புலம்பெயர் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கின்றனரா?:குர்தீஷ்,குஜாரத் அனுபவங்கள்

Contradictionsகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தோல்வியுடன் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக இனியொரு… முன்வைத்த கருத்தில் ஆரம்பித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. அடிப்படையில் கருத்துகள் திரிபுபடுத்தப்பட்டு வெவ்வேறு நலன்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன.

புலம்பெயர் நாடுகளிலிருந்து தமது பண பலத்தின் ஊடாக முகவர்களை நியமிக்க முயலும் மாபியாப் பாணியிலான கொள்ளைக் கூட்டங்களையே ஈழத் தமிழர்கள் நிராகரிக்கின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரிக்கப்பட்டதும் இந்தவகையிலேயே.

தவிரம் தாமே புலம்பெயர் மக்கள் என்ற விம்பத்தை வழங்கும் பிழைப்புவாதக் சிறுபான்மைக் குழுக்களே தமது பண முதலீட்டிற்காகக் கஜேந்திரகுமாரை ஆதரித்தனர், இக் குழுவினர் புலம்பெயர் மக்களோ அவர்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களோ அல்ல.

இந்த நிராகரிப்பிற்கு மாறாக மக்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் வரவேற்பார்கள் என்பதற்கான பல்வேறு ஆதரங்கள் உள்ளன.

புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள் வாழும் நாடுகள் சார்ந்த அடையாள அரசியல் என்பது இன்று எல்லா சமூகக் குழுக்களுக்கும் காணப்படுகிறது. அது வெறுமனே அடையாளம் சார்ந்த கட்டுப்படுத்தும் பொறிமுறையை என்றால் ஆபத்தானதாக மாறும்.

புலம் பெயர் நாடுகளை மையமாகக் கொண்டு இலங்கையில் ஏற்படுத்தப்படும் அழிவுகளை முன்வைத்து பல விடையங்களைச் செய்ய முடியும். உதாரணமாக தென்னாபிரிக்கா மற்றும் ஜீரிஸட் போன்ற அமைப்புக்கள் ஜீரிஎப் உடன் இணைந்து நடத்தும் அரசியல் தொடர்பான போராட்டங்கள், கருத்துருவாக்கம் என்பன..

சம்பூர் அனல் மின்னிலயம் தொடர்பான போராட்டங்கள், பிளேரின் தலையீடு, சுன்னாகம் அனல் மின்னிலய அழிவுகள் போன்ற ஆயிரம் பேசப்படாத பிரச்சனைகள் உண்டு.

தவிர புலம்பெயர் அடையாளத்திற்கான தேவை என்பது பல சந்தர்பங்களில் பிற்போக்கான அம்சங்களையே கொண்டிருக்கும். உதாரணமாக புலம்பெயர் குஜராத்தியர்களே இந்து பாசிசத்தின் மிகப்பெரும் ஆதரவாளர்களும் பண முதலீட்டாளர்களும். அவர்கள் ..குஜராத் இனப்படுகொலையின் போது மோடிக்கு அமோக ஆதரவை வழங்கியவர்கள். அடிப்படைவாதிகள்.
மக்கள் சார்ந்த அரசியல் எதுவுமற்று அடையாளங்களை மட்டுமே முன் நிறுத்தும் வெ|ற்று முழக்கங்கள் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை இன்று வடகிழக்கு என்ற புலத்திலுள்ள மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

பிழைப்புவாதிகளின் தேசிய வெறியையும் அடிப்படைவாத கருத்தியலையும் முற்போக்குத் தேசியவாதமாக மாற்றலாம். குஜராத் இனப்படுகொலைக்கு ஆதரவளித்த இந்துத்துவ பாசிஸ்ட் புலம்பெயர் தலைமைகளைக் குறிப்பிடும் அதே வேளை குர்தீஷ் இன மக்களின் புலம்பெயர் பிரிவுகள் அவர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராடத்தின் பின்பலமாகச் செயற்பட்டதை மறந்துவிட முடியாது.

குறிப்பாக குர்தீஷ் தொழிலாளர் கட்சி சாம்பல் மேடுகளிலிருந்து மீட்சி பெறுவதற்கான பங்களிப்பைக் கருத்தியல் தளத்தில் கூட புலம்பெயர் குர்தீஷ் மக்கள் வழங்கியுள்ளார்கள். பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள காத்திரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியாகவும் இடதுசாரி இயக்கங்களின் நட்பு சக்தியாகவும் குர்தீஷ் தொழிலாளர் கட்சியும் அதன் துணை அமைப்புக்களும் கருதப்படுகின்றன.

ஆக, புலம்பெயர் தமிழர்கள் அதிகாரவர்க்கதிற்கு எதிரான அரசியல் போராளிகளாக மாறினால் குர்தீஷ் மக்களின் முன்னுதாரணத்தை அடிப்படையாகக் கொண்டு முற்போக்குத் தேசியத்தைக் கட்டியெழுப்பலாம். அதற்கான புலம்பெயர் அரசியல் தலைமையும் கருத்துருவாக்கமும் இன்றைய சமூகத் தேவை.