‘மக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் போது இனமத வேறுபாடுகள் காணப்படாது. எல்லா இனங்களுக்கும் ‘சம உரிமை’ பெற்று ஒன்றாக வாழ்வதே எமது பிரச்சனைகளுக்கான தீர்வு. இன அடிப்படையிலான வேறுபட்ட நிர்வாகங்கள் கொண்ட அமைப்பு இந்த நாட்டில் நடைமுறைச் சாத்தியமற்றது’. என்று இலங்கையின் இனப்படுகொலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சி ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக முழங்கிய அதே ‘சொல்லாடல்களின்’ எதிரொலி இன்னும் கேட்டுக்கொண்டிருக்க மகிந்த ராஜபக்ச இலங்கையின் 65 ஆவது சுதந்திரதினத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் இன ஐக்கியம் குறித்த இக்கருத்து தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் மேலும் வெறுப்புணர்வையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும். அதே வேளை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவுத் தளத்தை அழிப்பதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் சுய நிர்ணய உரிமைக்கான குரல் மட்டுமே தமிழ் சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும் இணைவை ஏற்படுத்தும் என்ற உண்மை உரக்கச் சொல்லப்பட வேண்டும். இனவாதத்திற்கு எதிரான போராட்டம் இதுவே என்று அறிவிக்கப்பட வேண்டும். மகிந்த ராஜபக்ச கட்சி முன்னிலை சோசலிசக் கட்சி போன்றன சிங்கள மக்கள்மத்தியிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக கூக்குரல் போடும் மகிந்த ராஜபக்ச, ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இனவாதிகள் தமது நாட்டின் எல்லைக்குள் தேசிய இனங்களை ஒடுக்குவது மக்களுக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்..









There is no need for another Political Party in the North and East of Sri Lanka – Shri Lanka. 1952. D. A. Rajapakse. 1970. Percy Mahendra Rajapakse – President Mahinda,
What do you think we need another bowl of rice ?
தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு நிர்வாகத்தைப் பிரித்துக் கொடுப்பதில்,ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதில், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதில் சிங்கள இனவாதிகளுக்குப் பிரச்சினைகள் இருக்கல்லாம். ஆனால் தம்மை முற்போக்கு வாதிகள் என்று புலம்பித்திரியும், மாற்று சக்திகள் என தம்மைக் காட்டிக்கொள்ளும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கு என்ன பிரச்சினைகள் …..
முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்குநம்பிக்கை தரக்கூடிய எந்த ஒரு அரசியல் சக்தியையும் தமிழ் சமூகம் இதுவரை காணவில்லை என்பதே யதார்த்தம்..
முன்னிலை சோசலிசக்கட்சியிலும் பார்க்க மகிந்த வெளிப்படையாகப் பேசுகிறார்……..
ஒரு பொருளானது தனக்கு புறம்பாகவுள்ள ஒரு விசையினால் அழுத்தப்பட்டு முடுக்கப்பட்டாலேயன்றி அது தனது மறா இயக்கநிலையினேலும் அல்லது நேர்கோட்டு இயக்கநிலையினேலும் நிலைநிற்கும்.
திருத்தம் – ஒரு பொருளானது தனக்கு புறம்பாகவுள்ள ஒரு விசையினால் அழுத்தப்பட்டு முடுக்கப்பட்டாலேயன்றி அது தனது ஓய்வு நிலையிலேனும் அல்லது மாறா நேர்கோட்டு இயக்கநிலையினேலும் நிலைநிற்கும்.