யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோ~மிட்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
“வையாதே வையாதே எம் மீது கை வையாதே”, “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து” இ “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
யாழ்.பல்கலைக்கழகப் பகுதியில் ஆயுதங்களோடு நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரை வெளியேறுவார்கள் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் அவர்கள் அங்கேயே நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களோடு இணைந்த எழுச்சிகள் நம்பிக்கைதருவன.
உலகில் மிகப்பெரும் இன அழிப்பையே தடுத்து நிறுத்தமுடியாத தோல்விகண்ட அதே வழிமுறைகளையே புலம் பெயர் அமைப்புக்கள் பயன்படுத்துகின்றன.இலங்கை அரசு ஒரு புறத்திலும் புலம் பெயர் அமைப்புக்கள் மறு புறத்திலும் ஒன்றிணைந்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை புலிகளின் போராட்டம் என்ற தோற்றப்பாட்டை வழங்க முற்படுகின்றன. இந்த நிலையில் பேராதனைப் பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைப்போருக்கு திட்டமிட்டு வழங்கப்படும் ‘புலி’ சாயத்தை வெளுக்கச் செய்யும் என்பதோடு இலங்கை அரசின் புலிப் பிரச்சாரத்திற்கு சாவுமணியடிக்கும்.









இந்த பொல்லுக்கொடுத்து அடி வங்குவது ஒன்றும் எமக்கு 1983இற்கு பின்னர் வந்தது அல்ல! இலங்கை சுதந்திரமடைய முன்பாக யாழ் வேளாளர் சமூகம் மிக மோசமான ஒரு அடக்குமுறையை தலித் மக்கள் மீது செய்து வந்தது. தலித் மக்களிற்கான கல்வியை மறுத்து அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கினார்கள். தலித் மக்களை அடக்கி தனது சமூகம் மட்டுமே வளர “கல்வி” யாழ் வேளாளர்கள் எடுத்த இன்னுமொரு பொல்லு! ஆனால் பிரிட்ஷாரிடம் சுதந்திரம் அடைந்த பின் இலங்கை அரசு, யாழ் வேளாளர் வைத்திருந்த கல்வி என்ற அதே பொல்லை எடுத்து யாழ் வேளாள சமூகத்தின் மீது தரப்படுத்தல் என்ற பெயரில் ஒரு அடி போட்டது.
அது மட்டுமா? சாதி வெறி என்ற பொல்லை முதலில் தம் வசம் வைத்திருந்ததும் இந்த யாழ் வேளாள சமூகமே! அதே பொல்லை வாங்கி சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற பெயரில் தமிழருக்கு அடிபோட்டார்கள் சிங்கள இனவாதிகள். இவ்வளவு நடந்த பின்னரும் நாம் திருந்தினோமா? இல்லை. எம்மை நாமே அழிப்பதற்கு தினம் தினம் திட்டமிட்டு வகைவகையான பொல்லுகளை இன்றும் தயாரிக்கிறோம்.
மாவீரர் தினம் புலிகளின் போராளிகளுக்கு மட்டுமே நினைவு கூரும் ஒரு தினம்! ஆனால் இன்றும் மற்றைய இயக்க போராளிகள் துரோகிகள். அவர்களை இந்த தினத்தில் நினைவு கூர முடியாது என்று புலிகள் அதாவது எஞ்சிய புலிவால்கள் அடம்பிடிக்கிறார்கள். இருப்பினும் இறந்த போராளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செய்யும் உரிமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் மக்களின் உரிமையை மறுத்து அவர்களை சாவுகளத்திற்கு இட்டுச் சென்ற புலிகளின் மாவீரர் நாளை கொண்டாட நாம் எமது கல்வியை பணயம் வைக்க வேண்டுமா? 30 ஆண்டுகள் புலிகளின் போராட்டம் தமிழ் சமூகத்தின் கல்வியை கருவறுத்து சென்றுவிட்டது. தமிழ் மக்களின் எதிர்காலம் சூனியமான ஒன்றாக இன்று புலிகளால் விட்டுச்செல்லப்பட்டுள்ளது. இவர்கள் கொண்டாட நினைத்த அந்த மாவீரர்கள் தம் கல்வியை இழந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை எண்ணி தானே தம் இன்னுயிர்களை அர்ப்;பணித்தார்கள். அவர்களிற்கு நாம் இன்று செய்யக் கூடிய சிறப்பான ஒரு மரியாதை அவர்கள் நேசித்த மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவதே. அதற்கு முதல் படிக்கல் கல்வி. யுத்த அழிவின் பின் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அத்திவாரமாக அமைய வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம் கல்வி. ஆனால் ஒரு மாவீரர் தினத்திற்கு விளக்கேற்ற அந்த கல்வியை மீண்டும் தாரைவார்க்கப்போகிறோமா?
யாழ் பல்கலைக்கழகத்தில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு யாருக்கும் விளக்கேற்றும் உரிமை இருக்கிறது. அனால் இன்று இவ்வளவு பிரச்சனை வர விளக்கேற்றிய யாழ் பல்கலைக்கழகம், அவர்களது முற்றத்திலேயே சகோதர படுகொலை செய்யப்பட்ட சக போராளிகளிற்காக என்றாவது ஒரு சிறிய மெழுகுதிரியை ஏற்றி இருப்பார்களா? 1980களில் புலிகளின் மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளான யாழ் பல்கலைக்கழகம் எத்தனை பேரை புலிகளின் அதிகாரத் தீனிக்கு பலியாக்கினார்கள் என்பதை அவர்கள்; ஒரு போதும் நினைப்பது கிடையாது. புலிகளால் கொல்லப்பட்ட விரிவுரையாளர்கள் மாணவர்கள், இவர்களை இன்றைய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மறந்து பேய்விட்டார்கள். காரணம் இவர்கள் புலிகளால் துரோகிகள் என்று அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்கள். ஆனால் படித்தவர்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கிய புலிகள் மட்டும் இன்னும் இந்த பல்கலைகழக மாணவர்களிற்கு தியாகிகளா? அவர்களிற்காக தம் கல்வியையே தாரை வார்க்க தயராக இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர்களின் தம்மை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலையில்ல!
ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நாம் முற்றாக குற்றம் சொல்ல முடியது. காரணம் இன்று பல்கலைக்கழத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலே வேதவாக்காக உள்ளது. புலிகளின் தற்கொலை அரசியலை தற்போது தன் கையில் எடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இன்னுமொரு பொல்லை தயாராக்கி வருகிறது. திருவாளர் சரவணபவன் அவர்கள் அன்று அமிர்தலிங்கம் செய்த அதே வேலையை இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் செய்கிறார். பின்னணியல் புலம் பெயர் புலி அமைப்புகளுடன் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஒரே தேவை யாழ்ப்பாணத்தில் அமைதி குலைய வேண்டும். மாணவர்கள் கல்வியை திறந்து போராட வேண்டும். ஆனால் திரு சரவணபவன் மட்டும் தனது மகளை பவுத்திரமாக மகிந்தவின் உதவியுடன் அமெரிக்காவில் படிக்கவைத்து ஒரு வைத்தியராக்கி அமெரிக்காவில் வதிவுரிமையும் எடுத்து விடுவார். கவிஞர் காசி ஆனந்தன் 70களில் இளைஞர்களே உசுப்பேத்தும் கவிதை எழுதி அனைவரையும் இயக்கத்திற்கு அனுப்பி பலியாக்கினார். ஆனால் அவரது மகளை மட்டும் இந்தியாவில் படிக்கவைத்து திருமணமும் செய்து வைத்து விட்டார். தமிழ் மக்களின் அன்றைய தலைவர்கள் அனைவரும் அதை தான் செய்தார்கள்.
பல்கலைக்கழக மாணவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்ப நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும். புலம் பெயர் புலிகளின் தொடர்பை அடியுடன் துண்டிக்கவேண்டும். மாவீரர்களிற்காக தினமும் உங்கள் மனதில் தீபமேற்றுங்கள். அவர்களின் கனவை நனவாக்கும் ஒரே ஒரு ஆயுதம் கல்வி! கல்வி மட்டுமே. வீணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் புலி ஊடகங்களின் உசுப்பேத்தல் என்ற பொல்லை கையில்வாங்கி மீண்டும் அதே பொல்லால் அடி வாங்கி உங்கள் எதிர்காலத்தையும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் நசுக்காதீர்கள்.
Peradeniya Campus. 1965. Shanmuagratnam. Young and the Restless. It was obvious that Daily News put it to a side when the former Vice Chancellor Dr. Leslie Gunawardene the Professor of History passed away.