திமுக ராஜ்யசபா எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி 2 ஜி ஸ்பெட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழி ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்றக் கதவை தட்டியும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை ராசாத்தி அம்மாளிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.
பல்தேசிய நிறுவனங்களின் வருகையும் புதிய மறுகாலனியாக்கமும் அதிகாரத்தில்ருபவர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பணம் கையாடும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் பல்தேசிய முதலைகள் ஊழல் குற்றங்களிலிருந்து தப்பிக்கொள்ள, அரசியல் வியாபாரிகள் அதிகார முரண்பாட்டில் சிக்குண்டு காட்டிக்கொடுக்கப்படுகிறார்கள்.








அரசியல்வாதிகள் விடுதலை என்றால் அமர்களமதான் போங்கள.
அப்பா மகல சேர விடுன்ஙப்பா………………