படகு சேதம் அடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு சேதமடைந்ததாகவும் இதனால் நீரில் மூழ்கிய படகில் இருந்த 4 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் மீட்டதாகவும் அந்நாட்டு போலீஸôர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட 4 மீனவர்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திரிகோணமலைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் மீனவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் வரை கொழும்பு அருகே உள்ள, குடியுரிமை இல்லாதவர்களுக்கான தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.







