இலங்கையில் டெங்குக் காய்ச்சலினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள்ளை ஊடகங்கள் வெளியிடவில்லை. கடந்த 5 மாத காலப்பகுதியில் நாடெங்கிலும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த வருடத்தின் கடந்த 5 மாத காலத்தில் நாடெங்கிலும் 11 ஆயிரத்து 403 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதோடு 53 பேர் நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தவருடம் கியூபாவில் இருந்து இறக்குமதியான டெங்குக் கொசுக்களை அழிக்கும் தீங்கற்ற கொசு வகைகளால் நோய் பரவும் தன்மை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தவருட முற்பகுதியில் காரணம் எதுவும் இன்றி இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்தது.
இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டதற்கும் டெங்குக் காய்ச்சல் அதிகரிப்பதற்கும் பின்னணியில் கொசுச் சுருள்களை உற்பத்திசெய்யும் இந்தியப் பெரு நிறுவனங்களே காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பசில் ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் கொசுச் சுருள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக்கொண்டு கியூபாவின் டெங்கு எதிர்ப்புக் கொசுக்களின் இறக்குமதியை நிறுத்தியதாகத் தெரிவித்தார்.








This is a national priority as we may have this problem here at Batticaloa, too.