Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு  வேண்டுகோள் : சுபத்திரன்

இனியொரு... by இனியொரு...
11/08/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

இன்னும் சில தினங்களில் இன்னொரு முறை மாவீரர் தின நிகழ்வுகள் “கோலாகலமாக” அல்லது “கொத்து வெட்டாக” நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் அவலங்கள். மனிதப் படுகொலைகள், சித்திரவதைகள், இனச் சுத்திகரிப்பு என்ற அனைத்து சமூக விரோதச் செயல்களையும் ராஜபக்ச பாசிச அரசு திட்டமிட்டு நடத்திவருகிறது.

இவை அனைத்தும் குறித்த குறைந்தபட்ச அரசியல் நகர்வைக் கூட மேற்கொள்ள முடியாத புலம் பெயர் “தேசிய வியாபாரிகளின்”  அமைப்புகள் உயிரிழந்தவர்களின் தியாகங்களின் மேல் மாவீரர் தினத்திற்காகக் கொச்சைத் தனமாக மோதிக்கொள்வது எதற்காக?

ஒரு புறத்தில் இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழப் போராட்ட வரலாற்றை உங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அதே நேரம், மறு புறத்தில் அமரிக்கா வரும் இந்தியா வெட்டி விழுத்தும் என்ற பொய்யான விம்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

இவை எல்லாம் உங்களுக்கு வசதியான வியாபரம்.

அவ்வப்போது, அயோக்கியத் தனத்தில் ஊறிப்போன மேற்குலக அரசியல் வாதிகளை அதி உயர் உணவகங்களில் சந்தித்து, பேச்சோடு பேச்சாக ஈழப் பிரச்சனை குறித்து அளவளாவிய பின்னர் “நாங்கள் காய் நகர்த்திவிட்டோம் ” என்று அறிக்கை விடுவதற்கு இதைத் தவிர வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா உங்களுக்கு?

கிளிநொச்சியில் முப்பது சதவீதமான நிலப் பகுதி இராணுவத்தாலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், பன்னாட்டு வியாபாரிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போராடுவதற்காக துப்பாக்கியேந்திய ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

திருகோணமலையில் தமிழர்கள் ஆயுதங்களோடு தான் வாழ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தேசிய இன ஒடுக்குமுறை கூர்மையடைந்த மூன்று கால் நூற்றாண்டுகளில் ராஜபக்ச மாபியாக் கும்பல் தனது துணைக்குழுப் பரிவரங்களோடு நடத்திவரும் குருதி வழியும் தர்பார் ஒடுக்கு முறையின் உச்சம். இதுவரை கண்டிராத அவலம். நீங்கள் சுட்டுவிரலைக் காட்டி மக்களை நம்பச் சொல்லும் அரசுகள் நினைத்தால் ஒரே கணத்தில் இவைகளை நிறுத்த முடியும்.

அதுவல்ல அவர்களின் நோக்கம்.

ஆப்கானிஸ்தானுக்கு இராணுவச் சிப்பாய்களைப் பெற்றுக்கொள்வதிலிருந்து இலங்கையிலிருந்து வளங்களைச் சுரண்டி ஒட்டாண்டியாக்குவது வரைக்கும் போர்க்குற்றங்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர்.

நீங்களோ மக்களின் தலைவிதியை வசதியாக அவர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, உங்கள் உள்வீட்டில் அதிகாரத்திற்காக மோதிக்கொள்கிறீர்கள். ஏன் அதிகாரம்? புலிகளின் சார்பில் முதலீடு செய்யப்பட்ட பில்லியன் டொலர் பெறுமானமுள்ள பணத்தைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரமா?

உலகறிந்த தெற்காசிய மாபியா கே.பி என்ற குமரன் பத்மனாதனின்டம் பறிபோன பணத்தைத் தவிர மிகுதியைப் பங்கு போட்டுக்கொள்வதற்கான குத்துவெட்டா?

கொட்டும் மழையிலும் குழந்தைகளோடு, பிரித்தானிய அரச தடைகளையும் பொருட்படுத்தாமல் தெருக்களில் இறங்கிப் போராட்டிய புலம் பெயர் மக்களின் உணர்வு கொச்சைப்படுத்தப் படக்கூடாது.

இலங்கை அரசு இன்றும் பயங்கொள்வது உங்களின் பணத்திற்காக அல்ல. புலம்பெயர் மக்களின் உணர்வுகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் அழுத்தமும் தான் இலங்கை அரசைப் பீதிக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த அப்பாவி மக்களை விரக்திக்கு உள்ளாக்கி போராட்டங்களிலிருந்து அன்னியப்படுத்துகிறது உங்கள் அவமானகரமான மோதல்.

பதினாறு மணித்தியாலம் வரை உழைத்து நான்கு மணி நேரம் பிரயாணம் செய்து நான்கு மணி நேரமே உறங்கி அடிமை வாழ்க்கை வாழும் அப்பாவித் தமிழர்கள் மாதாந்த ஊதியத்தை போராட்டத்திற்காகக் கொடுத்த உணர்வு சாதாரணமானதல்ல.

எங்காவது மூலையில் உங்கள் நெஞ்சில் மக்கள் குறித்த உண்ர்விற்கு இடமிருக்குமானால், சொத்துக்களையும் அதிகாரத்தையும் இரத்தக் களரியின்றிப் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். அரசியலை அதற்குப் பயன்படுத்தாதீர்கள்.

இவை அனைத்தையும் மீறி எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், மக்கள் பணத்தின் ஒவ்வொரு அலகையும் அவர்களுக்கே கணக்குச் சொல்லுங்கள். கடந்த கால அரசியலை சுயவிமர்சனம் செய்துகொண்டு புதிய அரசியலை முன்னெடுங்கள்.

மாவீரர் தினத்தை கிறிஸ்மஸ் கொண்ட்டாடம் போலன்றி தியாகிகளின் எழுச்சி நாளாக மாற்றுங்கள். சீரழிந்த அரசியல் வாதிகளைப் புறக்கணித்து அவர்களுக்கு அழுத்தம் வழங்கவல்ல போராட்ட அமைப்புக்களோடு இணைந்து கொள்ளுங்கள்.

ஈழப் போராட்டத்தில் அழிந்து போனவர்கள் அழிக்கப்பட்டவர்கள் என்ற அனைவரையும் மாவீரர் தினத்தில் எழுச்சியின் சின்னங்களாக மாற்றுங்கள். இன்னும் புகைந்து கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்து இலங்கையில் ஒவ்வொரு கணமும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் ஆதரவு சக்திகளாக மாற்றுங்கள்.

முப்பது வருடங்கள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுவோம் என்று எண்ணுக்கணக்கற்ற உயிர்களைப் பலிகொடுத்த அரசியலிலிருந்து இன்னுமா கற்றுகொள்ள முடியாது. இது சாபக்கேடா?

கடிகரத்தின் முட்கள் மாவீரர் நாளை நோக்கி நகர்கின்றன. ஒரு நிமிடம் மட்டும் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். என்ன செய்யப்போகிறோம்?

எழுத்து மூலம் – சுபத்திரன் || திருத்தம் – இனியொரு

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் - கண்காணிக்க முடியாது

Comments 10

  1. kevalan says:
    14 years ago

    இவங்கள் மாவீரர் தினத்தில் மட்டும் 2 லட்சம் உழைப்பாங்கள். நீங்கள் மக்கள் பற்றி வேற பேசுறீங்கள். பிணத்தை வித்து அரசியல் நடத்தும் கேவலமானவர்கள்.

  2. Eelamahn says:
    14 years ago

    மாவீரர் தினத்தை கிறிஸ்மஸ் கொண்ட்டாடம் போலன்றி தியாகிகளின் எழுச்சி நாளாக மாற்றுங்கள். சீரழிந்த அரசியல் வாதிகளைப் புறக்கணித்து அவர்களுக்கு அழுத்தம் வழங்கவல்ல போராட்ட அமைப்புக்களோடு இணைந்து கொள்ளுங்கள்.

  3. யோகன் says:
    14 years ago

    இன்னும் காசு சேர்க்கும் அரசியல் தான் நடக்கிறது.பட்ட பின்னும் ஞானம் வரவில்லை .
    கஞ்சிக்கில்லாதார் -அதன்
    காரணமும் தான் அறியார் !
    என்ற பாரதியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
    அனால் இவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டு மக்களை மீண்டும் , மீண்டும் ஏமாற்றுகிறார்கள்.

  4. வரதன் ( கஸ்ட்ரோ says:
    14 years ago

    பதினாறு மணித்தியாலம் வரை உழைத்து நான்கு மணி நேரம் பிரயாணம் செய்து நான்கு மணி நேரமே உறங்கி அடிமை வாழ்க்கை வாழும் அப்பாவித் தமிழர்கள் மாதாந்த ஊதியத்தை போராட்டத்திற்காகக் கொடுத்த உணர்வு சாதாரணமானதல்ல.

    எங்காவது மூலையில் உங்கள் நெஞ்சில் மக்கள் குறித்த உண்ர்விற்கு இடமிருக்குமானால், சொத்துக்களையும் அதிகாரத்தையும் இரத்தக் களரியின்றிப் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். அரசியலை அதற்குப் பயன்படுத்தாதீர்கள்

  5. mark says:
    14 years ago

    மாவீரர்நால் தொடர்பாக இலஙை அரசின்நிகழ்ஷிநிரலில் பனிபுரிபவர்கல் பலர்-பழய அதிரிப்பியாலர்கலை இனைத்துக் கொன்டு
    குலப்பம் பன்னுகிரார்கல் என்பது உன்மையே.அனால் இந்தநெருப்பில்
    உஙகலை பொன்ரவர்கலும் குலிர் காய முயர்ஷ்சிப்பதை இந்த எழுத்து

    பட்ட வர்த்தனமாக காட்டுகிரது.

  6. master says:
    14 years ago

    tamilanin muyerchigal yaaom tamilanin thuer thudippadhaha irukkaveandum//kodumyhaly kanduma ..keattuma manam thirunthavilly//olagamea alindhu pohaveandumyaa..///

  7. Mahendra says:
    14 years ago

    இலங்கை, இந்திய அரசுகளை இன்று பெரும் பேய்கள் ஆட்சிபுரிகின்றன. பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல் அந்த ஆட்சிக்குள் தமிழ் பினாமிகளும், புலிப் பினாமிகளும் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த ஆட்டத்தினுள்ளே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் மக்கள் உள்ளனர். இது மாறும், உலக வரலாறு அப்படி. மாறும்போது மாவீரர் புனிதம் சரித்திரமாகி மிளிரும். அதுவரை பூசாரிக்கு பணம் கொடுத்து கடவுளை வணங்க வேண்டியதில்லை. வீட்டிலே மனதார உணர்வோடு வணங்கலாம்.

  8. shan Naran says:
    14 years ago

    மாவீரர் தினத்தை இன்று தீபாவளி கொண்ட்டாடம் போல் ஆகிவிடாது

  9. Sutha says:
    14 years ago

    குடும்பத்தில் மாவீரர் யாராவது இருந்தால் மட்டும் தேசியம் பற்றி பேசமுடியுமென்று , நேற்று தொலைக்காட்சியில் ஒருவர் கூறியிருந்தார். சொன்னவர் குடும்பத்தில் யாராவது மாவீரர் இருக்கிறார்களா என்று ஒரு பொது மகன் போட்டாரே ஒரு போடு. குத்தகை எடுப்பதற்கு இப்படியும் ஒரு தகுதி வேண்டுமா?

  10. meena says:
    14 years ago

    அன்புள்ள தமிழ் மக்களே

    எனது இனிய தமிழ் மக்கள் விடுதலைக்காக தொடர்ர்த்தும் போராடி வலது காலை இழந்த ஒரு மைந்தனின் மனதில் இருந்து ……………..

    மக்கள் , மக்கள் என்று கூறி மக்களை ஏமாற்றும் காலம் முடிவடைந்து விட்டது எனத் தெரியாத முட்டாள்கள் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி நாட்களை வீணாக்குவது ஒரு அர்த்தமற்ற செயல் என்றே கூறலாம். மாவீரர் நாள் எனக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் தியாகிகளை நினைவுகூறும் நவம்பர் இருபத்து ஏழாம் திகதி இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய ஒரு நாளாகும். இதை யாரும் உரிமை கோர முடியாது. அப்படிக் கோர முயலுபவர்களை இனம் கண்டு அவர்களது முயற்சிகளை முறியடிப்பது எல்லோருடைய கடமையாகும். இதற்கு ஒரே ஒரு வழி, இவர்கள் தம்மைத்தாமே சமூகத்தில் தக்கவைக்கவும், பணம் சுரண்ட எடுக்க முயலும் மாவீரர்களை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளை புறக்கணித்து யாவரும் ஆலயங்களுக்குச் சென்று எமது இனிய மாவீரர்களது ஆத்மா சாந்தியடைய பிராப்திப்பது சாலச் சிறந்தது என்பது தமிழ் ஈழ மண்ணை நம்பி வாழும் வன்னியானின் வேண்டுகோலாகும். இதனை புலத்தில் வாழும் தமிழ் மக்கள் செவிமடுக்குமாறு தலை வணங்கி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . இதுவே எமது உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களை நீற்ற மாவீரர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையும் அங்கீகாரமுமாகும் .

    நன்றி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...