Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

இனியொரு... by இனியொரு...
07/01/2014
in இன்றைய செய்திகள்
0 0
39
Home இன்றைய செய்திகள்

lycasலைக்கா நிறுவனத்தின் தயவில் ஆதவன் என்ற தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை லைக்காவின் ஆதரவில் ஜி.ரி.வி இயங்க ஆரம்பித்துள்ளது. லைக்காவின் இலங்கை அரசுடனான வியாபாரம் தொடர்பான எதிரொலிகள் இன்னும் ஓயாத நிலையில் ஆதவன் தொலைக்காட்சியின் விளம்பரம் ஐ.எல்.சி என்ற வானொலியில் செய்திகளின் இடையே ஒலிபரப்பாகின்றது.

ஐ.எல்.சி, ஜி.ரி.வி ஆகியவற்றின் தீவிர தமிழ்த் தேசியம் லைக்காவின் தயவில் சக்கை போடு போடுகின்றது.

அதே வேளை தீபம் தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கியதாகக் கருதப்பட்ட லிபாரா நிறுவனம்உள்வீட்டு இழுபறியால் பங்குகளை மீளப் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

ஐ.பி.சி என்ற வானொலிச் சேவை லிபாராவின் தயவில் இயங்குவதாகக் கருதப்படுகின்றது.இதில் ஆதவன் தவிர ஏனைய ஊடங்கள் நீண்ட காலமாகப் புலம்பெயர் நாடுகளில் செயற்படுபவை. இவை அனைத்தும் கல்தோன்றி மண்ணும் தோன்றி, காரும் பஸ்சும், இரத்தமும் தடையின்றி ஓடித்திரிந்த முன்பொரு காலத்தில் தமிழ்த் தேசிய ஊடகச் சேவைகள் என அழைக்கப்பட்டு புலம்பெயர் நாடுகளில் ‘மக்கள்பணி’ ஆற்றியவை.

இன்றோ ராஜபக்சவின் அன்புக்கும் அதிமதிப்பிற்கும் பாத்திரமான புலம்பெயர் தமிழ்ப் பல்தேசியக் கோப்ரட் முதலாளிகளின் தயவில் தமிழ்த் தேசியப் பணியாற்ற தமது ஊடகக் கதவுகளை அகலத் திறந்து விரித்து வைத்திருக்கின்றன. மக்களின் இரத்தமும் கண்ணீரும் ஊடகங்கள் வழியாக வழிந்தோடி பல்தேசிய வியாபாரிகளின் பணப்பைகளை நிரப்பிக்கொள்கின்றன.

அடுத்து வருகின்ற ‘சனி மாற்றத்திற்குப்’ பின்னர் இலங்கை அரசின் கோத்தாபய கும்பல் தமிழ்த் தேசிய ஊடக வலைப்பின்னலை ஆரம்பித்து வைத்தாலும் வியப்படைவதற்கில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் அகதிகள் நடுக்கடலில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்:உத்தியோகபூர்வ அறிவிப்பு

தமிழ் அகதிகள் நடுக்கடலில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்:உத்தியோகபூர்வ அறிவிப்பு

Comments 39

  1. mannan says:
    12 years ago

    வீதி  ஓரங்களில்  மடங்களையும்  கிண்றுகளையும்   சுமைதாங்கிகளையும்
    உருவாக்கியவர்கள்  தான்  ஈழத்தமிழர்கள்.  இவைகள்  நூறாண்டுகளிற்குமுன்பே   தமிழரால்   உருவாக்கப்பட்டவை. உருவாக்கியவ்ர்களின்  பெயரே சரியாக  தெரியாது.

    அகதிகளாக  தமிழ் இனத்தின்பெயரால், தமிழினத்தின்  அழிவினைக்காட்டி
    மேற்குலகில் வந்தவ்ர்கள்  வாழ வழி தேடியவர்கள்    இலங்கைத்தமிழரின்
    அழிவிற்குநேரடியாகவோ  மறைமுகமாகவோ  செயற்பட்டவர்கள்
    ஒரு ஏழைக்கு  ஒருநேர உணவு  போட்டு விட்டு  உலகில் தாமே  கொடைவள்ளல்களாக   தமது  சொந்த  ஊடகஙகள் மூலமே
    விளம்பரப்படுத்தவே  விரும்புகின்றனர்.

    • waran says:
      12 years ago

      It is true

    • lala says:
      12 years ago

      அந்த  ஒருநேர  சாப்பாடும்  உங்களைப்போன்ற  வாய் கிழியப்பேசுபவர்களால் போட முடியாது . மடம் , கிணறு என்று சொல்லி  தமிழர்கள் கற்காலத்தில்   வாழ  வேண்டுமென்பதே  உங்களைப்போன்றவர்களின்  அவா …

      • mannan says:
        12 years ago

        கற்காலத்தில் வாழ்வது   தமிழர்களிற்கு   கல்லறைகட்டி
        வாழ்வதிலும்    இழிவானதாகவே கருதுகின்றார். ஏனெனி ல்  வன்னியில்
        அரசு ஒருவரின்  கல்லறையை அழித்தால்  அதேபோல்  உலகநாடெங்கும்
        நூற்றுக்கணக்கில் கட்டி  வருமானம் தேடுவோம் .  தாயகத்தில்
        ஒரு மலசலகூடம்    கட்டிக்கொடுத்துவிட்டு  அதன் வீடியோவை
        உலகநாடெங்கும் காட்டி   பலமடங்காக  பணத்தை சேகரிப்போம்.
        இவ்வாறு   தன்னினத்தை  ஏமாற்ரி வாழ்வதில்  சரித்திரம்
        படைத்துள்ளோம்   இதுவே  தமிழப்போரின்  பின்  தோன்றிய பல
        அகதி செல்வந்தரின்   சரித்திரம்.

        • lala says:
          12 years ago

          உலகத்தில் எங்கும் கல்லறை காணாதவர் வன்னியிலும் , புலம்பெயர் தமிழர் வசிக்கும் நாடுகளிலேயுமே கல்லறையை கண்டு ரசித்திருக்கிறார்.

      • Kumar says:
        12 years ago

        சும்மா மடம் அது இது என்று கூறி பயப்படுத்தாதீா்கள் மன்னா!
        ஒரு நேர சாப்பாட்டை பெற்று நவீனகால அடிமையாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைய பழகவேண்டும் அதுவும் அகதியாக வந்து பணக்காரரான கனவான்களிடமிருந்து கிடைக்கின்றதென்றால் சும்மாவா.

        • lala says:
          12 years ago

          உலகத்தின் பல நாடுகளில் , இன்னும் சொல்லப்போனால் பல பணக்கார நாடுகளில் கூட அந்த நாடுகளில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உதவி வழங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த உண்மை . அந்த அமைப்புகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்கள் , குழந்தகளுக்கு கூட உதவுகின்றன .

          ஆனால் அதனை யாரும் எந்த ஊடகமும் நவீன கால அடிமைகள் என்று கூறி கொச்சைப்படுத்துவதில்லை.

          இந்த மாதிரி உதவி பெறுபவர்களையும் , உதவி செய்பவர்களையும் எள்ளி நகையாடுபவர்களுக்கு கொடூர மனம் இருக்க வேண்டும்..

          • Kumar says:
            12 years ago

            தமிழ் இனம் 30 வருடங்களுக்கு முன்பு  3 நேரங்க
            ளும் தமது சொந்த உளைப்பில் சாப்பிட்டுவந்தவா்கள் 
            ஆனால் இன்று அவா்களின் கையாலாகத நிலையை 
            பயன்படுத்தி இனக்கொலையாளிகளுடன் வியாபா
            ரம் புாியும் தமிழ் இனத்துரோகிகள் ஒரு நேர உணவு
            போடுவதென்பது வெறும் வேஷமேயன்றி எதுவு
            மில்லை அன்னிய நிறுவனங்களும் இதை செய்கி
            ன்றன ஆனால் இனத்தனவனே செய்வதுதான் மிகவும்
            கொடுமை இதை புாிந்துகொள்ள முடியாது இருப்பது
            வேடிக்கையானது. 

          • mannan says:
            12 years ago

            தமிழர்களின்  இரத்தத்தை  ஆறாக ஓடவைத்து
            அதனைக்காட்டுவதன் மூலமே  தமது
            பணப் பெட்டியை  நிரப்பிய   புலம்பெயர்
            தமிழரைவிட   கொடூர மனம் உள்ளோர்
            உலகில் யாருமுண்டோ.

  2. தயா says:
    12 years ago

    முள்ளிவாய்கால் அவலம் தொட்டு இன்றுவரை மக்களுக்கு நம்பிக்கை வழிகளில் செயல்படும் ஒரே ஒரு ஊடகமாக மட்டும் அல்ல தமிழ் தேசியத்தை எத்தனை இடர்கள் வரினும் தோல்வி அல்ல அவை யாவும் வரலாற்றின் வெற்றியாக கொண்டு நா.க.தமிழீழ அரசாங்கத்தை அத்தனை அமைப்புகளும் விமர்சிக்கும் போது அதனை பலமாக்கி வளர்த்த ஊடகமாக அடையாளம் காணப்பட்டுள்ள ஊடகம் G.T.V ஆகும்
    அதில் எத்தனை விமர்சனங்களைத் திணித்தாலும் அதனை மக்கள் நம்பப்போவது இல்லை ஆனால் அதனை மீறி ஏதாவது தவறுகள் வளர்கப்பட்டால் அது அவரவர் அறியாமையாக கருதப்படுமே தவிர G.T .V யை விமர்சிப்பது தமிழர்கள் தமிழர்களை கேவலப்படுத்துவதாகும் . அந்தவகையில் ஒரு ஊடகமானது யாரினதும் விருப்பு வெறுப்பிற்காக பணி ஆற்ற முடியாது. கடந்தகால விபத்துக்களில் இருந்து இன்னமும் புலம் பெயர் தமிழ் தேசியம் மீட்கப்படாத நிலையில் அமைப்புக்கள் எதிர்பார்க்கும் ஊடகங்களாக சகல ஊடகதர்மமும் செயல்படும் போது G.T.V . மட்டும் விமர்சிக்க முடியாத ஊடகம் என்பதனை அனைத்து தரப்பும் புரிந்து கொள்வதே தமிழ் தேசியத்திற்கு சிறந்த வழி ஆகும்.

    • mannan says:
      12 years ago

      இலங்கைத்தமிழர்களின்   அரசியல் பிரச்சினை   சர்வதேச ரீதியில்
      பயங்கரவாதமாக  மாறியதற்கு காரணம்  கண்மூடித்தன்மாக  மக்கள்
      புலிகளிற்கு  ஆதரவளித்ததும்   மாற்ருக்கருத்துக்காரரை துரோகிகளாக்கி
      கொலை செய்ததுமேயாகும்.

      அதுமட்டுமல்ல  சர்வதேச  நோக்கில்   பயங்கரவாதமும்  பணச்சலவையும்
      ஒரே  கண்ணோட்டதுடனேயே  பார்க்கப்பட்டது.    இந்த  இரண்டு  சட்டமீறல்களிலும்   புலமபெயர்   புலிகளின் ஆதரவாளர்கள்  செயற்பாட்டாளர்கள்   ஈடுப்ட்டிருந்தார்கள்.

      இவ்வாறான்    உலகநாடுகளின் சட்ட  மீறல்களை  30 வருடமாக
      வெளிக்கொண்டுவ்ராத   தமிழ்  ஊடகங்கள் யாவும்   பயங்கரவாதிகளின்
      கைக்கூலிகள்  அல்லது  பயங்கரவாதிகளினால்  முதலீடூசெய்யப்பட்டவையாகும்.

      • lala says:
        12 years ago

        தமிழர்களின்  ரத்தத்தை   யார்  ஆறாக  ஒட  வைத்தார்கள் என்பது  தமிழர்களுக்கும் , சர்வதேசத்துக்கும் தெரியும் .

        ஐநா விசரணையின்போது அது சர்வதேச  அரங்கில் வெளிச்சத்துக்கு  வந்து விடும் .

        எசமான  கும்பலின்  பொட்டுக்கேடு   அம்பலத்துக்கு  வந்து  விடப்போகிறது  என்ற  பதட்டத்தில்   விசுவாசி  அதிகாமாகவே  பதட்டப்பாடுகிறார்.

        • mannan says:
          12 years ago

          கோவிலில்  ஆடு வெட்டுபவன்  கூலிக்கு செய்வான். அதனை
          வளர்த்து  பலியாக்கி  விற்ரு பணம் சேர்ப்பவனும்,   அந்த  ஆட்டின்
          இறைச்சியை  ருசி பார்ப்பவனும்  வெளியில் தெரிவதில்லை.

          இலங்கை அரசுடன்   கூட்டுச்சேர்ந்த  சர்வதேச தமிழ் அகதி
          வர்த்தக்ர்களின்  செயல்கள் தான்    தமிழரின்   பலியின்பின்
          தமிழர் சிலர் அனுபவிக்கும்  இராச்ஜோகம். 

          • lala says:
            12 years ago

            வறுமைக்கோட்டுக்கு   கீழ் இருக்கும் மக்களுக்கு 
            அவர்களது வாழ்வாதாரத்துக்கும் கல்விக்கு  உதவுவதற்கும் ,நீங்கள் சொல்லும் ஆடு , கோழி , குழம்பு , ருசி  என்று பசப்புவதற்கும் என்ன  சம்பந்தம் என  தெரியவில்லை .

            ஆக  மொத்தத்தில்  தமிழ் மக்களுக்கு  யார்  மூலமாவது  உதவி கிடைத்து விடக்கூடாதென்பதில் தெளிவாக  உள்ளீர்கள் என்பது   அப்பட்டமாக தெரிகிறது .
             தமிழ் மக்களுக்கு குறைந்த  பட்ச உதவி கூட  கிடைக்க  கூடாதென  யார் விரும்புவார்கள் ?

            உங்களது இது வரையான  பின்னூட்டங்களை  வரிசையாக படித்து  வந்தால் விடை தெரியும்..

      • lala says:
        12 years ago

        ## இனக்கொலையாளிகளுடன் வியாபா
        ரம் புாியும் தமிழ் இனத்துரோகிகள் ஒரு நேர உணவு
        போடுவதென்பது வெறும் வேஷமேயன்றி எதுவு
        மில்லை அன்னிய நிறுவனங்களும் இதை செய்கி
        ன்றன ஆனால் இனத்தனவனே செய்வதுதான் மிகவும்
        கொடுமை ##

        இன்று  உலகிலேயே  மிகவும் மிகவும் மலிவான பட்டம் உங்களைப்போன்றநாட்டாமைக்காரர்களால்   வழங்கப்படும்  தமிழ் இனத்துரோகி  பட்டம்தான் .

        சொந்த  இனத்துக்காரன் தனது இனத்தின் துயரை   துடைக்க  முற்பட்டால்  உங்களுக்கு ஏன் வலிக்கிறது ?  
         சிங்கள   எசமானின் அடிமைகளுக்குத்தான்  வலிக்க வேண்டும் .

        அன்னியநிறுவனத்தாலும்  கைவிடப்பட்டு  , சொந்த  இனத்துக்காரார்களாலும்  கைவிடப்பட்டு  தட்டழிந்து   போய்  விட வேண்டுமன  அவர்களதான்  விரும்புவார்கள் .

        அப்படி  ஒருநிலை ஏற்படும்போது  இப்போது  இப்படிப்பேசும்  உங்களிஅப்போன்றவர்கள் என்ன  செய்வீர்கள் தெரியுமா ?
        சொந்த  இனம் இப்படி  துயரப்படும்போது  சொந்தைனத்தவனே  கைவிட்டு விட்டான் என  கை கொட்டி  சிரிப்பீர்கள் .

        • mannan says:
          12 years ago

          பண்கைகாரரிடம் திருடி  ஏழைகளிற்கு  கொடுப்பது
          சினிமாவில். தமிழரை  ஏழையாக்கி  குடும்பங்களில்
          கணவன் மனைவியையும், மனைவி  கணவ்னையும்
          தமது  பிள்ளைகளையும்    இழக்கச்செய்து
          தமிழரின்  வாழ்வை சீரளித்தவ்ர்கள்   இருக்கவேண்டிய இடம்
          சிரைச்சாலை    கொடைவள்ளல்களாக  உலகில்
          வலம்வருவதற்கு அவர்கள்  தகுதியற்ரவ்ர்கள்.

          • lala says:
            12 years ago

            புரியவில்லை ?

            இந்த தலைப்பில் வறிய மக்களுக்கு உதவி வழங்கும்நிறுவனத்தை சேந்தவர்கள் தமிழர்களின் வாழ்வை சீரழித்தவர்கள் அந்தநிறுவனத்தை சேர்ந்தவர்களா ?

            எப்படி ?

            அப்படியே இருந்தாலும் அதற்கு சட்டம் ,நீதி மன்றம் எல்லாம் இருகிறதே ?

            நீங்கள் அதற்குள் பதிவுலக நாட்டமையாக சிறைச்சாலை தீர்ப்பு வழங்கி விட்டீர்களே ?

  3. Jeyam says:
    12 years ago

    அடிவயிறு எரிகிறது.

  4. mannan says:
    12 years ago

    30 வருடமாக  மரணதண்டனை  தமிழர்களிற்கு  விதிப்பதற்கு   புலம்பெயர்
    நாடுகளிலிருந்தே   தீர்ப்பும்  ஆலோசனையும்  வழங்கிய   தமிழ்  பயங்கரவாதிகள் யார் என்பது  தெரிந்திருந்தால் தான்  நான் சொல்வது
    புரியும்.

    • lala says:
      12 years ago

      அப்படியா ? அப்படி ஏதாவது நாட்டமைக்கு தெரிந்திருந்தால் திண்ணையில் இருந்து வெட்டி கதை பேசாமல் ஐநா அமைக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆதார்ங்களையும் தகவல்களையும் அளிக்கலாமே ?

      அப்போது தெரியும் கடந்த 30 வருடங்களாக மரண அவஸ்தையை கொடுத்தவர்கள் யார் என்பது .

      இனக்கொலையாளிகளை காப்பாறுவதற்கு அதன் அடிமைகள் என்னமா போராடுகிறார்கள் ?
      உங்க இனக்கொலயாளி எசமான் ரொம்பத்தான் கொடுத்து வச்சவர் .

      • mannan says:
        12 years ago

        உலகமுழுவதும் தெரிந்த  விடயம்.  இதுவே  முள்ளிவாய்க்காலில்
        தமிழர் அழியும் போது  உலகநாடுகள்   இலங்கை  அரசை
        கண்டிக்க  முடியாமல் தலையிடமுடியாமல்  இருந்ததற்கும் காரணம்.
        இது  கூட  இதுவரை அறியாமல்  இங்கு வந்து  விவாதிப்பது
        மூளைச்சலவை செய்யப்பட்ட  தற்கொலைபோராளிக்கு ஒப்பானதேயாகும்.

        • lala says:
          12 years ago

          கண்டிக்க முடியாமல் அல்ல . இலங்கை அரசு செய்த பொய் பிரசாரங்களை

          சர்வதேச சமூகம் அப்போதுநம்பியிருந்தது .
          அது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்துதான் இப்போது ஐநா மூலமாக என்ன நடந்தது என்பதை அறிய விசாரணை குழுவை அறிவித்துள்ளது
          இப்போது உண்மை வெளியாகும் நாள் அண்மித்து விட்டது .
          அதுதான் இனக்கொலையாளினதும் அவர்களது எடுபிடிகளினதும் தூக்கத்தை கெடுத்து வருகிறது..

          • mannan says:
            12 years ago

            புலிகளால்  கொல்லப்பட்ட தமிழரகளைப்பற்ரியும்
            இலஙகையரசு சொல்வதை பொய்ப்ப்ரசாரமென்று
            கூறும்  தமிழரில்  ஒருவராக இங்கே லாலா
            கருத்து சொல்கிறார்.

          • a voter says:
            12 years ago

            இலங்கையின் பிரசாரங்கள் பொய்யென்று அப்போதே உலக நாடுகளிற்குத் தெரியும். அவர்களிற்கு புலிகளையும் அழிக்க வேண்டும் இலங்கை அரசையும் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது ஆயுதம் கொடுத்தார்கள். இப்போது போர்க் குற்றச்சாட்டு. 
            என்று இலய்கை அரசு அவர்களிற்குக் கீழ்ப்படிகின்றதோ அப்போது போர்க்குற்ச்சாட்டு நமநமத்துப்  போகச் செய்யப்படும்
            அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. லாபங்களே நிரந்தரம்.

  5. lala says:
    12 years ago

    இது வரை விமானக்குண்டு வீச்சு மூலமும், செல்கள் , கண்னி வெடிகள் மூலமாகவும் , தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகள் , இரசாயன ஆயுதங்கள் மூலமாகவும் யார் இதுவரை காலமும் தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள் என்பதையும் மறைப்பதற்கு மன்னன் படாத பாடு படுகிறார் .
    ஐநா விசாரணைக்குழு மூலமாக கண்கண்ட சாட்சியங்கள் மூலமாக முழு உலகுக்கும் உண்மை தெரிய வரப்போகிறதென்ற பதட்டம் இனக்கொலையாளிகளுக்கு மட்டுமல்ல அதன் எடுபிடிகளுக்கும் ஏற்பட்டுள்ளதென்பதை தெளிவாக காட்டுகிறது..

    • mannan says:
      12 years ago

      அப்போ  புலிகள்  அகிம்சை வழியில்  போராட்டத்தை  நடத்தினார்கள்.
      பிரபாகரன்   தமிழீழத்துக் காந்தி. இராஜ்பக்சவும் இலக்கை அர்சுமே
      அகிம்சை போராட்டத்தை  ஆயுத மூலம் அடக்கி தமிழ் மக்களையும்
      கொறார்கள்.  இவ்வளவு   கொடியவ்ர்கழுடன் எப்படி   புலம்பெயர் அகதி
      கோடீஸ்வரர்கள்  வியாபாரம் செய்கிறார்கள். எதற்கு இனி  கொலை
      குற்ரவிசாராணை. வியாபாரம்  கெடப்போகின்றதே. அப்போ  தமிழ்
      வியாபாரிகள்  யார் பக்கம்?

      • lala says:
        12 years ago

        இந்த் கேள்விகளை எல்லாம் நான் தான் உங்களிடம் கேட் க வேண்டும் ?

        இந்த கோடிஸ்வரர்களுக்கும் இலங்கையில் இன வெறி அரசுநடத்தும் இனப்படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும் . அதையும் இங்கே வெட்டியாக வந்து வெட்டியாக பேசி பொழுதை போக்காமல் நடை பெற இருக்கும் ஐ நா விசரணை குழுவிடம் ஆதாரத்துடன் எடுத்து வைக்கலாமே ?

        எதற்கு இனி கொலை குற்ற விசாரணை என யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் ?

        நீங்கள் சொல்லும் கோடிஸ்வர வியாபாரிகளூக்காகவா ?
        அல்லது உங்கள் இனப்படுகொலாயாளர்களான எசமானர்களுக்க்காகவா ?

        • mannan says:
          12 years ago

          ஐ.நா  அறிக்கையில்  கூட  புலிகளின்  பயங்கரவாதமும்   பணச்சலவையும்   பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ் பயங்கரவாதிகள்  ஏமாற்றியது புலம்பெயர் தமிழரை.பலி கொடுத்தது 
          இலங்ககைத்தமிழரை 

          • lala says:
            12 years ago

            அந்த ஐ .நாதான்  இறுதி யுத்தம்நடந்த பின்நடந்த  2009 ஆம்  ஆண்டு அமர்வின்போது  பயங்கரவாதத்தை  முறியடித்ததற்காக  இலங கை அரசுக்கு பாராட்டு  வழங்கியதென்பதையும்  , இன்று   இலங்கையில் ராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு , மனித  உரிமை  மீறல்        நடந்ததை ஏற்றுக்கொண்டு  மூவரடங்கிய  விசாரனைக்குழுவை  அமைத்து   இலங்கை அரசை  விசாரணை  வளயத்திற்குள்  கொண்டு  வந்திருக்கிறதென்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

        • mannan says:
          12 years ago

          2009 க்கு  முன்பு இலங்கை அரசாங்கம்  பயக்கரவாதத்தை  அழித்ததை ஏற்றுக் கொண்டமை போற்ரத்தக்க விடயம்.
          புலம் பெயர்நாடுகளில்  வாழ்ந்த  செயற்பட்ட  புலிகள்  பயங்கரவாதிகளில்லையா?  இவர்கள்  இப்போ 
          எங்கு எப்படி வாழ்கின்றார்கள் என்பதைப் பற்றி தெளிவாக இங்கு விளக்கம் கொடுப்பீர்களா 

  6. lala says:
    12 years ago

    ஐநா பற்றிநான் சொன்னதை தவறாக    விளங்கி  கொண்டுள்ளீர்கள் .
    உ
    2009 இல்  இலங்கை அரசுக்கு  பாராட்டு பத்திரம் வாசித்த  அதே ஐநா தான்  2014 இல் இலங்கை அரச படைகளின் அத்துமீறலகள் , ஆயிரக்கனக்கில் தமிழர்களை படுகொலை செய்ததாக  தமிழர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் சுமத்தி  வரும் குற்றச்சாட்டை  ஏற்றுக்கொண்டு மூவரடங்கிய  விசாரணை குழுவை நியமித்துள்ளது.

    விசாரணை யில் இலங்கை அரச படையினரின்  இனப்படுகொலைகள் பற்றிய  உண்மைகளும் ஆதாரங்களும் வெளிவரத்தான் போகிறது .
    விசாரணை முடிவில் ஐநா  அறிக்கை   இலங்கை அரச படைகள் தமிழர்களை இலட்ச கணக்கில் படுகொலை  செய்ததன் மூலம் இனப்படுகொலை ஒன்றை செய்ததாக அறிவித்தால் அப்போதும் இதே போல்  ஐநாவின்  அறிக்கையை  வரவேற்பீர்களா  ?

    • mannan says:
      12 years ago

      பாராட்டுப்பத்திரம்  வாசித்தது  புலிகளை அழித்ததற்குதான்  என்பதை
      ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அல்லது   புலிகள் பயங்கரவாதிகள்
      இல்லையா  விளக்கமாக  சொல்வீர்களா?

  7. lala says:
    12 years ago

    அவசரகுடுக்கை தனமாக பயங்கரவாத ஒழிப்பு எனக்கூறி  பாராட்டு பத்திரம்  வாசித்த  அதே  ஐநாதான்  இன்று 2014   இல்நடை பெற்றது பயங்கரவாத அழிப்பல்ல , பயங்கரவாத  அழிப்பென கூறிகொண்டு , உலகைநம்ப வைத்து  இனக்கொலையாளிகள் செய்ததெல்லாம்  தமிழின  அழிப்பே  என்பதை பூர்வாங்கமாக  ஏற்றுக்கொண்டுதான்  ஐநா  மூவரடங்கிய  விசாரணைக்குழுவை  அமைத்துள்ளது.

    • mannan says:
      12 years ago

      அப்பாவியான  தமிழர்   புலிகளின்  சூழ்சிமூலம்  இராணுவம் பலியாக்கி
      விட்டதால்  புலிகள்  பயங்கரவாதிகளல்ல என  உலகை  நம்ப செய்யும்
      நாடகமே  இதுவாகும்.

      • lala says:
        12 years ago

        சரிதான்  தமிழர்கள் , புலிகள் தவிர  மற்ற அனைவரும் உங்களைப்பொறுத்தவரை அப்பாவிகள் . இனப்படுகொலை செய்த அரசு , அதற்கு  உதவி செய்த அரசுகள் , அதற்கும் மேல்  ஐநா   அப்பாவியோ அப்பாவி அவ்வளவு சுலபத்தில் அவர்களை ஏமாற்றி விட  முடியும் ..

        • mannan says:
          12 years ago

          2009 வரையும்  தமிழர்களென்றால் புலிகள்
          புலிகள் என்றால் தமிழர். இது  புலம்பெயர்
          ஊடகங்களின்  தெய்வீக் வாக்குமூலம்.

          புலிகள் அழிக்கப்ப்ட்டதின் பின்னரே புலிகள்
          வேறு தமிழர் வேறு. அப்போ தப்பிக்க
          முற்சித்த தமிழரை  கொன்ற  புலிகள்
          மீது  யார்  குற்ரம்சாட்டுவது?

  8. lala says:
    12 years ago

    2009 இற்கு முதல் இன வெறி அரசினதும் உங்களைப்போன்ற அதன் கைக்கூலிகளினதும் தெய்வீக கோஷம்தான் என்ன ?

    புலிகள் வேறு , மக்கள் வேறு , புலிகளிடமிருந்து மக்களை பிரிக்க வேண்டுமென்பதுதானே ?
    இப்போது புலிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் இலட்சத்திற்குமேற்பட்ட மக்களை கொன்று குவித்து விட்டு , அங்கு கொல்லப்படவர்கள் அனைவரும் புலிகள் , பொது மக்கள் என ஒருவருமில்லை எனப்புலம்புவது ஏன் ?

    ##தப்பிக்க
    முற்சித்த தமிழரை கொன்ற புலிகள்
    மீது யார் குற்ரம்சாட்டுவது ##

    அப்படி எல்லாம்
    நடந்ததா ?
    அப்படியானால் ரொம்ப சுலபமாயிற்றே , ஐநா விசாரணை குழுவை சிவப்பு கம்பள வ்வரவேற்பு கொடுத்து அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்க அனுமதிக்கலாமே ? அதன் மூலம் புலிகளின் குற்றங்களை உலகறியச்செய்யலாமே ?

    ஆனால் அப்படியா செய்கிறார்கள் ?

    இனவெறி அரசினதும் அதன் சொம்பு தூக்கிகளும் ஐநா விசாரணை குழுவை இலங்கைக்குள் நுழை விட மாட்டோமென முழங்குகிறார்கள் .
    அப்படி யாராவது நாட்டிலிருந்து சாட்சி சொன்னால் அவர்களுக்கு தண்டனை வழங்கபடுமென்றும் , பழி வாங்கப்படுவார்களேன்றும் கொக்கரிக்கிறார்கள் ஏன் ?
    மடியில் கனமிருப்பதால்தான் ..

  9. mannan says:
    12 years ago

    இதுவரைகாலமும்     கொல்லப்பட்ட  போரில்  இறந்த  தமிழர் மட்டும்தான்
    அப்பாவிகள்  என  எண்ணியிருந்தேன். இப்போ  உங்களைப்போன்றவ்ர்களைப்
    பார்க்கும் போது உயிருடன்  கூட அப்பாவிகள்  இருக்கின்றார்கள் என
    நமபக்கூடியதாக இருக்கின்றது. அதுவும்  அப்பாவி வேடம் போட்ட
    பயங்கரவாதிகளோ  என சந்தேகமும்  எழுகின்றது.

    • lala says:
      12 years ago

      கேட்ட கேள்விக்கு பதில் தராமல் அப்பாவி , பயங்கரவாதியென பசப்ப வேண்டாம் . உங்களது பதில் பின்னூட்டங்கள் அப்படித்தானிருக்கின்றன.

      நீங்கள் சொலவதுபோல் நடந்திருந்தால் இனவெறி அரசு குதூகலாமக ஐநாவைநாட்டிற்குள் வரவழைத்து புலிகள் செய்த அத்து மீறல்களை உலகறிய செய்து தமது அப்பாவித்தனத்தை ஐநாவுக்குநிரூபிக்கலாமே ?
      எது அவர்களை தடுக்கிறது ?

      அல்லது இனவெறி அரசும் அதன் கைக்கூலிகளும் அவ்வளவு அப்பாவிகளாகவா இருக்கிறார்கள் ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...