தன் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்குக்கூட ஆ ராசா மன்னிப்பு கேட்டுவிட்டார். பொதுநன்மைக்காக. அது அவரது முதிர்ச்சியை, பெருந்தன்மையை, சமூகப்பொறுப்புணர்வை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. “சங்கு சுட்டாலும்...
கோ.கமலக்கண்ணன் (தமிழினி, March 28, 2021) ------------------------------------------------------------- தஸ்தயேவ்ஸ்கி பற்றிய என் நிலைப்பாடு ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் அதே சமயம் ஏற்கக் கடினமானதாகவும் இருக்கிறது. என் அத்தனை இலக்கிய விரிவுரைகளிலும் இலக்கியத்தில் நான் பொருட்படுத்தும் ஒரேயொரு பண்பைத் தவறாமல் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். கலைச்செயல்பாட்டின் நோக்கமும் தனியரின் மேதமையுமே அவை. இந்த அடிப்படையில் தஸ்தாயேவ்ஸ்கி ஒரு சிறந்த எழுத்தாளர் அல்ல, மாறாக ஒரு சாதாரணமான எழுத்தாளர். ஆங்காங்கே அரிதாக நகைச்சுவை வெளிப்பாடு இருந்தபோதும் இலக்கியத் தளத்தில் வெறுமை நிரம்பிய படைப்பாளர் அவர். ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் ரஸ்கோல்நிகோவ் ஏதோவொரு காரணத்தினால் கிழட்டு அடகுக்கடைக்காரியையும் அவளது சகோதரியையும் கொலை செய்கிறான். இரக்கமற்ற காவல்துறை அதிகாரி மெல்ல மெல்ல தன் அருகே நெருங்கிவிட்டிருக்கும் தருணத்தில், தான் மனம் ஒப்பி கொலைசெய்ததை வாக்குமூலமாகத் தருகிறான். மேன்மையான பரத்தையிடமிருந்து கிட்டும் காதலின் வழியாக ஆத்ம மறுமலர்வு அடைகிறான். பரத்தையிடமிருந்து பெறும் காதலைக் கொண்டு முக்தி அடைவது போன்ற செய்திகள் அனுபவமிக்க வாசகர்களால் துடுக்குத்தனமாக இன்று ஆராயப்படுவதைப் போல 1866ல் இந்த நூல் எழுதப்பட்ட போது வியக்கத்தக்கதாக கருதி ஆராயப்படவில்லை. நான் பேசும் இந்த வகுப்பில் உள்ள அனைவரும் அனுபவமிக்க வாசகர்கள் என்பது எனக்குப் பெரிய தடையாக இருக்கப் போவதில்லை என நம்புகிறேன். மூன்றில் ஒரு பங்கு வாசகருக்கு நல்லிலக்கியத்திற்கும் போலி இலக்கியத்திற்குமிடையே உள்ள வேறுபாடே தெரிவதில்லை. அத்தகைய வாசகர்களுக்கு நம் அமெரிக்க வரலாற்று நாவல்கள் அல்லது ‘From Here to Eternity‘ என்று அழைக்கப்படும் கீழ்த்தரமான குப்பைகளுக்கு முன் தஸ்தாயேவ்ஸ்கி மிகவும் முக்கியமானவராகவும் கலைநயமிக்கவராகவும் தெரிகிறார். நிற்க. நான் பல மாகலைஞர்களைப் பற்றி நீண்ட சொற்பொழிவுகளை மேற்கொண்டு வருகிறேன். அத்துடன் இந்த உயர்நிலை வகுப்பில் தஸ்தாயேவ்ஸ்கி பற்றிய விமர்சனமும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஃபியோதர் மிகைலோவிச் தஸ்தாயேவ்ஸ்கி 1821ல் ஏழை ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை மாஸ்கோவில் இருந்த அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றினார். அன்றைய ரஷ்யாவின் அரசு மருத்துவராகப் பணிபுரிவது ஒரு நடுத்தர குடும்பத்திற்கு மிதமான வருவாய் தரக்கூடிய ஒரு பணி. தஸ்தாயேவ்ஸ்கி குடும்பம் வாழ்ந்த குறுகலான வீடும் பொருளாதார நிலையும் சமகாலத்தில் சொகுசானவை என்றே கருத முடியும். அவரது தந்தை அற்பமான கொடுமைக்காரனாக இருந்தார். தெளிவிலாச் சூழ்நிலைகளில் அவர் கொல்லப்பட்டார். தஸ்தாயேவ்ஸ்கியின் இலக்கியப் படைப்புகளை அலசும் ஃபிராய்டிய மனம் கொண்ட ஆய்வாளர்களால், தன் தந்தையின் கொலையை ஒட்டி இவான் கரம்சோவ் கொள்ளும் தவிப்பில் தஸ்தாயேவ்ஸ்கியின் தன்வரலாற்றுக்கூறுகள் இருப்பதாகச் சுட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இவான் உண்மையில் தன் தந்தையைக் கொல்லவில்லை என்றபோதும் அவனது தளர்வான மனோபாவமும் தன் தந்தையின் கொலையை எவ்விதமேனும் தான் நினைத்திருந்தால் தடுத்திருக்க இயலும் என்ற தவிப்பும் தந்தையின் கொலையில் தனக்குப் பங்கு இருப்பதாக அவனைக் குற்றவுணர்வில் வாட்டுவதைக் காண முடிகிரது. தனது பயிற்றுனரால் தன் தந்தை கொல்லப்பட்டது குறித்த மறைமுகமான குற்றவுணர்வின் சுமையுடனேயே தஸ்தாயேவ்ஸ்கியும் தன் வாழ்வுநாள் முழுமையையும் கடந்திருக்கிறார் என்று இந்த விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். முதலில் மாஸ்கோவில் உள்ள தங்குபள்ளியிலும் பின் பீட்டர்ஸ்பர்கில் உள்ள இராணுவப் பொறியியல் பள்ளியிலும் தஸ்தாயேவ்ஸ்கி கல்வி கற்றார். தஸ்தாயேவ்ஸ்கிக்கு இராணுவப் பொறியியலில் எந்தத் தனிப்பட்ட ஆர்வமும் இல்லாத போதும் அவர் தந்தையின் விருப்பத்திற்கிணங்க அப்பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கும் அவர் இலக்கிய வாசிப்பிலேயே நிறைய காலத்தைச் செலவிட்டார். தன் கல்வி முடிந்ததும் கட்டாயச் சேவை காலம் முடியும் வரை மட்டுமே பொறியியல் துறையில் இருந்தார். 1844ல் அச்சேவையிலிருந்து பணித்துறவு செய்துவிட்டு இலக்கியத்தில் நுழைந்தார். அவரது முதல் நூல் ’பாவப்பட்டவர்கள்’ (Poor Folk, 1846) இலக்கிய வட்டங்களிலும் பொதுமக்களின் வாசிப்பிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அவரது தொடக்க காலத்தில் தீவிர புரட்சியாளர்களின்பால் ஈர்ப்புகொண்டிருந்தார். மேற்கின் போதகர்களிடம் அவர் தீவிர மனச்சாய்வு கொண்டிருந்தார். ஃபெளரியர், புனித சைமன் ஆகியோரின் குமுகவுடைமை கொள்கைகளை ஏற்றிருந்த இளைஞர்கள் அடங்கிய ஒரு இரகசிய குமுகத்தில் – நேரடி உறுப்பினராக இல்லாதிருந்த போதும் – நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவ்விளைஞர்கள் அரசுத்துறை அலுவலர் மிஹைல் பெத்ராஷெவ்ஸ்க் என்பவரது இல்லத்தில் கூடி ஃபெளரியரின் நூல்களை உரக்க வாசித்தும் விவாதித்தும் குமுகவுடைமைக் கொள்கைகளைப் பேசி அரசைக் கடுமையாக விமர்சித்தும் வந்தனர். 1848ம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின் பல ஐரோப்பிய தேசங்களிலும் இருந்த புரட்சியலை ரஷ்யாவையும் தீண்டியது; எச்சரிக்கையான அரசு மாற்றுக் கருத்துடையோரை ஒடுக்கத் தொடங்கியது. பெத்ராஷெவ்ஸ்கிய ஆட்கள் அனைவரையும் கைது செய்தனர். அவர்களுள் ஒருவராக தஸ்தாயேவ்ஸ்கியும் கைதானார். அரசைப் பற்றியும் மரபுவழி தேவாலயம் பற்றியும் வசைகளும் விமர்சனங்களும் கொண்டிருந்த பெலின்ஸ்கி கடிதத்தைச் சுற்றில் விட்டதற்காகவும் அரசுக்கெதிராக தனியார் அச்சகத்தின் துணைகொண்டு துண்டு பிரசுரங்களை மக்களிடையே பரப்பியதற்காகவும் சிலருடன் கூட்டாளியாகச் சேர்ந்து பல்வேறு குற்றச் சதிகளில் ஈடுபட்டவராகக் கருதி அவரைக் கைது செய்திருந்தனர். அவர் புனித பீட்டர் – பால் கோட்டையில் தன்மீதான விசாரணையை எதிர்நோக்கி இருந்தார். அங்கு எனது மூதாதையான தலைவர் நபக்கோவ் அதிகாரியாக இருந்தார் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். சைபீரியாவில் எட்டு ஆண்டுகள் (பின்னர் நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டத்) தீவிர பணியில் ஈடுபட வேண்டுமென அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இந்தத் தண்டனைக் கூற்று வாசித்துக் காண்பிக்கப்படும் முன்னரே கைதிகளுக்குக் கொடூரமான முறையில் தண்டனைச் செயல்முறைகள் பின்பற்றப்பட்டது. அவர்கள் சுட்டுக் கொல்லப்படவிருப்பதாக அவர்களிடமே தெரிவிக்கப்பட்டு சுடுகை மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். (ரஷ்ய இலக்கிய விமர்சகர் விசாரியன் பெலின்ஸ்கியிடமிருந்து 1847ல் நிகோலாய் கோகோலுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.) கைதிகள் மரண தண்டனைக்கு தயாராக்கப்பட்டு, சட்டைகள் கழற்றப்பட்டன. தண்டனை வழங்கும் அதிகாரிகள் முதல் வரிசையில் இருந்த கைதிகளைக் கம்பங்களில் கட்டினர். அதன் பிறகே உண்மையான தண்டனைக் கூற்றை வாசித்துக் காட்டினர். அதிலொரு கைதி அஞ்சி மனப்பிறழ்வு ஏற்பட்டதைப் போல வெறியொலி எழுப்பினார். அந்நாளின் பட்டறிவு தஸ்தாயேவ்ஸ்கியின் மனத்தில் தீராத்தழும்பாக நிலைத்துவிட்டது. அதை அவரால் கடந்து வெளியேற முடியவே இல்லை. திருடர்களுடனும் கொலைகாரர்களுடனும் சைபீரியாவில் தஸ்தாயேவ்ஸ்கி கழித்த நான்காண்டு தண்டனைக் காலம் முழுதும் அரசியல் குற்றவாளிகளுக்கும் சாதாரண குற்றவாளிகளுக்குமான வகைப்பாடு மேற்கொள்ளப்படவே இல்லை. அவர் தனது ‘மரண இல்லத்தின் நாட்குறிப்பு’ (1862) எனும் நூலில் அவர்களைப் பற்றி விவரிக்கிறார். அது இனிமையான வாசிப்பாக இல்லை. அவர் தாங்கிய கொடுமைகளையும் அவமானங்களையும் மிக நுட்பமான விவரணைகளுடன் சொல்கிறார், கூடவே அவர் எத்தகைய குற்றவாளிகளின் மத்தியில் வாழ்ந்திருக்கிறார் என்பதையும். அந்தக் கொடுஞ்சூழலில் முழுப்பைத்தியம் ஆவதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு எதையேனும் தேட வேண்டி அவசியம் அவருக்கு ஏற்பட்டது. அவ்வாறான தேடலில் அவர் கிறித்தவ பக்தியைப் பற்றிக்கொண்டு அந்தக் கொடூரமான ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். அவர் மிருகத்தனமான குற்றவாளிகள் இடையில் வாழ்ந்திருந்த போதும் அவர்களுக்குள் இருந்த சிலரது சில செயல்பாடுகளில் மனித உணர்வுகளும் இருந்தது இயல்பானதே. இந்த மனித வெளிப்பாடுகளை எடுத்துக் கொண்டு அதன் மீது செயற்கையான, மிகவும் நோய்த்தன்மை கொண்ட எளிய ரஷ்ய மானுடர்கள் என்ற கற்பிதத்தை கதாபாத்திரங்களாகத் தஸ்தாயேவ்ஸ்கி கட்டமைக்கிறார். அவர் தொடர்ந்த நீண்ட ஆன்மீகப் பயணத்திற்கு இதுவே முதற்படி....
தமிழகத்தில் மத்தியஅரசுக்கு மண்டியிடாத அரசு அமையும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறினார்.அடையாறில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல்காந்தி பேசியதன் சுருக்கம் வருமாறு: தொன்மையான...
உலகம் முழுவதும் பாசிச மயமாகும் சூழலில், அதற்கு எதிரான மக்கள் அணிதிரண்டு போராடும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன. இந்தியா இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பா...
இந்திய பிரதமர் மோடி வங்கதேசம் சென்ற நிலையில் அவரது வருகைக்கு எதிரான போராட்டங்கள் கலவரங்களாக மாறியது. இந்த வன்முறையில் ஐந்து பேர் வரை பலியாகி உள்ளார்கள். வங்கதேச விடுதலைப் போரின் 50வது ஆண்டு விழா மற்றும் ‘வங்கதேசத்தின் தந்தை’ அன்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ராகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது....
ஒரு நாடு அல்லது அரசுடன் மற்றொரு நாடு அரசியல் உறவுகளை வைத்திருப்பது போன்று ஒரு குழு அல்லது அரசியல் அமைப்பு செயற்பட முடியாது, இருப்பினும் அதற்கான அரசியல்...
https://www.youtube.com/embed/Jny-TY-WqN0
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.