இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே மாவட்டத்தில் அமைந்திருந்த மூன்று மாடி வீட்டுமனைக் கட்டிடமே இன்று அதிகாலை இடிந்துவிழுந்துள்ளது.
கட்டிடம் இடிந்தமைக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த நகரங்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் மோசமான கட்டுமான குறைபாடுகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தானே மாவட்டத்தில் இதற்கு முன்னரும் கடந்த ஏப்ரல் மற்றொரு கட்டிடம் இடிந்துவிழுந்ததில் 74 பேர் பலியானார்கள்.
இம்மாதத்தின் ஆரம்பத்திலும் மும்பை நகரில் 5மாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை இடிந்துவிழுந்த கட்டிடத்தில் 9 குடும்பங்களின் வீட்டுமனைகள் அமைந்துள்ளன. பலரும் தூக்கத்தில் இருந்தபோது கட்டிடம் இடிந்துள்ளது.
பல்தேசிய நிறுவனங்களுக்கு சேவையாற்றும் மத்தியதர வர்க்க அணியை உருவாக்கி வைத்துள்ள மும்பை போன்ற தெற்காசிய நகரங்களில் இவ்வாறு குடியிர்ய்புக்கள் உடைந்து விழுவது வழமையாகிவிட்டது. இந்த நூற்றாண்டின் முதலாளித்துவ வெறிக்கு தமது அமைதியான வாழ்க்கையிலிருந்து பறித்தெடுக்கப்பட்டு கொங்றீட் பொந்துகளில் அடைக்கப்பட்ட மத்தியதர வர்க்கம் மூலதனக் கொள்ளைக்காரர்களின் பலிகடாக்கள். இக் கொங்ரீட் பொந்துகளில் வாழ்வது பெருமையானது என்ற சமூகப் பொதுப் புத்தி உருவாகியுள்ள நிலையில் மேலும் பலர் தம்மையும் தமது வாழ்க்கையையும் அழிக்கத் தயாராகின்றனர்.
மிகவும் மலிவு விலையில் எந்த விதமான அரச விதிமுறைகளுமின்றி கடியெழுப்பப்படும் இக் கட்டடக் குவியல்கள் தமது புதிய சிறைகள் என்பது உணரப்படும் போது தமது உரிமைகளுக்காக இவர்கள் போராட ஆரம்பிப்பார்கள்.









That is right. Middle Class. Middle of the Road. It is also Bengaluru and not Bangalore.
Mumbhai is also a mega city with good support services. So, it is not Shiva Sena only there all the time.