சென்னையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்கள், தாங்கள் சார்ந்த கட்சியின் கொடிகளையோ, கட்சியின் தலைவர்களின் புகைப்படம் அடங்கிய பேனர்களையோ கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு புறத்தில் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சந்தர்ப்பவாதைனவாதிகளாலும், மறு புறத்தில் ஏகாதிபத்திய ஆதரவு, இலங்கை அரச ஆதரவு சக்திகளாலும் சீரழிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தில் கருணாநிதியின் வலிந்த தலையீடு கேலிக்குரியதும் ஆபத்தானதுமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது, சப்ரகமுவ மாகாணசபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள், கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு, நெருக்கடிமிக்க அரசியல் கைதிகளின் விவகாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகளை எடுப்பதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு கட்சி தலைமையகத்தில் கூடவுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கட்சியின் அனைத்து அரசியல்குழு உறுப்பினர்களுக்கும், அரசியல் குழுவில் அங்கம் வகிக்காத கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Wimal Weerawna said it right. The politicians in Tamil Nadu should shut up. Sri Lankan Tamils have made it into a West Bengal. Americans are promoting Karu Jayasuriya who once said that the two provinces will have sufficient powers as the States in India.