யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இவர்களில் இருவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளுர் அரசியல்வாதியின் அலுவலகம் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக உரிய முறையில் வழக்குத் தொடரப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
சந்தேக நபர்கள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடத்தப்படுதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை கூட வழங்கபடாமல் சிறைகளிலேயே இருந்த இடம் தெரியாமல் மரணித்துப் போகின்றனர். சர்வதேச மன்னிப்புச் சபை அவ்வப்போது அறிக்கைகள் இவை அனைத்துக்காகவும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்படும் மக்களுகளுக்கு அறிக்கைகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது தெரிந்து நாளாகிவிட்டது.









Are you all talking about the Amensty International? The Tamil translation may convey a different meaning. The Amensty International do not have any leverage with any government in the world.