Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மும்பையில் அரங்கேறிய சதி நாடகத்தின் பின்னணியில்…. : கலையரசன்

இனியொரு... by இனியொரு...
12/03/2008
in அரசியல்
0 0
12
Home அரசியல்

இந்தியாவின் 9/11 என்று வர்ணிக்கப்படும் மும்பை தாக்குதல்கள் நாடளாவிய அதிர்வலைகளை தோற்றுவித்த போதும், பல கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் மர்மமாக உள்ளன. இந்தப் பதில்கள் இனிமேலும் கிடைக்காமல் போகலாம். உணர்ச்சிவசப்பட்ட நாட்டுப்பற்று என்னும் பேரலை, எந்த சந்தேகத்தையும் தன்னுள் அடக்கி வைக்கலாம். இந்நேரத்தில், இந்திய அரசு மட்டுமல்ல, யாரும் ஆதாரங்களற்ற கருத்தமைவுகளை முன்வைப்பது சரியல்ல என்பதால், அதிகம் பேசப்படாத பொருள்கள் பற்றி மட்டுமே இங்கே அலசவிருக்கிறேன்.

நவம்பர் 26 ம்  திகதி மும்பை நகருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து பத்துக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதில் 200 பேரளவில் மரணமடைந்துள்ளனர். இவர்களது தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டேல்களில் பலர் பணையக்கைதிகளாக அகப்பட்டனர். உயர்வர்க்கத்தினர் கூடும் இடங்களை மட்டுமே குறிவைத்தமை,  மும்பையின் சர்வதேச வணிகத்தை குழப்புவதை நோக்காக கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக வந்துள்ளனர். ஆகவே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு. அதற்கு பழி தீர்க்க பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். இதுவே இந்திய அரசும், ஊடகங்களும் தெரிவித்த, அந்த மூன்று நாட்களுக்குள் நடந்த சம்பவங்களின் சுருக்கம்.

ஆனால் கள நிலைமை நாம் நினைப்பது போல அவ்வளவு இலகுவானது அல்ல.
 உடனுக்குடன் செய்தி அளிக்கக் கூடிய ஊடக வளர்ச்சி கண்ட இந்தக் காலத்தில், பல முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வருவது கூட தவிர்க்கவியலாது. தீவிரவாதிகள் பணயக்கைதிகளை வைத்திருந்த ஹோட்டேல்களை கைப்பற்றுவதில் பாதுகாப்புப் படையினர் காட்டிய குழப்பகரமான நடவடிக்கை போன்றே, செய்திகளை வழங்குவதிலும் ஒரே குழப்பம். ஊடகங்களை கேட்டால், தாம் அரச அதிகாரிகள் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்கிறோம் என்கின்றனர். அரச மட்ட தகவல்கள் பல உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை. “ஒரு அனாமதேய அதிகாரி இப்படி கூறினார்…” என்ற அளவில் தான் பல செய்திகளின் அடிப்படை அமைந்துள்ளது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ள குளறுபடி பற்றிய உதாரணம் ஒன்று:  “உயிரோடு பிடிபட்ட ஒரேயொரு தீவிரவாதி, தாங்கள் பத்து பேர் வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளான்.” ஆனால் பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, தீவிரவாதிகள் வந்ததாக கருதப்படும் மீன்பிடி வள்ளத்தில், 15 குளிர் மேலங்கிகளும், 15 பாவனைப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மும்பை தாக்குதலை மொத்தம் 15 பேர் நடத்தியிருக்கலாம் என்றும், அரசாங்கம் சொல்வது போல ஒன்பது பேர் கொல்லப்பட்டு, ஒருவர் பிடிபட்டால், மிகுதி ஐந்து பேர் தப்பியோடி இருக்க வேண்டும்.

செய்திகளை வழங்குவதில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டு பொதுவாக இந்தியாவில் மட்டும் தான் எடுபடுகின்றது. சர்வதேச நாடுகளை அதிகளவில் நம்பவைக்க முடியவில்லை. பாகிஸ்தான் அரசும், மக்களும் ஆரம்பத்தில் இருந்தே மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தம்மை இனம் காணாது கண்டித்து வந்தனர். ஆனால் இந்திய அரசின் குற்றச் சாட்டுகள் நேரடியாக பாகிஸ்தான் அரசை நோக்கி வீசப்பட்ட போது, பிரச்சினை வேறு மட்டத்திற்கு தாவியது. கடந்த காலங்களில் இந்தியாவில் எந்த தாக்குதல் நடந்தாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுவது வழமை. அதேபோல பாகிஸ்தானில் எந்த தாக்குதல் நடந்தாலும், இந்தியா மீது குற்றம் சாட்டப்படும்.  பொதுவாக நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை மையமாக கொண்டு இயங்குவதால், சமநிலைப்படுத்தப் பட்ட செய்திகள் வருவதில்லை.

இந்திய-பாகிஸ்தான் பனிப்போருக்கு இரு நாட்டு ஊடகங்களும், கலைஞர்களும் தமது பங்கை வழங்கி வருகின்றனர். இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தானியர்கள் வில்லன்களாக காட்டப்படுவது போல, பாகிஸ்தானிய திரைப்படங்களில் இந்தியர்கள் வில்லன்களாக காட்டப்படுகின்றனர்.    இதனால் இரு நாட்டு மக்களும் எந்த அளவிற்கு தேசியவெறி ஊட்டப்பட்டுள்ளனர் என்பதை நான் இங்கே கூறத்தேவையில்லை. மும்பை தாக்குதல், கடந்த 5 ஆண்டு காலமாக இரு நாடுகளுக்கிடையே நிலவிய சுமுகமான உறவை பாதித்து, மீண்டும் எதிரிகளாக்கியுள்ளது. இங்கே தான் தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கம் குறித்த சந்தேகம் எழுகின்றது. அணுவாயுத வல்லரசுகளான, இந்தியாவையும், பாகிஸ்தானையும் போருக்குள் இழுத்து விட்டு, ஆதாயமடைய நினைத்தவர்களின் செயலா இது?

முதலில் யார் செய்திருக்கலாம்? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். மும்பை தாக்குதலை நடாத்தியவர்கள் “டெக்கான் முஜாகிதீன்”  என்ற பெயரில் உரிமை கோரியுள்ளனர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர் தான் டெக்கான். மும்பையும் அந்தப் பிரதேசத்தினுள் அடங்குகின்றது. மேலும் இந்திய தொலைக்காட்சி சேவை ஒன்றை தொடர்பு கொண்ட தீவிரவாதி கூறிய கருத்துகள் இவை: ” காஷ்மீரில் எத்தனை ஆயிரம் மக்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று உங்களுக்கு தெரியுமா?” பேசியவர் காஷ்மீர் உச்சரிப்புடன் உருது பேசியதால், ஆயுதபாணிகளுக்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. உருது பேசுவோர் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.

அதே நேரம் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும், உயிரோடு பிடிக்கப்பட்ட இருவருமாக, மொத்தம் நான்கு பேர் (பாகிஸ்தானிய)பிரிட்டிஷ் பிரசைகள் என்று அறிவிக்கப்பட்டது.  உடனே பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. பின்னர் இந்திய மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் அந்த தகவல் தவறானது என்று சொல்லி, அப்படியே அமுக்கி விட்டன.
 ஒபரோய் ஹோட்டலில் புகுந்த ஆயுததாரிகள் பிரிட்டிஷ், அமெரிக்க கடவுச் சீட்டு உள்ளவர்களை தேடியதாக பி.பி.சி. நிருபர் திரும்ப திரும்ப கூறினார். அதனை வைத்தே இது அல் கைதாவின் வேலை என்று அடித்துச் சொன்னார்கள். அப்படியா? எமக்குத் தெரிந்து இது தான் முதல் தடவையாக, அல் கைதா தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தாமல், அமெரிக்க பாடசாலைகளில் நடப்பதைப் போல கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். மேலும் ஒருவர் கைது செய்யப்படும் அளவிற்கு, தீவிரவாதிகள் தம்மை தாமே காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த செயல்முறை அல் கைதாவின் வழக்கமான பாணியான “எதிரியிடம் அகப்படாமல் தற்கொலை செய்யும்” கோட்பாட்டுக்கு மாறாக நடந்துள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள்(இந்துக்கள், முஸ்லீம்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு, அகில இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான “சிமி”, அரச எதிர்ப்பு பிரச்சாரத்தை காரணமாக காட்டி தடை செய்யப்பட்டது. அப்போது தலைமறைவான சிமி உறுப்பினர்கள், தீவிரவாத வன்முறையை நாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதத்தின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் சிமி, கடந்த காலத்தில் நடந்த சிறு சிறு குண்டுவெடிப்புகளை நடத்தி இருக்கும் என்றால் நம்பலாம். தற்போது மும்பையில் நடைபெற்ற தாக்குதல், நன்கு திட்டமிட்டு, சிறந்த தயாரிப்புடன், பெருமளவு பணச் செலவில், வேண்டிய அளவு ஆயுதங்களுடன் நடந்துள்ளது. அதனால் இதிலே வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டிருக்கலாம் என பலரும் நம்புகின்றனர்.

இந்திய அரசைப் பொறுத்த வரை இது பாகிஸ்தானை தளமாக கொண்ட “லக்ஸர்-இ-தொய்பா” வின் வேலை. அதற்கு பாகிஸ்தானிய அரசு உடந்தை. வேறு கருத்திற்கு இடமில்லை. சரி, அப்படியே இருந்தாலும், இதிலே பாகிஸ்தான் அரசை சம்பந்தப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் குறைவு. லக்ஸர்-இ-தொய்பா ஒரு காஷ்மீர் சார்ந்த இயக்கம் என்ற போதிலும், ஏற்கனவே அது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.  சில பாகிஸ்தானிய ISI அதிகாரிகளின் ஆதரவுடன், அல் கைதாவும், தாலிபானும் அந்த இயக்கத்துடன் கூட்டு நடவடிக்கையில் இறங்க சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை.   லக்சர்-இ-தொய்பா ஏற்கனவே காஷ்மீர் விடுதலை என்ற கோட்பாட்டை கடந்து, சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் ஐக்கியமானதை, அதன் அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அவ்வாறு ஒரு கூட்டு நடவடிக்கை இந்த மும்பை தாக்குதலை நடத்தி இருந்தால், அதாவது லக்சர்-இ-தொய்பா, தாலிபான், அல் கைதா ஆகியன சம்பந்தப்பட்டிருந்தால், இந்தியாவையும், பாகிஸ்தானையும் போர் முனைப்புக்குள் தள்ளிவிடும் நோக்கம் இருந்திருக்கும். அவர்களது நோக்கம் நிறைவேறும் காலம் கனிந்து வருகின்றது. இந்தியா ஏற்கனவே தேசிய வெறியை தூண்டி விட்டு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என மக்களை அணிதிரட்டி வருகின்றது. இதனால் இந்தியாவுடனான தனது எல்லையை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிய பாகிஸ்தான், அங்கே தனது படைகளை குவித்து வருகின்றது. நிலைமை இன்னும் மோசமாகி போர் தவிர்க்கவியலாது என்று வரும் வேளை, வட-மேற்கு மாகாணங்களில் தாலிபானை எதிர்த்து போராடும் படைகளை விலத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
 ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” இப்போது பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணங்கள் வரை பரவியுள்ளது. பாகிஸ்தானின் இறைமை காரணமாக, அமெரிக்க தலையீட்டை தவிர்ப்பதற்காக ஒரு லட்சம் பாகிஸ்தான் இராணுவம் அந்த மாகாணங்களில் நிலை கொண்டுள்ளது.

அல் கைதா, தாலிபான் இயக்கங்களுக்கு எதிராக கடுமையான போரை நடத்தி வரும் பாகிஸ்தான் இராணுவம், ஒரு வீரர் மிச்சமின்றி வாபஸ் வாங்கப்படும் என்று, பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது. அத்தகைய நிலைமை அல் கைதாவிற்கும், தாலிபானுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மீதான தாலிபான் தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில் போர் மூளுவதை அமெரிக்கா தலையிட்டு தடுக்கப் பார்க்கும். போர் மூண்டால் அமெரிக்கா தனது பக்கம் நிற்க வேண்டுமென்று இந்தியாவும், பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. இதற்கிடையே பாகிஸ்தான் சீனாவின் உதவியையும் கோரியுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத வேறொரு சக்தி நடத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 200 பேரளவில் கொல்லப்பட்ட இந்த தாக்குதலில், ஒரு முக்கியமான நபரும் அடங்குகின்றார். மும்பை மத்திய ரயில் நிலையத்தில் நுழைந்த ஆயுதபாணி “கண்மூடித்தனமாக” சுட்டதில், சாதாரண பொது மக்கள் மட்டும் பலியாகவில்லை.  மும்பை நகரின் “பயங்கரவாத தடுப்பு பிரிவின்” உயர் போலிஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேயும், அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு அந்த அதிகாரியின் நடமாட்டம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததா? அல்லது ஒரு தற்செயல் நிகழ்ச்சியா? ஹேமந்த் கர்கரே இறப்பதற்கு முதல் நாள் தான், தொலைபேசி ஊடாக அவருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அவர் தனது நெருங்கிய நண்பர் இளைப்பாறிய கேணல் ராகுல் கோவர்த்தனை தொடர்பு கொண்டிருக்கிறார். முக்கிய தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். “டைம்ஸ் ஒப் இந்தியா” நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை கூற கோவர்த்தன் மறுத்து விட்டார். ஆகவே ஹேமந்த் கொலை ஒரு தற்செயல் நிகழ்ச்சியா?

யார் இந்த ஹேமந்த்? அவரைக் கொல்வதால் யாருக்கு லாபம் அதிகம்? சில வருடங்களுக்கு முன்னர் மும்பை நகரிலிருந்து சிறு தொலைவில் உள்ள மலேகான் என்ற சிறு நகரில் ஒரு பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பில் சில முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். போலிசும், ஊடகங்களும் வழக்கம் போல இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வேலை என்று சொல்லி விட்டன. ஆனால் ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் துப்புத்துலக்கி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

பி.ஜெ.பி.,பஜ்ரங்தள் போன்ற இந்து மதவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு இளம் பெண் சாமியார், ஒரு பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரி உட்பட பல இந்து பயங்கரவாதிகளின் வேலை இது என்பது தெரிய வந்தது. “இந்து பயங்கரவாதிகள்” கைது செய்யப்பட்ட செய்தி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது.  நேர்மையான அதிகாரியான ஹேமந்தின் விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என ஊகிக்கப்பட்டது. விசாரணையை முடக்கவும், கைதிகளை விடுவிக்கவும் பி.ஜெ.பி. எடுத்த முயற்சிகள் எதுவும் அதிக பலனளிக்கவில்லை.

இதுவரை எந்த தாக்குதல்களும் ஏற்படுத்தாத விளைவுகளை மும்பை தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. என்றுமில்லாதவாறு இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் உட்பட பல பெரிய தலைகள் இராஜினாமா செய்துள்ளன. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தாக்குதலுக்கு ஒரு வெளிநாட்டு சக்தியை(பாகிஸ்தான்) சுட்டிக் காட்டியதன் மூலம், பிரச்சினையின் மூலவேர்கள் உள்நாட்டில் இல்லை என்று சொல்ல வருகின்றது, அல்லது புறக்கணிக்கின்றது. அப்படியானால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க ஆயத்தமாக இருக்கிறதா? அப்படி செய்யாவிட்டால் அல்லது இது போன்று இன்னொரு தாக்குதல் நடக்குமாக இருந்தால், காங்கிரஸ் ஆட்சி நிலைத்து நிற்க முடியாது. விரைவில் வரப்போகும் அடுத்த பொதுத் தேர்தலில் இந்து-தேசியவாத பி.ஜெ.பி. தேர்ந்தெடுக்கப்படலாம். அந்த அரசு பாகிஸ்தானுடன் மட்டுமல்ல சீனாவுடன் கூட போருக்கு செல்ல தயங்காது. எது எப்படி இருப்பினும் எதிர்கால இந்தியா வலது-தீவிரவாத அரசியலை முன்னெடுக்க தயங்காது. இதனை ஒரு அமைதியான சதிப்புரட்சி என்றும் கூறலாம். 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்தியாவின் தேவைக்காக இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துகின்றது. புலிகளை இந்தியா உருவாக்கியது:ஜே.வி.பி.

Comments 12

  1. shankaran says:
    17 years ago

    ஆழமான ஆய்வு.நிறைய சிந்திக்கத் தோன்றுகிறது.
    இந்தக் காவிகள் எதையும் செய்யத் துணிந்த பாதகர்கள்!

  2. sajakan says:
    17 years ago

    அரச உளவுப் பாடைகளைத் தவிர இந்தியாவின் நலனைக் கருத்தில் கொள்ளும் ஏனையவர்களுக்கு இது இந்து பயங்கரவாதிகளின் சதி நாடகம் என புரிந்திருக்கிறது.
    இந்து பயங்கரவாதம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் சமாதானத்திற்கும் எதிரானது. அந்நிய சக்திகளுடன் உறவாடும் இந்தக் கும்பல் அம்பலப்படுத்தப்பட வேண்டும்!

  3. chandran.raja says:
    17 years ago

    இந்து முஸ்லீம் மதகலவரமானாலும் பாகிஸ்கிஸ்தான் யுத்தமாகினும்
    ஏற்படும் பட்சத்தில் என்ன விலை கொடுத்துத்தாகிலும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
    ஒவ்வொரு நாட்டிலும் பயங்கரவாதசக்திகள் விதிவிலக்கில்லாமல் இருக்கிறார்கள்.
    பயங்கரவாதசக்கிகளை காரணம் காட்டி ஒருநாட்டினுடன் போர்தொடுப்பது மக்களைளையோ
    நாட்டையோ காப்பாற்ற போவதாக சொல்லுவார்களே யானால் அது அப்பட்டமான பொய்
    என்பதை முழுமையான சுயநலநோக்கு கொண்டவை என்பதை எல்லாமட்டங்களிலும்
    அம்பலப்படுத்தியாக வேண்டும்.
    காலம்கடந்தாவது இதற்கானசாத்தியக் கூறுகளே தென்படுகின்றன. கொண்டலீசரய்சின் இந்திய
    வருகையும் எரிகிறநெருப்பில் எண்ணை ஊற்றவே முற்படுவார்கள்.

  4. mithila says:
    17 years ago

    சந்திரன் ராஜா..
    இப்படியே விட்டால் இனி கொம்யூனிஸப் பயங்கர வாதிகள் எஙிற லெவலுக்கு வருவியள்.
    இனப் பிரச்சனை இருந்தால் அதன் வேர்களைக் களைவதைப் பற்றிச் சிந்தியுங்கள்.
    நீங்கள் சொல்கிற சமாதான சகவாழ்வின் பெயரால் தான் மக்கள் கொசுக்கள் போலக் கொல்லப் படுகிறார்கள்.
    நீங்கள் அதற்குக் கொடுக்கும் பட்டம் தான் சமாதானம் ஜனநாயகம்.
    கலையரசன் ஒரு பிரச்சனையின் வேர்களை விசாரிக்க முற்படுகிறார்.
    நீங்களோ கேவலம், இங்கேயும்….
    ஆட்டைப்பற்றிப் பேசச் சொன்னால் ஆட்டைப்பிடித்து மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றியல்லவா பேசுகிறீர்கள்?

  5. chandran.raja says:
    17 years ago

    இனவெறியர்களினதும் மதவெறியர்களினதும் போக்கிடம்”பயங்கரவாதம்.”

  6. Thevagi says:
    17 years ago

    இந்தியாவைத் துடைத்து சுத்தப்படுத்தி தனி இந்துத்துவ நாடாக்கினால் மட்டும் கொலைகள் குண்டுவெடிப்புக்கள் தீரப்போவதில்லை.

    பிரச்சனைகளின் வேர் வியாபாரமாக இருக்கும் வரை அதிகாரவர்க்கம் ஏதோ ஒரு வடிவத்தில் மற்றய வக்கத்தை அழித்துக்கொண்டே இருக்கும்.

    பீடாதிபதியிலிருந்து புசாரிகள் வரை ஆசாடபூதிகள். மதங்கள் யாரிடத்திலும் நம்பிக்கையுடன் வளரமுடியாது அப்படி வளர்வதென்று யாரைக் காட்டினாலும் அவன் முட்டாளாக மட்டுமே இருக்க முடியும்.

    இதற்கிணங்க காவிப் பெண்சாமி கூடக் பெரும் பணம் வழங்கும் பாரிய உலக முதலாளி அமொpக்காவுக்கு சோரம் போகும் காவிக் கட்டில் தான்.

    இடுத்து ஒரு இஸ்லாமிய நாட்டின் அழிவையும். இந்திய நாட்டின் பொருளாதார உயர்வையும் குறிபார்த்து அடிக்கும் நாடகத்துக்கு ஒப்பனை முடிந்துவிட்டது இனி அரங்கேற்றம் தான்.

    கொண்டலிஸா ராய்ஸ் சொல்கிறார் “பாகிஸ்தான் மீதான சந்தேகத்துக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்”

    ஓபாமா சொல்கிறார் “பாகிஸ்தான் காரணமாக இருந்தால் அந்த நாடு தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் அதற்கான ஒத்துழைப்பு அமொpக்கா வழங்கும்

    கூத்துக்கு மேடை போட்டாச்சு இனியென்ன ஆட்டம் தான். ஆயிரமாயிரம் உயிரும் உடமையும் அழிவு நெருப்பில்

    மிதிலா!
    சமாதான சகவாழ்வு மனிதர்களைக் கொல்வதில்லை/ கம்யூனிசம் இதுவரை பயங்கரவாதமானதில்லை.

    கொஞ்சமேனும் அறிவுத் து}றலாவது இருந்தால் . . . . . . ? பின்நூட்டத்தின் பிதா மகன் என்ற நினைப்போ?

  7. pro-communist says:
    17 years ago

    தேவகி, கம்யூனிசம் இதுவரை பயங்கரவாதமானதில்லை..
    .. ரஸ்யாவின் தயாரிப்பு கிளாஸ்ரர் குண்டு தான் வன்னியில் சிறிலங்கா பயங்கரவாதத்துக்கு குண்டுகளை சப்ளை பண்ணியிருக்கு…. ஏன் சீனாவும் அதே பயங்கர அழிவாயுதங்களை பயங்கரவாதம் புரிபவர்களுக்கு கொடுத்டிருக்கு. கம்யூனிசம் எல்லாம் வெறும் புத்தகத்தில் தான் எழுதப்பட்டிருக்கு. மற்றப்படி எல்லாம் புத்தகத்தில் தான் உபதேசம் கோட்பாடு எல்லாம் ஊருக்கு இல்லை. அண்மையில் ரஸ்யா யோர்ஜியாவில்நடந்து கொண்டதும், கொசோவாவில் நடந்துகொண்டதும் எந்தவகையானது ?

  8. கே. செல்வப்பெருமாள் says:
    17 years ago

    ஹேமந்த் கார்க்கரேவுக்கு வீரவணக்கம்!
    தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், ஓபராய் போன்றவற்றில் பிணைய கைதிகளாக வைத்திருந்த அப்பாவி மக்களையும், வெளிநாட்டு பயணிகளையும் மீட்பதற்காக 60 மணி நேர ஓய்வு ஒலிச்சலில்லாத கடுமையான போராட்டத்திற்கு பின் நமது வீரர்களின் அளப்பரிய உயிர்களை தியாகம் செய்து அந்த பயங்கரவாத மிருகங்களை முறியடித்து மீட்டுள்ளனர்.

    இந்த பணியில் ஈடுபட்ட நமது தேசிய பாதுகாப்பு படையினரின் சாதனையும், தியாகமும் போற்றப்பட வேண்டியது. மெச்சத் தகுந்தது. இந்த தேசம் காக்கும் பணியில் முதல் பலியானவர் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே! இவரது இழப்பு மகாராஷ்டிரத்திற்கு மட்டுமின்றி தேசத்திற்கே பெரும் இழப்பாகும்.

    இந்த ஒப்பற்ற மாவீரரின் தியாகத்திற்கு தலை வணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.

    குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் பல வருடங்களாக துப்பு துலங்காத நிலையில் ஹேமந்த் கார்க்கரே பொறுப்பேற்ற பின்னர் அதன் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, அந்த சம்பவத்தில் காவியுடை பயங்கரவாதிகளின் இருண்ட முகங்கள் – காவியுடையால் மறைக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தினார். இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    பொதுவாக இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் இசுலாமிய பயங்கரவாத அமைப்பின் கையிருப்பதாகவும், இதில் ஐ.எஸ்.ஐ. பங்கு இருப்பதாகவும் உடனடியாக கதை கட்டி விடுவார்கள். நாடும் இதை நம்பித்தான் வந்தது. இப்படியான பயங்கரவாத நடவடிக்கையின் வாயிலாக குறிப்பாக இசுலாமிய சமீபத்தின் மீதே ஒரு பயங்கரவாத முத்திரையை திணிப்பதற்கு இந்துத்துவவாதிகளும், இந்துத்துவ ஆதரவு மீடியாக்கவும் கடுமையான முயற்சிகளை – கோயபல்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.

    இந்த சூழ்நிலையில்தான் முதல் முறையாக சாத்வி பிரக்யா என்ற இந்து துறவி இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தியதோடு, சங்பரிவாரம் நடத்தும் இராணுவ பள்ளியின் மூலமாகத்தான் இதுபோனற் சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டது என்பதையும் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே! அது மட்டுமா? இன்றைக்கு தேசத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக தமது விலை மதிக்க முடியாத உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களை நாடே புகழ்ந்து கொண்டிருக்கையில் – அத்தகைய மதிப்புமிக்க இராணுவத்திற்குள்ளேயே இந்துத்துவ ஓநாய்கள் இராணுவத்தின் உயர்மட்டம் வரைச் சென்று நமது தேசத்திற்கு எதிராகவே, நமது இந்திய மக்களுக்கு எதிராகவே பயங்கரவாத வன்முறைச் செயல்களை நிகழ்த்தியதை நினைக்கும் போது, இந்த சங்வரிவார பயங்கரவாதிகளுக்கு நாட்டையும், நாட்டு மக்களையும் விட அவர்களது வெறி பிடித்த பாசிச தத்துவம் எந்த அளவிற்கு அவர்களது மூளையை ஆட்டு வித்துள்ளது – ஆக்கிரமித்துள்ளது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

    பாசிச சிந்தனை எப்படி செயல்படும் என்பதற்கு அடையாம்தான் – முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, ‘இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்’ என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, ‘ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா’ என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.

    இந்த வழக்கில் இன்னும் தோண்டத் தோண்ட பல புதைகள் கிடைக்கவுள்ளன. இந்த நிலையில்தான் இந்த வழக்கின் கதாநாயகனாக செயல்பட்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தேசத்தின் முன் மேற்கண்ட பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே!

    ஆனால், மேற்கண்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டனர் அத்வானியும் – ராஜ்நாத் சிங்கும். அதாவது மேற்கண்ட நேர்மையான அதிகாரிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு பொய்களை வாரியிறைத்தனர். அவதூறுகளை அள்ளி வீசினர். சாத்வீ துன்புறுத்தப்படுவதாக கூக்குரல்களை எழுப்பினர். இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.

    பயங்கரவாதம் என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதல்ல அது உள்ளிருந்தும் வரும் என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திச் சென்றிருக்கும் ஹேமந்த் கார்க்கரே, தனது இறுதி சில மணி நேரங்களில் தனது நன்பரும் – துறைச் சார்ந்தவருமான கோவர்த்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மும்பையில் தேசத்தையே உலுக்கிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடச் செல்லும் நேரத்தில் கூட, தனக்கு என்ன நேர்ந்தாலும் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மிகத் தெளிவாக தனது இறுதி சில மணி நேரத்தில் கூட கடமையாற்றியிருக்கும் இந்த மகத்தான வீரரின் வீரம் போற்றப்பட வேண்டியது. இது தேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.

    அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஹேமந்த் கார்க்கரே மறைந்து விட்டார் என்ற உடன் குஜராத் முதல்வர் மோடி அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி தருவதாக கூறினார். ஆனால் அந்த குடும்பத்தினர் மோடியின் நிவாரணத்தை வாங்க மறுத்து விட்டனர்.

    மோடி யார்? என்பது உலகிற்கே தெரியும் போது? அந்த தாய்குத் தெரியாமலே போகும்! எனது கணவர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அதற்கு மோடியின் ஒரு கோடி ஈடேறுமா? இந்த தியாகம் ஈடு இணையற்ற தியாகம் என்றே அவர் நினைத்திருக்கலாம்!

    அது மட்டுமா? தேசமே இந்த சோகத்தை எப்படி எதிர் கொள்ளுவது என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அத்வானியும் – ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளதன் மூலம் இவர்களது அரசியல் சதிராட்டம் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று பொறுப்புள்ள எதிர் கட்சி வெளியில்தான் பேசுவோம்! ஆனால் உள்ளரங்கில் ஜனநாயக ரீதியாக விவாதிக்கும் கூட்டத்தில் விவாதிக்க மாட்டோம் என்று சண்டித்தனம் செய்வதுதான் தேச பக்தியா? என்ற கேள்வி எழுகிறது.

    அத்வானியும் – ராஜ்நாத் சிங்கும் இவ்வாறு கலந்து கொள்ளாதது யாரை காப்பாற்றுவதற்காக? என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழுகிறது.

    மொத்தத்தில் காவி பயங்கரவாதமும் இந்தியாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை தனது நியாயமான புலன் விசாரணை மூலம் அம்பலப்படுத்தி – மும்பை பயங்கரவாதிகளையும் எதிர்த்து தனது உயிரை தியாகம் செய்துள்ள ஹேமந்த் கார்க்கரேவுக்கு எனது வீர வணக்கங்கள்.

  9. Loganathan says:
    17 years ago

    கம்யூனிசம்!
    இது ஒன்றும் சூனியமோ மந்திரக்கோலோ இல்லை.
    மனித உழைப்பும் /உலகியல் வளங்கள் /வழங்கல்கள் அனைத்தும் மக்களுக்கு சமமாகக் கிடைக்கவேண்டும் என்ற ஒப்புயர்வற்ற புனித நோக்கு!

    இந்த இலகுவான விபரத்தை விளங்கிக்கொள்ளாதவர்கள்/ இந்தக் கொள்கைக்கு நாம் எதிர் என்பவர்கள்? . . . . . . .இவர்களைச் சுட்டிச் சொல்ல புதிய வார்த்தை தேடியும் கிடைக்கவில்லை.

    இதை எதிர்க்கவேண்டிய தேவை யாருக்கெல்லாம் ஏற்படும் ? பிள்ளைகளே தொpந்தவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டால் முதலாவது வகுப்பிலிருந்தே பதில் கிடைக்கும்.

    பதிலெதுவாக இருக்கும்?

    சொந்தத்தில் சொத்து சேர்ப்பவனே எதிரி!

    இந்த மானிடத் துரோகம் பலமிழக்கும் போதெல்லாம் துணை சேர்க்கிறது.

    தனிமுதலாளி/ நகரமுதலாளிகள்/ நாட்டுமுதலாளிகள்/ கூட்டுநாட்டு முதலாளிகள்/ உலக முதலாளிகள்.

    இதற்கு மேல் எங்கே துணை தேடப் போகிறார்கள்? பலம் தேடும் உடைவின் விளிம்பில் நிற்கிறார்கள்!
    தாங்கள் தோற்கும் போதெல்லாம் வெடிமருந்துப் பொதிகளைத் துணைக்கழைப்பார்கள்!
    இதோடு அந்தந்த நாடுகளிலுள்ள அரசியல் ஆட்டுக் கடாக்களுக்கு கொம்பு சீவிவிட்டு வேடிக்கை கழியாட்டு நடத்துவார்கள்!

    அவ்வப் போது அப்பாவி மக்கள் சாரை சாரை யாகச் சாவார்கள்/ பொதுச் சொத்துள் சேதமுறும்

    இருந்த போதும் வரலாற்று மனிதவளர்ச்சி என்ற இயந்திரத்துக்கு மட்டும் “றிவேஸ் கியர்” கிடையாது

    இந்த இயந்திரம் வரலாற்றில் சந்தித்த தத்துவ வாதிகளாக மாக்ஸ்/ எஞ்சல்ஸ . . . . . .!
    நடைமுறை வாதிகளாக லெனின்/ ஸ்டாலின்/ மாஓசேதுங் . . . . . .!

    நடைமுறைத் தரவுகளாக உலகில் முதல் முதல் பாட்டாளி மக்கள் அதிகாரம்/ பலம் இதை நிறுவியது சோவியத் ரஷ்யா! இதற்கான தியாகமும் மக்கள் மதிப்பும் லெனின்/ உடைக்க முனைந்தவர்களை உடைத்து காத்தவன் ஸ்டாலின்.

    சீனதேசம் மக்கள் சக்தி மிக்க நாடு! மாஓ வின் வழிநடத்தல் விடுதலை வேள்வி கடந்து வந்த காலடிகளையெல்லாம் கழுவிப் பார்த்தது. கலாச்சாரத்தையும் உள்வாங்கி கடினமான இரு தரப்பு யுத்தத்தை முகம் கொடுத்து இரண்டாவது தடவையாக பாட்டாளிகளின் உரிமையை அரசுக்கட்டிலிலேத்தியது.

    இந்த இரண்டு தேசங்களும் இறைவனால் விடுவிக்கப்பட்டவை. இவை புனிமானவவை. இவற்றை நாம் தீண்டவே கூடாது என்று யாருமே ஒதுங்கிப் போனது கிடையாது.

    உலகில் தனித்த பாட்டாளி வர்க்க நாடாக கொடியுயர்த்திய ரஷ்ய நாட்டை உடைப்பதில் துரோகி ரொட்கி யிலிருந்து இன்றுவரை வலையில் விழுந்தவரும் வழிமாறிப போனவர்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும் வரை உண்மை மதிக்கப் படாத குற்றச் சாட்டுக்கள் தொடரும் தொடா;ந்த வண்ணமிருக்கும்

    இன்றிருக்கும் உலக மக்கள் எண்ணிக்கையில் கம்யூனிசத்திற்கான ஆதரவு 78 விழுக்காட்டைத் தாண்டித்தான் நிற்கிறது. விலகி நிற்கும் ஜெந்துக்கள் சிந்திக்கவும்.

    இலக்கொன்றை அடையுமட்டும் இடது காலும்/ வலது காலும் மாறும் இதை வைத்துக் கொண்டு கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று காட்டுக் கூச்சல் போடாதீர்கள்!

    துருவப் பிரதேசங்களில் மக்கள் நடமாடாத பகுதிகளிலெல்லாம் தோல்வி பற்றித் தொண்டை கிழியக் கத்திய துர்க்கிருதிகள் உன்றை மட்டும் நினைவு படுத்துங்கள்!

    ரஸ்யா/ சீனா வை இதைவிடவும் குழப்பலாம் இந்த அதிகாpத்த குழப்பும்பலத்திலிருந்து இந்த அளவு தப்பியிருப்பதும் அந்த நாட்ட மக்களிடம் மீண்டும் மீண்டும் க்யூனிச நம்பிக்கை பசும் துளிர் பரப்புவதும் உங்களின் ஆநேகர் அறிந்திருந்தும் மறுபக்கம் பார்க்கிறீர்கள்.

    பார்வையை நேராக்கி பயனொடு பேசுங்கள்/ எழுதுங்கள்

    கம்யூனிசம் தத்துவமல்ல உலக நியதி!

    மன்னிக்கவும்
    இந்த பின்னூட்டம் இக்கட்டுரை தொடர்பில் பொருந்தாத போதும் மிதிலா/ கம்யூனிச எதிர் என்போர் இவர்களுக்காக எழுத முனைந்தது.

    என் கருத்துக்குக்களுக்கு யாராவது விமர்சனம் வைத்தால் ஒவ்வொன்றும் பாரிய ஊக்கப் பொதியாகவே பார்ப்பேன்.

  10. Suthan says:
    17 years ago

    காலில் சங்கிலி பூட்டி நிலத்தை உழவைத்து மந்தைகளாகவும் சொந்த உடமைகளாகவும் உறிஞ்சிய பிறகு பிரபுக்கள் இறந்ததும் அவர்களையும் அவனுக்கருகே உயிரோடு புதைக்கும் நிலையிலிருந்து இன்று வரையான மனிதவிடுதலை மனித உரிமைகள் மனிதவர்க்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தில் வென்றெடுக்கப்பட்டவை

    இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிகள் கூட்டம் இன்னும் வெல்வதற்கு அதிகம் வைத்திருக்கிறது அந்த அந்த இறுதி வெற்றிவரை எப்படி உலகம் போகும் என விளங்காத அவசரக் குடுக்கைகளுக்கும்.

    விரோதிகளும் முத்திரை குத்திக்கொள்வதால் கம்யூனிசம் கெட்ட தத்துவமாகமுடியுமா?

    இப்படி சில தகவல்களையும் கேட்டு வைத்திருக்கலாம்!

    இதை அறிவுரை என்றெடுக்காமல் ஆதரவான ஆலோசனையாக எடுக்கவும் தோழர் லோகநாதன்

  11. rasakumaran says:
    17 years ago

    ஷேக்ஸ்பியர் இந்த நாளில் பிறந்து செத்துப் போனார். புத்தர் தனது தத்துவத்தை எழுதிவைத்துவிட்டு இந்தத் திகதியில் இறந்து போனார். பிரபாகரனும் மகிந்தவும் படைகளுடன் சண்டை போட்டுக் கொண்டார்கள். இப்படி எழுதப்பட்ட வரலாறு மாறிப் போய் இன்னொரு வகையிலும் வரலாறு எழுதப்படலாம் என்று முதலில் மார்க்சியம் தான் சொல்லித் தந்தது. புத்தரின் காலத்தில் சமூகம் எப்படி அமைந்தது, போர்களை கண்டு விரக்த்தியுற்ற புத்தர் அவற்றிற்கு எதிராக தனது தத்துவங்களை வளர்த்தெடுத்தார். .. போருக்கான காரணம் மன்னர்களின் மண்ணாசை.நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதே அவர்களின் குறியாக அமைந்திருந்தது. அதையொட்டியே இந்து தத்துவம் கூட உருவானது. மன்னர்களின் நிலம் மீதான ஆசை என்பது நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பின் ஆரம்பம் என்று .. தர்க்கரீதியாக ஆராய முற்படுகிறோம். இதுதான் மார்க்சியம் எமக்குக் கற்பித்த ஆய்வு முறை.
    இப்போதோ பணத்தை, மூலதந்த்தைச் சொந்தமாக வைத்திருப்பவன் ஆட்சி செய்யும் காலகட்டம். சிறு பகுதியான மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் முதலாளிகள் உலகம் முழுவதையும் கொலைக்களமாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டம்.
    மூன்றாமுலக நாடுகளில் மலிந்த உழைப்புச் சக்தியை வாங்கி கொழுத்த பணத்தைச் சம்பாதித்த ஈவிரக்கமற்ற முதலாளிகள் முதலாமுலக நாட்டு வங்களூடாக நடாத்திய கீழ்த்தரமான சூதாட்டம் தோற்றுப் போக செய்வதறியாது திகைத்துநிற்கின்றனர்.
    இவ்வளவு நாளும் கால்மார்க்சையும் கம்யூனிசத்தையும் கேவலப்படுத்தியவர்களெல்லாம், “மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது” என்று எழுத்வாரம்பித்திருக்கும் நிலையில் நம்மத்தியிலிருந்து மார்க்சியத்திற்கெதிரான கருத்துக்கள் வெளியாவது அதிர்ச்சியானதே!
    இது தவிர பூக்கோ, தெரீதா, அல்தூசர் என்று எதாவது வெள்ளைக்காரக் கனவான் தனது சமூகச் சூழலை நியாயப் படுத்திய சிந்தனைகளை தமது வசதிக்காக பொருத்திப் பார்த்து நியாயப்படுத்தும் போக்கானது இந்தியா முழுவதும் விரவிக்கொண்டுள்ளது.
    அல்தூசரை முன்வைத்து பிரபாகரனையே நியாயப்படுத்த முனையும் முட்டாள் தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் தமிழவன் என்ற திரிபுவாதி.
    இவர்களெலாம் மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்ள முற்படுவதுமில்லை.

  12. M. Selvathas says:
    17 years ago

    ராஜகுமாரன் கருத்தில் தெளிவும் நியாயமான கோபமும் கலந்திருந்தது. நிச்சயம் இளம் வயதுக்காரராக இருக்கலாம்.
    மிதிலா போன்றவர்கள் ஏதாவது இயக்கங்களில் சில நாட்கள் நாலுபேரை மேய்பதற்காகவெள்ளாடு குழைகடித்த மேச்சல் முறையில் எல்லாம் படித்திருப்பார்கள்.
    இந்த வேளை சில சிவப்பு மட்டைகளும் தவறுதலாகத் தட்டுப்பட்டிருக்கும்.
    அதைவிட எதையும் கருத்தூன்றிப் பற்றோடு படித்து? . . . . . . . . . . . .இருக்கவே இருக்காது!
    இதுக்குள்ள
    இதெல்லாம் பழசு/ இப்ப சாpவராது இப்படியெல்லாம் அரசிலில சிவதீட்ஷை பெற்றதான பேச்சு!
    சீனாவும்/ ரஷ்யாவும் தங்கள் பாதுகாப்புக்கு தென்னமட்டை தான் வைச்சிருக்கக வேணும் ஆயுதஉற்பத்தியல்ல!
    அரசு ஏதும் போட்டால் புலி பயங்கரவாதம் புலியேதும் போட்டால் அரச பயங்கரவாதம் ஆப்பிட்ட பக்கம் குலைக்கட்டும் விடுவம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In