யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னை நாள் மாணவர்களின் ஒன்று கூடல் ஒன்று இன்று (19.03.2011) பிரித்தானியாவின் சரே பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைகம் ஆரம்பிக்கப்பட்ட போது மாணவர்களாகத் தெரிவான சிலரின் முன் முயற்சியின் அடிப்படையில் உருவான ஒன்று கூடலில் மாணவர் சங்க்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இன்று கல்விகற்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான உதவித்திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் இக்குழுவினர் செயற்படத் தீர்மானித்துள்ளனர். பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் சார்ந்த மாணவர்களும் ஏனையோரும் மிக நீண்ட காலத்தின் பின்னான இம் முயற்சிக்கு ஆதரவும் பங்களிப்பும் வழங்குமாறு அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.








I would like to see the statement from the organisers about their aim and so on. Statement from organisers will stop any unwanted speculations.
http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdWgb6eEecQ372
முப்பத்தேழு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த யாழ்.பல்கலைக்கழகத்தின், 45 முன்னைநாள் மாணவர்கள், பிரித்தானியாவின் சரேயில்தான் சடுகுடு ஆடுவார்களோ?வயதான காலத்தில் “முதியோர் கூடல்”,”உண்டியல் குலுக்கல்” நல்ல வழிதான்.
வசதி குறைந்த மாணவர்களுக்கு ஏதாவது மிஞ்சினால் கோடி புண்ணியம்.
I don’t blame NERUNCHI,
30years of arms and GROUP culture, non transparency of majority of our Tamil organisations,failure of MIGHTY LTTE,and so many other factors are forcing us to see anything negatively.It is very sad .
Hope this UNI organisation will change the attitude and culture of our organisations.
You don’t do any thing, sitting and watching the football and so on… when someone starts anything you guys come forward to comment! But just comment..
1 .It would be better to see some good practice in place for our organisations.Such as producing accounts, quarterly report of their progress and let the public know. .so ons. . .
2.currently so many individuals and some small groups are helpingவசதி குறைந்த university students.
It is better to Coordinate with other organisations to share information and workloads on common projects.
Hope this organisation will set a standard for other organisations and work with others as well.
நான் தோல்வி மனப்பான்மையில் இல்லை;எதிர்மறையான கருத்துகளுடன் இல்லை.
முதாதை யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கையில் வலிந்து வந்த செய்தி
(…In the initial years there were also Sinhala students. At that time, no Tamil student could become a student union president in any of the university in the island, because of the numbers as well as the ethnic divide. The only possibility was in the Jaffna University. But even then, the University of Jaffna made a Sinhala student as the first president of the student union. Those who were in the university administration, used all their personal influence to persuade the Tamil students not to contest, citing that it would harm the efforts they were undertaking to build up the university……
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33693),
அதாவது,”அதிகாரத்தின் ஆளுமையில், நம் ஆதார உரிமைகளை அடகு வைத்தோம்” என்கிற வாக்குமூலம்தான் எனக்கேற்பட்ட சந்தேகத்தின் தோற்றுவாய்.
இது யாரைத் திருப்திப்படுத்த?
1.tamilnet is not representing மாணவர் சங்க்க குழு, and the news wasn’t the report from theமாணவர் சங்க்க குழு.
2.media freedom, let them write whatever they wanted to. But orgainsers should issue a clear statement, hopefuly they will issue soon. Wish them all the best.
little aid,nerdo போன்ற இரு தமிழர் சார் உதவி நிறுவனங்களைத் தவிர பேரினவாத அரசு பெரும் கட்டுப்பாடுகளுடன் மற்றைய நிறுவனங்களை இதுவரை அனுமதித்ததாக செய்தியில்லை.
உங்கள் உதவி தமிழ் மாணவர்களை சென்றடையும் உத்தரவாதம் உண்டா?
பணயக் கைதிகளுக்கு படிப்பில் உதவுகிறோம் எனச் சொல்வது,அறுபது ஆண்டு கால இனவழிப்பை மறைக்கவும்,மகிந்தவை மகிமைப்படுத்தவும் மட்டுமே உதவும்.
உங்கள் நல்லெண்ணம் முதலில் அரசியல் தீர்வு,தமிழருக்கு வரும் வரை அகில உலகை நிர்ப்பந்திக்கட்டும்.எந்தவொரு செயலிலும் சரியான ஆரம்பம் பாதி வெற்றி என்பது நினைவிருக்கட்டும்.
‘தமிழ்நெட்டின் சதி’ எதுவென “மூதாதை மாணவர்” அறிக்கை விடட்டும்.
மௌனம கலகநாசம்.
கூடலும்,சட்டவாதி துணையும்,அமைப்புருவாக்கமும்,இணையச் சந்தைப்படுத்தலும், மூதாதை பட்டமும் கொண்டவர்கள்,dani,Thevan2 உட்பட,உங்கள் பின்னணியையும்,முன்னணியையும் வெளிக் கொணருங்கள்.
45 பேர் மட்டும்,37 வருட பல்கலைக்கழகத்தின் மூதாதையராக திடீரென முளைத்த மர்மமென்ன?
யாழ்.பல்கலைக்கழக வரலாறு சில திரிபுபட்ட சம்பவங்களாக வெளிவரும் தேவை என்ன?
/Thevan2 உங்கள்
பின்னணியையும்,முன்னணியையும் வெளிக் கொணருங்கள்///
I don’t blame you,
30years of arms and GROUP culture taught us to see anything through the PRISM of groupism ,rather than understanding the meaning of other’s messages.
வக்காலத்து வாங்கி,வாய்க்கொழுப்பு கதை விடுவதை விட கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால்,தெரிந்தவர்களை முன்னே தள்ளி,சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய். அதை விடுத்து குழுவாதமற்ற,ஆயுதமற்ற உலகில் சஞ்சரிப்பதாகக் காட்டி,மற்றவர்க்கு நொள்ளைக் கண் எனும் வேதாந்தங்களை ஓதாதீர்கள்.
நெருஞ்சி அய்யா
தோல்வி மனப்பான்மை ;எதிர்மறையான காலைப்பிடித்து இழுக்கும் கருத்துகளுடன் தொடர்ந்தும் நிற்க்காமல் இப்பிடியான முயற்சிகளை வாழ்த்தி வழி நடத்துங்கள்.கூடல் நடைபெற்று ஆறு நாட்களே ஆகின்றது. சற்று பொறுமையாக இருங்கள் அவர்களின் அறிக்கை வெளி வரும் வரை
அப்பப்பா எத்தனை கடுப்பு உங்களிற்கு.
சடுகுடு ஆடுவார்களோ?
”,”உண்டியல் குலுக்கல்” நல்ல வழிதான்.
ஏதாவது மிஞ்சினால் கோடி புண்ணியம்
இது யாரைத் திருப்திப்படுத்த?
சென்றடையும் உத்தரவாதம் உண்டா?
மௌனம கலகநாசம்.
திரிபுபட்ட சம்பவங்களாக வெளிவரும் தேவை என்ன?
.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை அறிய துடிக்கிறேன்
சேர்த்தெழுதி,கோர்த்தெழுதி,
பார்த்தெழுதி பட்டம் பெற்றவர்களால்,மக்களைப் புரிந்துகொள்ளல் என்பது,
பிரம்ம சூத்திரமே.
படிச்சவன் எண்டு,
சொல்லிக் கொண்டு இருப்பவர்க்கு,
எழுதப்பட்ட என் ஆக்கபூர்வமான கருத்தை படிக்கவில்லையா அல்லது அது பிடிக்கவில்லையா?
37 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கபட்ட யாழ் பல்கலைகழகம் இருண்ட காலம் , மறுமலர்ச்சி காலம் என பல் வேறுபட்ட காலங்களினுடக பயணிக்கின்றது. எமது மக்களின் தேசிய போரட்டத்திலும், அரசியல் நோக்கை முன்னேடுத்ததிலும் யாழ் பல்கலைகழகத்திற்கு முக்கிய பாத்திரமுண்டு. இதற்காக எல்லா மாணவர்களும் பங்காற்றினார்கள் என்று அல்ல.
அரிசியல் இருந்து அணு குண்டு வரை (உங்கள் செயற்பாடு உட்பட ) செறிந்து இருப்பது அரசியல் தான். “முன்னை நாள் யாழ் மின்சார ஊழியர் சங்கம்”, முன்னை நாள் தமிழ் பொலிசார் சங்கம்” என்பது போல் கூடி குலாவ ஒரு சங்கம் அமைத்தால் அதில் தவறல்ல. ஆனால் தாங்கள் அமைக்கும் வள்ளலார் சங்கம் அந்த மக்களின் 60 வருட அரசியல் போரட்டத்தினை கொச்சை படுத்துவதாய் உள்ளது.
விசுவாசம் மிக்க அடிமையிடம் வீரியத்தை எதிர்பார்க்க முடியாது அல்லவா.
ஒரு பேராசியரையும் சில தலைமையாசியர்களையும் மதகுருக்களையும் அழிப்பதற்கு ஒரு இனம் ஒப்புதல் அழிப்பதாக இருந்தால் அந்த இனம் வாழ்வதிலும்
நீறாகப் போவதிலும் அர்த்தம் உண்டு.
வாழ்வதிலும் பார்க்க நீறாகப் போவதில்….என்று திருத்தி வாசிக்கவும். தவறுதலுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.
கம்யுனிசம் பேசுவோர் “ஒரு பேராசியரையும் சில தலைமையாசியர்களையும் மதகுருக்களையும் அழிப்பதற்கு” பதிலாக “இனத்தையே நீறாக்கலாம்” என்கிற ‘அறளைக் கருத்துகள்’,எந்த அகிலத்தில் சேர்த்தி?
பார்பதற்கு ஒற்றைக் கண்னோ கடிப்பதற்கு பல்லோ இடையூயளிப்பதாகஇருந்தால் அதை புடுங்கியெறிந்து விடுங்கள் என்றுதானே வேதங்கள் சொல்லுகின்றன. இதற்கு போய் ஏன்? அகிலத்தில் போய் மோதுபட்டு இடறுப்படுகிறீர்கள்? நெருஞ்சி. ஒருஇனம் மற்றைய இனத்திற்கு துன்பம் கொடுப்பதாக இருந்தால் அழியவேண்டியது தவிர்க முடியாததே! ஆனால் இங்குள்ள பிரச்சனை என்வென்றால் தன்னிமே ! தன்னையழித்துக் கொண்டது தான் பிரஷ்தாபிக்கப்பட வேண்டிய விஷயம். அதாவது புலம்பெயர் தமிழருக்கான ஈழவாழ்தமிழ்மக்கள் மரிக்கவேண்டும் என கோருவது. கொஞ்சம் விளக்கம் கூடுதலாக சொல்லவேண்டுமாக இருந்தால் உங்களைதான் முதல் உதாரணமாக எடுக்கலாம் நெருஞ்சி………முள் ?.
“மதம் ஒரு அபின்” என்ற மாக்சை, மதவாதத்துடன் மசாலா பண்ணி,மசி(கி)ந்த வாதம் செய்யும் சந்திரன் ராசா!
“வாழ்வாதாரத்தை தேடித் போராடுகிறவர்களை அழித்துவிடல்”என்ற வேதத்திற்கெதிராய்த்தான் மாக்சிசம் பிறந்தது.
ஆயினும் கொன்றுவிடு என்ற கொள்கை வகுப்பாளர்கள்தான்,கோலோச்சுகிறார்கள்.
அதற்கு கொடி பிடிப்பவர்கள்,”கொம்யுனிசம் பறையிரவர்களாக” இருப்பதுதான் வேதனை.
நேற்று வந்த புலம் பெயர் தமிழனிடனான புடுங்குப்பாட்டில், போராடிய இனத்தையே புடுங்கி போடலாம் என்பது, எந்த மனித சிந்தனை?
உமது சொகுசு வாழ்விற்கு முப்பது வருடங்கள் நேற்றுமாதிரி தோற்றம் அளிக்கிறதா? இது ஒருமனிதனின் அரைவாழ்வாண்டு காலமல்லவா!. 1983 யூலையில் ஓடத்துவங்கிய ஈழத்தமிழன் 2009 மே மாதம் 19 ம் திகதிதானே! ஓடுவதை நிறுத்தினான். இதைபூரணமாக விளங்கினால் மட்டுமே ஒரு சதாரணமனினுக்கு தத்துவதேடல் இருக்க முடியும். இதில் தாங்கள் மாக்ஸியம் பற்றி கதைப்பது டாம்பீகமாக அளவுக்குமிஞ்சிய செருக்குத்தனமாகவே இருக்கிறது திருவாளர் நெருஞ்சிமுள் அவர்களே!. தங்களுடன் உள்ளதையெல்லாம் அவிழ்துவிடுங்கள். இதை விலைபேசி விற்றாக வேண்டும்.ஒரு பழைமைவாய்ந்த சமூகம் தன்னை திருத்திக்கொள்வதற்கும் புணரமைப்பு செய்வதற்கும் உங்களை சந்ததைப்படுத்தி கூவிவிலை பேசுவதால்மட்டுமே! சாத்தியம் ஆகும்.
உதவிகளில் வாழவேண்டியவர்களாக்கப்பட்டுள்ளது எமது சமூகம். . தற்போது நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்கொலைச் செய்திகள் நாளந்தம் வந்து கொண்டிருந்து காலம் இப்போது இல்லை. தலைநிமிர்ந்து வாழும் துடிப்புடன் எல்லாத்துயரங்களையும் நெங்சுக்குழிக்குள் இட்டுப் புதைத்து விட்டு மனிசர்களாக நடக்கத்தொடங்கியிருக்கிறார்கள். புரட்சி வரும்போது வரட்டும். தற்போதைக்கு மெழுகுவர்த்தியையாவது ஏற்றி வைப்போம் எ;னகிறார்கள் அன்பர்கள் பலர். இன்று பல பல்கலைக்கழக அன்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்கள். இந்த முயற்சியும் வெற்றியடைய வேண்டும். எழுவோம் மறுபடியும் என்று புறப்பட்டால் .. .”
வட்டுக்கழண்டு போன பனைமரங்களைப் பாரத்து ஏன் பெருமூச்செறிகிறீர்கள்- கீழே வளர்ந்து வருகின்றன வடலிகள். அவை வானுயர வளரும்” என்பது ஒரு பள்ளி மாணவனின் கவிதை வரிகள். நம்பிக்கையுடன் விஜய்
////என் ஆக்கபூர்வமான கருத்தை படிக்கவில்லையா ///
சடுகுடு ஆடுவார்களோ?
”,”உண்டியல் குலுக்கல்” நல்ல வழிதான்.
ஏதாவது மிஞ்சினால் கோடி புண்ணியம்
இது யாரைத் திருப்திப்படுத்த?
சென்றடையும் உத்தரவாதம் உண்டா?
மௌனம கலகநாசம்.
திரிபுபட்ட சம்பவங்களாக வெளிவரும் தேவை என்ன?
இவ்வளவு கேள்விகளும் ஆக்கபூர்வமான கருத்தை தான் கூறி நிற்பதாயின், என் புரிதலை மன்னிக்கவும்.
சந்திரன் ராசா! நான்,உங்கள் ‘மசாலா காட்டிய மந்திரம்’ பேசினால்,உங்கள் வெளிநாட்டு வாழ்வின் தந்திரம் சொல்கிறீர்கள்.
“விலை பேசி விற்கும்”,”கூவிவிலை பேசுவதால்மட்டுமே” என்ற,உங்கள் வாழ்வு நிலை பற்றி பேசுகிறீர்கள்.
ஒவ்வொரு கொப்பாகத் தாவிக்குதித்து விளையாட்டுக் காட்டாதீர்கள்.
அரைவேக்காட்டுத்தனங்களை இங்கே கொணர்ந்து,அசை போடாதீர்கள்.
எம்மினத்தின் போராட்டம், அறுவது வருசத்திற்கு மேலானது என்பது தெரியாத தத்துவத் தேடல் யாருக்கு வேண்டும்?
அறிவு இருப்பவனுக்கும்,நீண்டகாலப்போராளிக்கும், ‘அளவுக்குமிஞ்சிய செருக்கு’ வரும் என்பதை,அறைந்து சொல்லுமுன், அடங்கிக்கொள்ளும்.
அடங்காத் தெமிள! இது நான்காம் அகிலத்தில் ஒரு நாற்காலி தேடல்.
அட முன்னாப் பசங்களா!
மாசம் ஒண்டு தாண்டிற்று.குலுக்கல்,கிலுக்கல் எண்டு,ஒண்டுமா தெரியல்ல.இன்னும் ‘இன்’னோ ‘அவுட்’டோ?