தமிழ் முஸ்லிம்கள் மீதான இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பின் தொடர்ச்சியாக பாணந்துறையில் ஆடைவிற்பனை நிலையமான NO LIMIT இலங்கை அரச அடியாள் படையான பொதுபல சேனாவினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மூன்று மணியளவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றாகும். இந் நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பிரதான நகரங்கள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளன. காலை 6 மணியாகும்போது முற்றிலுமாக எரிந்து முடிந்தது. தீயானது, கட்டிடம் முழுவதும் பரவியிருந்ததாகவும், அணைக்கப் போதுமான தண்ணீர் தம்மிடம் இருக்கவில்லையெனவும் தீயணைக்கும் பிரிவு தெரிவிக்கிறது.
NO LIMIT ஆடை வர்த்தக நிலையங்கள் ஏற்கெனவே பொதுபலசேனா இயக்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பல தடவை ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கு எதிராக இஸ்லாமியர்கள் மக்கள் அணிதிரள்வதும் போராடுவதும் அவசியமானதாகும். ஒரு புறத்தில் மேற்கு அரசுகளின் நிதி வழங்களில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களும், ஏகாதிபத்திய ஆதரவுக் குழுக்களும், இலங்கை அரச ஆதரவாளர்களும், அடிப்படைவாதிகளும் இஸ்லாமியத் தமிழர்களின் போராட்டத் தலைமைகளைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றன. இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்று என்ற அடிப்படையில் தமது பிரிந்து செல்லும் உரிமைக்காக இஸ்லாமியத் தமிழர்கள் அனைத்து உழைக்கும் மகளுடனும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுடனும் இணைந்து போராடுவது அவசியம்.








