வாங்கி அதனை நடத்த ஆரம்பித்தார்.

TCC சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக வானொலியிடம் யாரும் கேள்வியெழுப்பவில்லை, ஆயினும் அது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இணைய வானொலியாக மாறியது.

இந்த நிலையில் வானொலியைத் தொடர்ந்து நடத்துவதற்கு தென்னிந்தியாவின் சுப்பர் சிங்கர் பாட்டுக்காரர்களை அழைத்து (குழந்தைகள் உட்பட) எதிர்வரும் 4ம் திகதி ஜூலை மாதம் களியாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நிதி சேர்ப்பதாக ILC அறிவித்துள்ளது.

சுப்பர் சிங்கர் குழந்தைப் பாடகர்கள் உட்பட ஏனைய சினிமாப் பாடகர்களும் இக் களியாட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

ஈழப் போராட்டம் தென்னிந்தியாவின் விஜை தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கரில் சரணடைந்ததைத் தவிர இன்னுமொரு சம்பவமும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிகழ்ச்சியின் அனுசரணையாளர்களாக லைக்கா மொபைல் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்க மூலையில் லைக்காவின் இலச்சனையும் மறுபக்க மூலையில் ILC இன் இலச்சனையும் பதியப்பட்ட விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயக வழியில் வன்செயல் நீர்க்கும் முயற்சியில் படு பிசியாகிவிட்ட வானொலிக்கு லைக்காவின் ராஜபக்ச அரச தொடர்பு குறித்து தெரியாமல் போயிருக்குமோ என்ற சந்தேகங்கள் வந்து போகலாம். அப்படிச் சந்தேகப்படுவதும் கூட ஜனநாயக வழியில் வன்செயல் நீர்த்த செயல்பாடுதான்.

ஈழப் போராட்டத்தை வழி நடத்தியதாகக் கூறிக்கொண்ட அத்தனை பேரும் பிழைப்பு வாதிகள் என்பதால் நம்பிக்கை இழப்பதைவிட, நமது காலத்தில் பிழைப்புவாதிகளை அம்பலப்படுத்தி புதிய அரசியல் தலைமையை உருவாக்கும் சந்தர்பம் கிடைத்துள்ளது என்பதற்காக மகிழ்ச்சி கொள்ளலாம்.

லைக்கா-ராஜபக்ச ஊழலை வெளிக்க்கொண்டுவந்த மந்தனா இஸ்மாயில் சண்டேலீடரின் புதிய ஆசிரியர்

பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora