தெரண தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியை நடத்தும் தில்கா சமன்மலிக்கு கடந்த சில தினங்களில் தொடர்ந்தும் தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மிருகவதை, மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளும், அன்னிய நாட்டு உள்வு நிறுவனங்களாலும் கோத்தாபய ராஜபக்ச என்ற இலங்கை இனக்க்கொலையாளியாலும் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் என்ற பௌத்ததுறவி.
சிங்கள பௌத்த பேரினவாதியான இந்தத் துறவிக்கு மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்கான நீண்டகால வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளது. தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியின் போது மதுவிலக்கு துறவியான ஞானசார தேரரரை நோக்கி அந்த வழக்குத் தொடர்பாகக் துணிச்சலான கேள்வியைக் கேட்டவர் தில்கா சமான்மலி. இவருக்கு இந்தக் கேள்விக்காகாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.
பொதுபல சேனா முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்குச் சென்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் கிரிமினல் அமைப்பு. இதன் உறுப்பினர்களான கிரிமினல்களிடமிருந்து எதனை எதிர்பார்க்கமுடியும்.








Alcohol has been with the man since the time of Aristotle. I stopped it in again in March 31, 2008 as in the Summer of 1992in Indiana, USA.