Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லைக்காக்காரர் ‘கத்தி’க் கதைக்கிறாங்கள்:சோளன்

இனியொரு... by இனியொரு...
08/07/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts
நாமலுடன் லைக்கா இயக்குனர் ரூட்லி
நாமலுடன் லைக்கா இயக்குனர் ரூட்லி

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரிஸ் ரூட்லி. இதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தின் இயக்குனராகக் கடமையாற்றிய மிலின்ட் கங்லே என்ற இந்தியர் இந்தப் பதவியிலிருந்தார். லைக்கா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இப்பதவிலிருந்த கங்லேயை கடாசிவிட்டு ரூட்லியைப் பதவியில் நியமித்திருப்பதெல்லாம் எமக்குத் தேவையற்ற விவகாரம். கங்லே பத்துவருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் 14ம் திகதி நிறுவனத்திலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டுவதற்காக இலங்கை அரசுடன் லைக்கா ஏற்படுத்திக்கொண்ட ஏமாற்று வியாபார வியாபார நிறுவனமான ஸ்கை நெற்வேர்க் நிறுவனத்தில் கூட கங்லே தான் நிர்வாக இயக்குனர். லைக்கா பரிவாரங்களுடன் சதா வலம்வந்த கங்லே காணாமல் போனதும் ரூட்லி-Chris Tooley- இன் ரூட் கிளியராகி அவர் அதி உச்ச நிலையை அடைந்துள்ளார்.

(Note: தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் விஜய் ரீவி என்ற தமிழ் மற்றும் ஆங்கிலக் கொலைச் சாதனத்தைப் பார்த்து ஆட்கொள்ளப்பட்டதால் சோளனின் தமிழில் ஆங்கிலம் புகுந்து விளையாடுவதற்கு மன்னிக்கவும்.)

கிரிஸ் ரூட்லியும் பணம் சுருட்டுவதற்காக ராஜபக்ச குடும்பம் ஆரம்பித்த ஸ்கை நெற்வேர்க்கின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து ‘பெருமைகள்’ பெற்றவர். நாமல் ராஜபக்ச என்ற கேவலமான ரவுடியுடன் இணைந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு ஆங்கிலம் கூறும் நல்லுலகத்திற்குப் ‘பெருமைகள்’ சேர்த்தவரும் இந்த ரூட்லியே! லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடந்துதிரிய ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி வகித்த் போது அந்த நிறுவனம் சார்பாகவே நடைபோட்டிருக்கிறார் ரூட்லி. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்த இந்த நடைப்ப்யணத்திற்கு பீபை பிக் வோக் என்று வேறு பேயர் சூட்டி சோளனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட்டார்கள்.

புலம்பெயர் அமைப்புக்களால் ‘வெள்ளைத் தேசியத் தலைவராக்கப்பட்ட’ டேவிட் கமரனின் கட்சிக்கு மில்லியன்களை வாரி இறைத்து வரிகொடாமல் வயிறுவளர்த்த லைக்கா, தனது பணத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டி ராஜபக்ச குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வரும் மர்மத்தை செல்லச் சன்னிதி முருகன் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நாமல் ராஜபக்சவுடன் நடந்துவந்து அலுவலகத்தில் குந்திய ரூட்லிக்கு வழங்கப்பட்ட பதவி தான் தலைமை நிர்வாக இயக்குனர்.

சேவை செய்கிறோம் என்ற தலைப்பில் எலும்புத் துண்டுகளை அப்பாவி மக்களுக்கு எறிந்துவிட்டு முழு மாட்டையும் சுருட்டிக்கொள்ளும் பல்தேசிய நிறுவனங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு லைக்காவின் சேவையின் தேவையைப் பற்றியும் தெரிந்திருக்கும். மல்ட்டி நாஷனல் கோப்ரட் வியாபாரிகள் என்றால் இப்படித்தான் என்று அமைதியாக இருக்கலாம். இங்கு பிரச்சனை அதுவல்ல, சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளே நுளைந்து ராஜபக்ச கிரிமினல் குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போடக் கோருவதுதான் சிக்கல்.

இந்த சிதைப்பின் அடுத்த கட்டம்தான் கத்திக்குத்து. ஏற்கனவே அழிந்து போயிருக்கும் தமிழர் பண்பாட்டின் முன்னேறிய பகுதிகளைக் கூட அழிக்கும் தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை கையப்பிடித்து லைக்கா அழைத்து வருகிறது வியப்பிற்கு உரியதல்ல.

இதெல்லாம் என்னப்பா என்று கேட்டவர்களுக்கு லைக்காவின் சினிமா மாமாவான ஐங்கரன் நிறுவனத்தின் கருணாகரமூர்த்தி விளக்கம் வேறு அளித்துள்ளார்.லைக்கா குழுமம் இலங்கை விமானப்படை விமானத்தில் உலா வந்ததை மட்டும் ‘தெளிவுபடுத்தியுள்ளார்’. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் இலங்கை சென்று அவர் படித்த முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம் என்கிறார். அதுவும் படு பிஸியாகிவிட்டதால் இலங்கை அரச ஹெலிகொப்டரில் பிரயாணம் செய்தோம் என்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்கிறோம் என்பதெல்லாம் வந்தந்தி என்கிறார். அக்கு வேறு, கறள் பிடித்த ஆணி வேறாக புட்டுப்புட்டு வைத்த பின்னரும் கருணாகர மூர்த்தி சென்னையில் இவ்வாறு கூறியுள்ளார்.

கத்தி படம் வந்தால் கப்சிப் ஆகிவிடுங்கள் என்று பழ.நெடுமாறனையும், சீமானையும் கேட்பதற்காக இயக்குனர் முருகதாசும், ஐங்கரன் மாமாவும் மேலுள்ள தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளனர். ஈழத் தாய் இறுதியாக ஈன்ற செல்வங்களுடன் நடந்த பேச்சுக்களில் நீங்கள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை என லைக்காவிற்குக் கூறப்பட்டுள்ளதாக ஐங்கரன் கருணாகரமூர்த்தி செவ்வாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஹெலிக்கொப்டரில் போய் இறங்கியது மட்டுமா பிரச்சனை? லைக்கா இலங்கை அரசாங்கத்துடன் எப்படியெல்லாம் குத்தாட்டம் போடுகிறது என்று பல தடவை கூறப்பட்டுள்ளது. ரூட்லி விவகாரம் ‘பில் இன் த பிளாங்ஸ்’ மட்டும் தான். இனக்கொலையாளி ராஜபக்ச பிரித்தானிய எஜமானர்களால் கொமல் வெல்த் தலைவராக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு லைக்கா பணம் வழங்கியதிலிருந்து தானே பிரச்சனையே தொடங்கியது.
கத்தி வருகிறது என்று கருணாகரமூர்த்தி பேஸ் புக்கிற்கு வெளியால் ஆட்களைப் பிடித்து லைக் போட முயற்சிக்கிறார்.லைக்கிற்கு லைக், பேஸ்புக் கலாச்சாரப் பண்பு என்பதால் நெடுமாறனும் சீமானும் மறு-லைக் போட்டுவிட்டார்கள்.

ஈழப் போராட்டம் லைக்காவும் இன்னோரன்ன வியாபாரிகளும் வழங்கும் பணத்தில் வீறு நடை போடுகிறது. இப்ப எல்லாம் போராட்டங்களுக்கு சனம் வராதபடியால் பஸ் கொம்பனி பிஸ்னஸ் கூட நடத்த முடியாமல் காலம் கெட்டுப்போய்க் கிடக்கு. இந்த நேரத்தில் உந்தக் குறுக்கால போன புலம்பெயர் தவளையள் லைக்கா கத்தி என்று கத்துகின்றன என நமது தேசிய வியாபாரிகள் நொந்துகொள்வது சோளனின் காதுகளில் கேட்கிறது.

மேலும் தெரிந்துகொள்ள:

கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

லைக்காவின் கத்தியும் கோடரிகளும் :தவராஜா

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

லைக்கா விளம்பரங்களோடு இலங்கையில் நடைபெற்ற விளையாட்டிப் போட்டி

லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்

ஊடக மாபியா விஜய் தொலைக்காட்சியை லண்டனில் தொடங்கிவைத்த நடிகர் விக்ரம்

லைக்கா, லெபாரா, சங்கதி, ஈழமுரசு

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கோட்டாபய திட்டமிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:நடவடிக்கை இல்லை

கோட்டாபய திட்டமிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:நடவடிக்கை இல்லை

Comments 6

  1. mannan says:
    12 years ago

    மேற்குலகம்  பலநூற்றாண்டுகளிற்கு முன்பே  தெற்காசியாவையும் மர்றும்
    நாடுகளையும் சுரண்டி வாழ ஆரம்பித்தன.  இவர்கள்  பட்டினியாய் கிடந்தவர்களிர்கு  பாலும் பழமும்  கொண்டு வந்து  தரவில்லை.

    அகதிகளாய்  புலம்பெயர்நாடுகளில்  காலடியெடுத்து  வைத்து  தமது
    இனத்தின்  அழிவினை  ஆதாரமாக வைத்து   வளர்த்த  நிறுவனங்களி
    ற்கு   மேற்குலகம்  ஆதரவழித்து   வளர்ப்பதில்  வியப்பில்லை..

    துரோகிகள்  என்ற  பெயரே  ஆங்கிலேயரிற்கு   தமிழ் அரசர்களை காட்டிக்கொடுத்தவர்களாலேயே  பிரபல்மானது. அதே  ஆங்கிலேயருடன்
    தோள்கொடுப்பது  நிச்சயமாக  தமிழர்களின்    நலன் களிற்காக் இருக்காது.

    மேற்குலகம் முதலாளித்துவத்தில் தங்கியுள்ளது.  அதற்கு வறியநாடுகளையும்  மக்களையும்  ஏமாற்ர வேண்டும் அதற்கு
    கோடரிக்கம்புகளாக   திகழ்வோரே  இத்தகைய  சர்வதேச தமிழ்
    வர்த்த்கர்கள்.    ஒரு அரசினை பணிய  வைப்பதற்கு   பொருளாத்ரத்தடையும்
    ஒன்றாகும்.   தமிழரிற்கு  எதிராக  செயற்படும்  ஒரு  நாட்டுடனும்
    அதன்  தலைவர்கழுடனும்    வர்த்கத்தில்  ஓர்  தமிழர் அதுவும்
    சிங்களவர்  அடிக்கின்றார்கள்  என்று   வந்து  அகதி  அந்தஸ்தும்
    வசதிகழும்   பெற்ரவர்கள்   ஈடுபடுகின்றார்களென்றால்  அதன்
    அர்த்தம்     தமிழர்   சிங்கள்வர்  உறவு    பலமானதென்றே
    உலகம்  கருத்தும்.  

  2. lala says:
    12 years ago

    ##  இனத்தின்  அழிவினை  ஆதாரமாக வைத்து   வளர்த்த  நிறுவனங்களி
    ற்கு   மேற்குலகம்  ஆதரவழித்து   வளர்ப்பதில்  வியப்பில்லை ##

                       இனத்தின் அழிவை வைத்து எப்படி நிதிநிறுவனங்களை புலம்பெயர் தேசத்தில் உருவாக்கி வளர்க்க முடியும் ?

    அத்ற்கென்று  வங்கிகள் , அரசுகள்  கடனோ ,நிதி உதவியோ வழங்குகிறதா ?

    சொல்லவேயில்லை ?

      ##துரோகிகள்  என்ற  பெயரே  ஆங்கிலேயரிற்கு   தமிழ் அரசர்களை காட்டிக்கொடுத்தவர்களாலேயே  பிரபல்மானது.##

                  தங்களது வரலாற்றறிவு   இலங்கையில்   ஆங்கிலேயேரது ஆட்சிக்காலத்துடன்  ஆரம்பமாகியதென  பொருள் காணப்படும்

    ##.ஒரு அரசினை பணிய  வைப்பதற்கு   பொருளாத்ரத்தடையும்
    ஒன்றாகும்.##

                      இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை பற்றி கருத்துக்கள்  வரும்போது  அங்குள்ள  தமிழ் மக்களும்தான்  பதிக்கப்படுவார்களென   முதலைக்கண்ணீ ர்  வடித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது .

    ## தமிழரிற்கு  எதிராக  செயற்படும்  ஒரு  நாட்டுடனும்
    அதன்  தலைவர்கழுடனும்    வர்த்கத்தில்  ஓர்  தமிழர் அதுவும்
    சிங்களவர்  அடிக்கின்றார்கள்  என்று   வந்து  அகதி  அந்தஸ்தும்
    வசதிகழும்   பெற்ரவர்கள்   ஈடுபடுகின்றார்களென்றால்  அதன்
    அர்த்தம்.##

                    சிங்கள  அரசுகளும் அதன்நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புகளும் , படியினரும்தான் தமிழ் மக்களுக்கெதிரான  இனவெறி செயற்பாட்டை  கொண்டிருக்கிறார்களே தவிர  சாதாரண  சிங்கள மக்கள் அல்ல . அதனால் தமிழ் மக்களும் அவர்களை ப்போல் இன ரீதியாக சிந்திக்காது  சாதாரண சிங்கள மக்களுடன் இணைந்து  போராட  வேண்டுமென்பதுதானே நீங்களும் உங்களை போன்றவர்களும் இது வரை செப்பி  வந்த  தத்துவம் .
    இப்போது  தாங்களே  இதுவரை செப்பி  வந்ததற்கு மாறாக  கருத்து தெரிவித்து  வருகிறீர்கள் .

    ஆரம்பத்திலிருந்தே  தங்களது பின்னூட்டங்கலை  வாசித்து வருகிறேன் .
    தங்களது கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது . 
       நிச்சயமாக  னீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டதுமட்டுமல்ல , தமிழ் மக்களின் அரசியல் , பொருளாதார  , வர்த்தகநலன் களிற்கு  எதிரானது .
    அதனை நேரடியாக  செய்யாது , தமிழ் மக்களிற்காக பேசுவதுபோல் பசப்பி அழகாக விஷத்தை  விதைத்து  வருகிறீர்கள் ..

    • mannan says:
      12 years ago

      தமிழர்களின்  சர்வதேச  நிறுவங்களின்  ஆரம்பத்தையும் அதன்  வளர்ச்சிகளைப்பற்ரியும்  ஆராய்ந்தீர்களா?  அதோடு  சம்பந்தப்பட்டவர்களின்
      சுயசரிதையைப்பற்ரியும்    அவர்கள் யார் யார்ரோடெல்லாம்  சம்பந்தப்பட்ட
      பேர்வளிகள் என்பதைப்பற்ரியும் தெரியுமா?    கடவுள்  முகட்டைபிரிதுக்
      கொண்டு  கேட்ட  வரத்தை  கொடுப்பார் என்பார்களே  அதுபோல
      கருதுகின்றீர்களா?

      புலிகளின்  காலத்தில்  ஒன்றுகொன்று  முரண்பட்ட கருத்தை கேட்டு
      30 வருடமாக  பழ்க்கப்பட்டவ்ர்களிற்கு  அழிவினை  சந்தித்தவ்ர்களே
      என்  கருத்துக்களால்  அப்படி ஒரு அழிவு   வராது  பயப்பட வேண்டாம்.

      • lala says:
        12 years ago

        எல்லாவற்றுக்கும் புலிகளை  இழுத்து விட்டு  தப்பித்து கொள்ளாதீர்கள் .

             நீங்கள் காலத்துக்கு  காலம் முரண்பட்ட  கருத்துக்களை தெரிவித்து  வருகிறீர்களா ? இல்லையா ? 
        அதற்கு பதில் சொல்லுங்கள் .

         நீங்களும் உங்களைப்போன்றவர்களும்  தமிழ் மக்க்ளிடையே புகுத்தவரும்நச்சு கருத்துக்கள் , தமிழ் மக்களை கருவறுக்க துடிக்கும்  எதிரிக்கு சாதகமானவைதான் . அதனால்தான் ஒரே கொள்கை வழியில்நின்று  கருத்து சொல்ல  முடியவில்லை .
         
        தமிழ் முதலாளிகல் பற்றி பேசும்போது அவர்கள் சிங்களவர்களுடனும் , சிங்கள ஆட்சியாளர்களுடனுமிணைந்து  காசு பார்க்கிறார்கள் என  வாய் கிழிய பேசும்போது , சிங்கள வர்களுக்கெதிராகவும் , ஆட்சியாளர்களுக்கெதிராகவும் இன்வாதம் பேசி பொங்குவது .
        அதேபோல் சிங்கள  ஆட்சியாளக்ளுக்கெதிராக  போராட்டம்நடத்தினால் இந்த போராட்டத்தினால் என்ன  பயன் ? இதனால் அங்குள்ள  தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு உரிமை கிடைத்து விடுமா ? என இலங்கை அரசின் முகவராக தமிழ் மக்களை பார்த்து கேள்வி கேட்பதென நீங்கள்  போட்ட வேடங்கள் எத்தனை ?

        இதில் பறையடிக்கும் போராட்டம் மட்டும் விதி விலக்கு ,

        அதில் மட்டும்  இலங்கையில்  வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிமக்ளுக்கும் உரிமைகள்  கிடைத்து விடுமென கனவு கண்டீர்களோ என்னமோ ?
        அல்லது அவர்களும் உங்களைப்போன்ற  இலங்கை அரசின் உள்ளிருத்திகளோ என்னமோ ?

        உலகில் இருக்கும்  முதலாளிகளுக்கெல்லாம்  கடவுள் கூரையை பிர்த்துக்கொண்டா கொட்டுகிறார் ?
        பல்லிருக்கிறவன் பகோடா சாப்பிடுகிறான் .

        உங்களுக்கு ஏன் எரியுது ?

        • mannan says:
          12 years ago

          எங்களிற்கு ஏன் எரியுது  தமிழர்களின்  உருமைப்போராட்டம்
          பயங்கரவாதிகளின் கைகளில்  சிக்கி விட்டதே காரணம்.

          இந்தியாவினதும் குறிப்பாக தமிழக அரசியல் வாதிகளினதும்
          கறுப்புப்பணமுள்ள இடம்  சிவிற்சலாந்து. தமிழ்ர்கள்
          சிலரின் சர்வதேச  நிற்வனங்களின்  ஆணிவேர்கழும்
          சுவிற்சலாந்தில்தான் உள்ளன.

          அண்மையில் தி.மு.க விலிருந்து கனிமொழி,ராசா,மற்றும்
          மாறன் போன்றோரை  வெளியேற்றுமாறு  குரல்கள் எழ்ந்துள்ளன.
          காரணம்  கறுப்புப்பண விவகாரமும்  தொலைபேசி
          அலைகள் விற்பனை மோசடியுமாகும்.

          இலங்கைத்தமிழர்களின்  சர்வதேச  நிறுவனங்கழும்
          அதே  தென்னிந்திய பாணியிலேயே   தொலைபேசி கம்பனிகள்
          படத்தயாரிப்பு, தொலைக்காட்சிசேவைகளில்  ஈடுபட்டுள்ளனர்.

          இலங்கைத்தமிழர்களின் சர்வதேசநிறுவங்களே  உலகில்
          மோசடிகளற்ர   கஸ்டப்பட்டு  தமது  சொந்த உழைப்பில்
          வளர்ந்தவகைகளாக  காட்டப்ப்டுகின்றன.
          இவ்ர்களிற்கு எதிராகவோ  இவர்களின்  தந்திரங்களை
          வெளிகொண்டு வருவதற்கோ  யாருமில்லை.
          மேற்குலகமும்   இலங்கை  இந்திய அரசுகழும்
          இவர்களை  தங்கள்  சொல்லைக்கேட் கும்
          செல்லப்பிள்ளைகளாக இருப்பதால்  கட்டியணைத்து
          வைத்துள்ளார்கள்..

          இவர்களிற்கு எதிராக  நடவடிக்கை  எடுக்க தமிழர்களில்
          யாரும் இல்லாமலிருந்தாலும் பரவாயில்லை
          இவர்களின்  புகழைப்பாடி   பின்னர்  ஒருநாள்
          தலைகுனியாமல் இருந்தாலே  போதும்.

  3. தமிழ் மூடன் says:
    12 years ago

    கத்திக்  கத்திப்  பேசும்  ஈழத்  தமிழ் அபிமானி  சீமான்  இப்போது  லைகாவின்  கத்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் 
    விஜய் – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை. ஆனால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் இது பெருத்த அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

    லைக்கா — ராஜபக்ஸ  முதலீட்டில் அடுத்த  படத்தை  சீமான்  நெறிப்படுத்து  கின்றார்….. அதில்  நிச்சயம்  ஈழத்  தமிழரை  உசுப்பேற்றும்  வசனங்கள்  இருக்கும்…. நாமும்  அதைக்  கைதட்டி  ரசிக்கலாம் …
    ஈழப்  போராட்டத்தில்  இது சாகசமப்பா 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...