Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் வெற்றி – ஒடுக்கு முறைக்கு எதிரான போர்க்குரல் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
03/19/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
15
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற வட கிழக்கில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபடி அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றிகண்டுள்ளது. போரின் கோராத்தால் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் சார்பிலிருந்து தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மறுபடி மறுபடி ஒரே செய்தியைத் தான் கூறிக்கொண்டிருக்கிறது.

புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளிருந்து அன்னியப்பட்ட சந்தர்ப்ப வாதிகள், முன்னை நாள் புலி ஆதரவாளர்கள், இலங்கை அரசின் தமிழர் தரப்பு நீட்சிகள் என்ற அனைவருமே ‘பாதிக்கப்பட்ட மக்கள் அரசியலை எதிர்பார்க்கவில்லை உதவியைத் தான் எதிர்பார்க்கிறார்கள்’ உணர்ச்சியறைந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் சிக்கலான சூழலில் மிகவும் குறித்த்துக்காட்டத்தக்க செய்தியை தமிழ்ப் பேசும் மக்கள் கூறியிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும், பெருந்தேசிய ஒடுக்குமுறை தான் இன்றைய எரியும் பிரச்சனை என மக்கள் கூறியிருக்கின்றது. கூட்டமைப்பின் வெற்றி என்பது பெருந்தேசிய ஒடுகுமுறைக்கு எதிரான ஆழப்பதிந்த குறியீடு! கே.பியின் “மனிதாபிமானம்” வழியாக புலம்பெயர் நாடுகளிலும் வழிந்தோடும் நீலிக் கண்ணீர் அரசியல் வியாபாரிகளின் நாடகம் என தமிழ்ப் பேசும் மக்கள் உணர வைத்திருக்கிறார்கள்.

சிறிய உதவி, பெரிய திட்டம் என்றெல்லாம் பணம் கோரி வாசற்கத்வுகளைத் தட்டும் ஒவ்வொரு கீபோர்ட் புலியெதிர்ப்பு அரசியல் சந்தர்ப்பவாதியும், இலங்கை – இந்திய அரசுகளின் அடிவருயும் இனிமேல் அவர்களின் அரசியல் நாடகத்தை தமது அவலத்தில் அரங்கேற்ற வேண்டாம் என மக்கள் கூறியிருக்கிறார்கள்.
தேசிய இன முரண்பாடு தான் இலங்கையின் பிரதான முரண்பாடு என்பதையும், தேசிய இனனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை 80 களை விடவும் இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உறுதியான அரசியல் வழிமுறைகளற்ற, சோரம் போகும் அரசியல் வாதிகளைக் கொண்ட, இந்திய இலங்கை அரச ஆதரவிற்காக ஏங்கும், உள்முர்ண்பாடுகளோடு ஒட்டுப் போடப்பட்டிருக்கும் கட்சி என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்க முடியாது.

இவ்வாறான சிக்கல்கள் எல்லாம் வன்முறைகள், மிரட்டல்களுக்கு மத்தியில் வாக்களிக்கச் சென்ற மக்களுக்குத் தெரியாத இரகசியங்களல்ல. இவை அனைத்துக்கும் மத்தியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான குறைந்தபட்சச் சுலோகங்களை முன்வைத்தவர்கள் என்ற ஒரே அடிப்படை தான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இச் சுலோகங்கள் கூட வாக்கு வேட்டைக்காக தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டவை என்பது கூட மக்களுக்குத் தெரிந்திருந்தும் மாற்று வழிகளின்றி வழங்கப்பட்ட ஆதரவு தான் இது.

டக்ளஸ் தேவானந்தாவின் அரச பணபலம், அபிவிருத்தி அரசியல், கருணாவின் அமைச்சர் பதவி, கருணா-பிள்ளையானின் பிரதேசவாதம், இவை அனைத்தையும் கடந்து ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் போர்க் குரல் மறுபடி ஒலித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆக, தமது நலன்கள் மீது பற்றும் அக்கறையும் கொண்டவர்களாக் வெளிப்படுத்த முயலும் ஒவ்வொருவருக்கும் தமது பிரதான தேவை இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டமே என மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் சமூக பிரக்ஞை உடைய ஒவ்வொரு மனிதனுக்கும் .விடுக்கும் கோரிக்கைகள் அவதானத்திற்குரியவை

1. இலங்கையின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு.

2. இலங்கையின் இன்றைய பிரதான தேவை மகிந்த பாசிசத்தின் தேசிய இன அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்.

3. ஒடுக்குமுறைகு எதிரானவர்களே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நட்பு சக்திகள்.

4. அபிவிருத்தியையும் மனிதாபிமான உதவியையும் சுட்டிக்காட்டி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை நிராகரிப்பவர்கள் மக்களின் நட்புசக்திகளல்ல.

இதே வேளை மகிந்த அரச பாசிசத்தின் இனவாத அரசியல் சிங்களப் பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. சிங்கள மக்கள் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து கொள்வதற்குத் தடையாக தேசிய இன அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. ஆக, குறுகிய எல்லைக்கு உட்ப்பட்ட தமிழ்த் தேசிய இனவாதத்தை நிராகரிக்கும் முற்போக்குத் தேசியவாத அரசியல் முன்வைக்கப்படும் போது மட்டுமே சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்வர். இலங்கை அரச பாசிசத்தின் அனைத்து மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கும் போர்க்குரலெழுப்பும் பரந்துபட்ட உயரிய அரசியல் சிந்தனையை வளர்த்தெடுக்க எம் அனைவருக்கும் அரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான மக்களின் உணர்வுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பலவீனமான பாராளுமன்ற வாக்குக் கட்சியின் வெற்றி, மகிந்த ராஜபக்ச அரசின் மறுபக்க வெற்றி என்ற மூன்று முரண்பட்ட குறிக் கோடுகள் மற்றொன்றையும் தெளிவாகக் கூறுகிறது. உறுதியான நீண்டகால அரசியல் நோக்கைக் கொண்ட தத்துவார்த்த அடித்தளமும் அதனை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தலைமையும் இன்றைய பிரதான தேவை என்பதே அது.

தமிழ்த் தேசியக் கூட்டமைபு என்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சி தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உணர்வுகளுக்கு எந்த வகையிலும் தலைமை வழங்கத் தகுதியற்றது. முற்போகுத் தேசிய வாதத்தைப் பிரதிநிதிதுவம் செய்கின்ற உழக்கும் மக்களின் அரசியல் தலைமக்கான வழிமுறைகள் அவசரமாக ஆராயப்பட வேண்டும்.

இதற்கான முன் நிபந்தனைகளில் பிரதானமானது இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகத்திற்கான தேவை. அதற்கான அழுத்தங்களை உலகின் போராடும் மக்கள் பிரிவுகளோடு இணைந்து இலங்கைக்கு வெளியில் வாழுகின்ற ஒவ்வொருவரும் வழங்க நிறையவே வாய்புகளுண்டு. இந்த ஜனநாயக இடைவெளி மட்டும்தான் மக்களை அணிதிரட்டுவதற்கான இடைவெளியை வழங்கும். புதிய நம்பிக்கையோடு முன்னெழும் உலக மாற்றங்கள் இலங்கையிலும் எதிரொலிகும். ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னெடுக்கும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ்ப்பாணப் பல்கலைகழக முன்னாள் மாணவர்களின் உதவிக்கான ஒன்றுகூடல்.

Comments 15

  1. Vijey says:
    15 years ago

    தேர்தல் முடிவுகள் குறித்து இன்னமும் விரிவாக நோக்கப்படலாம். இருந்தபோதும் நீங்கள் எழுதியிருக்கிற விடயங்கள் சரியானதே. வட,கிழக்குத் தமிழர்களின் அரசியல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது சரியானதே. த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதற்காக மக்கள் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆயினும் மக்கள் விடுதலைக்கான போரட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கான தகைமைகளை அக்கட்சி இழந்து வருகிறது. இவ்விடயம் குறித்து முத்துக்குமார் என்பவர் பொங்கு தமிழில் விரிவாக எழுதியிருக்கிறார். த.தே.கூட்டமைப்பின் சந்தர்ப்பவதாப் போக்குகள் குறித்து பல தகவல்களை அக்கட்டுரையில் முன்வைத்திருக்கிறார். குறிப்பாக இன்றைய நிலையில் மேற்கொளள்ப்பட வேண்டிய பணிகள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.
    தெற்கில் மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு தமது ஆதரவினை வழங்கியிருப்பதமை தவிர்க்க முடியாத சிங்கள தேசியவாதத்திற்கான ஆதரவாகவே நோக்க வேண்டியிருக்கிறது. அபிவிருத்தி என்ற அரசியல் கோசத்தின் பின்னனியினை சிங்கள மக்கள் ஓரளவு அறிந்தே வைத்திருக்கின்றனர். சிங்கள தேசியவாதத்திற்கான ஆதரவு, அதிகாரங்கள் என்பன ஆளம் கட்சியின் வெற்றியை தீர்மானித்து இருக்கின்றன. அதே வேளை பலமான மக்கள் எதிர்ப்பரசியல் இல்லை என்பதுவும் முக்கியமானதொரு விடயமாகும்.
    விஜய்

  2. YOGA.S says:
    15 years ago

    ///தெற்கில் மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு தமது ஆதரவினை வழங்கியிருப்பதமை தவிர்க்க முடியாத சிங்கள தேசியவாதத்திற்கான ஆதரவாகவே நோக்க வேண்டியிருக்கிறது. ///அல்ல,தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைக்கு சிங்களப் பேரினவாதம் சாமரம் வீசியிருக்கிறது என்பதே சரியானது!ஏனெனில்,வரலாறு காணாத தோல்வியை ஐ.தே.க அடைந்திருக்கிறது.அதனை விடவும் ஒரு படி மேலே போய்,ஜே.வி.பி யும் போர்த்திய பசுத்தோல் உரிக்கப்பட்டிருக்கிறது!த.தே. கூ வுக்கு “இயலாமை”காரணமாக அவர்களின் பாராளுமன்ற அரசியல் அல்லதுநாவலன் பாஷையில்”சோரம் போகும் அரசியல்”தலைமையாக மக்கள் தெரிந்து கொண்டே வாக்களித்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இப்போது த.தே.கூ ஆடுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்!இந்தியா இப்போதும்,பதின்மூன்றிலேயே நிற்கிறது!ஆனால்,த.தே.கூ இப்போது அதற்கும் அப்பால் செல்ல வேண்டுமென்றே பேச்சுக்களின் போது வலியுறுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே!!!!!!!!!!!!

  3. a voter says:
    15 years ago

    தெற்கில் மக்கள் மகிந்தவிற்கு வாக்களித்திருப்பது மகிந்தவின் கொள்கைகளை ஆதரித்து அல்ல. மாறாக அவர்களிற்கு வேறு வழி இல்லை.
    ஐதேக அல்லது ஜேவிபி வரும் பட்சத்தில் ஆதரவளித்தவர்கள் பழிவாங்கப்படலாம். அவர்களிடையேயும் உருப்படியானவர்கள் இல்லை வெற்றி பெறுபவர்களும் விலைக்கு வாங்கப்படலாம்.
    தெற்கைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை பிரதான விடயம் அல்ல.

  4. APPUU says:
    15 years ago

    தமிழ்மக்களின் இந்த மாபெரும் ஆதரவை இராசபக்சே மீதான போர்குற்றவழக்கைத் துரிதப்படுத்துவதற்கானதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.அதுமட்டுமல்ல.இது தமிழீழத்திற்கான ஆதரவு.த தேகூ மட்டுமல்ல தமிழகம் மட்டும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடத்தும்படி கோருவோம்.போராடுவோம்.சாதி மத பேதங்கள் இன்றி ஒன்றிணைந்து ஒப்பு(ற)ரவுமிக்க தமிழீழம் காண்போம்

  5. YOGA.S says:
    15 years ago

    /ஐதேக அல்லது ஜேவிபி வரும் பட்சத்தில் ஆதரவளித்தவர்கள் பழிவாங்கப்படலாம். //அப்போ,இப்போது வாக்களித்து,சில சபைகளை ஐ.தே.க வசப்படுத்தியிருக்கிறதே,அந்த வாக்களித்த மக்கள் “வீரர்களோ?”உண்மையில் ஐ.தே.க மிதவாத அரசியல் கட்சி!ஜே.வி.பி தடம் மாறும் கட்சி.அதாவது அண்மைக்காலமாக வட,கிழக்கில் செய்த பிரச்சாரம்,சமஷ்டி பற்றியதாக இருந்தது!பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு,ஏன் பெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கே கூட சம்ஷ்டியென்றால் என்னவென்றே தெரியாது!ஐ.தே.க வின் கடந்த காலத்தை மீள்பரிசீலனை செய்து பார்த்தால்,குள்ள நரி ஜே.ஆருக்குப் பின் வந்த தலைமைகள் “யுத்தம்”புரிவதில் பெரிதும் விருப்புக் கொண்டிருக்கவில்லை!ரனில் மேற்குலகுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலைப் போரை நசுக்க முயற்சித்திருந்தாலும் கூட இன அழிப்பை மேற்கொள்ள விரும்பியிருந்திருக்கவில்லை!பிரிவினைகளை தூண்டி விட்டு விடுதலைப் போரை மழுங்கடிக்க முயற்சித்தார் என்பது உண்மையே!அதுவே ஜனாதிபதிக் கனவுக்கும் ஆப்பு வைத்தது!பின்னர் நடந்தவைகள் மறக்கவோ,மறைக்கவோ முடியாதவை தான்!எல்லாம் பிராந்திய நலனால் விளைந்தவை!

  6. veeran says:
    15 years ago

    ஐ.தே.க வின் கடந்த காலத்தை மீள்பரிசீலனை செய்து பார்த்தால்,குள்ள நரி ஜே.ஆருக்குப் பின் வந்த தலைமைகள் “யுத்தம்”புரிவதில் பெரிதும் விருப்புக் கொண்டிருக்கவில்லை!ரனில் மேற்குலகுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலைப் போரை நசுக்க முயற்சித்திருந்தாலும் கூட இன அழிப்பை மேற்கொள்ள விரும்பியிருந்திருக்கவில்லை!பிரிவினைகளை தூண்டி விட்டு விடுதலைப் போரை மழுங்கடிக்க முயற்சித்  

    இதனை கொஞம் விலக்க முடியுமா இலங்கயில் விடுதலை போர நடந்ததா என்ன , புலி கொலை தானெ செய்தது

  7. YOGA.S says:
    15 years ago

    ஒரு மாவீரனைப் பற்றி வெறும் வீரனுக்கு விளக்கமளிப்பது என்பது எதன் மீதோ மழை பொழிவதற்கு ஒப்பானது!

  8. அரிச்சந்திரன் says:
    15 years ago

    நாவலனின் கருத்துக்கள் சத்தியமானவை. கூட்டத்தில் உளறும் கோவிந்தா கோவிந்தா கத்துவாங்களே, இரத்தத்தில் இல்லாத கொள்கை அலறும் வித்துவான்களே இனியாவது மக்களின் எண்ணத்துக்கு வடிவம் செய்ய எண்ணுங்கள்.

    வீரனின் பெயரில் எழுந்தருளியிருக்கும் வீணனே, புலிகள் செய்தது கொலைதான் விடுதலைப்போராட்டத்துக்காக. கிணறு தோண்ட பாறை வந்தால் அதை தகர்த்தேயாக வேண்டும். புலிகள் மட்டுமல்ல உண்மையான விடுதலைக்கு உழைக்கப் புறப்படும் எவரும் அதை முட்டிச் செல்வது தவிர்க்கவியலாததே.

  9. S.G.Raghavan says:
    15 years ago

    “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உறுதியான அரசியல் வழிமுறைகளற்ற, சோரம் போகும் அரசியல் வாதிகளைக் கொண்ட,” முற்போக்குவாத எத்தனங்களை மழுங்கடித்து செல்லும் சமுக விடுதலையில் அக்கறையற்ற, சமுகத்தை தற்கொலை விளிம்ப்புக்குள் தள்ளக் கூடிய சிலரை தன்னகத்தே கொண்டுள்ள, ஒரு கட்சி. இருந்தும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும், பெருந்தேசிய ஒடுக்குமுறை தான் இன்றைய எரியும் பிரச்சனை என மக்கள் கூறியிருக்கின்றனர் . கூட்டமைப்பின் வெற்றி என்பது பெருந்தேசிய ஒடுகுமுறைக்கு எதிரான ஆழப்பதிந்த குறியீடு!”

    “இவை அனைத்துக்கும் மத்தியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான குறைந்தபட்சச் சுலோகங்களை முன்வைத்தவர்கள் என்ற ஒரே அடிப்படை தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இச் சுலோகங்கள் கூட வாக்கு வேட்டைக்காக தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டவை என்பது கூட மக்களுக்குத் தெரிந்திருந்தும் மாற்று வழிகளின்றி வழங்கப்பட்ட ஆதரவு தான் இது.”

    “தமிழ்த் தேசியக் கூட்டமைபு என்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சி தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உணர்வுகளுக்கு எந்த வகையிலும் தலைமை வழங்கத் தகுதியற்றது. முற்போகுத் தேசிய வாதத்தைப் பிரதிநிதிதுவம் செய்கின்ற உழக்கும் மக்களின் அரசியல் தலைமக்கான வழிமுறைகள் அவசரமாக ஆராயப்பட வேண்டும்.”

    இதனை கூட்டமைப்பில் இருக்கும் பலருமே உணருவர், ஆனால் அவர்கள் சந்தர்ப்பவாத சக்திகளும் பதவி மோகக் காரர்களும் மோசடிகாரர்களும் கூட்டமைப்பில் கூடாரம் அடித்து இருக்கும் போது எவ்வாறு இவர்கள் ஒரு தேசிய இனத்தின் விடுதலையில் புறச்சிகரமாக சிந்தித்து செயல் படுவர்.

    • THAMILMARAN says:
      15 years ago

      அய்யா ராசா குறூக்கால போன மாட்டைப் பிடித்து பிறகும் குறூக்கால விடுறமாதிரி பேசுற அப்பு. கூட்டமைப்பில் இருக்கிறவ தமிழ் மண்ணீல பிறந்த தமிழர் அவையின்ர சிந்தனை மரபு நமது மண்ணீன் மரபாய் காலங்காலமாய் இருந்து வரும் பண்பு இதை உடனே மாற்றூங்கோ எண்டால் முடியுமே? மக்கள் மொழியை அறீந்து மக்களூக்காய்ப் பேசப் பாருங்கோ.

  10. வரிப்புலி says:
    15 years ago

    “ஆக, தமது நலன்கள் மீது பற்றும் அக்கறையும் கொண்டவர்களாக் வெளிப்படுத்த முயலும் ஒவ்வொருவருக்கும் தமது பிரதான தேவை இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டமே என மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.”

    ஏன் இப்படித் திரிக்கிறீர்கள்?

    இது தமிழீழத்துக்கும் புலிகளுக்கும் வழங்கப்பட்ட ஆணை என்பதைச்சொல்ல ஏன் கூசுகிறீர்கள்?

    ஏன் இந்த சுயலாபக் கபடத்தனம்? தமிழ்த்தேசியக்கூட்டமைப்புபப்ற்றி நீங்கள் சொன்ன அத்தனை அவதூறுகளையும் மக்கள் காதுகொடுத்தும் கேட்கவில்லை என்பதை மக்களின் இந்த ஏகோபித்த ஆதரவு பறையொலித்துச் சொல்லியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு வெட்கித் தலைகுனியுங்கள்.

  11. YOGA.S says:
    15 years ago

    ஈனவும் விடாமல், நக்கவும் விடாமல் இருக்கும் நிலை தான் எஸ்.ஜி.ராகவனுடையது!இறுதி இன அழிப்பின் பின்னரும் இவ்வாறு கூட்டமைப்பு ,மற்றும் தமிழ் தலைமைகள் செயற்படும்,அல்லது செயற்பட வேண்டும் என்று அவர் எதிர் பார்ப்பது போல் உள்ளது அவரின் கருத்து!இவருக்கும் பேரினவாத கருத்துக்களை விதைத்து இலங்கை அரசியலில் ஓர் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பேரினவாதிகளுக்கும்(விமல் வீரமில்லாதவன்ச,சம்பிக்க ரணவக்க,போன்றோர்)வித்தியாசம் எதுவுமில்லை!

  12. Kumar says:
    15 years ago

    நியாயம் இருப்பினும் சிலா் அழவிற்கு மீறி கூட்டமைப்பின் வெற்றியால் ஆத்திரம் கொள்கின்றார்கள் போல் தெரிகிறது.தமிழ் கூட்டமைப்பை விட்டால் வேறு எந்த வழியும் இல்லை என்பதை மக்கள் நன்றாகவே உணா்ந்து நடந்து கொள்கின்றார்கள், இப்போதைக்கு எந்த புனிதனும் அரசியல் நடத்த முன் வந்திருப்பதாக தெரியவில்லை பாதுகாப்பாக இருந்து ஊளைவிடுவதுதான் கேட்கின்றது.

  13. S.G.Raghavan says:
    15 years ago

    தமிழ்மாறன், வரிப்புலி, YOGA.S ,Kumar விமர்சனத்திற்கு நன்றி!
    இதுவிஜே இன் கட்டுரையில் இருந்து என்னை கவர்ந்த விடயம். இதனை மீண்டும் வாசித்து விளங்குவதை விளங்கி கொள்ளுங்கள்.

    மீண்டும் தமிழ் மக்களை, அரசியல் மயப்படுத்தாத, போராடத்தூண்டாத. அணிதிரண்டு பலம் பெறச் செய்யாத ஒரு அரசியல் நிலையிலிருந்து பெறப்பட்ட வெற்றியாகும். அறுபதாண்டுகளின் பின்னரும் தொடர்கிற ஒரு நிலை.
    தேர்தல் வாக்களிப்பை, கூட்டமைப்பின் தமிழ்த் தேசியவாதத்திற்கு கிடைத்தவெற்றியாக கொள்வதுடன் இத்தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கியுள்ள முக்கிய செய்தியானது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரானதாகப் புரிந்து கொள்ளப்படுவதுடன், அரசாங்கப் பலத்தினை எதிர்த்து நின்ற மக்கள் பெற்ற வெற்றியாகவும் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும்.

    மக்கள் வழங்கி வருகிற ஆதரவினால் மட்டும் அரசியல் வெற்றி கிடைப்பதில்லை. அதனை சரியான திசையில் வழிநடத்திச் செல்கிற “அரசியலும்” தேவை.
    “மாற்றுத் தெரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் முழுமையாக இல்லாதிருக்கின்றது என்று கூறமுடியாது” என்பது குறித்து முற்போக்குவாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

    கூட்டமைப்பை நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை எமது உங்களது அனைவரினதும் விமர்சனங்கள் மூலமாக தமிழ் மக்களின் விடுதலை என்பது சரியான இலக்கை நோக்கி தள்ளப் படவேண்டும். கூட்டைமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழரசு கட்சியை முன்னிறித்தி மற்றவர்களை துரத்தி அடிக்கும் செயல் பாடு மாதிரி இருக்கும் சூழலால் வந்த கடுப்பு அவ்வளவுதான். மற்றும் அக்கட்சி முற்போக்கு சிந்தனைகளுடன் பயணிக்கவில்லை என்பதுவும் எனது கணிப்பு.

  14. YOGA.S says:
    15 years ago

    ///கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தி மற்றவர்களை துரத்தியடிக்கும் செயற்பாடு மாதிரி இருக்கும் சூழலால் வந்த கடுப்பு///இது சரியான அணுகு முறை போல் தோன்றினாலும்,உதாரணத்துக்கு த தே.கூ என்பது சாம்பார் போன்றது!ஒவ்வொரு காயும் ஒவ்வோர் சுவை!ஆனாலும் ஒன்றாகிய பின் அது தனிச்சுவை,இல்லையா?காய்கள் தங்கள் தனித்துவம் இழக்காமலிருக்கவே விரும்பும்!///அக்கட்சி முற்போக்கு சிந்தனைகளுடன் பயணிக்கவில்லை என்பதுவும் என் கணிப்பு///இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை!இறுதி இன அழிப்பு முடிந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது!எங்கள் மக்கள் பொறுமையின் இருப்பிடமானவர்கள்!சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார்கள்!மேலும் குறிப்பாக முக்கியமான பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன!மக்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றி விழிப்பாகவே இருக்கிறார்கள்!தூக்கியெறிய நெடு நாள் காத்திருக்க வேண்டியதில்லை!த.தே.கூ சொல்லித் தான் எங்கள் மக்களுக்கு தாயகம்,தேசியம் எல்லாம் தெரிய வேண்டுமென்பதில்லை! கூண்டை உடைத்து வெளியேறியவர்கள்”நடுத்தெருவில்” நிற்பது தெரிந்த விடயம்!பிரதேச வாதம் எடுபடாமல் போனதை இப்போது பார்த்தோம்!இனியும் த.தே.கூ “கொழும்பில்”சொகுசு வாழ்க்கை வாழ தமிழினம் இடம் கொடாது என்பது “தலைகளுக்கும்” தெரியும்!அதனால் கொஞ்சம் பொறுமை காப்போம்!(இன்று விஜயின் அலசலையும் காணவும்)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...