இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பாரக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்போது இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்தியத் தலைவர்கள் பெருமளவுக்கு ஏமாற்றமடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இலங்கை அரசின் மீது நம்பிக்கை வைக்க முடியாது எனக் கருதுகின்றார்கள். கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசு காப்பாற்றுவதில்லை எனவும் அவர்கள் நம்புகின்றார்கள் எனவும் குறிப்பிடுகின்றார்.
13 வது திருத்தச்சட்டத்தை இந்தியா விட்டுக்கொடுக்காது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப காலங்களிலிருந்தே இந்தியாவின் அடியாளாகச் செயலற்றுவதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கைதேர்ந்தவர். திருத்தச்சட்டத்தை இந்தியா விட்டுக்கொடுக்காது என்று சுரேஷ் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலிருந்து இந்தியாவில் தரைதட்டிய குழுவும் கூறிவருகிறது.
அதேவேளை வட மாகாண சபைத் தேர்த்தலை முடித்துவிட்டு 13 வது திருத்தச்சட்டத்தில் மாற்றம் செய்யலாம் என இந்திய அரசு இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களும் சிங்கள பௌத்த மயமாக்கலும் தடையின்றி நடைபெற்றுவருகின்றது. கிழக்கின் முன்மாதிரியைப் பயன்படுத்தி வடக்கில் இன்னும் சில காலங்கள் தமிழர்களின் தொகையைச் சிறுபான்மையாக்கிவிடுவார்கள். ஒரு புறத்தில் சிங்கள மக்களைக் குடியேற்றவும் பல்தேசிய நிறுவனனங்களுக்கு நாட்டை அடகுவைக்கவும் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களின் நிலங்கள் துரித கதியில் பறிமுதல் செய்யப்படுகின்றன. இன்னும் சில குறுகிய வருடங்களுள் வடக்கில் தமிழ் மக்கள் சிறுபான்மையாகிவிடும் நிலையே காணப்படுகின்றது.
நிலப் பறிப்பின் மீதான கவனத்தைத் திசைதிருப்ப முடுக்கிவிடப்பட்டுள்ள தமிழ் முகவர்களைப் போலவே சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் செயற்படுகின்றனர்.








///New Delhi has advised Colombo to refrain from any such changes until the elections to the Northern Province Council are held/// per DBS
Honourable Suresh Premachandran must be happy that he is one of the four that got invite by the Americans. That is for four different reasons.