ஜனாதிபதியினால் நேற்று திறந்து வைக்கப்பட்ட தென் பகுதிக்கான அதிகவேக வீதியை திறக்கும் நிகழ்வுக்கு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் கலைப்பீட மாணவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ள முடியாது என மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் உபவேந்தரின் பிரதிநிதிகள், கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, மாணவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழத்தின் முகாமைத்துவ மற்றும் வணிக பீடங்களில் புதிய ஆண்டுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவிருந்த நிலையில், மாணவர்கள் நேற்று தமது விடுதிகளுக்கு சென்ற போது, அவர்களை அங்கு செல்லவிடாது தடுத்து, நிறுத்து, அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாகியதாகவும் சஞ்சீவ பண்டார கூறியுள்ளார்.







