இன்று மாலை 2.30 மணியளவில் யாழ் நகரப் பகுதிகள் மற்றும் குடாநாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது.
யாழ் வீரசிங்கம் மண்டபம், மற்றும் யாழ’; பொதுநூலகம் போன்ற யாழ் நகரின் சில பகுதிகளிலும் காரைநகர் மற்றும் கடற்கரையோரங்களை அண்டிய பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது. இதே வேளை யாழ்ப்பாணத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, இன்று மாலை 6 மணிக்கு சுனாமி தாக்குதல் இடம் பெறலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.







