ஜீ மெயில் (gmail)என்ற மின்னஞ்சல் கூகிள் தேடுபொறி சேவையினால் வழங்கப்படுகிறது. சீனாவில் ஜீ மெயில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசிற்கான உளவுச் சேவையில் கூகிள் ஈடுபடுவதாக எட்வார்ட் ஸ்னோடென் உட்பட பலரால் ஆதரங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிசத்திற்கான வளர்ச்சிப்பாதையான சோசலிச சமூகத்தின் அதிகாரத்தை சீன முதலாளிகள் கையகப்படுத்திய பின்னர் சீனா முதலாளித்துவ முகாம் ஒன்றை உருவாக்கி வருகிறது.
அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ முகாமுடன் சில உள்முரண்பாடுகளைக் கொண்டுள்ள சீனா, அமெரிக்கப் பல்தேசிய வியாபார நிறுவனமான கூகிளின் மின்னஞ்சல் சேவையைத் தடை செய்துள்ளது.
அமெரிக்க அரச திணைக்களப் பேச்சாளர் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். வியாபார நிறுவனங்களுக்கு எதிராக வெளிப்படைத் தன்மையைப் பேணுமாறு கேட்டுகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கூகிள் நிறுவனத்தின் சந்தைப்படுத்தலில் இத் தடை பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.








