இலங்கையில் இன்னும் 383 முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “சமாதானத்தை இறுதிப்படுத்தலும், நிலைகொள்ள செய்யலும்” என்ற தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் புனவர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சரணடைந்த போதும், அவர்களை கட்டம்கட்டமாக புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்தி, விடுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் 51 ஆயிரத்து 400 வெளிநாட்டினர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அவர்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








This is some consoling news to me. I think about them everyday.