புலம் பெயர் நாடுகளின் தமிழர்களதும் இந்தியாவின் தமிழ் இனவாதத்திற்கு உட்பட்டோரின் ஆதரவுத் தளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குப் பொறுக்கிக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக இரட்டைவேடம் போடுகிறது. அக்கட்சியில் ஏக தலைவரான இரா.சம்பந்தன் சிங்கக் கொடியோடு காட்சி தரும் அதே வேளை அதன் மற்றொடு பாராளுமன்ற உறுப்பினரான சிறீ தரன் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.
‘எமது இறுதி நோக்கம் தமிழீழம். அதனை விரைவில் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வீக்கெண்ட் லீடர் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.








ஐயா உங்கள் சிங்கக் கொடி புகழ் தலைவரிடம் கலந்தாலோசித்து விட்டா இப்படியான பேட்டிகள் கொடுக்கின்றீர்கள். இன்னமும் எம்மை ஏமாற்றித் திரிய எண்ணதீர்கள். உங்கள் கருத்து பக்த்தில் ஒரு கிழவன் சொன்னதற்கும் வித்தியாசமில்லை. இன்று வரை நீங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்குப் பதில் என்ன செய்தீர்கள்? எம் உறவுகள் இன்னமும் கொடும் சிறைக் கூடங்களில் அவர்களின் விடுதலைக்கு எத்தனை தரம் தரம்கெட்ட கொலைவெறியரசுடன் போராடியிருப்பீர்கள்? முதலில் இவைகளைக் கவனியுங்கள். எமக்கு நிச்சயமாகத் தெரியும் எம் மண் விரைவில் மீட்கப்படும் எனபது. அதற்கான போராட்டங்கள் புலம் பெயர் தேசங்களில் ஆரம்பித்து விட்டது. உங்கள் சுயநல அரசியலுக்காக எம் உண்ணத இலட்சியத்தை கேடுகெட்ட அரசியலாக்காதீர்கள்.
Sri Lankan Tamils will not support this in the future.
There is Ministry for the three R’s – Reconstruction, Rehabilitation and Reconciliation. Sri Lanka Tamils will not support anything else.