இனியொரு...

இனியொரு...

திமுக கூட்டணியை எதிர்ப்பது பாஜக ஆதரவுதான் ஏன்? – மாதவராஜ்

திமுக கூட்டணியை எதிர்ப்பது பாஜக ஆதரவுதான் ஏன்? – மாதவராஜ்

இப்போது திமுக கூட்டணியை எதிர்ப்பவர்களை மட்டும் பிஜேபி ஆதரவானவர்கள் என்று சொல்கிறீர்களே, அப்படியென்றால் சென்ற தேர்தலில் இடதுசாரிகள் நீங்கள் மக்கள் நலக் கூட்டணி அமைத்தது பிஜேபிக்கு ஆதரவு நிலைபாடுதானே? சென்ற தேர்தலுக்கு முன்பே மத்திய பிஜேபியின் பாசிச ஆட்சியின் நடவடிக்கைகளையும், அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்து எப்போதும் போல் இடதுசாரி கட்சிகள் இயக்கங்கள் நடத்தி வந்தன. ஒருமித்த கருத்துக்களோடு இருந்த விசிக, மதிமுக போன்ற கட்சிகளோடு கூட்டு இயக்கங்களும் நடக்க ஆரம்பித்தன. சென்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக தலைவர் ஜெயலிதாவும் இருந்தார்கள். பிஜேபியோடு அதிமுகவும் சரி, திமுகவும் சரி கூட்டணி அமைக்கவில்லை. பிஜேபி தனித்து விடப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு பிஜேபிக்கு சுத்தமாக இல்லை. எனவே சென்ற தேர்தலில் திமுகவும் சரி, அதிமுகவும் சரி, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிஜேபி குறித்த பெரிய அளவில் விமர்சனங்களை முன்வைக்கவில்லை. பிஜேபி அரசின் ஆபத்தை முழுமையாக உணராத போக்கு இரண்டு கட்சிகளிடமும் இருந்தது. திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள் யார் ஆட்சி பொறுப்புக்கு வருவது என்று ஒன்றையொன்று கடுமையாய் விமர்சனம் செய்து கொண்டு தேர்தலை சந்தித்தன. இந்துத்துவா சக்திகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் , அதன் சித்தாந்தங்களுக்கு தமிழகம் மெல்ல இரையாகிக் கொண்டு இருப்பதை இடதுசாரி சக்திகள் உணர்ந்திருந்தன. இரண்டு திராவிடக் கட்சிகளும் தங்கள் சித்தாந்தங்களில் நீர்த்துப் போனதும் , சித்தாந்தமற்ற அரசியலில் இந்துத்துவா சக்திகள் எளிதில் ஊடுருவ முடிந்ததையும் அறிந்திருந்தன. எனவே – தமிழகத்தில் பிஜேபி எந்தத் தொகுதியையும் வெல்வதற்கான ஆபத்தற்ற சூழலில் – தமிழக அரசியலில் கருத்தியல் ரீதியாக மக்களை சென்றடைவதற்கான உத்தியாகவும், ஒரு மாற்று அரசியலை முன்வைக்க கிடைத்த வாய்ப்பாகவுமே சென்ற தேர்தலை இடதுசாரிக் கட்சிகள் கையாண்டன. தேர்தலில் அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்தது. மக்கள் நலக் கூட்டணியால் திமுக தோற்றது என்று விமர்சனங்கள் எழுந்தன. அப்போது பிஜேபியும் ஒரு தொகுதியிலும் வென்றிருக்கவில்லை. அதன் பின்னரே, ஜெயலலிதா மரணம், அதைத் தொடர்ந்த மத்திய பிஜேபி அரசின் கபளிகர ஆட்டம், அதிமுக அரசும் அமைச்சர்களும் மத்திய அரசுக்கும் பிஜேபிக்கும் கை கட்டி நின்ற பரிதாபங்கள் என நிகழ்வுகள் நடந்தேறின. இவை யாவும் தேர்தலுக்குப் பின்னர் நடந்த எதிர்பாராத காட்சிகள். பிஜேபியின் மூர்க்கத்தனமான, அநியாயமான ஆட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு எப்படி மக்கள் நலக் கூட்டணி பொறுப்பாகும்? மக்கள் நலக் கூட்டணியே பிஜேபிக்கு ஆதரவு நிலைபாடு என்று எப்படி சொல்ல முடியும்? ஆனால் இந்தக் கெட்டதில் நல்லது ஒன்றும் நடந்தேறியது. பிஜேபி மிகக் கடுமையாக தமிழகத்தில் அம்பலப்பட்டது. இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற நிற்கும் வெறியைக் கண்டு, தமிழகத்தில் இருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைத்தும் தங்கள் முன் நிற்கும் ஆபத்தை முழுமையாக உணர முடிந்தது. திமுகவும் வெளிப்படையாக பிஜேபி எதிராக கருத்துக்கள் தெரிவித்ததுடன் இயக்கங்கள் நடத்தியது. இடதுசாரி, ஜனநாயக சக்திகளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு விரிந்த பரந்த அளவில் திமுக தலைமையில் பாசிச பாஜகவுக்கு எதிராக சித்தாந்த ரீதியாக இந்துத்துவாவை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் வேண்டும் என்னும் பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் அணி திரண்டு இருக்கின்றன. அதுதான் எதிர்காலத்துக்கான நம்பிக்கை. பிஜேபியோ மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த அதிமுக கட்சியோடு இணைந்து தேர்தலில் நிற்கிறது. அதிமுக வெற்றி பெற்றால் அது மத்திய பிஜேபியின் வாலாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் இந்த தேர்தலில் முறையே பாசிச பாஜவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நிற்கின்றன. தெளிவாகப் பிரிந்து இரண்டு அணிகளாக நிற்கின்றன. அதனால் திமுக கூட்டணியை எதிர்ப்பது, பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு என்றே தர்க்க ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் கருத வைக்கும்.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு சின்னம் சிக்கல்!

விடுதலைச் சிறுத்தைகளுக்கு சின்னம் சிக்கல்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கிறது. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரண்டு தொகுதிகள் பொதுத் தொகுதிகள். திருப்போரூர், நாகை என...

வாட்சப்பில் வதந்தி பரப்பியவருக்கு தேர்தலில் சீட் கொடுத்த கமல்!

வாட்சப்பில் வதந்தி பரப்பியவருக்கு தேர்தலில் சீட் கொடுத்த கமல்!

பொய்யான தகவலை உண்மை என நம்பியதோடு, யூ-டியூப் சானல் வழியாக அதைப் பரப்பியும் வந்த பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சென்னை தமிழச்சி என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவந்த பத்மபிரியா என்பவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நகைச்சுவைக் கலைஞரும், தமிழ் ஆர்வலருமான வெங்கடேஷ் ஆறுமுகம் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். இவர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்களை கிண்டல் செய்யும் விதமாக அவ்வப்போது பதிவுகளை இடுவது வழக்கம். அந்த வகையில், கி.மு 400ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி சித்தர் போகர் எழுதிய பாடல் எனக் குறிப்பிட்டு, "சரவணனடி வாழ் அரவும் விடப்பற் கொண்டு நெளியும் வெட்டியதை புசிப்பவர் தம் உடலில் சுவாசம் திணறும் ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும் உடற் மண்டலம் சிதைந்து உயிர் போகுமே பறந்து.” என்ற பாடலையும் அதன் பொருள் என “முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.. உடலில் ரோகம் பிடிக்கும் உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடைந்து துர் மரணம் நிகழும். போகர் அந்தக் காலத்திலேயே சீனா சென்று வந்தவர். இந்தப்பதிவை பிளாக் மாம்பா நாகம் போல் அதிவேகமாக ஷேர் செய்யவும்.” என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இந்த கிண்டலை புரிந்துகொள்ளாமல் உண்மையான செய்தி என நம்பி ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். பொய்ச் செய்திகளை பரப்பும் நாளிதழான தினமலர், இந்தப் பதிவை செய்தியில் வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியை பலரும் ஆராயாமல் பரப்பி வந்தனர். அப்படி ஆராயாமல் நம்பியவர்களில் ஒருவர்தான் இந்த பத்மபிரியா. வெங்கடேஷ் ஆறுமுகம் எழுதிய இந்த கிண்டல் பதிவை உண்மையென நம்பி, தானே தேடிக் கண்டடைந்ததுபோல இந்தப் பாடலைப் பாடி தனது யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டார். வாட்ஸ்-அப் பகிர்வுகளின் உண்மைத்தன்மையை அறியாமல், பொதுமக்களையும் ஏமாற்றிய இவர்தான் மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் தொகுதி வேட்பாளர். பொய்யை நம்பியதோடு, அதை தமிழர் பெருமை என்பதாகக் குறிப்பிட்டு லட்சக்கணக்கானோருக்கு பரப்பிய பெண்ணுக்கு, சீட் கொடுக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆயிரம்  ரூபாய் சம்பாதித்து 9 லட்சம் கடன் அடைத்த சீமான்!

ஆயிரம் ரூபாய் சம்பாதித்து 9 லட்சம் கடன் அடைத்த சீமான்!

தமிழ் திரைப்பட இயக்குநரான சீமான் 2009-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசியலுக்கு வந்தார். சீமான் சினிமாவில் இருந்தவரை பெரிதாக சம்பாதிக்கவில்லை. காரணம் அவரது படங்கள் எதுவும் பெரிதாக ஓடியதில்லை....

புதுச்சேரியில் பாஜகவால் அதிமுக அழிக்கப்பட்ட கதை!

புதுச்சேரியில் பாஜகவால் அதிமுக அழிக்கப்பட்ட கதை!

இந்தியாவில் மக்களால் தெரிவு செய்யப்படும் சட்டமன்றம் அமைந்த யூனியன் பிரதேசங்களில் முதன்மையானது புதுச்சேரி. முன்னர் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட இந்த பிரெஞ்சு குடியேற்றப்பகுதி தற்காலத்தில் புதுச்சேரி என்று...

கடனாளிகளாக தமிழக தலைவர்கள்!

கடனாளிகளாக தமிழக தலைவர்கள்!

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்து வருகிறார்கள். பொதுவாகவே அரசியல் இருப்பவர்கள் கோடீஸ்வரர்கள் என்பதால் அவர்களின் சொத்துக்களை...

அதிமுக பிஜேபி கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க கூடாது? – இரா. முருகவேள்

அதிமுக பிஜேபி கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க கூடாது? – இரா. முருகவேள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும், அரசு துறைகளை தனியாரிடம் விடவும் ஆலோசனைகள் அளிப்பதற்காக staff rationalization committee என்று ஒரு கமிட்டியை அமைத்து உள்ளது. இது செயல்படுத்தப்...

இயக்குநர் ஜனநாதன் அன்பும் மனிதமும்!

இயக்குநர் ஜனநாதன் அன்பும் மனிதமும்!

இயக்குநர் ஜனநாதன் நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆனவர். 2003-ஆம் ஆண்டு தனது 44-வது வயதில் முதல் படமான இயற்கையை இயக்கினார்.  அந்த...

Page 71 of 1549 1 70 71 72 1,549