ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
மரண தண்டனைக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரித்து நாளை ஒரு நாள் ஊடகவியலாளர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அடையாள உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.
மூவரின் உயிரைக் காக்க தூக்குதண்டனையை ரத்து செய்யகோரி 30.08.2011 அன்று காலை 10 மணிக்கு புதுவை பல்கலை கழகத்தின் இரண்டாம் வாயிலில் போராட்டம் நடத்த மாணவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட பின்னரும், ஜெயலலிதா மரணதண்டனை குறித்து மௌனம் சாதிப்பதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள்ன சீமான் உட்பட்ட தமிழினவாதிகள் போராட்டங்களை அறிவிக்காத நிலையில் இவ்வாறான ஆதரவுப் போராட்டஙகள் முக்கியத்துவம் பெறுகின்றன.








அப்படியே இந்த மக்குகள் அவையும் நாதி அற்ற த்மிழீழ கூட்டத்தோடு சேர்ந்து தீக்குளிக்கலாம், தூக்கிலடபட விருக்தும் சாந்தன் பத்மனாபா கொலையில் சம்பந்தபட்டவன், தெய்வம் நின்று அறுக்கின்றது, வாய்மையே வெல்லும்