
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) என்று அழைக்கப்பட்ட தன்னார்வ நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அமரிக்காவில் தடைசெய்யப்பட்டதுடன் அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய அமைப்பு என்ற பெயரில் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அமரிக்க அரசால் இந்த அமைப்பு புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்வதற்கான வழிகளை இலகுபடுத்திக்கொடுத்தது என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த அப்பாவி மக்களின் உழைப்பு புனர்வாழ்வுக் கழகத்தின் பணமாகச் சேர்த்துவைக்கப்பட்டு இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளில் ஒன்றான அமரிக்காவிற்கு வழங்கப்பட்டது. இன்று புலம் பெயர் நாட்டு பிழைப்பு வாதிகள் தமது பாதுகாவலர்களாகப் படம்காட்டும் அமரிக்க அரசே முதலில் இந்த அமைப்பிடமிருந்து மக்களின் உணர்வுபூர்மான பங்களிப்பைச் சுருட்டிக்கொண்டது.
பின்னதாக இலங்கையில் வெளிநாட்டு வங்கிகளில் இந்த அமைப்பின் பெருந்தொகையான பணம் வைப்பிடப்பட்டிருந்தது. இந்த அமைப்பின் தலைமை நெறியாளராகவிருந்த கே.பி.ரெஜி என்பவர் பெருந்தொகைப் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக புலிசார் அமைப்புக்களின் வட்டாராங்கள் செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.
ரெஜி என்பவர் அமரிக்க அதிபர் பில் கிளிங்டன், ஐ.நா முன்னை நாள் செயலதிபர் கோபி அன்னான் போன்றோரை நேரடியாகச் சந்தித்தவர் என்று தேசியக் கூக்குரலிட்டு மக்களிடமிருந்து மேலும் அதிக பணத்தை ரெஜி குழு கையகப்படுத்திக்கொண்டது.
இப்போது மகிந்த ராஜபக்ச அரசு ரெஜியினால் இலங்கையிலுள்ள வங்கிகளில் வைப்பிடப்பட்ட 86 மில்லியன் ரூபாவைக் கையகப்படுத்திக் கொண்டது. புலம் பெயர் நாடுகளிலிருந்து இனப்படுகொலையால் பாதிக்கப்படும் தமது உறவுகளுக்காகப் உணர்வுபூர்வமாக வழங்கப்பட்ட பணம் இப்போது இனப்படுகொலை இலங்கை அரசின் கைகளில்.
அதே வேளை கே.பி.ரெஜியைக் கைது செய்வதற்காக உலகப் போலிசாகத் தொழிற்படுவதாகக் கூறும் இன்டர்போலின் ஊடாக இலங்கை அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசின் உளவுத்துறையின் தலைமை அதிகாரியே இன்டர்போலின் கொழும்புப் பிரிவின் தலைமை அதிகாரியுமாவார். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்டர்போலினால் தேடப்படுவதாகக் கூறப்படும் இலங்கை அரச உளவாளி கே.பி என்ற குமரன் பத்மநாதன் என்ற ஆயுதக்கடத்தல் கிரிமினல் இலங்கை ஆயுதப்படைகளின் பாதுகாப்பிலேயே தங்கியிருக்கிறார்.
அமரிக்க ஐரோப்பிய அரசுகள் தமக்கு உதவியளிப்பதாகவும், முடிந்தால் தமிழீழம் கூட பெற்றுத்தருவார்கள் என்றும் மக்களை மந்தைகளாக்கும் புலம்பெயர் புலிசார் பிழைப்புவாதிகள் மக்களின் அவலத்தில் வயிறுவளர்த்துக்கொள்கின்றனர். மறுபுறத்தில் இலங்கை அரசுடன் இணைந்து மக்களை ஒடுக்குவதற்காக இந்த அரசுகள் செயற்பட்டுவருகின்றன.
மக்களின் அழுகுரல்கள் அவமானகரமான வியாபாரப்பொருளாகிவிட்ட நிலையில் ரெஜி இன்னும் சில காலங்களில் இலங்கையில் மகிந்த ராஜபக்ச கட்சியின் வேட்பாளாரானாலும் வியப்படைவதற்கில்லை.









This is news to me. I knew that the first Director that Mr. Nithayananthan had some problems here to in the 1980s.