Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனின் மரணம்குறித்து விமனப்படை அதிகாரி : போர்க்குற்ற ஆதாரம்?

இனியொரு... by இனியொரு...
07/21/2010
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

இலங்கை அரசு பிரபாகரனின் உடல் நந்திக் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக உலகம் முழுவதுமுள்ள ஊடகங்களில் பிரச்சாரம் செய்தது.அதே வேளை பிரபாகரன் இன்னும் உயிரோடு வாழ்வதாகக் கூறிய இன்னொரு பகுதியினர் அதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறையின் அனுசரணையோடு செயலாற்றியவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் திட்டமிட்ட பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு தமிழ் நாட்டில் உருவாகக் கூடிய எழுச்சியைத் தடைசெய்தனர். அதே வேளை அன்னிய நாடுகளிலிருந்து இறுதிக் காலங்களில் பிரபாகரனை இயக்கியவரும் இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படுபவருமான கே.பி என்ற குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்தவர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டார்.

பிரபாகரன் சரணடைந்த பின்னர் அரசபடைகளால் கொல்லப்பட்டார் என மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
பதினந்தாயிரம் கைதிகளையும், எண்ணிக்கை தெரியாத மக்களையும் சிறைகளிலும் முகாம்களிலும் அடைத்துவைத்து உலகின் மிகப் பெரிய மனித அவலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இனப்படுகொலை அரசான இலங்கை அரசு நந்திக்க்கடலில் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்தமை உலகின் அனைத்து ஊடகங்களையும் மக்களையும் ஏமாற்றும் செயல் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தனது நேர்காணல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

சரணடைந்த பின்னரே கோரமாகக் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் பிரபாகரன் கொலை குறித்த போர்க் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய ஊடகமான வை நெட் நியூசிற்கு டொனால்ட் பெரேரா வழங்கிய செவ்வி ஒரு ஆதாரமாகும்.

முன்னை நாள் விமானப்படை அதிகாரியான இவர் இப்போது இஸ்ரேலில் வசிக்கும் தூதர். இவரது மனைவி இராணுவ பல்வைத்தியர். இஸ்ரேலில் மனைவி மற்றும் மகளோடு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக உற்சாகமாகக் கூறுகிறார்.

இவர் பிரபாகரனின் இரத்தம் தோய்ந்து உறந்த படுக்கை ஒன்றில் பிரபாகரனின் உடல் காட்ட்டின் ஊடாகத் தூக்கிவரப்படுவதைக் கண்ணுற்றதாகக் கூறுகிறார். அதன் பின்னர் பிரபாகரனின் கைத் துப்பாக்கியை காட்டுமாறு கேட்கிறார். அதன் இலக்க்கம் 001 என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறார். அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததை உறுதிப்படுத்திகொண்டேன் என்கிறார். அதன் பின்னர் வீடு சென்ற அவர் தனது மனையிவிடம் தான் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறுகிறார்.

இவரின் இந்தக் கூற்று, பிரபாகரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதற்கான போர்க்குற்ற ஆதாரமாகக் கருதப்படலாம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வடக்கில் 10,000 தமிழர்களின் வாக்குரிமை பறிப்பு- ரவிகருணாநாயக.

Comments 6

  1. உறையூர் ரஞ்சன் says:
    16 years ago

    அப்படி போடு ராஜா!
    இங்கை நம்ம ஊர்காரங்க ஒரு பக்கம் விடுதலை புலி தலைவர் உயிரோட இருக்காங்க என்று சொல்றாங்க, மற்றவங்க நம்ம நாட்டுக்காரங்கதான் ராஜீவ் கொலைக்கு தாம் பழி வாங்காமல் ராஜிவை தலையில் அடித்த தங்களுக்கு கீழ் படியாத சிங்களவங்களையும் பழி வாங்க தந்திரம் வகுத்து கொடுத்து அந்த சிங்களவங்களை கொண்டே ஈழத்தமிழனையும் அழித்து, அவனது அடுத்த சந்ததியையும் அழித்து தம்மால் செய்ய முடியாததை செய்து விட்டான் என்று சொல்றாங்க.

    இப்போ வரும் இந்த செய்தி நம்ம நாட்டுக் காரங்களை ஒன்றும் செய்யாது. உலக அரங்கில சிங்கள அரசுதான் குற்றவாளிக் கூண்டில நிற்கிறது. ஜேர்மனிய நாசி படைகல்லை இருந்தவங்க இப்பவும் அவங்க தப்பி ஓடிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில வைத்து விசாரிக்கப்பட்டு தண்டனை பெருராருங்க. இதில் இருந்து ஒன்று மட்டும் தெரிது. இந்த அரசாங்கங்கள் எப்படி உலகை தற்போதைக்கு ஏமாத்தினாலும் இவங்க வாயாலாலேயே எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உளற போறாங்க என்றதிற்கு இந்த முன்னால் விமானப்படை அதிகாரியின் பேட்டி ஓர் அத்திவாரம் அல்லது ஓர் முதல் படிக்கல் என்றும் கூறலாம்.

    இவ்வளவு நாளும் NDTV , CNN -IBN என்று எல்லா டிவியிலேயும் விடுதலைப் புலித் தலைவரை விதம் விதமா கோவணத்துடன், சேறு பூசி, மிலிடரி யூனிபாரத்துடன் என்று காட்டி நந்திக்கடல் என்ற கடலில் குண்டடிபட்டு இறந்து கிடந்த பாடியை எடுத்தோம் என்று கதை விட, இப்போ ஓர் முக்கிய அதிகாரியே தன் இரண்டு கண்களாளையும் இரத்தத்தில் இருந்த விடுதலைப் புலித் தலைவரை பார்த்ததாக சொல்கிறாரே (Donald Perera saw the blood-soaked stretcher carrying the body of Velupillai Prabhakaran being transported through the jungle, but he was not calm) அப்போ காயப்பட்டவரை காட்டிற்குள் தூக்கிச் சென்றார்களா? அல்லது ஏற்கனவே கைது செய்து (சரணடையும் போது) சித்திரவதை செய்து அறியவேண்டியவற்றை அறிந்து விட்டு நந்திக்கடல் என்னும் கடலில் கொன்றுவிட்டு போட கொண்டு சென்றார்களா? அல்லது ஏற்கனவே சித்திரவதையில் கொன்றுவிட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தவரை நந்திக்கடலில் போட காட்டினூடாக கொண்டு சென்றார்களா?கடலில இருந்து எடுத்த பாடியில எப்படி இரத்தம் இருக்கும்? நாம விதம் விதமா பார்த்த டிவி காட்சிகளிலையும் சேறுதானே பூசி விட்டிருந்தார்கள்?

    தற்போது 14 மாதங்களின் பின் சில விடயங்கள் கசியத் தொடங்கியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். பதினைந்து வருடங்களிற்கு முன் நடந்த கொசோவோ போஸ்னியா படுகொலைகளின் உண்மைகள் தற்போதும் வந்து கொண்டுள்ள வேளையில் ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமைகள், கொலைகள் தமிழ், சிங்கள, இந்திய சூத்திரதாரிகள் யார் யார் என்ற விபரத்துடன் இப்படியே மெல்ல மெல்ல கசியும். இவ் ஈழத்தமிழரின் கொலைகளுக்கு நம் நாட்டு தமிழ் அரசியல் வாதிகளும் என்னென்ன பங்கு எடுத்திருந்தாலும் எல்லாம் வெளி வந்தே தீரும். ஆனா நம்ம நாட்டுக்காரன் முதுகெலும்பு இல்லாதவன், எங்க நாட்டு தலைவரை கொன்ற குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எமது நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரிக்க தில் இல்லாமல் நரி வேலையிலும் கேவலமான வேலை பார்த்திருக்கிறாங்க.

    இந்த ஈழத்தமிழ் போராடத்தில உயிர் நீத்த அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலிகள்!
    –
    உறையூர் ரஞ்சன்

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    அது மட்டுமல்ல இஸ்ரேலின் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு எதிரான மனிதாபிமானமற்ற அடிப்படை வாழ்வாதார உரிமைகளைப் பறித்தெடுக்கும், நிலங்களை ஆக்கிரமிக்கும் கொடுங்கோலான நிலைப்பாட்டிற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் பாலஸ்தீன-இஸ்ரேல் பேச்சுவார்த்தை தோல்வியடையும் சூழ்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்றும் கூறியதோடு, ஈரானிற்கு எதிரான பொருளாதார கட்டுப்பாடுகளையும் ஆதரிப்பபதாகக் கூறியுள்ளார்.

    ஆனால் இலங்கையின் ஜனாதிபதியோ பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல் இலங்கை-பாலஸ்தீன நட்புறவு கழகத்தின் ஸ்தாபகராக இருக்கும் நிலையில், ஈரானுடன் நட்புறவை பேணி இலங்கைக்கைகான அபிவிருத்திப் பணிகளில் ஈரான் பங்கு வகிப்பதுடன் உதவிகளும் செய்யும் நிலையில், இலங்கையின் முக்கிய அந்நிய செலவாணியை ஈட்டி தரும் தேயிலை ஏற்றுமதியும் ஈரானுக்கு கணிசமான அளவு போகும் நிலையில் இவ் ராஜதந்திரி/ தூதுவர் என்று அழைக்கபடுபவரின் கூற்று பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. இவரின் கூற்று இலங்கை அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் இன்று பிரபாகரனின் இறப்பிலும் பல சந்தேகங்களை கிளப்புவதால் இவர் சரத்தின் அணியில் சேர்ந்தவரோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது. அல்லாவிடின் பல இராணுவ அதிகாரிகள் புலிகளின் பணத்திற்கு சோடை போன நிலையில் இவரும் புலிகளின் pay roll லில் உள்ளவரோ தெரியவில்லை. இப்போ இஸ்ரேலிற்கு என்னத்திற்கு ஜால்ரா போடுகிறாரோ தெரியவில்லை. ஆனால் முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணத்தில் பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.

    ஆதாரம் :
    After noting the similarities between the Tamil Tigers and Hamas, Perera says Sri Lanka is a staunch supporter of Israel’s fight against Palestinian terror. “No one wants bloodshed. The other side (Palestinians) should be offered direct negotiations, without preconditions, to determine its level of seriousness. These talks should focus on trying to reach a compromise that would allow both sides to sign an agreement,” he says.

    “In case the other side shows it is not interested in a compromise, (Israel) must move on to the military phase with full force. (The government) will have to explain to the citizens that (Israel) is headed for a long and difficult struggle that will exact a heavy price, but at the end of this struggle the country’s situation will be much better,” says the ambassador.

    “Once you have the public’s support, you should fight relentlessly until all of the terror hubs are destroyed. There is no going back.”

    Addressing the deadly May 31 commando raid on a Gaza-bound Turkish ship, Perera says, “As a military man I can understand that Israel had to protect itself. Due to Sri Lanka’s vast experience in fighting terror, I can say that it will always support countries that also oppose (terror).”

    Despite its warm relations with Israel, Sri Lanka has also managed to maintain close ties with the Jewish state’s biggest threat – Iran. “Sri Lanka is a developing nation in need of assistance. Iran helps us in the civilian realm,” he says. “As to the sanctions imposed on (Tehran), these things should be discussed in the different forums. The Sri Lankan government is in favor of imposing military – not civilian – sanctions.”

    Perera, who has already visited Jerusalem, Eilat, Haifa, Netanya and Jaffa, says life in Israel suits him just fine. “The people here are very warm, open and easy-going, but on the other hand they are successful in many fields, such as technology, agriculture and education.

    http://www.athirady.info/2010/07/22/97904

  3. chandran.raja says:
    16 years ago

    பெருச்சாளியை கண்டு பிடிக்கமுடியவில்லை திருத்தி ஒருவழிக்கு கொண்டு வரவும்முடியவும் இல்லை.இதை தட்டிக்கேட்கிறதிற்கு ஒரு தமிழனுக்கு தென்பும் இருந்ததுமில்லை. தென்பிருந்த தமிழ்மனிதர்கள் பெருசாளியின் வக்கிரபுத்தியால் அழிந்து போனார்கள்.
    பெருசாளியின் முரட்டுகூத்தை தட்டிக் கேட்க தகமையிருந்தால் சமூகத்தில் இருந்து
    அப்புறப்படுத்த முடியும் என்று கருதியிருந்தால் பெருமை படக்கூடியதே!தமிழ்இனம்.
    பெருசாளிக்கு வந்த பலமே! பொருளாதரப் பலமே! இதை வழங்கியவர்கள் எமது சமூகத்தை
    சேர்ந்தவர்கள்.
    ஆகவே தான் பலகிலோமீற்றர் தூரத்திற்கு இராணுவத்திற்கும் எமது மக்களுக்கும் குண்டடிக்க முடிந்தது. குடியிருந்த மனையைவிட்டு வேளியேறவும் முடிந்தது.
    எல்லாம் நடந்து முடிந்த சமாச்சாரமே!.
    இனியார்? போர்குற்றங்களைப் பற்றிக் கதைப்பது?.
    பெருச்சாளியை கடற்கரையில் கொன்றால் என்ன? காட்டிற்குள் கொன்றால் என்ன??
    கடல்நீரில் அமிழ்திக் கொன்றால் என்ன??? பெருசாளி தொலைந்தது.
    ஆனால் ஒன்றுமட்டும் சொல்லமுடியும் இந்த பெருசாளிக்பின் கேடுகெட்ட தமிழ்சனம்
    இன்னமும் உறங்கிக்கொண்டு மவுனமாகா காரியம் ஆற்றிக் கொண்டிருக்கிறது.
    அது “நாடுகடந்த தமிழ்ழீழம்” “போர்குற்றம்” என .
    இதன் செயல் செயல்பாடுகளை கண்னெதிரே கண்டு வருகிறோம். தமிழருக்கு தமிழ்ஈழம்
    அதற்கு பாடுபடுபவர்களுக்கு கொழும்பில் அதாவது சிங்களப்பகுதிகளில் “தொடர்மாடிக்கட்டிடங்கள்”.
    இதை எப்படி எடுத்துக்கொண்டாலும் இன்று உள்ள நிலையில்தமிழ்தலைமைகளின் அரசியல் வலிமை கூட்டமைப்பை உள்ளடக்கி பலவீனமானது மல்லாமல் மிகவும்
    பிற்போக்கு தன்மை வாய்ந்தது. இதன் இறுதிச்சங்கமம் ஏகாதிபத்தியமே என்பதை சிறு
    தொகையிலானா புலம்பெயர் சமூகமாவது புரிந்து கொள்ள வேண்டும்..
    ஈழத்தது அரசியலிலிருந்து புலம் பெயர்தமிழர்கள் இடம்பெயர்ந்து போவதே அறிவுஜீவிதமானது.ஆனால் அதை புரிவார்களா? என்பது சந்தேகமே??.

  4. sukkiran.pooja says:
    16 years ago

    பெருச்சாளி பெருச்சாளி என்று ஒரு தனி மனிதனைப் பற்றியே பேருகிறீர்களே சந்திரன் ராசா? ஒரு மலைப்பாம்பு அது தான் மகிந்த என்ற ஐம்பதாயிரம் தமிழர்களை ஒரு இரவுக்குள் சாகடித்த உங்கள் நண்பர், அவரைப் பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசியது கிடையாது.!! சரி விடயங்களைத் தெளிவாக்குங்கள்,
    மகிந்த இனப்படுகொலை செய்ததை ஒத்துக் கொள்கிறீர்களா?
    டக்ளஸ் தேவா மகிந்த என்ற கிரிமினலுக்கு துணை போனதை ஒத்துக் கொள்கிறீர்களா?
    திட்டமிட்டு தமிழ் மக்கள் சூறையாடப்படுவதை ஒத்துக் கொள்கிறீர்களா?
    மகிந்த கொன்று போட்ட அல்லது பேரினவாதிகள் இதுவரை கொன்று போட்ட லட்சம் மக்களில் உங்கள் பிள்ளைகள் இருந்திருந்தாலும் இப்ப்டைத்தான் எழுதுவீர்களா?
    மீண்டும் சந்திப்போம்.

    • saravanan says:
      16 years ago

      எசமானை பற்றி எல்லாம் அவர் பேசமாட்டார்

  5. manithurai says:
    16 years ago

    அண்ணேய் சந்திர ராஜா, பெருச்சாளியை கண்டு பிடிக்கமுடியவில்லை திருத்தி ஒருவழிக்கு கொண்டு வரவும்முடியவும் இல்லை.இதை தட்டிக்கேட்கிறதிற்கு ஒரு தமிழனுக்கு தென்பும் இருந்ததுமில்லை. தென்பிருந்த தமிழ்மனிதர்கள் பெருசாளியின் வக்கிரபுத்தியால் அழிந்து போனார்கள். எண்டு நிங்கள் சொல்றது சரிதான். புத்த தர்மத்தில உயிரை கொல்றது பாவம் எண்டும் சொல்றாங்களே.

    தமிழனுக்கு ஏனையா தெம்பு இல்லாமல் போனது ஸ்ரீ சபாரத்தினதுக்கு தேம்பிலாமலா விருகம்பாகதில ஒன்பதுபேரை கொலை செய்துவிட்டு தலைகிழா கட்டி தொங்கவிட்டது. தேம்பில்லமலா தாசை கதைக்க எண்டு கூப்பிட்டு நயவஞ்சகமா கொண்டது ? உமாமகேசுவரனுக்கு தேமிப்பிலாமலா நாட்டுக்கு மக்கள் விடுதலஎண்டு போனவங்களை உள்ளுக்கை வைத்து போட்டது. இயக்கத்தை வளர்த்த சந்ததியாரை ஏனையா போட்டாங்கள்? உடுவில் நிரஞ்சனை ஏனையா போட்டங்கள்? உள்ளூர் பெருஞ்சாளியை பிடிக்க முடியாமல் எந்த தெம்பில மாலைதீவு போனாங்கள்? ஈபிகாரங்கள் தேம்பில்லாமளா சங்கககடையல் கல்யாண வீடுகள் எண்டு கொள்ளையடிச்ச போதாமல் இந்தியாக்காரனோட சேந்து சனத்தை வாடி வதச்சவங்கள்? ஏனையா தமிழனுக்கு தெம்பில்லை எண்டு சொல்றேன்கள்? அமிதலிங்கம் தெம்பிள்ளமலா துரையப்பா கொலைக்கு அத்திவாரம் போட்டவர்? ஏன் 83 இக்கு பிறகு இரண்டாவது மகன் மூலம் இயக்கம் தொடங்கியதும் தெம்பிள்ளமலா?

    ஐயா, எல்லாருக்கும் தெம்பிருக்கு பெருஞ்சாளி விசயத்தில முந்திவிட்டது. அதுக்கு உங்களுக்கு முதுகெலும்பில்லாமல் உணர்சிச்யிலாமல் தன்மானமில்லாமல் யாரோ ஒருத்தன் ஒரு பெருஞ்சாளியை பிடிக்க முடியாமல் நயவஞ்சமாக ஒரு இனத்தோடை சேத்து பெருஞ்சாளியை கொல்ல நிங்கள் உலகமெல்லாம் ஏதோ நிங்கள் சாதித்து விடாதா சொல்லி திரிஈர்கள். வெட்கமாயில்லை குனிஞ்சு பாருங்கோ. நிலத்தில தானோ நிக்கிறீங்கள். அவங்கள் என்னெண்டா தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எண்டு சொல்லி சொல்லி ஓர் செல்வம் கொழிக்கும் பூமியை மயான பூமியாக்கி 300 ,000 பேரை அனாதையாக்கி இப்ப மீள் குடியேற்றம் எண்டு சொல்லி தகர தகடுகளும் 25 ,00 காசும் அலுமினிய பாத்திரங்களும் கொடுத்து விட்டு மீள்குடியேற்றம் முடிகிறது இன்னும் 60 ,000 பேர்தான் முகாமில இருக்கினம் எண்டு சொல்ல, அதை ஊத்தி பெரிதாக்க சில வெட்க்கம் கேட்ட *****. ஏனையா பெருஞ்சாளியை தானே உயிரோடை குடும்பத்தோடை கொண்டாச்சு பிறகேன் இன்னும் உயர் பாதுகாப்பு வலயம்? அந்த சனங்கள் வாழ்ந்த வீடுகள், வயலுகள் இப்ப எப்படிஎண்டும் தெரியாது. இன்னும் நாடு கடந்த அரசு, வட்டுக்கொடைக்காரர் எண்டு சாட்டுகள் சொல்லாமல் சனத்தை தங்கண்டை இடங்கல்லை வாழதன்னும் விடலாம் தானே. இப்ப இராணுவத்துக்கு வீடு கட்ட போயினம் தானே . இந்த சனத்துக்கு இவளவு நாளும் போருக்கு செலவளிச்ச காசில வீடு கட்டி கொடுக்கலாம் தானே. ஐயா ஒவ்வொருத்தரும் உண்கண்டை முதுகை கழுவ பாருங்கோ. சும்மா புலி ஒரு சாட்டு. எல்லா தமிழ் இயக்க காரரும் ஏதோ பிரபாகரன்தான் துவக்கு தூகினது மாதிரியும் பிரபாகரன் துரையப்பாவை சுடாட்டி தாங்கள் சுட்டிருக்கமாட்டினம் எண்ட மாதிரியும் தாங்கள் ஒருநாளும் இரத்ததை பாக்காதமாதிரியும் இப்ப கூட்டங்களில முழங்கி திரியினம். எல்லாம் தான் இலக்க்ச்சநில வர உதவி செய்த பெருஞ்சாளிஇக்கு செய்ததை பெருஞ்சாளியை கூண்டோட அமுக்க உதவி செய்த பொன்செகராவுக்கு நடக்கிறது நடக்காமல் இருக்க வைக்கிற ஒப்பாரிதான் இந்த அலறலுகள். அதுதானே இப்ப புலியிலை இருந்த முக்கியமானவையும் போட்டி போட்டு மகிந்தவே ராசாவே எண்டு போயினம். முந்தி ஆயுதம் தூக்கினவையும் இப்ப பிளைப்பில்லாமல் கருனாவோடை சேருறதோ நம்ம வெள்ளைவேட்டி மாமாவோடை சேருறதோ எண்டு நடுவில நிண்டு ஆட மஹிந்த ராசாவுக்கு இனி கருணாவும் தேவையில்லை வெள்ளை வேட்டி மாமாவும் தேவையில்லை எல்லாருக்கும் ஒவ்வொருத்தரா டாட்டா சொல்லபோறார். இதிலா கூட்டுகள் யார் யாரோட எண்டு தெரியாமல் எல்லாரும் ஏதோ பிழைச்சா காணும் எண்டு ஒவ்வொரு பக்கமும் புலியிலை மட்டும் பிழையை கண்டு பிடிசுகொண்டு திரியினம். இவையளால தமிழ் சனத்துக்கும் ஒண்டும் செய்ய ஏலாது. தங்களை நிலை நிறுத்தவும் ஏலாது. ஏதோ தாம் எப்படி பிழைக்கலாம் தப்பலாம் எண்டு தங்கண்டை முதுகை சொறிஞ்சுகொண்டு திரியினம்.

    சரி அண்ணை சந்திர ராஜா பெருச்சாளியை பிடிக்க போய் எங்கேயோ போகிறோம், சுத்தி சுத்தி வளையுக்க நிக்கிறோம். இதுதான் தமிழ் மக்களிண்டை நிலையயும் சுத்தி சுத்தி வளைக்கேயே நிக்கிறோம், எப்பதான் வெளியில வந்து சுதந்திர காற்றை சுவாசிக்க போறோமோ தெரியாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...