குஜராத் கலவர சம்பவத்தை விசாரித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி உள்பட 58 பேருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இடம்பெறவில்லை என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
முஸ்லீம்களுக்கு எதிராக இந்து பாசிஸ்டுக்கள் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலை குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் வருடம் நடைபெற்றது. இப்படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் என பல அப்பாவிகள் இந்து அடிப்படை வாதிகளால் கொல்லப்பட்டனர். இதில் குல்பர்காவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி, 69 பேர் படுகொலை சம்பவத்துக்கு முதல்வர் நரேந்திர மோடி உள்பட 58 பேர்தான் காரணம் என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது.
அந்தப் புலனாய்வுக் குழு விசாரணையை நடத்தி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கையை இப்போது நீதிமன்றம் ஆய்வு செய்தது. அதில் ஜகியா ஜாப்ரி குற்றம்சுமத்திய மோடி உள்பட 58 பேருக்கு எதிரான எவ்வித ஆதாரமும் இடம்பெறவில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்து அடிபடைவாதியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதை பாஜக வரவேற்கிறது என்றார்.
நேரடியான சாட்சியங்களும் வெளிப்படையான ஆதாரங்களும் இருந்த போதும் மோடியைத் தப்பவைத்திருப்பதிலிருந்து இந்து பாசிசம் அனைத்துத் துறைகளிலும் நிறுனமயப்பட்டிருப்பதை சட்டம் அறிவித்திருக்கிறது.
குஜராத் கலவர வழக்கில் 23 பேரை உயிருடன்எரித்துக் கொன்ற வழக்கில் 18 பேருக்குஆயுள்தண்டனை விதித்து மத்திய புலனாய்வுதுறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தின் ஒடே கிராமத்தில் 23 பேரைஉயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் 23 பேரைகுற்றவாளிகள் என சென்ற திங்கள் கிழமைநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று தண்டனை விவரங்கள்அறிவிக்கப்பட்டன.
இதில் குற்றவாளிகள் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து மத்திய புலனாய்வு துறை சிறப்புநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
உண்மையான குற்றவாளிகளில் பலர் -மோடி உட்பட -சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டதாக ஜனநாயக சக்திகள் மத்தியில் அபிப்பிராயம்நிலவுகிறது.








In this photo Narendra Modi looks like Bal Thackrey of Mumbhai.