இனியொரு...

இனியொரு...

பாசிச எதிர்ப்புக்குத் தேர்தலும் ஒரு களமே ! தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்போம் ! : மருதையன், நாதன்

பாசிச எதிர்ப்புக்குத் தேர்தலும் ஒரு களமே ! தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்போம் ! : மருதையன், நாதன்

நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதன் வாயிலாகவும், நாடாளுமன்றப் பங்கேற்பை நிராகரிப்பதன் வாயிலாகவும் ஒருவர் தனது “புரட்சிகர” மனோபாவத்தைக் காட்டிக்கொள்வது மிகமிக எளிது.

ஆலந்தூர் கமல் கோவைக்கு ஓட்டம்!

ஆலந்தூர் கமல் கோவைக்கு ஓட்டம்!

ஆலந்தூரில் போட்டியிடுவதாகச் சொன்ன கமல் திமுக அதிமுக இல்லாத கோவை தெற்கு தொகுதியை கண்டு பிடித்து அங்கு போட்டியிடுகிறார். மய்யம் கட்சியின் தலைவர் கமல் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. 234 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிடும்  மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க திணறி வருகிறது. இதனால் சிறு...

காங்கிரஸ் கட்சியில் கடும் கோஷ்டி மோதல்- அதிர்ச்சியில் திமுக!

காங்கிரஸ் கட்சியில் கடும் கோஷ்டி மோதல்- அதிர்ச்சியில் திமுக!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பெரும்பான்மை கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களையும் துவங்கி விட்ட நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ்...

மதிமுக Vs தமாகா: ஒரு தலைகீழ் திருப்பம் -ஆர்.முத்துக்குமார்

மதிமுக Vs தமாகா: ஒரு தலைகீழ் திருப்பம் -ஆர்.முத்துக்குமார்

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கும் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவுக்கும் திருப்பத்தைத் தந்திருக்கிறது. ஆனால் அந்தத் திருப்பம் சராசரியான திருப்பம் அல்ல, ஒரு...

129 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக மோதும் திமுக!

129 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக மோதும் திமுக!

தமிழக தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றே பிரச்சாரத்தைத் துவங்கி விட்டார்.இன்று திமுக 173  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று திமுக...

“இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?” – ராஜசங்கீதன்

“இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?” – ராஜசங்கீதன்

வாசிப்பின் இரண்டாவது புத்தகமாக ‘இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?’. சிவம் சங்கர் சிங் என்பவர் எழுதியிருக்கிறார்.India Shining என்ற சொல்லாடல் ஞாபகம் இருக்கலாம். வாஜ்பாய்யின் ஆட்சி முடிந்து இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்படவென ப்ரொமோத் மகாஜனின் முன்னெடுப்பில் பாஜகவுக்கான பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட வாசகம். ‘இந்தியா ஒளிர்கிறது’ என அர்த்தப்படும் அந்த சொல்லாடல்தான் நவதாராளமய இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் என்னவாக மாறவிருக்கின்றன என்பதற்கான முன்னறிவிப்பாக இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டது. அடுத்த 10 வருடங்களில் காங்கிரஸ்ஸின் ஆட்சி ஓய்கிறது. பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. இம்முறையும் ஒரு சொல்லாடல் இருந்தது. ‘குஜராத் மாடல்’ என்கிற சொல்லாடல். கூடுதலாக அசுரத்தனமாக வளர்த்தெடுக்கப்பட்ட மோடி என்கிற ஒரு பிம்பம்.இம்மாதிரியான வார்த்தைகள், சொல்லாடல்களை பஞ்ச் வசனம் போல் அறிவித்து தேர்தல்களை சந்திப்பது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் வழக்கம். உதாரணமாக ஒபாமா, தேர்தலின்போது தனக்கான பிரச்சார வார்த்தையாக 'Change' (மாற்றம்) என முன்வைத்து, 'Yes we can' என்பதை கோஷமாக பிரசங்கித்ததும் நினைவில் இருக்கலாம். அமெரிக்காவில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு பிரச்சார நிறுவனத்தை பணிக்கு அமர்த்துவார். அந்த நிறுவனம் மாகாணவாரியான வாக்காளர்களின் எல்லா தரவுகளையும் எடுத்து அவற்றிலிருந்து தன்னுடைய வேட்பாளருக்கான வாக்காளர்களாகும் சாத்தியம் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெல்வதற்கான செய்திகளை funnel down செய்து கொடுக்கும். இது ஒருபுறம் எனில் மறுபக்கத்தில் தேசிய அளவிலான பிரச்சினைகளை எடுத்து அல்லது உருவாக்கி தன்னுடைய வேட்பாளரை முன்னிறுத்தும். இரண்டு வேட்பாளர்களுக்கும் இத்தகைய நிறுவனங்கள் வேலை செய்யும். அவரவர் வேட்பாளரை வெற்றியடையச் செய்யவென எந்த எல்லைகளுக்கும் நிறுவனம் செல்லும். சமயங்களில் இரு வேட்பாளர்களின் பிரச்சார நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்பு கூட இருக்கும். இத்தகைய பாணி தேர்தல்களை நகைச்சுவையாக The Campaign என்கிற ஆங்கில படத்தில் காட்டியிருப்பார்கள். 2014ம் ஆண்டு தேர்தலில் மோடியின் வழியாக பாஜக மேற்குலக பிரச்சார உத்தியை மீண்டும் முன்னெடுத்தது. அந்த உத்தியுடன் தனக்கேயுரிய திருட்டுத்தனங்களையும் கலந்து கட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெருவெற்றியை பெற்றது. India Shining சொல்லாடல் தோற்றதும் அந்த உத்தியை தூக்கிப் போட்டுவிடாமல் இன்னும் வேகமாகவும் திடமாகவும் அந்த உத்தியை பயன்படுத்திய பாஜக வெற்றி கண்டது. 2014ம் ஆண்டு வெற்றியிலிருந்து தேர்தல் பிரச்சார நிறுவனங்கள் பற்றிய அறிமுகம் இந்திய மக்களுக்கு ஏற்பட்டது. இத்தகைய பிரச்சார நிறுவனங்களால் எதிர்காலத்தில் நேரவிருக்கும் ஆபத்தை உணர்ந்த பெரும்பாலானோர் இவற்றை ஆதரிப்பதில்லை எனினும் பல அரசியல்வாதிகளும் கட்சிகளும் இத்தகைய நிறுவனங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. சிவம் சங்கர் சிங் இத்தகைய நிறுவனத்தில் வேலை பார்த்தவர்தான். அதுவும் அமெரிக்காவில் படித்துவிட்டு 2014ல் பாஜகவில் இணைய வேண்டும் என இந்தியாவுக்கு வந்து பாஜகவுக்கு உதவத் தொடங்கி, உள்ளே அது செயல்படுகிற விதத்தை அறிந்து பிறகு தேர்தல் பிரச்சார வேலைகளை மட்டும் செய்ய முடிவெடுத்து இறுதியில் பாஜகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தவர். இந்திய தேர்தல்கள் தற்போது நடத்தப்படும் விதங்களை குறித்து விரிவாக பேசுகிறார். அதில் பல அதிர்ச்சிகள் நமக்கு காத்திருக்கின்றன. குறிப்பாக திரிபுராவில் 20 வருடங்களுக்கு மேலாக நீடித்த கம்யூனிஸ்டுகள் தோற்பதற்கான வேலையை செய்து கொடுத்தவர் இவர்தான். கம்யூனிஸ்ட் ஆட்சி மீது எந்தவித புகாரும் மக்களுக்கு இருக்கவில்லை என்கிறார். பிற கட்சிகள் மீது பிரச்சாரத்துக்கென 100 குற்றச்சாட்டுகள் தயார் செய்வதை போல் கம்யூனிஸ்டு கட்சிக்கு தயார் செய்ய முடியவில்லை என்கிறார். பணத்துக்கு ஓட்டு விற்கும் தன்மைக்கும் திரிபுரா மக்கள் பழக்கப்படுத்தப்படவில்லை என்கிறார். இவை எல்லாவற்றையும் மீறி அங்கு கம்யூனிஸ்ட்டுகளை இவரால் வீழ்த்த முடிந்ததற்கு பின்னால்தான் இந்திய மக்களை எத்தனை பெரிய ஆபத்து நெருங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய தேர்தல் மட்டுமென இல்லாமல் சலுகைசார் முதலாளித்துவம், தேர்தல் அமைப்பு, அதிகார வர்க்கத்தின் ஊழல், இந்திய அரசியல் இயங்கும் விதம் என எல்லாவற்றையும் மிக நெருக்கத்திலிருந்து பார்த்த அனுபவத்திலிருந்து நமக்கு உண்மைகளை வழங்குகிறார். நாம் எவரும், நமக்கான எவரும் பங்கு பெற முடியாத தேர்தல்களாக இந்திய தேர்தல்கள் எப்படி மாறின என்பதை முன்னறிவிக்கும் முக்கியமான புத்தகம் இது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை மிக எளிய நடையில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் தோழர் இ.பா சித்தன்...

சீமான்  “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

சீமான் “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நேற்று தந்தி தொலைக்காட்சியில் அண்ணன் சீமானின் பேட்டி ஓடிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகப் பார்த்ததும், தொடர்ச்சியாக அவருடைய பேட்டியைக் கண்டேன். வழக்கம்போல ஆக்ரோஷமாக, மிடுக்காகப் பேசினார். கூடுமானவரை தூய தமிழில் பேசும் அவரது பேச்சு ரொம்பவே பிடிக்கும் என்பதால் அவரது பேட்டியைத் தொடர்ந்து கேட்டேன். நன்கு வேகத்தோடு தனது கோட்பாடுகள் குறித்து பேசிவந்த அண்ணன், தன்னோடு சமரசம் பேச மீடியேட்டரை மோடி அனுப்பியது குறித்து பேசியதைக்கேட்டு ஆச்சர்யமானது. மோடியோடு சந்திப்பு நிகழ்த்தினால் அண்ணனுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் மோடிக்கு எதிராக அதிகமாகக் களமாடாமல் சற்று அடக்கிவாசித்தால் பொருளாதாரரீதியில் உதவுவதாகவும் பேரம் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அண்ணன் உடன்படவில்லை என்றபோது பெரிய மகிழ்ச்சி! அண்ணனை பணத்தால் விலைபேச முடியாது என்ற உற்சாகம் என்னுள்ளே! பேட்டியின் தொடர்ச்சியாக, சசிகலாவுடனான சந்திப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த அம்மையார்மீது தனக்கு பரிவு உண்டு என்றும், அம்மையாரின் கணவர் நடராஜன் தமிழ் மொழிப்பற்றாளர், தமிழர் ஆதரவு இயக்கம் சார்ந்தவர் என்பதால் அவங்க மீது நன்மதிப்பு உண்டு என்றார். அப்போதுதான் அண்ணனின் பேச்சுமீது சிறு வருத்தம் வந்தது. என்னதான் நடராஜன் தமிழ்ப்பற்றாளர் என்றாலும், சசிகலா-ஜெயலலிதா கூட்டணியால் தங்கள் சொத்தை இழந்த கங்கை அமரன், சொத்தை இழந்த துக்கத்தில் உயிரையேவிட்ட பாலு ஜூவல்லர்ஸ் அதிபர் உள்ளிட்ட பல தமிழர்களும் நினைவுக்கு வந்தனர். இப்படிப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக அண்ணன் பேசுறதுக்கு அப்டியென்ன காரணம் இருக்கும்னு மனசு அடித்துக்கொண்டது. நெறியாளர் துளைத்துத் துளைத்துக் கேட்டதால், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு உண்டான செலவுக்கு சீமானின் பங்காக 5 லட்சம் ரூபாயை நடராஜன் தான் உரிமையோடும், அன்போடும் கொடுத்தார் என்றும், அந்த அன்புக்கு நன்றிக்கடன்பட்டதையும் அண்ணன் கூறினார்! அதைக் கேட்டதும் இன்னும் ஷாக்கானது! ஒருவர் தனக்கு பண உதவி செய்தார் என்பதற்காக, தமிழர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றங்களைச் செய்த ஒரு தமிழின விரோதப் பெண்மணியை அண்ணன் ஆதரிச்சுட்டாரே என்று மனசு கஷ்டமானது. அடுத்து, சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அண்ணன் சீமான் பெரிதாக ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று நெறியாளர் கேட்டார். இல்லையில்லை, நாங்கள் ஆதரவு தந்தோம் என்றார். நெறியாளர் விடாப்பிடியாக, இல்லையில்லை, மற்ற கட்சிகள் தான் போராட்டத்தை ஆதரித்தார்கள். நீங்கள் ஆதரிக்கவில்லையே ஏன் என்று சந்தேகத்தோடு கேட்டார். அதற்கு அண்ணனோ, சி.ஏ.ஏ சட்டம் வந்ததுக்கு காரணமே காங்கிரஸ் தான் என்று ஒரே போடாகப் போட்டார்! நெறியாளரைப்போலவே எனக்கும் அதிர்ச்சியானது! பாஜக தானே அதை அமல்படுத்தியது என்று அண்ணனை நெறியாளர் கேட்டார். அண்ணனோ, அந்த சட்டத்தை வடிவமைத்தது காங்கிரஸ் தான்... அந்த விஷத்தை உருவாக்கியது காங்கிரஸ் தான்... ஊட்டிவிட்டது மட்டுமே பாஜக... எனவே காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு என்று அடித்துப் பேசினார். என்னடா இது... அந்த போராட்டத்தை ஒட்டி நடந்த கலவரத்தில் 45 பேர் வரை கொல்லப்பட்டதுக்கு பாஜகவினரின் தூண்டுதல் தானே காரணம்... ஓராண்டுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமலிருப்பதும் இந்த பாஜக அரசு தானே... அண்ணன் ஏன் இப்படி பேசுகிறார் என்று குழப்பமானது... அப்போது தான் மோடி... மீடியேட்டர்... டீலிங்... போன்று அண்ணனே கூறிய தகவல்களும் நினைவுக்கு வந்தது... அதேபோல வழக்கமாக ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் எதிர்த்தரப்பின் வாக்குகளைச் சிதறடிக்க பல்வேறு சிறிய கட்சிகளை மறைமுகமாக அவர் இயக்கும் உத்திகளும் நினைவுக்கு வந்து தொலைத்தது... அண்ணன் 5 லட்சத்துக்கே அவ்வளவு விசுவாசமாக இருந்தால்.... மோடி... கோடி.. என்று நினைக்கும்போதே தலைசுற்றியது.. சட்டெனச் சேனலை மாற்றி ஆதித்யாவில் காமெடி பார்க்கத் தொடங்கினேன். அங்கே கவுண்டமணி "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!" என்று கூறிக்கொண்டிருந்தார்!

Page 72 of 1549 1 71 72 73 1,549