ஒளரங்கசீப் / மோடி, யார் சிறந்த மத நல்லிணக்க ஆட்சியினைத் தந்தது?: வி.இ.குகநாதன்
ஔரங்கசீப் முற்று முழுதாக மனித உரிமைகளைக் கடைப்பிடித்து ஆட்சி செய்தார் என்பதல்ல இப் பதிவின் கருத்து. அது மன்னர்கள் காலம். மோடியின் ஆட்சியினை விட மத நல்லிணக்கம்...
ஔரங்கசீப் முற்று முழுதாக மனித உரிமைகளைக் கடைப்பிடித்து ஆட்சி செய்தார் என்பதல்ல இப் பதிவின் கருத்து. அது மன்னர்கள் காலம். மோடியின் ஆட்சியினை விட மத நல்லிணக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அடுத்தடுத்து வரும் கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. பிரபல வட இந்திய ஊடகமான டௌம்ஸ் நௌவ்- சி வோட்டர்ஸ்...
தந்தி டி.வியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கேள்விகளை தொடுக்கும் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சிக்கு 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நிகழ்ச்சியின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்தனர். பொன்னாருக்கு ஆதரவாக 8 பேரே கையை தூக்கினர். நிகழ்ச்சியின் இறுதியை மட்டும் தான் பார்க்க முடிந்தது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச் சாலை வேலை நடைபெறவில்லை என்றார் பொன்னார். பாஜக தவிர்த்து வேறு யாரை தேர்ந்தெடுத்தாலும் வேலைகள் நடக்காது என்றும், மூன்று வருடங்கள் இனியும் பாஜக தான் மத்தியில் இருக்கப் போகிறது என்றும் மிரட்டும் தொனியில் பேசினார். அதை நாம் தமிழர் வேட்பாளர் உடனே தட்டிக் கேட்கவும் செய்தார். பொன்னார் இன்னொன்றையும் கூறினார். சாதி, மதமென பிரிந்து கிடப்பது போதுமெனவும், மக்களை வாழ விடுங்கள் என்றும் பெரிய யோக்கிய சிகாமணி போல பேசினார். இது பொன்னார் மற்றவர்களை பார்த்துப் பேசினார் என்று நினைப்பதைக் காட்டிலும் தன்னை நோக்கியே பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம். மதவாத அரசியலின் உச்ச பலனை பொன்னார் தொட்டு விட்டார். இதற்கு மேல் மதவாதம் வாக்குகளை பெற்றுத் தராது என்ற அனுபவப் பாடத்தை கற்றுக் கொண்டு விட்டார். அதனால் தான் இரவல் சொற்களில் மதச்சார்பின்மை பேசுகிறார். சங்கிலித் திருடன் ஒருவன், ‘அதோ திருடன்...’ என்று சொல்லிக் கொண்டே ஓடுவதை போன்று பொன்னார் மற்றவர்களை பார்த்து மத அரசியல் வேண்டாம் என்று கூறுவது நகைப்புக்கிடமாக இருக்கிறது. மத அரசியலை உதறும் பாவனை கொண்ட பொன்னாரின் தேர்தல் கால சொல்லாடல்களின் இன்னொரு அம்சம் என்னவென்றால் அதானியின் துறைமுக மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு முழுக்க தன்னை நேர்ந்து விட்ட கடப்பாடு. ஒரு பக்கம் இந்துத்துவப் போக்கிரியாகவும் மறுபுறம் அதானிக்கு தம்பிரானாகவும் இருக்க வேண்டிய அந்திம கால அரசியல் நிர்ப்பந்தங்கள் இணைந்து பொன்னாரின் கதையை இன்னொரு முறை முடித்து வைக்க உக்கிரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது. இந்த...
2009- ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் நாம் தமிழர் என்ற கட்சியை துவங்கிய சீமான் தன் பேச்சுக்களால் தமிழக இளைஞர்களிடம் கேலிப்பொருளாக மாறியுள்ளார். 2011-ஆம் ஆண்டு கட்சி துவங்கிய...
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதே பாஜகவின் கோஷம். 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்த கோஷம் இந்திய அளவில் வலதுசாரிகளால் முன் வைக்கப்பட்டு வருகிறது....
பிரித்தானிய அரசின் உள்துறைச் செயலாளர் பிரீதி பட்டேல் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்தின் முதலாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. முன்னை நாள் உள்துறைச்...
தமிழகத்தில் பள்ளர்கள் என்றழைக்கப்படும் சாதி உட்பட வேறு சில சாதிகளையும் இணைத்து தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியோ பள்ளர்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.