ஜே.வி.பியின் அதிருப்தியாளர்கள் குறித்து ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பியின் பொதுசெயலாளார் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்காக பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஜினதாஸ கிட்டுலேகொட மற்றும் லச்மன் நிபுணாராச்சி ஆகியோரை கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்சியையோ கட்சி தலைமையையோ கட்சியின் எந்த உறுப்பினரும் விமர்சிக்கமுடியாது என்று கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளது.
எந்த உறுப்பினரும் ஊடகங்களுக்கு தமது கருத்தை வெளியிடுவதற்கு கட்சி தலைமையின் அனுமதியை பெறவேண்டும் என்றும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்ற வேளையில், எவருக்கும் கையடக்க தொலைபேசியை எடுத்துவர அனுமதியில்லை, எனினும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அதிருப்தியாளர்கள் சிலர் கையடக்க தொலைபேசிகளை தம்முடன் எடுத்து வந்தனர். இதன்போது அவர்கள் கூட்டத்துக்கு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டதாக டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி யின் பிரிந்த குழுவினர் மத்திய குழுவின் 23 உறுப்பினர்கள் எனவும், விரைவில் கட்ச்சி ஒன்றை அவர்கள் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது. .







