வீரம் மிகுந்த படையினரால் தாய்நாடு புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் நாட்டின் மீது தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் 2012 வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக அதிகநிதியை ஒதுக்குவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று பிற்பகல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு எதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளை எதிர்கொள்வதற்கு, ஆயுதப்படைகளுக்கு சம்பளங்கள், மேலதிகப் படிகளை வழங்குவதற்கு, படையினரின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களுக்கு, நாட்டின் இறைமையும் அமைதியையும் பாதுகாப்பதற்காக உயிரைக் கொடுத்த படையினரின் பெற்றோருக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்







