தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை எனவும் சம்பவம் குறித்து மட்டுமே விசாரணை நடத்த முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் காரணமான தூண்டிவிடும் வகையிலான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வந்த நிலையில், அந்த அமைப்பின் தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் எந்த அமைப்பாக இருந்தாலும் எந்த தரத்தில் இருக்கும் நபராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுபல சேனா அமைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அளுத்கமவில் அமைதியான கூட்டத்தை நடத்தியிருந்தது.
அண்மையில் நடத்த அனுமதி வழங்கப்பட்ட கூட்டத்தை புத்தசாசன பாதுகாப்புச் அதிகார சபைக்கு நடத்தியது. பொதுபல சேனா அமைப்பு அனுமதி வழங்கவில்லை.
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் பொலிஸார் பௌத்த மற்றும் முஸ்லிம் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசியதுடன் எந்த விதமான குழப்பமான நிலைமைகளும் ஏற்படாது என பொலிஸாருக்கு உறுதி வழங்கப்பட்டது.
எனினும் இந்த கூட்டத்தின் பின்னர், கூட்டத்துடன் தொடர்புடைய வாகனங்கள் தர்கா நகர் ஊடாக பேரணியாக சென்ற நிலையில் இந்த மோதல் ஆரம்பித்துள்ளது.
சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய 55 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 48 பேர் சிங்களவர்கள். 7 பேர் முஸ்லிம்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த வைபவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகள் ஏதாவது ஒரு நகருக்கு செல்வதையோ கூட்டங்களை நடத்துவதையோ தடுக்க முடியாது








