Tuesday, June 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களிலிருந்து யாரும் இலங்கை செல்லக் கூடாது : வை.கோ

இனியொரு... by இனியொரு...
11/30/2011
in இன்றைய செய்திகள்
0 0
16
Home இன்றைய செய்திகள்

தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என வை.கோ அறிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 14, 15 தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்டிடியூட் ஆப் ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட்டிரெய்னிங், ஸ்ரீலங்கா  என்ற நிறுவனத்தின் சார்பில் மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகின்றது.
இதில் பங்கேற்க லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்விதக்கவலையும் கொள்ளாத, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் செல்கிறார்கள். அதே போல தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். கருத்தரங்கம் நடத்தும் அமைப்பினர் அவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழகப் பல்கலைக்கழகங்களில் இருந்தும், அரசுக்கல்லூரிகளில் இருந்தும் விரிவுரையாளர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்துவ தாக உள்ளது.
லட்சக்கணக்கான தமிழ் மக்களைக்கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலவும் ஆகிறது. எனவே தமிழகத்துப் பேராசிரியர்கள் இலங்கை செல்வதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் விலைக்கு வாங்கும் திட்டம் ஒன்றை ராஜபக்ச அரசு தனது புதிய வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்திருந்தது.
எது எவ்வாறாயினும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தைத் தமிழினம் என்ற எல்லைக்குள் முடக்கி குறுகியதாக்குவதாக வை.கோ போன்றவர்களின் தமிழினவாதநடவடிக்கைகள் அமைகின்றன.
இந்தியா முழுவதும் வாழும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் நிலை உருவாக வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அனைத்து இலங்கைச் சிறைகளிலும் போராட்டம் : அனுராதபுர சிறைத் தாக்குதல் எதிரொலி

Comments 16

  1. veeran says:
    15 years ago

    அவர் மட்டும் கள்ளத்தனமாக போவார், இவர் தானும் கெட்டு எங்களையும் கெடுத்த கோமாளி, மக்களாள்நிராகரிக்கபடவர், கப்பலும் ஓடுகின்றது, விமான போக்குவரது அதிகரித்துள்ளது, கொழும்பில் இந்திய் உல்லாச பிரயாணிகள் அதிகம், இதில் வைகோவை யார் கேட்டார்கள்

  2. Rajagopaalan.V says:
    15 years ago

    நீங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்தானா? ஏன் இப்படி உணர்வற்ற சடம் போல் பேசுகீறீர்கள் என்று தெரியவல்லை.
    வைகோ போன்ற தன்மான தமிழனுக்கு என்றும் எங்கள் போன்ற இளைஞர்கள் துணை நிற்போம்.

    வீ.ராஜகோபாலன் எம்.ஏ.பி.எட்

    • Thevan 2 says:
      15 years ago

      வீ.ராஜகோபாலன் எம்.ஏ.பி.எட்///

      வைகோ புகழ் பாட எம்.ஏ.பி.எட் கட்டாயம் தேவை பட்டால், உம் பெயரின் பின்னுள்ள
      எம்.ஏ.பி.எட் ஏட்டுச் சுரைக்காய் தான்.

      தேவன் MPhil(LSE)

      • நெருஞ்சி says:
        15 years ago

        சபாஷ் சரியான போட்டி.

        வைகோ புகழ் பாட எம்.ஏ.பி.எட்;

        வைகோ இகழ் பாட MPhil(LSE).

  3. Rajagopaalan.V says:
    15 years ago

    வைகோ தமிழ் பற்றுள்ள தன்மான தமிழன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    அவர் பேச்சு மூச்சு எல்லாமே தமிழனின் வாழ்கை பிரச்சனைகளைதான் பேசுவார்.
    அவரை பேச யாருக்கும் அருகதை இல்லை.

  4. Annadurai says:
    15 years ago

    வை.கோ அவர்கள் கூற்று சரியானதே. தமிழன் என்று சொன்னால் தவறா?

  5. பார்த்திபராசன் says:
    15 years ago

    ஹாஹாஹா.. வைக்கோவுக்குத் தமிழ்ப்பற்றா ?!!… தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இதுவரைக்கும் செய்திருக்கின்றர்?

  6. veeran says:
    15 years ago

    தாங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எஙகள் தலையில் மிளகாய் அரைக்க்க வேண்டாம், முடிந்தால் திருச்சியில் இருந்தும் சென்னையில் இருந்தும் இங்கு வரும் உல்லாச பிரயாணிகளைநிற்பாட்ட முயற்சியுங்கள், வைகோ வீட்டில் தெலுஙு தானே பேசுவார், இவர் தானும் கெட்டு எங்களையும் கெடுத்த கோமாளி

    • Santhakumar says:
      15 years ago

      இப்பொது உள்ள அரசியல்வாதிகலளிள் இனமான Vஉணர்வோடு செயல்படுபவர் வைகோ மட்டுமெ. அவரை தூற்றினால் இழப்பு அவருக்கு அல்ல

      • veeran says:
        15 years ago

        பிரபாகரன் வைகோநெடுமாறன் இவர்களால் இங்கு எங்களுக்கு ஒருநன்மையும்நடக்கவில்லை, இருந்த உரிமயும் போனது தான் மிச்சம், என்வே வைகோவை, எஙகள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம் என்று சொல்ல்லவும்

      • veeran says:
        15 years ago

        பிரபாகரன் வைகோநெடுமாறன் இவர்களால் இங்கு எங்களுக்கு ஒருநன்மையும்நடக்கவில்லை, இருந்த உரிமயும் போனது தான் மிச்சம், என்வே வைகோவை, எஙகள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம் என்று சொல்ல்லவும், தமிழ்நாட்டில் இருக்கும் தலித்துக்கலுக்கு உதவட்டும்

  7. Thevan 2 says:
    15 years ago

    The report also mentioned an incident in May 2009 when Union Minister P Chidambaram “contacts Prabhakaran and suggested the LTTE agree to a pre-drafted statement that they will lay down their weapons”. The reports says that “the document was leaked to Vaiko who rejected it as a Congress trick and assured the LTTE that the BJP will win the polls and “rescue” them.

  8. manithan says:
    15 years ago

    அண்ணன் வைகோ கணக்கு காட்டமல் தவிர்க்க பிரபகரன் இருக்கிறார் கூட்டம். கொலைகாரன் ராஜபக்சவுக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுச்சிகள் வராமல் இருக்க பிரபாகரன் இருக்கிறார் மந்திரம் சொல்லும் மகான்.
    phd (oxford -vanni)

  9. kavi yazhini says:
    15 years ago

    தமிழ்நாடு பல்கலைக்கழகங்களிலிருந்து யாரும் இலங்கை செல்லக் கூடாது :  இது ஒட்டுமொத்தத் தமிழர்களின் கருத்து

    • Thevan 2 says:
      15 years ago

      ஒட்டுமொத்தத் தமிழர்களின் கருத்து/// ப சிதம்பரம் , ஜெகத் கஸ்பராஜ்,மு .கருணாநிதி,சீமான் ,திருமாவளவன் (தா பாண்டியன் ,டாக்டர் ராமதாசை தமிழினம் மறந்தே பல யுகம் ஆச்சு) ஆகியோரும் தமிழர்களே.இவர்களில் ஒருவர் தானும் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு வெளியே சிந்திப்பவர்கள் அல்ல .போதாக்குறைக்கு இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு எதிராக , தமிழ் தேசிய இனத்திற்கு ஆதரவான ஒரு அரசியல் தமிழ் நாட்டில் உருவாவதை தடுப்பது தான் இவர்கள் தீவிரமாக இப்போது செய்து கொண்டிருப்பது .இவர்களின் முகமூடிகள் கிளிகப்படும்,தமிழ் நாட்டு மக்களால் கிழித்து எறியப்படும்.

  10. நெருஞ்சி says:
    15 years ago

    ஒவ்வொரு ஈழ இயக்கக்காரர்களும்,இந்திய தமிழக அரசியல்வாதிகளும் ஆளையாள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
    அன்றாடம் காய்ச்சி அரசியலால்,ஈழத்தமிழினம் பணையக் கைதிகளாக,இன்று எம்முன்னே வதைபட்டுக் கொண்டிருக்கிறது.

    எம்மால் நண்பர்களை உருவாக்க முடியாவிட்டாலும்,எதிரிகளை உருவாக்காமல் இருக்கப் பழகிக் கொள்வோம்.

    மத்திய கிழக்கு நாடுகளைக் கையகப்படுத்திய மேற்கு நாடுகளின் கரிசனை சீனா-இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.இதில் புலம்பெயர் தமிழர்கள்,துடைப்பங்கட்டைகளாக பாவிக்கப் படப்போகிறார்கள்.

    எங்களுக்கு இராஜதந்திரம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை;”நா காக்க” முயற்சிப்போம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...